ஜிகிர்தோஸ்த் திரை விமர்சனம்

பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஷாரிக் ஹாசன் , அம்மு அபிராமியுடன் இணைந்து நடித்துள்ளார் .

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அறன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜிகிரி தோஸ்த் படத்தின் இயக்குனர் அறன். பல விருதுகளை தன்னுடைய குறும்படங்களுக்காக வென்றுள்ளார் இந்தப் படத்தை அவரே தயாரித்தும் உள்ளார் .
வெற்றி படமாகவும் அமைந்துள்ளது

இயக்குனர் சங்கரின் உதவியாளர்

இயக்குநர் அட்லீ மிகப்பெரிய உயரங்களை தொட்டுள்ளார்.
அந்த வகையில் ஷங்கரின் உதவி இயக்குநர் அறன், பல குறும்படங்களையும் இயக்கி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் தற்போது பிரதீப்புடன் இணைந்து ஜிகிரி தோஸ்த் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். படத்தில் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதைக்களம் நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இயக்குனர் சாத்தூரைச் சேர்ந்தவர் இவருக்கு ஹீரோவாக வேண்டுமென்று கனவில் சென்னை வந்தவர் தற்போது ஹீரோவாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி தடம் பதித்திருக்கிறார்.

ஜிகிரி தோஸ்த் படம்: என்ன சொல்லுது படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

அவுட்டிங் செல்லும் மூன்று நண்பர்கள் வழியில் கொடூரமான கேங்ஸ்டர்களால் பெண் ஒருவர் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். இதையடுத்து அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்காக களத்தில் குதிக்கின்றனர் இந்த மூவரும் அந்த பெரிய கேங் ட்ரைஎப்படி வலைவீசி பிடித்தார்கள் என்பதை புத்திசாலித்தனமாக சொல்லி இருக்கிறார்கள். 50 கிலோ மீட்டருக்கு அருகில் இருந்தால் புது ஹேக்கர் மூலம் அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க முடியும் என்ற புது விதமான ஐடியா மூலம் வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார் இயக்குனர் அதற்கு அவர் போடும் ஹெச் இதுதான் படத்திற்கு ஹைலைட் டெரரிஸ்ட் டிராக்கர் என்ற தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துவதை கதைக்களத்தில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் அறன்.
இதை அரசு பரிசீலித்து இப்படி ஒரு ஹேக்கரை உருவாக்கினால் குற்றவாளிகளை சுலபமாக பிடிக்கலாம் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் அஜண். இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், விஜே ஆஷிக், பவித்ரா லட்சுமி, அனுபமா குமார், ஜாங்கிரி மதுமிதா அம்மு அபிராமி ஆகியோரும் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹாரிக் ஹாசன் அம்மு அபிராமி இருவரும் வரும் ஆரம்பகால காதல் காட்சி ரசிக்க வைக்கிறது
அதே போல இடைவேளைக்குப் பிறகு அம்மு அபிராமியை இயக்குனர் சாமர்த்தியமாக திரைக்கதைகள் கொண்டு வந்திருப்பது புத்திசாலித்தனம் விஜய் டிவி சரத்தும் மதுமிதாவும் போனில் ரொமான்ஸ் செய்வது ரசிக்க வைக்கிறது.

பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். பரபரப்பான படத்திற்கு இசைபக்கபலமாக இருக்கிறது

நட்பை சொல்லும் கதைக்களம்:

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் நண்பர்களையும் நட்பையும் மையமாக வைத்து வெளியாகும் படங்கள் எப்போதுமே வெற்றியடைந்து விடுகின்றன. நட்பிற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் இதற்கு காரணமாக அமையலாம். இயக்குநர் ஷங்கரும் நட்பை பிரதானப்படுத்தி நண்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் அவரது உதவி இயக்குநரிடமிருந்து ஜிகிரி தோஸ்த் என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்தப் படமும் கவனத்தை பெறுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது காட்டுப்பகுதியில் நடக்கும் அந்த திகில் காட்சிகளோடு பெண்ணை கடத்திக் கொண்டு சொத்துக்களை எழுதி வாங்க துடிக்கும் வில்லனின் குடோன் திகிழடைய வைக்கிறது
சர்வதேச அளவில் ஹெராயின் கடத்தும் கும்பலை இந்த மூவரும் எப்படி பிடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட் படம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தாலும் ஜெட் வேகத்தில் பறக்கிறது அடுத்து என்ன நடக்கும் என்ற கோணத்தில் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கதை ஒரு டெம்போவில் போய்க் கொண்டிருக்கும் போது ஆஸிக் ஒரு பயந்தாங்கொளியாக நண்பர்களுக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருக்கிறார். மூன்று நண்பர்கள் இருந்தால் ஒரு வர் இப்படித்தான் இருப்பார் என்ற எதார்த்தத்தை புரிய வைத்திருக்கிறார் அதற்காக நண்பர்கள் வில்லன்களுடன் சண்டை போடும்போது காருக்குள்ள அமர்ந்து கொண்டு காமெடியாய் கலாய்த்து கொண்டு இருப்பது டூ மச். மதுமிதா சீரியல் மோகம் கொண்ட சரத்தின் காதலியாக வருகிறார் ஒவ்வொரு சீரியலின் பெயரை சொல்லி அவரை ஹேக்கர்கள் மடக்க அவர் எப்படி பணிந்து போகிறார் அவர் எப்படி விலாசம் தருகிறார் என்பது ரசிக்க வைக்கிறது உத்தமபுத்திரன் படத்தில் பார்த்த வில்லன் தற்போது தான் திரையில் தோன்றியிருக்கிறார் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கிறது மொத்தத்தில் மூன்று நண்பர்கள் சேர்ந்தாலே சர்வதேச அளவில் நடத்தப்படும் போதை கடத்தல் கும்பலை பிடித்து விட முடியும் என்றால் உலகம் எங்கும் உள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சொல்லுகிறது இந்த ஜிகிர்தோஸ்த
எனவே நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பெண்களைப் பற்றி பேசுவது மது குடிப்பது சிகரெட் விடுவது என்று இல்லாமல் இந்த நாட்டுக்காகவும் ஒரு பெண் கடத்தப்பட்டால் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் போதை மருந்து கும்பல் கண்ணில் பட்டால் போலீசுக்கு தகவல் தெரிவிப்பதும் இப்படி நாட்டுக்கு நல்ல சேவை புரிந்தால் நமது நாடு எங்கோ போய்விடும் அதே சமயம் போலீசே அவர்களுக்கு துணை போவது லஞ்சம் வாங்குவது சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலை தப்பிக்க விடுவது என்று இருக்கும் பொழுது இளைஞர்கள் மற்றும் என்ன செய்ய முடியும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் அவருடைய வியாபாரம் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது எனவே இன்னும் பல படங்கள் அவர் தயாரிப்பில் இயக்கத்தில் எதிர்பார்க்கலாம் நல்ல ஹீரோவாக வலம் வருவார் இனியும் இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான நாட்டுக்கு தேவையான கதைகளை தருவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துவோம் இயக்குனரை தயாரிப்பாளரே வெல்டன் அரன் வெல்லட்டும் உங்கள் அரண்.