கண்ணகி திரை விமர்சனம்

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் நடித்துள்ள ‘கண்ணகி’ படத்தின் விமர்சனம்.

இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணகி’. இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இஎஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வெவ்வேறு சூழல்களில் வாழும் நான்கு பெண்களின் கதைகள் தனித்தனியே காட்டப்படுகின்றன. பலமுறை பெண் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தும் திருமணம் கைக்கூடாமல் இருக்கும் அம்மு அபிராமி, கணவனின் வற்புறுத்தலால் விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் வித்யா பிரதீப், திருமண உறவின் மீது நம்பிக்கை இன்றி லிவிங் டூகெதரில் வாழ விரும்பும் ஷாலின், வயிற்றில் இருக்கும் குழந்தையை கருவிலேயே கலைக்க நினைத்து, பின்னர் அது நடக்காமல் போனதால் விரக்தியில் இருக்கும் கீர்த்தி பாண்டியன். இந்த நால்வரை சுற்றித்தான் இப்படம் நகருகிறது

’நான் வேணும்ன்னா அப்படியே வந்து நின்னுடுறேன்ப்பா… ஒரு நாலஞ்சு பேரா வந்து பார்த்துட்டு போக சொல்லுங்கப்பா’ என்று அம்மு அபிராமி பேசும் வசனம் மனதை கனக்கச் செய்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் அடர்த்தியான காட்சிகளும், ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் படத்தின் தீவிரத்தன்மையை கடத்துகின்றன. நான்கும் தனித்தனி கதைகள் என்றாலுமே நான்கும் திருமணம் என்ற ஒற்றைப் புள்ளியிலேயே சூழல்கிறது’. படத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்வர் அம்மு அபிராமி கலை என்ற கதாபாத்திரத்தில் பொள்ளாச்சியில் நடக்கும் சம்பவத்தில் மயில்சாமி மௌனிகா மகளாக வந்து திருமணம் ஆகாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அம்மாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் மயில்சாமியின் இறப்புக்கு பின்னால் கத்தி கதறியளும் அந்த காட்சி ஒரே ஷாட்டில் அசத்தியிருக்கிறார் இவருக்கு அப்பாவாக மயில்சாமி அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் கம்யூனிச வாதியாக வந்து மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஹார்ட் அட்டாக்கில் இறந்த போகும் மயில்சாமி நிஜத்தை நினைவுபடுத்துகிறார். அம்மு அபிராமியின் தாய் மாமனாக வரும் கோதண்டம் இந்த படத்தில் கலகலப்புக்கு உதவுகிறார் மௌனிகா முதல் மரியாதை வடிவுக்கரசியை ஞாபகப்படுத்துகிறார் வரும் மாப்பிள்ளை எல்லாம் தட்டி கலைத்துவிட்டு பிறகு தன் மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்று புலம்புவதும் தன் தங்கையை விட அந்தஸ்து உள்ள மாப்பிள்ளையை பார்ப்பேன்என்று துடிப்பதும் படம் முழுக்க என்ன வில்லித்தனம்.

அம்மு அபிராமிக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறார் இயக்குனர். கோயிலில் திருமணம் நடக்கும்போது மூன்று நாள் லீவில் இருக்கும் அம்மு அபிராமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் அவர் அம்மா என்ன சொல்லப் போகிறார் என்பது படத்தின் ஹைலைட்
பொள்ளாச்சியில் நடக்கும் அந்த சம்பவங்களில் ஒளிப்பதிவாளர் அற்புதமாக இயற்கை காட்சிகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் அடுத்து வித்யா பிரதீப் தன் கணவர் டைவர்ஸ் கேட்கிறார் என்று கோர்ட்டுக்கு வருகிறார் கோர்ட்டில் சசி என்ற இளம் வழக்கறிஞரை சந்திக்கிறார் இருவருக்கும் அங்கு காதல் மலர்கிறது அந்த காதலுக்கு சசியின் அம்மா வில்லியாக வருகிறார் முடிவில் வித்யா பிரதீப் கத்தி கதறிக்கொண்டு இனி என்னை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புலம்புகிறார் வித்தியா பிரதீப் நடிப்பு நன்றாக இருந்தது

வழக்கறிஞராக வரும் வெற்றி நடிப்பு நன்றாக இருந்தது இயல்பாக நடித்திருக்கிறார் இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பு நன்றாக வந்திருக்கிறது. வித்யா பிரதீப்புக்கு கடைசி வரை அழுது புலம்பும் கதாபாத்திரம் குழந்தை பெற்றுக் கொடுக்கும் தன்மை இருந்தும் கணவர் அதை காரணம் காட்டி தன்னை விவாகரத்து செய்துவிட்டார் என்று அவர் புலம்பும் இடம் அவர் மேல் பரிதாபப்பட வைக்கிறது அடுத்ததாக ஷாலினி இந்த காலத்து பெண்ணாக நடித்திருக்கிறார் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்த ஆசைப்படும் சாலினிக்கு அவரது காதலர் மூலம் அடிக்கடி டார்ச்சர் வருகிறது திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் வற்புறுத்த திருமணம் செய்து கொள்ள ஏதோ ஒரு காரணம் சொல்லு என்று இவர் கேட்க அவர் பல காரணங்களை சொல்ல அதையெல்லாம் இவன் நிராகரிக்க பின்னால் என்ன நடந்தது? சைக்கோவாக மாறினாரா ஷாலினி இன்றைய இளம் பெண்கள் தண்ணி அடிப்பதும் தம் அடிப்பதும் சகஜம் என்று சொல்கிறாரா? இயக்குனர் பல ஆண்களுடன் ஊர் சுற்றும் ஷாலினி அவர் பணிபுரியும் அலுவலகத்தில் மேஜை மீது கால் மீது கால் போட்டு கொண்டு அமர்கிறார் இப்படி இன்றைய பெண்களுக்கு அச்சாரமாக ஷாலினி கேரக்டர் அமைந்திருக்கிறது அவரது கதாபாத்திரமும் கடைசியில் கத்திக் கதறி அழுவது போல முடித்திருக்கிறார் இயக்குனர்

அதற்கு அடுத்து கீர்த்தி பாண்டியன் இவர் ஒரு உதவி இயக்குனரின் காதலி திருமணம் ஆகாமலே இருவரும் வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தாயாகிறார்.
அந்த குழந்தையை கலைக்க வேண்டும் என்று இருவரும் போராடுகிறார்கள் நான்கு மாத குழந்தையை கலைக்க கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்க திருட்டுத்தனமாக கேரளா சென்று கருக்கலைப்பு செய்யப் போகிறார்கள் இவர்கள் இருவரும் வரும் காட்சிகளில் சில நேரம் குழப்பம் சில நேரம் பரிதாபம் சில நேரம் சின்ன குழந்தையை கருக்கலைப்பு செய்யக்கூட அலைகிறார்களே
ஏன் அந்த குழந்தையை அவர்கள் வளர்க்க கூடாது என்று கேள்வி ஆனால் கிளைமாக்ஸ்சில் இயக்குனர் அதற்கு ஒரு கதை வைத்திருக்கிறார் இப்படி நான்கு பெண்களின் குணாதிசயங்களை வடிவமைத்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பெண்களுக்கு திருமண வயது வந்து விட்டால் விரைவில் நல்ல மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைத்து விட வேண்டும் இல்லை என்றால் பெற்றோர்களை அந்த பெண்ணுக்கு சுமையாகி விடுவார்கள் என்ற கருத்தையும்

பெண்கள் படித்துவிட்டால் தான்தோன்றித்தனமாக தண்ணீ எடுத்துக்கொண்டு தம் அடித்துக் கொண்டு கண்டவனோடு ஊர் சுற்றினால் முடிவு விபரீதம் என்று புரிய வைத்திருக்கிறார் விவாகாரத்துசெய்தாலும் பெண்களால் வாழ முடியும் என்ற புரட்சிகரமான கருத்தையும் விதைத்திருக்கிறார்.

அம்மு அபிராமி ஒரு கனவு காண்கிறார் நான் ஒரு கதை ஆசிரியராக வரவேண்டும் என்று அவர் ஆனாரா இல்லையா என்பது ஹைலைட் மயில்சாமி நடிப்பு அருமை அம்மு அபிராமி நடிப்பு அருமை
ஷாலினி ஏகத்துக்கும் கவர்ச்சி வித்யா பிரதீப் ஒரே அழுகை ரகம் கீர்த்தி பாண்டியன் பரிதாபப்பட வைக்கும் கதாபாத்திரம் இப்படி நான்கு கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு இயக்குனர் பாலச்சந்தர் பாணியில் ஒரு புதுமையான ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் எல்லாமே நன்றாக இருக்கிறது படத்தொகுப்பு ஒரு பத்து நிமிடங்களை குறைத்து இருக்க வேண்டும் என்று எண்ணம் மேலோங்குகிறது பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ சுதந்திரமாக வாழ இப்படிப்பட்ட படைப்புகள் வரவேண்டும் தாங்களே முடிவு எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் தன்மை என்று வந்துவிட்டது எனவே இயக்குனர் அஸ்வந்த் ஒரு நல்ல கதையை எடுத்து நல்ல திரைக்கதை அமைத்து அதற்கு உயிரோட்டமான வசனங்களை கொடுத்து படத்தை எடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் கண்ணகி ஜெயிப்பாள்
நீதி கேட்டு போராடுவாள் நிச்சயம் வெல்வாள்