நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா , நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்
திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இந்த படம் உருவாகியுள்ளது படத்தின் இடைவேளை வரை ஜித்தன் ரமேஷ் அமானுஷ்ய சக்தியா? தீவிரவாதியா ?யார் இவர் என்று கதைக்கோணத்தில் கொண்டு சென்று ஜெட் வேகத்தில் பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தின் தயாரிப்பாளர் அமர் காவல் ஆய்வாளர் வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அடர்ந்த காடு திகிலான காட்சிகளுடன் படம் ஆரம்பிக்கப்டுகிறது
பொறியாளர் ஜான் அவரது குடும்பத்துடன் அந்த அடர்ந்த காட்டில் விபத்தில் சிக்குகிறார் கட் செய்து இந்தப் பக்கம் பார்த்தால் x மினிஸ்டர் குருமூர்த்தி அவரின் மகனுமான கார்த்தியும் அவரது காதலி அஞ்சனாவும் அந்த அடர்ந்த காட்டுக்குள் சொர்க்கத்தை தேடி புறப்படுகிறார்கள் சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று காதலியிடம் கூட்டிப் போகும் கார்த்தி பொறியாளர் ஜான் விபத்துக்குள்ளான அந்த பகுதியிலேயே சொர்க்கத்தை தேடுகிறார்கள் கட் செய்து இந்த பக்கம் பார்த்தால் அஞ்சனா படிக்கும் கல்லூரி ஹாஸ்டல் வார்டன் அஞ்சனாவை இரண்டு நாளாக காணவில்லை என்கிறார் அவருடன் சென்றது x மினிஸ்டர் குருமூர்த்தியின் மகன் என்கிறார் காவல் ஆய்வாளர் சலீம் வியந்து பார்க்கிறார். அதற்கு பின் தேடும் படலம் ஆரம்பமாகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் அருவி மதன் தன்னுடைய துப்பறிவு மூளை கொண்டு காரின் டயர், பெட்ரோல் பங்க், மெடிக்கல் ஷாப், என்று துப்பறிகிறார் அவருக்கு கிடைத்த துப்பு பொறியாளர் ஜான் விபத்துக்குள்ளான அந்த காட்டுப் பகுதியில் தான் கார்த்தியும், அஞ்சனா வும் சென்றிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் அதன் பிறகு காவல் ஆய்வாளர்
அருவி மதன் இன்னும் ஒரு பெண் போலீஸ் மூவரும் காட்டுப் பகுதியில் தேர்தல் வேட்டையை தொடங்குகிறார்கள் அதன் பிறகு தான் ஜித்தன் ரமேஷ் அட்டகாசமான என்டிரியுடன் அறிமுகமாகிறார்
அடர்ந்த தாடி பரட்டை முடி விகாரமான சிரிப்பு அந்த அடர்ந்த காட்டுக்குள் அவர் யார் ?அமானுஷ்யமா ? அல்லது தீவிரவாதியா? அல்லது பெண்களை கடத்தி போற வரா ?என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஒருபுறம் போலீஸ் வேட்டை ஒருபுறம் ஜித்தன் ரமேஷின் வேட்டை கார்த்தி அஞ்சனா இவர்கள் நிலைமை என்ன ஆனது என்பதை இடைவேளை வரை ஒரு மணி நேரம் பறக்க பறக்க விறு விருப்பாக பரபரப்பாக சொல்லி இருக்கிறது இந்த ரூட் நம்பர் 17. அதன் பிறகு இடைவேளைக்குப் பிறகு ஜித்தன் ரமேஷ் யார்? கார்த்தி அஞ்சனா யார்? X மினிஸ்டர் குருமூர்த்திக்கும் ஜித்தனுக்கும் என்ன பிரச்சனை அருவி மதன் கண்டுபிடிக்கும் அந்த ஜர்னலிஸ்ட் யார் ?இப்படி பரபரப்பாக போகிறது. ஒரு திகில் சஸ்பென்ஸ் படம் பார்ப்பதற்கு என்ன தேவையோ எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கிறது ஜித்தன் ரமேஷ் பதுங்கு குழி யில் ஏன் பதுங்கி வாழ்கிறார் என்பதெல்லாம் படத்தின் சஸ்பென்ஸ் நீங்கள் படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும் அத்தனை பேரும் உழைப்பு கடினமாக இருந்திருக்கிறது இது படம் பார்க்கும்போது தெரிகிறது. படப்பிடிப்பு நடத்துவது லைட்டிங் கேமரா எல்லாம் சரி செய்து அத்தனை கூட்டமும் உள்ளே இறங்கிகுழிக்குல் பணி புரிந்திருப்பது சவாலான விஷயம் தயாரிப்பாளர் காவல் ஆய்வாளராக வருகிறார் கச்சிதமான வடிவமைப்பு அசல் காவல் ஆய்வாளர் போல தோற்றம் தருகிறார் அருவி மதன் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் நூடுல்ஸ் படத்திற்கு பிறகு இதிலும் காவல் துறை அதிகாரியாக வருகிறார் மலையாளத்தில் கச்சிதமாக காலடி எடுத்து வைத்திருக்கிறார் இனிமேலும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் மலையாளத்தில் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது . அவர் காவல்துறை அதிகாரியிடம் பணிந்து பேசி தான் கண்டுபிடித்ததை கூறும் பொழுது ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்வாரோ அப்படி பௌய்யமாக நடித்திருக்கிறார் அவரின் துப்பறியும் மூளை ஒன்று ஒன்றாக கண்டுபிடிக்க சபாஷ் போட வைக்கிறது வாழ்த்துக்கள் அருவி மதன்.
இசை ஒலிப்பதிவு படத்தொகுப்பு காஸ்ட்யூமர் படத்திற்கு மிக கச்சிதமாக அமைந்திருக்கிறது
“ஜித்தன் ரமேஷ் க்காகவே உருவாக்கப்பட்ட படம் போல் இருக்கிறது,படப்பிடிப்பை கிட்டத்தட்ட பத்து ஷெட்யூல்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். தாங்க முடியாத கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு அறையில் காட்சிகளை படமாக்கியபோது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வெளியே வந்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொண்டு அதன்பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்காக கீழே வந்து விடுவாராம் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் ஜித்தன் இப்படத்திற்காக 20 அடிக்கும் கீழே பள்ளம் தோண்டி இரண்டு குகைகளாக அமைத்துள்ளனர் 5500 சதுர அடியில் பெரிய குகை அமைத்து மிகவும் சிரமப்பட்டு படமாக்கி இருப்பது நன்றாக தெரிகிறது அதன் பலன் பார்ப்பவர்களை மிரட்ட தான் செய்கிறது அவுசப்பச்சன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார் படத்தின் பழமை இசைதான் அதுவும் சஸ்பென்ஸ் படத்திற்கு திரில்லான இசையை கொடுப்பதில் இசையமைப்பாளர் நிறைவான இசையை கொடுத்துள்ளார் பாடல்கள் இரண்டு தான் என்றாலும் அதுவும் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மேல் உயரம் என்பதால் பல காட்சிகளை கிரேன் உதவி இல்லாமலேயே படமாக்கி இருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள் காடுகளை கிரேன் மூலம் காட்டியதும் திகிலான காட்சிகளை படமாக்கியதும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் நன்றாக தெரிந்தன
* இரண்டாம் நாயகன் அகிலுக்கு முதல் படம். படப்பிடிப்பில் நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்கிறார. பைட் மாஸ்டர் ஜாக்கி ஜான்சன் நிறைய பயிற்சி கொடுத்து உள்ளார்.
நாயகி அஞ்சு படம் முழுக்க சேரும் சகதியும் பூசிக்கொண்டு பதுங்கு குழியில் இருந்து மேலே தப்பிப்பதற்காக கீழே விழுந்து அடிபட்டு பல பயிற்சிகள் எடுத்துள்ளார் சூடான முத்த கட்சியும் இவருக்கு உண்டு நல்ல வரவு தமிழில் மலையாளத்திலும் இவரை இன்னும் அதிகம் பார்க்கலாம்
தயாரிப்பாளர் அமர் இவர் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு பட தயாரிப்புகளுக்குள்ளும் இறங்கி இருக்கிறார் முதல் படமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது சஸ்பென்ஸ் திரில்லரான இந்த படம் ஓடிட்டிலும் நல்ல விலைக்கு போகும் புதிய அனுபவம், புதிய கலைஞர்கள்’ டெக்னீசியன்கள், எடுத்த இந்த முயற்சி வெற்றியை முன்னெடுக்கும்
