நந்திவர்மன் திரை விமர்சனம்

ஏகே பிலிம் பேக்டரி அருண்குமார் தயாரித்து தனசேகரன் ஜி.வி. பெருமாள் வரதன் இயக்கி வெளிவந்து இருக்கும் படம் நந்திவர்மன் இந்த படத்தில் அமானுஷ்யமா? இறைவனின் அனுகிரகமா? மனிதர்களின் சூழ்ச்சியா ?என்ன நடந்தது !என்பதை பார்க்கலாம் வாங்க! இப்படத்தில் நாயகனாக

சுரேஷ் ரவி – குரு வர்மன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி யிருக்கிறார். கம்பீரமான உடல் அமைப்பு தீர்க்கமான பார்வை எதையும் கண்டு பயப்படாத துணிச்சல் மிகுந்த கதாபாத்திரத்தில் உண்மையை வெளிக்கொணர்வதில் திறமையை காட்டி நடித்திருக்கிறார் 6 மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது என்றும் ஊர் மக்கள் பயமுறுத்தியும் துணிச்சலாக தேடி புறப்படுகிறார். அதன் பிறகு நாயகியுடன் ரொமான்ஸ். வில்லன்களுடன் மோதல் என கச்சிதமாக பொருந்தி கொள்கிறார் சுரேஷ்

நாயகி
ஆஷா வெங்கடேஷ் – இலக்கியா என்ற வேடத்தில் போஸ் வெங்கட்டின் உதவியாளராக நடித்திருக்கிறார் . உண்மையை கண்டுபிடிக்கும் நாயகனுக்கு உறுதுணையாக வந்து போகிறார்.
போஸ் வெங்கட் – புதைந்து போய் கிடக்கும் நந்திவர்மன் கோயில் ரகசியத்தை வெளிக்கொண்டு வந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க நினைக்கும் நேர்மையான அதிகாரியாக வந்து போகிறார்
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
நிழல்கள் ரவி – சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் இதிலும் வில்லனாக வந்து சூழ்ச்சிசெய்து சிலைகளை கடத்தும் கும்பலுக்கு உதவி செய்யும் ஆர்க்கியாலஜிஸ்ட் அதிகாரியாக கம்பீரமாக வந்து போகிறார்.
கஜராஜ் – தர்மராஜ்
சிலைகளை கடத்தும் ஊர் பெரிய மனிதராக சூழ்ச்சி செய்யும் கேரக்டரில் நன்றாகவே பொருந்திருக்கிறார் கஜராஜ் மற்றும் இப்படத்தில்
மீசை ராஜேந்தர் – பழனிவேல் ராயன்
ஆடுகளம் முருகதாஸ் – ஜேசிபி மணி
அம்பானி சங்கர் – கால்சட்டை
கோதண்டம் –
ஜே.எஸ்.கே.கோபி – எஸ்.வி.பசுபதி பலர் நடித்து உள்ளனர். எல்லோருடைய நடிப்பும் பாராட்டும் வண்ணம் சிறப்பாக இருந்தது.

இசை : ஜெரார்ட் இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பாலம் உயிரோட்டமாக இருந்தது ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெட்டு இசையமைத்திருப்பது
மிரட்டல் ஆகவும் பயமுறுத்தும் படியும் நந்திவர்மன் சிலையை காட்டும் போதெல்லாம் பின்னணியில் தெய்வீகச் இசை சிலைகளை திருடும் கும்பலை காட்டும் பொழுது அதற்கென்று பிரயோத்தியமாக இசையும் கொடுத்து சிறப்பாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒளிப்பதிவு சேயோன் முத்து இவரின் ஒளிப்பதிவு பயமுறுத்தும் படியும் உள்ளது குளிர்ச்சியாகவும் இருந்தது பழங்கால நந்திவர்மன் கோவிலை தோண்டும் போது திகலாவும் இருந்தது ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

படத்தொகுப்பு சான் லோகேஷ் சரியான இரண்டு மணி நேரத்தில் படத்தை கச்சிதமாக முடித்ததில் படத்தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள்
எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை படம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர்.

நந்திவர்மன் கதை என்ன வாங்க பார்க்கலாம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர் நந்திவர்மன் சிலை பற்றிய கதை !

பூமிக்கு அடியில் புதைந்து நந்திவர்மன் சிலை
மீட்க. தொல்லியல் துறையினர் வருகிறார்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

இந்த மரணம் பின்னணியை பற்றி கூறுவதே இந்த நந்தி வர்மன்

சுரேஷ் ரவி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில், பூமிக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கோவிலை சுற்றி நடக்கும் கதைக்களம், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த படம்.

இப்படம் பல்லவர்களின் தடயத்தை எடுத்துரைக்கிறது , உலகில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்படுகிறது . மேலும் இத்திரைப்படம் திரில்லர் வகையை சார்ந்தது, செஞ்சி அருகே உள்ள மலைப்பகுதியில் பழங்கால நந்திவர்மன் கோயில் உள்ளது அதை மீட்க வேண்டும் என்று வருகிறார்கள். தொல்லியல் துறையினர் ,
அதற்கு தலைமை ஏற்க போஸ் வெங்கட் குழுவை வழிநடத்தி செல்கிறார் அந்த குழுவில் இலக்கியா மற்றும் சில இளைஞர்களும் இளைஞிகளும் இருக்கிறார்கள் இவர்கள் தோண்டும் பொழுது திடீர் திடீரென ஊருக்குள் தீப்பற்றி எரிவதும் ஒரு குழந்தை காணாமல் போவதும் ஒரு இளைஞர் வெட்டுத்துண்டாக கிடப்பதும் போன்ற அபசகுன நிகழ்வுகள் நடக்கிறது இதனால் பயந்து போன ஊர் மக்கள் இதை தடுத்து நிறுத்த போஸ் வெங்கட்டிடம் சண்டை செய்கிறார்கள் பாதுகாப்பு கொடுப்பதற்காக சுரேஷ் வருகிறார் அங்கு வரும் பொழுது இலக்கியவை சந்திக்கிறார் இருவருக்கும் காதல் மலர்கிறது அதன் பிறகு ஊர் மக்கள் பயப்படும் அளவுக்கு அங்கு என்ன நடக்கிறது ?என்று சுரேஷ் ரவி துப்பு துலக்குகிறார் ஒரு குழந்தை காணாமல் போகிறது !அதற்கு காரணம் அந்த குழந்தை பயந்து கொண்டு ஆட்டுக்குட்டி காணாமல் போக அப்பாவுக்கு பயந்து கொண்டுதான் ஒளிந்து போகிறது அந்த குழந்தை இதை கண்டுபிடிக்கிறார் இளைஞர்கள் சிலர் கொல்லப்படுவது தடவியல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கிறார். பழங்கால சிலைகள் கஜராஜா வீட்டில் மறைத்து வைத்திருப்பதைக் கண்டு அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை பின்தொடர்கிறார்’ உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. அமானுஷ்ய சக்தியோ வேறு எந்த சக்தியும் இல்லை மனிதர்கள் செய்யும் சூழ்ச்சி என்பதை கடைசியில் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார் இது ஒரு நல்ல தரமான கதை விறு விறு ப்பான கதை எந்த இடத்திலும் லேக் ஆகாமல் லாஜிக் மீறாமல் இருக்கிறது அதே சமயம் திகில் ஊட்டும் வண்ணம் படம் இருப்பது சிறப்பு
[
ஒரு குற்றம் எப்படி நடக்கிறது ஏன் நடக்கிறது அதற்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தொல்லியல் துறையில் கண்டுபிடிக்க முடியாத பல திரைமறைவுரகசியங்களை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.
தொல்லியல் துறையினர் ஆதரவு இல்லாமல் சிலை கடத்தல் நடக்காது என்பதையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ஏன் நந்திவர்மனை கண்டுபிடிக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை சஸ்பென்சாக சொல்லி இருக்கிறார் ஒரு ஊரிலே பெரிய மனிதர் ஒருவர் தொல்லியல் துறையை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சர்கள் கூட்டாக சேர்ந்தால் பழங்கால சிலைகளை சுலபமாக கடத்தி பல கோடி சம்பாதிக்க முடியும் என்ற உண்மையை சொல்லி இருக்கிறார் கிராம மக்கள் இன்னும் ஏதோ ஒரு சக்திக்கு பயந்து கொண்டு மூடநம்பிக்கைகள் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அந்த மூடநம்பிக்கையை விட்டு அவர்கள் வெளியே வர வேண்டும் என்ற அற்புதமான கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்
கிராமத்து இளைஞர்கள் படித்து முன்னுக்கு வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும் என்பதையும் கருத்தாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
கடவுள் என்றுஒன்று ஒருவர் இருக்கிறார் அவரையே மீறி ஒரு சக்தி செயல்படுகிறதா என்ற கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார் இயக்குனர்
இந்த படத்துக்கு காதல் காட்சிகள் தேவையில்லை ஏனென்றால் கதையை ஒரு டெம்போவாக போய்க் கொண்டிருக்கிறது இதை கண்டுபிடிக்கும் பொறுப்பில் இருக்கிறார் காவல் துறை அதிகாரி நாயகன் இதற்கு எதற்கு காதல் இருந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது மொத்தத்தில் இந்த நந்திவர்மன் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது விறுவிறுப்பாக செல்கிறது திரில்லர் ராக இருக்கிறது மறைந்து போன தமிழக வரலாற்றை கண்டுபிடிக்க முடியாத சில சம்பவங்களை சொல்கிறது எல்லா வகையிலும் இந்த நந்தி வர்மன் வெற்றி பெறுவான்.
நிச்சயம் காண வேண்டிய படம் மிஸ் பண்ணிடாதீங்க