நாடு திரை விமர்சனம்

தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு.

நாடு என்றால் காட்டில்
மக்களுக்கு நாடு தான் நமக்கு கிடைக்கும் வசதிகள் அவர்கள் வாழ்க்கையை மாற்றி போட வேண்டும் என்று தான் நாடு

கதை களம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் பணிபுரிய மருத்துவர்கள் தயங்குகிறார்கள். அரசால் அனுப்பபடும் பெண் மருத்துவரை தக்க வைக்க ஊர் மக்கள் செய்யும் முயற்சிதான் இந்த நாடு. அந்த டாக்டர் அந்த ஊரிலேயே தங்க அந்த ஊர் மக்கள் காட்டும் அன்பு பாசம் இதனால் அந்த டாக்டர் மனம் மாறி அங்கேயே தங்கினார் இல்லையா என்பதை சொல்லும் ஒன்லைன்

’எங்கேயும், எப்போதும்’, ’இவன் வேற மாதிரி’ படங்களில் விறுவிறுப்பன காட்சி நகர்வில் கதை சொன்ன M.சரவணன் இப்படத்தில் மனித உணர்ச்சிகளின் வழியே சிறிது நாடக பாணியில் படம் தந்துள்ளார்.
ராங்கி என்ற படத்தில் இன்டர்நேஷனல் அரசியலைப் பேசியவர் இந்த படத்தில் உள்ளூர் மக்களின் நீட் தேர்வு முதல் அரசியல் பேசி இருக்கிறார்

இருப்பினும் குக்கிராமத்தில் மருத்துவ வசதியின் தேவையை புரிய வைத்து விட்டார். இது அவருக்கு கிடைத்த வெற்றி

நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு விட்டு செல்கிறது நாடு.

தர்ஷன் தரமான நடிப்பு

தர்ஷனுக்கு இது கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சோகம் கலந்த நடிப்பில் நம்மை ‘அட ‘சொல்ல வைக்கிறார்.
தன்னலம் கருதாத மனிதராக கிராமத்து வெள்ளந்தியாக ஊர் மக்களுக்காக உழைக்கும் அந்த கதாபாத்திரம் நிச்சயம் விருது வாங்கி தரும்

மஹிமா வின் மஹிமை

டாக்டராக நடிக்கும் மஹிமா முதலில் ஊர் மக்களை வெறுப்பதும், பின்பு புரிந்து கொண்டு நேசிப்பதும் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.
அவரின் ஆடை வடிவமைப்பு பேசும் டயலாக் டெலிவரி அன்பு பாசம் ஊர் மக்களை புரிந்து கொண்டு எடுக்கும் முடிவு எல்லாமே அந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு மரியாதை ஏற்படுத்துகிறது

கார்பரேட் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அரசியல் காமெடியாக சொல்லும் சிங்கம் புலியின் நகைச்சுவை தமிழ் நாட்டின் தமிழக அரசியல் தலைவர்களை பற்றி யோசிக்க வைக்கிறது.
அவர் சிரிக்காமல் டயலாக் பேசி ரொம்ப நாளாச்சு எனவே இது போன்ற கதாபாத்திரங்களை சிங்கம் புலி ஏற்று நடிப்பது நல்லது

மறைந்த நடிகர் சிவாஜி ராவ்வின் நடிப்பை பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாள் நீங்க இருந்திருக்கலாமே சார் என்று சொல்ல வைக்கிறது
அண்ணன் தம்பியாக இரண்டு முறை வந்தும் இரண்டு முறையும் கேன்சரால் இறப்பது கொஞ்சம் செயற்கை தனமாக இருக்கிறது

.சக்திவேலின் ஒளிப்பதிவில்
படம் பார்ப்பவர்களை கண்களுக்கு குழுமியாக காட்சிகளுக்கு இனிமையாக கவர்ந்து சென்றிருக்கிறார் இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் தான்

சத்தியாவின் இசை ஒரு தாலாட்டு போல் இருக்கிறது.

தரமான இசையை கொடுத்திருக்கிறார் சத்யா அவர்களின் இசையும் கதைக்களமும் அவருக்கு நிச்சயம் நல்ல பேரை வாங்கி தரும்

இந்தியாவின் ஆன்மா கிராமம் என்பார்கள். இந்த கிராமம் இயங்க நல்ல மருத்துவமனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது இப்படம்
ஒவ்வொரு காட்சியிலும் இன்றைய நாட்டில் காட்டுக்குள் வாழும் மக்களின் வலியை சொல்கிறது படம் டாக்டருக்கும் தர்ஷனுக்கும் காதல் என்று காட்டி விடுவாரோ இயக்குனர் என்ற பயம் நமக்கு ஏற்பட்டது அப்படியெல்லாம் இல்லை இது ஒரு எதார்த்தமான படம் எதார்த்தங்களில் இந்த மாதிரி காதல் நடக்காது என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் சரவணன் இதுபோன்ற படங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் அவர் எங்கேயும் எப்போதும் சரவணன் என்று அடைமொழி எப்போதும் போகாது சில ஆகசன் படங்களை இயக்கியிருந்தாலும்
நாடு அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் இயக்குனரே

. புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமியின் பெயரை சூட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம்.

அதேபோல சிவாஜி ராவ் இறக்கும்போது தன் மகனிடம் நான் இருந்து போவதை நீ கண்கொண்டு பார்க்க வேண்டாம் வெளியே போ என்று சொல்லும்போது மனதை ஒதுக்கி விடுகிறது அந்த வசனம்

மொத்தத்தில் இந்த நாடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் மலைவாழ் மக்களும் மனிதர்கள் தான் அவர்களுக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருக்கிறது
ஒரு வலி இருக்கிறது

எனவே தமிழக அரசு ஒரு சம்பவம் நடந்தது பின்னால் அந்த மக்களுக்கு உதவி செய்வதை விட ஒரு சிறப்பு அமைச்சரை உருவாக்கி காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு பாதையை உருவாக்கித் தந்து மின் சாரம்தங்து
மருத்துவம் கல்வி தந்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்பதை சொல்லும் இந்த நாடு ஒரு உயர்வான நாடு தரமான நாடு வெற்றியை நோக்கி செல்லும் இந்த நாடு வாழ்த்துக்கள்