சபாநாயகன் திரைவிமர்சனம்

காதல் கதை படம முழுக்க இளமை புதுமை இனிமை அசோக் செல்வனின் அற்புதமான நடிப்பில்

முழு நீள காதல் படமாக வந்துள்ளது சபா நாயகன். ரசிக்கும் படி”

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார் இப்படத்தை CS கார்த்திகேயன் இயக்கி உள்ளார். காதலிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் சபா எனும் அரவிந்த்திற்க்கு எந்த காதலும் கை கூட வில்லை. அது எல்லாம் ஒருதலைராகமாக இருந்தாலும் தோல்வியில் முடிகிறது
பல முயற்சிக்கு பின்.

இந்த காதல் வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதை விளக்கி சொல்கிறான் சபா

: சபா என்று
. அழைக்கப்படும் அரவிந்தின் பயணத்தையும், அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று வெவ்வேறு பெண்களை (மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி) காதலித்த அனுபவங்களையும் கூறும் கதை சபா நாயகன். . இது ஒரு காமெடி மற்றும் ரொமான்ஸ் வகையான கதைக்களம்.
: காதல் தான் அனைத்தும், காதல் புனிதமானது என்று முந்தையை கால கட்டத்தில் கதை சொன்ன தமிழ் சினிமா போல் இல்லாமல் காதலும் கடந்து போகும் ஜஸ்ட் லைக் தட் என்று நகைச்சுவை கலந்து சொல்கிறது சபா நாயகன். இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருக்கிறார்கள், என்று தெளிவாக புரிய வைக்க முயற்சி செய்துள்ளார் டைரக்டர். வாழ்த்துக்கள்.

ஒருத்தி மேல ஒருமுறைதான் காதல் வரும் போன்ற தமிழ் சினிமா வசனங்களை தூக்கி போடுகிறது இந்த படம்
. பள்ளி, கல்லூரி மாணவனாக வரும்போது அசோக் செல்வன் குறும்பும் காதலுமாக நடித்திருக்கிறார். காதல் இளவரசன் பட்டத்தை இன்றைய நாயகர்களில் இவருக்கு கொடுக்கலாம். அடுத்து இவர்தான் கமல் ஹாசன்

மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் கியூட்டாக்கவும், காதலை கண் முன் நிறுத்துவதும் கார்த்திகா முரளிதரன்தான். அம்மணியின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் இந்த மூவர் ஒளிப்பதிவில் கோவையின் அழகும், காதல் உணர்வுகளும் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஜீயோன் ஜேம்ஸின் இசையில் இனிமையை விட துள்ளல் அதிகம் உள்ளது. இன்றைய சம கால காதலை புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்கள் சபா நாயகன் ரசிக்கலாம்

காதல்இன்று இளைஞர்களின் தேசிய கீதம் அது கை கூடுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்

அசோக் செல்வன் முதல் காட்சியிலேயே போலீஸ் மயில்சாமி மற்றும் இன்ஸ்பெக்டர் இடம் மாட்டிக்கொள்ளு கிரார் பிளாஷ்பேக்காக கதை சொல்கிறார் அந்த கதையில் பிளஸ் ஒன் படிக்கும் பொழுது நடந்த காதலும் பிளஸ் டூ படிக்கும் போது நடந்த காதலும் அது கை கூடாமல் போன சோகத்தையும் சொல்கிறார்
அதன் பிறகு கல்லூரியில் எம் பி ஏ படிக்கும் பொழுது மேக ஆகாசுடன் காதல் அது என்ன ஆனது என்பதை சொல்கிறார்-
அப்பாடா என்று மயில்சாமி பெருமூச்சு விட அதற்கு பின்னாலும் ஒரு திருப்பம் மீண்டும் கார்த்திகா முரளிதரன் உடன் எப்படி இணைகிறார் என்பதை சஸ்பென்சாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
அசோக் செல்வன் முகபாவமும் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் நவரசம்

கார்த்திகா முரளிதரன் வீட்டுக்குள் நுழையும் போது கெத்தாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு கார்த்திகாவின் தம்பியை சந்திக்கும் இடம் குறும்பு கண்ணை குத்தி விடுவார்கள் என்ற பயத்தில் காதலியிடம் காதலை விட கண் முக்கியம் என்று சொல்லும் இடம் ரசிக்க வைக்கிறது

பிளஸ் டூ படிக்கும் பொழுது கார்த்திகாவிடம் காதலை சொல்ல வாய்ப்பு வரும் பொழுது நண்பனதை சொல்லிவிடாமல் தடுத்து அழைத்துப் போகும் போது முகத்திலே நண்பனா காதலியா என்ற சோகத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்

தன் அம்மாவுக்கு முன்னால் பள்ளியில் அடி வாங்கும் போதும் சரி கார்த்திகா முரளிதரன் அப்பாவிடம் பொய் சொல்லும் போதும் சரி நடிப்பில் பின்னுகிறார்.

கார்த்திகா முரளிதரன் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் பள்ளியில் துள்ளி குதித்து வரும் பொழுதும் இளமை அவர் வரும் காட்சிகள் எல்லாம் அசோக் செல்வனை போலவே ரசிகர்களும் ஜொள்ளுவிடுகிறார்கள்.

எப்படியாவது காதலி உடன் அசோக் செல்வனை இணைத்து விட மாட்டாரா இயக்குனர் என்று ரசிகர்களை ஏங்கும் அளவுக்கு திரைக்கதையில் அசோக் செல்வன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்
இயக்குனர்
ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது கொங்கு சீமையில் மரியாதை கலந்து அன்போடு பேசும் மக்களை பார்க்கும் பொழுதே மனம் குளிர்கிறது நண்பர்கள் இருக்கும் பொழுது எதையும் சாதிக்கலாம் என்று திரைக்கதையில் இயக்குனர் உணர்த்தி இருக்கிறார்.
போலீஸ் ஜீப்பில் அசோக் செல்வனின் கதையை கேட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஏற்படுத்துவது திருப்பம்.

துளசி, அசோக் செல்வனின் அம்மாவாக வருகிறார் .
மகன் அடி வாங்குவதை கண்டு கலங்கும் அந்த தாயின் பரிதவிப்பு தெரிகிறது.

அருண் எஸ் எஸ் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் காதலி காயத்ரியிடம் டாக்டர் வேஷம் போட்டுக் கொண்டு குட்டு உடைபட புலம்புவது நன்றாக இருக்கிறது

துணிக்கடையில் அசோக் செல்வனின் அக்கா அசோக் செல்வனின் பித்தலாட்டங்களைக் கண்டு உதட்டை பிதுக்குவதும் ரசிப்பதும் அழகு

சாந்தினிவரும் காட்சிகளில் இளமை துள்ளுகிறது அவரும் காதலில் ஏமாற்றி விட அசோக் செல்வன் புலம்புவது நன்றாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த சபாநாயகன் ஜொள்ளு நாயகனாக இளைஞர்களின் இன்றைய மனசாட்சியாக வந்திருப்பது சிறப்பு- இயக்குனர் கார்த்திகேயன் அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை காட்சிப்படுத்துகிறார் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் . எடிட்டர் படத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் சில நேரங்களில் பார்த்த காட்சியை பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது மற்றபடி படம் எங்கும் தொய்வில்லாமல் ஜம் என்று போகிறது பழைய கமலஹாசன் படத்தை பார்த்தது போல் இருக்கிறது குடும்பத்தோடு ரசிக்கலாம் எந்த இடத்திலும் மது மாது ஆபாசம் புகையிலை போன்ற காட்சிகளை இயக்குனர் வைக்காமல் இருப்பது சிறப்பு இன்று இளைஞர்களின் காதல் கதையில் அதிகமாக டாஸ்மாக் காட்சிகளும் புகைபிடிக்கும் காட்சிகளும் நிறைய வரும் அது எல்லாம் தவிர்த்து இருப்பது இயக்குனர் சாமர்த்தியம் சபாநாயகன் சபை நாயகனாக வெற்றி முரசு கொட்டுகிறான்