கும்பாரி பிரண்ட்ஸ் திரை விமர்சனம்

நட்பா காதலா? அண்ணணா காதலனா?

ஓடிப் போன காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

காணாமல் போன நண்பன் மீண்டும் வந்தாரா?

இவைகளுக்கெல்லாம்.. பதில் சொல்லுகிறது கும்பாரி பிரண்ட்ஸ்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தின் கதை, ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்

இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.
முழுக்க முழுக்க காமெடியை மனதில் வைத்துக்கொண்டு கதை எழுதியுள்ளார் இயக்குனர் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி சில இடங்களில் சரவெடியாக வெடிக்கிறது. அதற்கு காரணம் சாம்ஸ் நடிப்பு படத்திற்கு துடிப்பு

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம்,
அடடா !படம் முழுவதும் குமரி கடலின் அழகையும் அங்குள்ள பசுமை பள்ளத்தாக்குகளையும் அழகாக படமாக்கி உள்ளார் இந்த படத்தின் முதல் ஹீரோ என்றால் ஒளிப்பதிவாளர் ஆறுமுகம் தான்
கண்களுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது .
முழுக்க முழுக்க கடல் நீரையேபார்த்துக் கொண்டிருக்கலாம் என்று இருக்கிறது கலர் கரெக்ஷன் அதற்கு துணை நின்றிருக்கிறது ஒளிப்பதிவாளர்க்கு வாழ்த்துக்கள்.

இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர்,
மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள்.
அவங்க இவங்க பாடலும் நண்பனைப் பற்றிய பாடலும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது.

படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன்,சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல் ,கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். அனைவரும் பங்கு சிறப்பாக இருக்கிறது ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் உழைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

சிறு வயதிலிருந்து நட்பு கொள்ளும்
இரண்டு பேர் விஜய் விஸ்வாவும், நலீப் ஜியாவும்,
நட்பு இறுகி உறுதியான பிணைப்பாக மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள்.
இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள். என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா? என்று கதறுகிறாள் அவள்.ஆனால் யாரும் வரவில்லை. அனைவரும் தயங்கி நிற்கிறார்கள். இது நாயகனுக்குத் தெரிகிறது அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறான்.

அடி வாங்கிய அவர்களோ பதில் விளைவு காட்டாமல் சிரிக்கிறார்கள்.நாயகன் புரியாமல் நிற்கிறான். இதில் என்ன கொடுமை என்றால் அந்த, துரத்தப்பட்ட இளம் பெண்ணும் சிரிக்கிறாள்.காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன்,இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை ஓங்கி அறைந்து விடுகிறான்.
அந்த பிராங்க் வீடியோ வெளியிட்ட ஒரு நாளில் மில்லியன் கணக்கில் வீவர்ஸ் வந்து குவிக்கிறது இதை கண்ட நாயகி அடடே இப்படி ஒரு நாயகன் நம் வாழ்வில் கிடைத்தால் நம் வாழ்க்கையை சந்தோஷமாக இருக்கும் என்று தன்னுடைய ஃபிரண்ட்ஸ் மூலம் நாயகனின் நம்பரை வாங்கி ஹோட்டலுக்கு வரவழைத்து பேசுகிறார் பின்னர் அது காதலாக மாறுகிறது அந்த காதலுக்கு எதிராக நாயகியின் அண்ணன் வருகிறார்.

அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட. அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது இதற்கிடையில் விஜய் விஷ்வாவின் நண்பன் காணாமல் போகிறார்.
நண்பனை கண்டுபிடித்து கொடுக்கச் சொல்லி விஜய் விஸ்வா கோர்ட்டுக்கு போகிறார் இடைவேளை வரை கோர்ட்லேயே கதை நடக்கிறது.

காதல் சுகுமார் எக்ஸ் எம்எல்ஏவின் மகன் என ஐந்து பேர் நாயகி தர்ஷனிடம் முன்பே வாளாட்டுகிறார்கள் இதனால் இவர்கள்தான் விஜய் விஸ்வாவின் நண்பனை கடத்தி இருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்பட இவர்கள் ஐந்து பேரும் தப்பித்து இலங்கை செல்கிறார்கள் இலங்கை சென்ற பிறகு ஒரு உண்மை தெரிய வருகிறது அது என்ன?
ஜார்ஜ் விஜய் தன் தங்கையை தேடி ஒவ்வொரு இடமாக அடியட்களை ஏவுகிறார் அந்த அடியாட்கள் இளம் காதல் ஜோடியை கண்டுபிடித்தார்களா?

உண்மையில் நடந்தது என்ன என்கிற டிவிஸ்ட் என கதை நகர்கிறது.

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம். இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது.

குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன. இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.
காமெடி படத்தின் பிரதானம் என்பதால் எல்லோருடைய கதாபாத்திரமும் காமெடி கலந்தே இருக்கிறது.

‘ கும்பாரி’ படத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் எடுக்க பட்டுள்ளது
ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.
.
கும்பாரி’ படத்தை ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரித்துள்ளார். ‘கும்பாரி ‘திரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் பிளஸ் என்ன பார்ப்போம்?

விஜய் விஸ்வா நாயகனாக நடித்திருக்கிறார் நடிப்பில் நல்ல முன்னேற்றம் காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் போது நண்பனுடன் நடனம் புரியும் போது நண்பனை பிரிந்த பிறகு சோகமாக நடிப்பதில் கவனம் பெறுகிறார்.

அடுத்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் இவரின் காமெடி அல்டிமேட் ரகம் அடுத்த வடிவேலு இவர் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க ராஜாங்கம் செய்திருக்கிறார் ஜான்விஜயுடன் சேர்ந்து நக்கல் அடித்துக் கொண்டு மைண்ட் வாய்ஸ் பேசிக் கொண்டும் எல்லா கட்சிகளிலும் அருமையாக நடித்தி ருக்கிறார்.
இதே போல பல படங்களில் நடிக்க இனிமேல் வாய்ப்பு வரலாம் வாழ்த்துக்கள் சார்

அடுத்த நாயகி youtube நடத்தும் youtubeபராக சரியாக பொருந்தி இருக்கிறார். அண்ணனை முண்டம் என்று திட்டிக்கொண்டு அவர் காட்டும் பாசத்தை கிண்டல் செய்வதாகட்டும், முதல் காட்சியிலேயே தன்னை துரத்தி வருபவரிடம் ஓடும் போது , மற்றும் காட்சி காதல் கட்சியில் அழகாக ஜொலிக்கிறார். மகானாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

விஜய் விஸ்வாவின் நண்பனாக வரும் நலிப் ஜியா நல்ல கட்டு உடல் ஆக்சன் காட்சிக்கு அருமையாக பொருந்தி போகிறார் . இவருக்கு இன்னும் இரண்டு சண்டை காட்சிகள் வைத்திருக்கலாம் அழகாவும் இருக்கிறார் வரும் காலத்தில் நல்ல நடிகராக வர வாய்ப்பு உள்ளது.

ஓகே ஓகே மதுமிதா நல்ல காமெடி நடிகை யாக வலம் வருகிறார். நாயகியின் தோழியாக வந்து கலகலப்பாக கதைக்கு உதவுகிறார்.

மதுமிதாவின் அம்மாவாக செந்தில் குமாரி
இவர் ஜான் விஜய்யிடம் இருந்து தப்பிக்க காளி வேஷம் போட்டு கம்பீரமாக வந்து கர்ஜிப்பதும் அதன் பின் அவர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்று நடுங்குவதும் ரசிக்க வைக்கிறது.

ஜான்விஜய் இவர் வில்லனா? காமெடியனா ?என்று சொல்லும் அளவுக்கு இரண்டுக்கும் பொருந்தி போகிறார் தங்கை மீது அபார பாசம் கொண்டு உருகி உருகி பேசுவதும் டிவியில் தங்கையின் பாடல் போடும்போதெல்லாம் கண்ணீரோடு கலங்குவதும் என் உயிர் என் தங்கை என்று பேசும்போது சந்திராஷ்டமத்துக்கு பயந்து வீட்டிலே உட்கார்ந்து கொண்டு தங்கையை சாட்சி கையெழுத்து போட்டு அனுப்புவது காமெடி அதேபோல் பருத்திவீரன் சித்தப்பு பெரிய டான் என்று நினைத்துக் கொண்டு போக அவர் வெறும் டண்டனக்கா என்று தெரிந்து கொண்டு விழியை பிதுக்குமிடம் எல்லாம் செம கலகலப்பு.

பருத்திவீரன் சரவணன் பெரிய டானாக வருவார் திருகுவது உடைப்பது கழுத்தை நெரிப்பது என்று அவருக்கு பில்டப் கொடுத்த செந்தி… பிறகு பார்த்தால் பருத்திவீரன் சரவணன் வெறும் டண்டனக்கா தான் தண்ணி பார்ட்டி. என்று தெரிய வரும் போது தியேட்டரில் சிரிப்பொலி.

இயக்குனர் கெவின் அடியாளாக வந்து தண்ணி பாட்டியாக மாறி சாம்ஸ் அவர்களிடம்
கமெண்ட் அடித்து கலகலப்பு ஊட்டுகிறார்.

ஜான் விஜய் வீட்டு வேலைக்காரி அம்மா கூட நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார் குடிகாரனாக வரும் ராயர் நடிப்பு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் கும்பாரி அனைவரையும் ரசிக்க வைக்கிறது சிரிக்க வைக்கிறது நட்பு பாசம் பற்றி எடுத்துரைக்கிறது நிச்சயம் காண வேண்டிய படம் மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க