காரைக்குடியைச் சேர்ந்த இயக்குனர் ரவி முருகையா, இவர் இயக்குனர்கள் காக்கா முட்டை மணிகண்டன் பூபதி பாண்டியன் இவர்களிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.
அந்த வகையில் அவர்
இயக்கி உள்ள படம்
ஆயிரம் பொற்காசுகள் கிராமத்துப் பின்னணியில் லாஜிக் மீறல் இல்லாமல் எதார்த்தமான கதைக்களத்துடன் இயக்கி உள்ள ஆயிரம் பொற்காசுகள் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
i: ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள்.
“மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆயிரம் பொற்காசுகள் ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்ட படம்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான கேயார். அவர்கள்
மைடியர் குட்டிச்சாத்தான், கமலின் பேசும் படம் உள்பட ஏராளமான படங்களை விநியோகித்து, தயாரிப்பாளரானவர் கேயார். அவர் தயாரித்தப் படங்களில் ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை. நீண்ட இடைவெளிக்குப் பின் ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தை கேயார் வாங்கி வெளியிடுகிறார்: இவர் விநியோகஸ்தராக 40 ஆண்டுகளாக இருந்து 200க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜய், தனுஷ் போன்ற பிரபல நாயகர்கள் நடித்த வெற்றி படங்களை அதிகமாக வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிசாத்தான்’, ஷங்கரின் ‘ஐ,’ ‘பாகுபலி’ ஆகிய படங்களின் 2 பாகங்களையும் வெளியிட்டு வெற்றி கண்டவர். பல புதுமுக நடிகர்கள் மற்றும் டைரக்டர்களையும் அறிமுகபடுத்தியவர்.
அந்த அனுபவத்தால் இந்த படம் வெளிவரும் போது முதல் காட்சியில் ஒரு டிக்கட் வாங்கினால் ஒரு டிக்கட் இலவசம் என்ற புதிய திட்டம் உருவாக்கி உள்ளார்.
இனி இப்படம் என்ன சொல்லுது வாங்க பார்க்கலாம்
பருத்தி. வீரன் சரவணன் எவன் எக்கேடுகெட்டால் என்ன நாம் ஜாலியா இருக்கனும் வேலை வெட்டிக்கு போகாமல் அரசு கொடுக்கும் இலவசத்தை வாங்கி சாப்பிட்டு வயிற்றை வளர்க்கும் ஆனிமுத்து கேரட்கடர் மனுஷன் அல்வா சாப்பிடுவது போல் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
அவரிடம் வந்து சேர்கிறார் நம்ம விதார்த்,
தகப்பனுக்கு கட்ட கோவணம் இல்லை மகன் பட்டு வேட்டி கேட்ட கணக்கா தமிழ் நாடன் என்ற கதாபாத்திரத்தில் பொருந்திபோகிறார் தாய்மாமனும் மச்சானும்அடிக்கிற கூத்து செம
எதிர் வீட்டு ஹல்லோ கந்தசாமி குருவாக்குடி கோவிந்தனாக அவர் செய்யும் காமெடி படத்தின் ஹைலைட்.
சரவணன் தன் வீட்டு பாத்ரூம் காட்டி பஞ்சாயத்தில் 12000 வாங்க அதற்காக அவர் செய்யும் காமெடி கும்மி அடிக்கிறது ஈக்கு விஷம் தலையில இந்த கோவிந்தனுக்கு விஷம் நாக்குல மனுஷன் எதை செய்தாலும் தியேட்டரில் சிரிப்பலை ஜேம்ஸ் பாண்ட் பாணியில் TVS வண்டியில் முறுக்கி கொண்டு பறக்கிறார். நடிப்பும் அது போல.

விதார்த் அவருக்கு தைத்த சட்டை போல இந்த படத்தின் கதை க்குபொருந்திபோகிறார் .
அருந்ததி நாயருடன் ரொமான்ஸ் தாய் மாமனுடன் கலாட்டா என பல்வேறு இடங்களில் கைகொடுக்கிறார்.
அடுத்து அரிச்சந்திரனாக வரும் ஜார்ஜ் மரியான் மண்வெட்டியாணாக வந்து புதையலை கண்டுபிடித்து பங்கு கேட்டு சரவணணிடம் அடிவாங்கி மனுஷன் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில்கண்ணா இருக்கும் கேரக்டர் வெளுத்து வாங்கியுள்ளர். அவர் வரும் காட்சிகளில் காமெடி குபீர் சிரிப்பு
அடுத்து வெற்றிவேல் பொன்ராம் கேரக்டரில் அவர் பங்குக்கு ரசிகர்களை வசப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.மற்றும் பாரதிகண்ணன், செம்மலர் அண்ணம், நாயகியின் அம்மா தமிழ்செல்வி, விதார்த் அம்மா என, எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துககள். நாயகி அருந்ததி நாயர் பூங்கோதையாக வந்து அம்சமாக கிராமத்து அம்சவள்ளியாக நெஞ்சை அள்ளும் கதாபாத்திரம். என் ஆத்துகாரரும் கச்சேரிக்கு போவதுபோல ஒரு மளிகை கடைவைத்துக்கொண்டு விதார்த்தை கணக்கு பண்ணுவதிலே குறியாய் இருக்கிறார். இவர்கள் எல்லாரும் கிடைத்த புதையலை எப்படி பங்கு போட துடிக்கிறார்கள் என்ன? நடந்தது என்பதை காமெடியாக சொல்லியிருக்கும் ஆயிரம் பொற்காசுகள். படம் முழுக்க செம ஜாலியாக போகிறது திரைக்கதை,சரியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். கிராமத்து மண்வாசனையோடு கிராமத்து மனிதர்களின் எளிய
வசனங்களோடு மனம்மாறாவண்ணம் எழுத இயக்கி இருக்கிறார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள். ராமலிங்கம் இப்படத்தை தயாரித்திருக்கிறார் உலக உரிமை பெற்று கே ஆர் வாங்கி வெளியிடுகிறார் பானு முருகனின் கேமரா கிராமத்து அழகு அள்ளிக் கொண்டு வந்துள்ளது. ஜோஹன் தனது இனிய இசையால் படத்துக்கு உயிர் ஊட்டுகிறார் . படத்தின் எடிட்டர் படத்தைக் கச்சிதமாக நறுக்கி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் சண்முகம். சரவணன் இருக்கும் வீட்டையும் பஞ்சாயத்து அலுவலகத்தையும் மளிகை கடையும் கச்சிதமாக அமைத்திருக்கிறார். ஃபயர் கார்த்திக் சண்டை காட்சிகளில் கிராமத்து எதார்த்தத்தை மீறாமல் ஸ்டன்ட் அமைத்து இருக்கிறார். காஸ்ட்யூமர் முருகன்
எல்லா கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமான உடைய தேர்வு செய்து பணி புரிந்திருக்கிறார். பாடல் ஆசிரியர்கள் கபிலன் , நந்தலாலா, தனிக் கொடி, முத்துவேல் ,மற்றும் ரவி முருகையா சூழலுக்கு ஏற்ப பாடல் வரிகளை தந்து கவனத்தை ஈர்த்துள்ளனர். இப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய பிரபாகர் நாகேந்தர் வேலுசாமி சுரேஷ் வி கே குமார் இப்படி எல்லோரும் தங்கள் பங்குக்கு ஒரு நல்ல படத்துக்காக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் மக்கள் தொடர்பாளர் நிகி ல் முருகன் அவர்கள் கவனம் எடுத்துக் கொண்டு தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். மொத்தத்தில் இந்த படம் புதிய பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது 38 நாட்களில் படத்தை எடுத்து முடித்து இருந்தாலும் படத்தை ரிலீஸ் செய்வதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் படத்தின் தன்மை காலதாமத்தில் இந்த குறையும் வைக்கவில்லை புதிய பொலிவுடன் சிரிப்புக்கு கேரண்டி கொடுக்கிறது. இந்த படம் கவலையை மறந்து உங்களை ரசிக்க வைக்கும். இரண்டு மணி நேரம் சிரிப்பலையில் தியேட்டர் குலுங்கி குலுங்கி சிரிக்கும் என்பது சந்தேகம் இல்லை தங்கம் புடத்திலிருந்தாலும் தண்ணிலை மாறாது என்பதற்கு இந்த படம் உதாரணம் ஒரு தரமான படம் கிராமத்து மனிதர்களின் ஆசையும் பேராசைகளையும் சொல்லும் படம் ரசிக்கலாம் இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும் ரசிக்க வைக்கும் கவலைகளை மறக்க வைக்கும். கிடைத்ததை வைத்துக் கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்ற தத்துவத்தையும் அடுத்தவன் பொருளை ஏமாற்றக்கூடாது உழைத்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தையும் சொல்லும் படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை போன்ற பல வரிசையில் இந்த படமும் சேரும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் படத்தை வாங்கி வெளியிடும் கே ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
