ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்

படம் மிரட்டுகிறதா? இல்லை படம் பார்க்க வந்தவர்களை விரட்டுகிறதா? இல்லை பேய் தியேட்டருக்குள் வைத்து லாக் செய்கிறதா ? ஹவாங்க பார்க்கலாம்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கதை

1993 ம் வருடம் ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் பார்த்து 4 பேர் இறந்துவிடுகிறார்கள், அதேசமயம் அந்த படத்தின் இயக்குனரும் இறந்துவிடுகிறார். இந்த காரணத்தினால் அந்த தியேட்டருக்கு யாரும் செல்வதில்லை. 2018 ம் வருடம் 5 நண்பர்கள் இணைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அப்படி செல்லும்போது அருகில் ஒரு தியேட்டர் இருப்பதை பார்த்த இவர்கள், படம் பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். பிறகு படத்திற்கும் செல்கிறார்கள்.

IT- யில் வேலை செய்யும் இரண்டு பெண்களும் பேய் படம் பார்க்க வருகின்றனர், மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் படம் பார்க்க வருகிறார்கள். பிறகு ஒரு காதல் ஜோடி படம் பார்க்க தியேட்டருக்குள் வருகிறார்கள். இவர்கள் உள்ளே வந்ததும் சில அமனுஷிய விஷயங்கள் நடக்கிறது. அப்போது இவர்கள் முன் பேய்கள் தோன்றி சில கோரிக்கைகளை வைக்கிறது, அதனை செய்தால்தான் நீங்கள் அனைவரும் உயிரோடு வெளியே செல்ல முடியும் என்கிறது, கடைசியில் இவர்கள் பேய்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் இந்த பேய்கள் எதனால், எப்படி இறந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை…13 பேர் 5 பேயிடம் மாட்டிக் கொண்டு படம் முழுக்கவே சிரிக்க வைக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் விதவிதமாக ரசிக்க வைக்கிறார்கள் இதில் ஒரு கள்ளக்காதல் ஜோடி ஒரு குடிகாரன் மாணவர்கள் முனீஸ் காந்த்யின் வில்லத்தனம் மதுமிதாவின் வில்லித்தனம் இப்படி படம் முழுக்க ஒரே திரையரங்கில் படமாக்கி வித்தியாசமான முறையில் பேய் படம் எடுத்திருக்கிறார்கள். பரிதாபங்கள் கோபி சுதாகர் இருவரும் செம்ம லூட்டி அடிக்கிறார்கள் முனீஸ் காந்த் இந்த படத்தில் வித்தியாசமான காமெடி வில்லன் ரோலில் கலக்கி உள்ளார்.

பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்தி அட்டகத்தி ரித்விகா இருவரும் வரும் காட்சிகள் மனதை தொடுகிறது இருவரும் மதம் மாறி திருமணம் செய்ததால் பிரச்சனைக்குள்ளாகி வாழ்பவர்கள் ஜாலியாக தியேட்டருக்கு வந்து பேயாகி போவது கண்களை கலங்க வைக்கிறது நிறைமாத கர்பினியாக இருக்கும் ரித்விகா குழந்தையோடு முனிஸ்கான் காலில் விழுந்து காப்பாற்றும்படி கெஞ்சும் போது முனிஸ்கான் காலால் உதைத்து தன் அறக்கத் தனத்தை காட்டுகிறார் அது பார்க்கும் பெண்களுக்கு நிச்சயம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் படம் முழுக்க தியேட்டருக்குள் ஒரு சின்ன பொம்மை குழந்தை வடிவத்தில் தவழ்ந்து கொண்டே இருக்கிறது அது ரித்விகாவின் வயிற்றில் இருநத அந்த குழந்தை என்று தெரிய வருகிறது மற்றவர்கள் நடித்த அனைவரும் நன்றாக நடித்தி ருக்கிறார்கள். ஆனால் யாஷிகா ஆனந்த் க்கு நடிக்க வாய்ப்பு இல்லை. 2017 இல் படம் முடிந்துவிட்டது என்று இயக்குனர் கூறி இருந்தார் ஆனால் இப்பொழுது 2023 பொருத்தமாக காட்சிகள் அமைந்திருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு ஓட்டேரியில் உள்ள ஒரு திரையரங்கில் தான் எடுத்திருக்கிறார்கள் மீதி காட்சிகளை மகாலட்சுமி தியேட்டரில் எடுத்திருக்கிறார்கள் நிஜமாக பேய் படம் பார்த்து ஒரு திருப்தி

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் வெங்கட் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
பேய் படம் எடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கும் இயக்குனர் அந்த தியேட்டரிலேயே பேயாக வரும் வித்தியாசமான சிந்தனை.
மோசமான படத்தை வாங்கி அதை எப்படி பப்ளிசிட்டி செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கும் தியேட்டர் அதிபர் முனிஸ் காந்த்யின் வித்தியாசமான சிந்தனை படத்திற்கு பலம்

➡அனைவரின் நடிப்பு
யூ ட்யூபர்ஸ் அனைவரும் ஒன்று சேர்ந்து தயாரித்திருப்பதால் அனைவரிடம் நகைச்சுவை மேலோங்கி இருக்கிறது. சாரா நடிப்பு நன்றாக இருக்கிறது கோபி சுதாகர் நடிப்பு நன்றாக இருக்கிறது கார்த்தி ரித்விகா நடிப்பு நன்றாக இருக்கிறது இப்படி எல்லோருடைய பங்களிப்பும் படத்திற்கு மிக சிறப்பாக இருக்கிறது.

➡பின்னணி இசை
படம் முழுவதும் படத்திற்கு உயிரோட்டமாக கொண்டு செல்வது பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

➡ஒளிப்பதிவு
படம் முழுக்க ஒரே திரையரங்கில் எடுக்க வேண்டும் அப்படி என்று சொல்லும் பொழுது ஒளிப்பதிவாளர் க்கு ஒரு சவால் தான் சரியான லைட்டிங் சரியான கேமரா கோணம் என ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது.

➡படம் எடுக்கப்பட்ட விதம்
படத்தில் வரும் பேய்கள் ஜார்ஜ் மரியா சாரா மற்றும் அக்பர் என எல்லோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து சபாஷ் வாங்குகிறார்கள்

➡6 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம்

➡ இந்த படத்தில் நடித்தவர்கள்
சத்தியமூர்த்தி, யூடியூபர்கள் விஜய், ஹரிஜா, ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர், கார்த்திக், ரித்விகா, யாஷிகா ஆனந்த், முனிஷ்காந்த், ஷா ரா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். ஜோஷுவா ஜெ பெரேஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கவுஷிக் கிரிஷ் இசை அமைத்துள்ளார்..
இது ஹாரர், காமெடி படம். ஒரே இரவில் திரையரங்கில் நடக்கும் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறார் கள்
. படம் பார்க்கத் திரையரங்குக்கு வரும் சிலர் அங்கிருக்கும் ஐந்து பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றின் பிடியில் இருந்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் கள்

கிளைமாக்ஸ் புதுமையாக இருக்கிறது முனிஷ்காந்த் வில்லனாக நடித்திருக்கிறார். 80 சதவிகித காட்சிகள் திரையரங்கில்தான் நடக்கின்றது
பொதுவாக ஹாரர் காமெடிக்கென இருக்கும் ‘டெம்பிளேட்’ இதில் இருந்தாலும் பேய் விஷயத்தில் புதுமை இருக்கிறது
. படத்தில் கருத்து என்று எதுவும் இல்லை. முழு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது யூடியூப்பில் இருந்து படம் இயக்க வந்ததால் இந்தப் படத்தின் மூலம் சினிமாவை நிறைய கற்றுக் கொண்டு படமாக்கி யுள்ளனர்.

மொத்தத்தில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இயக்குனர் ரமேஷ் வெங்கட் புத்திசாலித்தனமான இயக்கத்தால் வெற்றிகரமான ஓட்டத்தை பிடித்திருக்கிறது பேய்ப்படம் விரும்பி பார்ப்பவர்கள் அதுவும் காமெடி படம் தான் பார்ப்பவர்கள் என்பவர் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு அடுத்து இயக்குனர் ரமேஷ் வெங்கட் பேசப்படுவார் கோவை சேர்ந்தவர் எரும சாணி யூடுபின் மூலமாக பிரபலமானவர் குறும்படம் மூலம் இன்று வெள்ளித்தறையில் கால் பதித்திருக்கும் இவருக்கு முதல் படமே முத்தான வெற்றி படமாக அமைந்திருக்கிறது நிச்சயம் படத்தை ரசிக்கலாம் காமெடியில் கலகலப்பாக கொண்டாடலாம் மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க