பலூன் மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோர் நடித்துள்ள பார்க்கிங் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஷ் தயாரித்துள்ளனர்.
: நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞன் கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் புதிய காரை வாங்குகிறார்.
ஆனால் அந்த கார் இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார் அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அந்த கார் ஒரு பெரிய புயலை வீசி சென்றது
மலையாள படத்தை பாருங்கள் எப்படி ஒரு சின்ன லைனை வைத்துக்கொண்டு எப்படி கதை அமைக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்போம் அதை உடைத்து தமிழ் படத்திலும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது
வாழ்த்துக்கள் இயக்குனருக்கு
நாயகனுக்கும் நாயகிக்கும் இருக்கும் கூடலை ஊடலை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது . ஹரிஷ் கல்யாண் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்
எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைக்கும்
கதை களம்
சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அந்த வீட்டின் அடித்தளத்தில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த பிரச்சனையை தீர்க்க இருவரும் இணைந்து என்ன முடிவு செய்தார்கள் என்பதை
காட்டிய விதம் அருமையாக இருக்கிறது சின்ன சின்ன மோதலில் இருந்து கார் கழுவுவதில் இருந்து பைக்கை வெளியே எடுப்பதில் இருந்து தடித்த வார்த்தைகளில் இருந்து குடிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏத்தி உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். கோபத்தில் எடுக்கும் முடிவு தவறு என்பதை அருமையாக சொல்லி உள்ளது பார்க்கிங்.

ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங்
: Ego என்றால் அகந்தை, அகம்பாவம், ஆணவம், திமிர், தான்தோன்றித்தனம், பிறரது உணர்வுகளை மதியாமை, இவற்றில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அல்லது எல்லாமே கொண்டது தான் Ego.
அந்த ஈகோவினால் இரண்டு கதாபாத்திரங்களும் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு கொலை செய்யும் அளவுக்கு போய் விடுவது தான் படத்தின் சிறப்பான திரைக்கதை
இயக்குனர் சாமர்த்தியம்
: அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் படத்திலேயே நான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். அற்புதமான காட்சி அமைப்புகளுடன், சிறந்த நடிகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.
நாம் பார்த்த நிஜ மனிதர்களின் வாழ்க்கையில் அப்பார்ட்மென்களில் தினமும் நடக்கும் கதை யை வைத்து அருமையான திரை கதையை உருவாக்கி ஜெயித்திருக்கிறார் படத்தில் கதை எந்த இடத்திலும் விலகவில்லை அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திரில்லர் பாணியில் இயக்குனர் படத்தை கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹரீஷ் கல்யாண்
இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தான்
ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்,
அவரது நடிப்பில் ஒரு புதிய பரிமாணம் கோபம் சந்தோசம் பழி வாங்கும் குணம் சைக்கோ தனம் என எல்லாம் கலந்து செய்திருக்கிறார் இப்படத்தின் மூலம் சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசனை சில இடங்களில் ஞாபகப்படுத்துகிறார் அவரைப் போலவே முகம் சிவந்து குழப்பத்தில் ஆழ்ந்து குடியில் மூழ்கி பழிவாங்கும் நினைக்கும் காட்சிகள் எல்லாம் எழுந்து நின்று கைதட்ட சொல்கிறது வெல்டன் ஹரிஷ்
இந்துஜா அடித்த சிக்ஸர்
ஹரிஷ் மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.
பெண்கள் மனதில்
ஜம் என்று இடம் பிடித்துக் கொள்கிறார் இந்துஜா என்ற ஆராதிகா
. இயக்குநர் பார்க்கிங்கில் இரண்டு டெனன்ட்டுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் படத்தை தொடங்கி எப்படி எல்லாம் அதை கொண்டு செல்ல முடியும் என்பதை கடைசி வரை சுவராஸ்யமாக தந்துள்ளார் இயக்குனர்.
வாழ்த்துக்கள்
எம் எஸ் பாஸ்கர் நடிப்பு அரசன்
: ஓய்வு பெறப்போகும் ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படத்தின் மூலம் அவருக்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியை லஞ்சம் வாங்கியதாக ஹரீஸ் மாட்ட வைக்க
எம் எஸ் பாஸ்கர் எடுக்க முடிவு காரின் டயர்களை கழட்டி ஹரிசை பழிவாங்கும் திட்டத்தில் விபரீதம் ஏற்பட மனுஷன் கண் கலங்கி நடிக்கிறார் பாருங்கள் ஒரு நடிப்பு ஒரு கர்ப்பிணி பெண்ணின் பிரச்சனைக்கு ஆளாகிவிட்டோமே என்று அற்புதமான நடிப்பு அந்த இடத்தில் வழங்கி இருக்கிறார்
பார்க்கிங் படத்தில் ஹீரோ வில்லன் என்ற ஒரு நிலையில் கதையை நகராமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை படம் பேசுகிறது. இதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது
பார்க்கிங் படம் இந்துஜாவின் கதாபாத்திரம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல, அதை அழகாக உள்வாங்கி நடித்து ஸ்கோர் செய்கிறார். ஹரிஷ் கல்யாண் தனது இன்னொரு பக்காவான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார்
எம் எஸ் பாஸ்கர் மற்றும்.ரமா இந்த நான்கு கதாபாத்திரங்களோடு. சுரேஷ் என அனைத்து தரப்பினரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
அலுவலகம் என மொத்தமாக இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் கதை நகர்ந்தாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. தேவையில்லாத பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இல்லாமல் கதைக்கு தேவையானதை மட்டுமே வைத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.
பொதுவாக
சென்னை போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங்கால் சிரமப்படும் பலருக்கும் இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும். கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பார்க்கிங்கால் இந்த அளவிற்கு பிரச்சனை ஏற்படுமா என்றும் யோசிக்க வைக்கும். பெரிதாக
லாஜிக் மீறல்கள் இல்லாத இந்த பார்க்கிங் படத்தை நிச்சயம் குடும்பத்தினருடன் கண்டுக்களிக்கலாம்
இந்தப் படம் உங்களில் இருக்கும் ஈகோவை அழிக்கும் மனித நேயத்தை வளர்க்கும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்திருக்காது என்று உங்களை எண்ண வைத்து இருக்கும் குடும்பத்தில் இருக்கும் மனைவி மற்றும் மகள் என பெண்களின் அறிவுரைகளை கேட்க வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறது இன்று புழல் சிறையில் இருக்கும் அத்தனை கைதிகளிடம் கேட்டுப் பாருங்கள் நான் கொஞ்சம் கோபப்பட்டு விட்டேன் அதனால் இந்த கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறேன் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம் என்று சொல்வார்கள் அதைப்போல இன்றைய உலகில் மன அழுத்தம் உடல் நலக்குறைவு
பணப்பற்றாக்குறை குறை உறவினர்களுடன் மோதல் இப்படி எல்லா வகையிலும் தினம் தினம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மனிதர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள் குடும்பத்திலே அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவர்கள்
அக்கம் பக்கத்திலே குறைகளை கண்டுபிடிக்காமல் அனுசரித்துப் போவார்கள் இந்த படத்தின் மூலம் இயக்குனருக்கு எம்எஸ் பாஸ்கருக்கு ஹரிஷ் கல்யாண் க்கு. விருதுகள் காத்திருக்கிறது தரமான படம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்
இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் காஸ்ட்யூமர் கலர் கரெக்ஷன் போன்ற போஸ்ட்புரொடக்ஷன் ல ஈடுபட்ட அனைவரும்
தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் மனித உளவியலை சொல்லி இருக்கும் பார்க்கிங் பார்க்கத் தகுந்தப்படம்
