கே.ஆர்.விஜயா நடித்துள்ள மூத்தகுடி படம் எப்படி வாங்க பார்க்கலாம்
இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூத்தகுடி’.
‘திரைப்படம
தி ஸ்பார்க்லேண்ட் (The Sparkland) நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள து குடும்ப பின்னணியிலான திரைப்படம் ‘மூத்தகுடி’. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா மீண்டும் நடித்துள்ளார்
இப்படத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார்
1970 -களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படக்குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது இயக்குனர் ரவி பார்கவன் கூறியதாவது, “நிஜத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தான் இப்படம். உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளனர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளனர் திரையில் நாம் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தருகிறது.
மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். நடிகர் தருண் கோபி எதிர் நாயகனாக கலக்கியுள்ளார். அவர் நடிப்பு ஓவர் ஆக்ட் என்று சொல்லும் படி உள்ளது . பிரகாஷும் அவரும் சண்டைக்காட்சி நடிக்கும் போது அவருக்கு அடிப்பட்டு விட்டதாம்
ஆனால் அப்போது கூட, படக்குழுவின் சிரமத்தை உணர்ந்து, படப்பிடிப்பை முடித்து விட்டே சென்றிருக்கிறார் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது
தருணகோபி ( வீரய்யன் )வ வீரையா என்ற கதாபாத்திரத்தில் மூத்த குடியின் இறந்து போன தாயின் தந்தையும் விட்டுச்சென்ற பொறுப்புள்ள மனிதராக வந்து பெண்ணாசை கொண்டு பின் இறந்து விடுவதாக கதை அமைகிறது சில நேரங்களில் இவரின் ஓவர் ஆக்டிங் சகிக்க முடியவில்லை
பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை ) கதையின் நாயகனாக வரும் இவர் எல்லா காட்சிகளும் அமைதியாக வருகிறார் நாயகி ஜோதியின் மனதை கவர்ந்த இவர் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இவருக்கு காட்சிகள் கொடுத்து நன்றாக விரிவுபடுத்திருக்கலாம்
அன்விஷா ( ஜோதி ) இவர் ஒரு புதுமுக நடிகை போல் இல்லாமல் பிந்து மாதவியின் சாயலில் இருக்கும் இவர் கிராமத்து பாவாடை தாவணியில் அம்சமாக வந்து போகிறார் சில காட்சிகள் நடிகர்கள் செய்கிறார் பாடல் காட்சியில் அழகு
K.R. விஜயா ( மூக்கம்மா ) மூத்த குடியின் பெருமைமிகு நாட்டாமையாக வரும் இவர் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை தந்து இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் குடித்துவிட்டு வரும் தருண் கோபியின் அடாவடி தாங்க முடியாமல் வெட்டுங்கடா அவனை என்று கர்ஜிக்கும் போது பழைய கே ஆர் விஜயாவை காண முடிந்தது
R.சுந்தர்ராஜன் ( நச்சாளி ) காமெடி செய்கிறேன் என்று வருகிறார் ஆனால் காமெடி தான் வரவில்லைசிங்கம்புலி யிடம் 5000 ரூபாயை கொடுத்துவிட்டு கடைசி வரை அவர் மாட்டிக் கொண்டு விழிப்பது சில இடங்களில் சிரிப்பை வரவிருக்கிறது
ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் ) வில்லனாக வந்து மிரட்டுகிறார் நயவஞ்சகத்தில் நரி இவரின் மைண்ட் வாய்ஸ் வில்லத்தனத்திற்கு சான்று
யார் கண்ணன் ( பழையசோறு ) பெயர்தான் பழையசோறு நடிப்பில் அசத்தி இருக்கிறார் வளர்த்த மகனே நெஞ்சில் மிதிக்கும் பொழுது கடைசி காட்சியில் உருக்கமாக பேசுவது இவர் நடிப்புக்கு சிறப்பு
சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி ) படம் முழுக்க கலகலக்க வைக்கிறார் சிங்கம் புலி அடிக்கடி இளையராஜா பாடலை பாடி ஆர் சுந்தர்ராஜன் தத்துவமான பொண்டாட்டி எப்பவுமே பழைய சோறு தான் அடுத்தவன் பொண்டாட்டி தான் பிரியாணி என்கிற சில காம நெடியான வசனங்களும் படத்தில்பேசுகிறார் சிங்கம் புலி ஓகே
இப்படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருப்பது தொழில்நுட்ப கலைஞர்கள் தான் தங்கள் பணியை எல்லோரும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன்
இசை – J.R. கிராமத்து அழகு அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார் எல்லா காட்சிகளையும் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது படத்திற்கு மிகப்பெரிய பலம் முருகானந்தம்
பாடல்கள் – நந்தலாலா இவர்களின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
எட்டிடிங் – வளர்பாண்டி கட்சிமான படத்தொகுப்பு படத்தை சீராக கொண்டு சென்று தொகுப்பாளர்
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
நடனம் – ரம்யா தேவி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு -படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி இருக்கிறார்மக்கள் தொடர் பாளர் பிரகாஷ் சந்திரா
கதை, வசனம் -இவரின் கதை வசனம் நாட்டுக்கு இப்போது தேவை இப்போது எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அரசாங்கம் என்னதான் குடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அரசாங்கத்தின் மீது பழியை போட்டுவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் குடிகாரர்கள் செய்யும் ரகளையை பெண்கள் அனுபவிக்கும் டார்ச்சர் மதுவினால் ஏற்படும் பிரச்சனை இது எல்லாம் கவனமாக கருத்தில் கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் நிச்சயம் பாராட்ட வேண்டும் அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு கொடுக்க வேண்டும் மக்கள் குடிக்காமல் இருக்க அரசாங்கம் சில தடைகளை ஏற்படுத்த வேண்டும் அதற்கு முன்மாதிரியான இந்த கிராமத்தை தேர்வு செய்து இப்பொழுது கதை வசனம் எழுதி இருக்கும் பிரகாஷ் சந்திராவுக்கு வாழ்த்துக்கள் M.சரக்குட்டி
திரைக்கதை, இவர் இந்த உண்மை கதையை 1500 தடவைக்கு மேல் மேடை நாடகங்களாக போட்டு மக்களை திருத்த முயற்சி செய்திருக்கிறார் இவர் வாழ்ந்ததற்கான அடையாளத்தை தடுப்பது இருக்கிறார் இவரால் ஒரு சில பேர் தெரிந்து இருந்தால் கூட இவருக்கு கிடைத்த வெற்றி இந்த மூத்த குடி படத்தின் மூலம் மக்களுக்கு நல்லது ஒரு கருத்தை சொல்ல முயற்சி செய்கிறார் அவரை நாம் பாராட்டியே தீர வேண்டும் இயக்கம் – ரவி பார்கவன். சீரான இயக்கம் தெளிவான திரைக்கதை வகைப்படுத்தாத நடிப்பு எடுத்துக் கொண்ட கதைக்களம் இது எல்லாவற்றிலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கிறார் பாராட்டப்பட வேண்டியவர் வன்முறை காட்சிகளும் பெண்களின் அங்க அசைவுகளும் வெட்டு குத்து என்று தமிழ் சினிமா ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது தரமான இது போன்ற தமிழ் சினிமாக்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் பாதை மாறக்கூடும் எனவே மூத்த குடி மக்களின் மொத்த உயிர்நாடி மதுவுக்கு எதிரான கதை சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். இப்ப படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம் 70களில் ஒரு காது குத்துக்கு செல்லும் மூத்தகுடியின் உறவுகள் அதில் இரண்டு பேர் கள்ளச்சாராயம் குடிக்க ஆசைப்பட்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு லாரியை எடுத்து வரும் பொழுது லாரி தீப்பிடித்து ஆக்சிடென்ட் ஆகி 65 பேர் இறந்து விடுகிறார்கள் இதனால் மூத்த குடியின் நாட்டாமையான கே ஆர் விஜயா ஒரு முடிவு எடுக்கிறார் இனிமேல் இந்த கிராமத்துக்குள் மது விற்கவோ மது குடிக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை என்று இதை அறிந்த ராஜ்கபூர் அந்த ஊரிலே சாராய பேக்டரி ஓபன் செய்ய வேண்டும் மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறார் இதற்கு துணைப் போகிறார் தருண் கோபி ஜோதியும் நாயகனும் விரும்புகிறார்கள் தருன் கோபியும் நாயகி விரும்புகிறார் இந்த முக்கோண காதலில் யார் வெற்றி பெற்றார்கள். ? கே. ஆர். விஜயாவின் சபதம் நிறைவேறியதா? ராஜ்கபூரின் சபதம் நிறைவேறியதா ?ஆர் சுந்தரராஜனுக்கும் சிங்கம் புலிக்கும் என்ன பஞ்சாயத்து? இப்படி பல விதமான கருத்துகளை கொண்டு உருவாக்கி இருக்கும் மூத்த குடி இன்று மக்களுக்கு நீதி சொல்லி வந்திருக்கும் படம் படத்தில் நிறைய தத்துவங்களும் ஆழமான அர்த்தமுள்ள கதை வசனமும் இருந்தாலும் படம் இன்றைய அரசாங்கமே கடை தெரிந்து வைத்துக் கொண்டு தீபாவளிக்கு இவ்வளவு மது விற்பனை இதைவிட இன்னும் அதிகமாக இந்த ஆண்டு சாதிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஊருக்கு இரண்டு கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அரசாங்கமே மதுவில் வருமானம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது இப்படி எல்லாம் ஒரு கிராமம் இருக்குமா ?அந்த கிராமத்தில் இப்படி எல்லாம் ஒரு உத்தரவு போட்டால் கிராம மக்கள் மதிப்பார்களா? இப்படி எல்லாம் கிராமத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது! இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தான் எழுகிறது மொத்தத்தில் இந்த மூத்த குடி ரசிக்கும் படி இருக்கிறது
