அரணம் திரை விமர்சனம்

தமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி பெற்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பிரியன், ‘அரணம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குநர் பிரியன் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘அரணம்’. இதில் பாடலாசிரியர் பிரியன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் லகுபரன், கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நித்தின் கே. ராஜ் ஆகிய இ.ஜெ. நௌஷத் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பி கே. ஸ்டண்ட் ராம் குமார். நடனம் ராம் சிவா செல்வி. மக்கள் தொடர்பாளர் மனவை புவன்

ஹாரர் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரைக்கூடம் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

, ”அரணம் படத்தின்
கதை என்ன வாங்க பாக்கலாம்

அறந்தாங்கியில் உள்ள ,ஒரு பண்ணை வீட்டில் தான் முழு கதையும் நடக்கிறது. அந்த பண்ணை வீட்டுக்கு சொந்தக்காரரான பெரியவர் கதிர் என்கிற பிரியனையும சக்தி என்கிற லகுபரனையும், எடுத்து வளர்க்கிறார்.

கதிர் சென்னையில் வேலை செய்கிறார். சக்தி திருச்சியில் படித்துக் கொண்டிருக்கிறார் பண்ணை வீட்டு பெரியவர் கதிரிடம், உனக்கு பெண் பார்த்து இருக்கிறேன் காரைக்குடியில் சென்று பெண்ணை பார்த்துவிட்டு வா என்கிறார். அங்கு செல்லும் கதிருக்கு வர்ஷாவை பிடித்து போகிறது தில்லைநாயகியாக அவர் அம்சமாக இருப்பது கண்டு அவருடன் மனம் முடிக்கிறார். இதற்கிடையில் பெரிய வீட்டு பண்ணைக்காரர் மகன் மாயவன் சொத்தை கேட்டு அப்பாவிடம் வாக்குவாதம் செய்கிறார். பண்ணைக்கரர் சொத்து தர முடியாது என்று சொல்ல அவரை கொலை செய்ய புறப்படுகிறான் மாயவன் அப்பொழுது தடுக்கி விழுந்து இறந்து போகிறான் அதற்குப் பிறகு மாயவன் தான் அந்த பண்ணை வீட்டில் பேயாக உலா வருகிகிறான் என்று கதை செல்கிறது இடை வேளை வரை தில்லை நாயகி என்கிற வர்ஷா பயந்து பயந்து அந்த பண்ணை வீட்டில் காலம் கழிக்கிறார். இரவு நேரத்தில் மட்டும் மிரட்டும் அந்த சக்தி யார்? எது என்று புரியாத குழப்பமாக இருக்கிறது!

இடைவேளைக்கு பிறகு இதற்கெல்லாம் விடை சொல்லும் விதமாக கதை சொல்லி இருக்கிறார் கவிஞர் பிரியன் இடைவேளைக்கு பின் சொல்லப்படும் கதை மிகவும் விறுவிறுப்பாக ப்பாகவும் பல முடிச்சுகளுக்கு பதில் சொல்லும் வண்ணம் விறுவிறுப்பாக இருக்கிறது . தன் தம்பியுடன் அவர் நடத்தும் அந்த வீர விளையாட்டு ரசிக்கும் வண்ணம் இருக்கிறது இடைவேளை வரை ஒரு கதை இடைவேளைக்குப் பிறகு ஒரு கதை என இரண்டு கதைகளுக்கும் சமமான முடிச்சு போட்டு கவிஞர் படத்தை இயக்கியிருக்கிறார். தேவையற்ற செலவுகளை குறைத்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டி படத்தை கொண்டு சென்றிருக்கிறார். அந்த பண்ணைக்காரர் முகத்தையே காட்டாமல் அவர் கதாபாத்திரத்தை கொண்டு சென்றிருப்பது சிறப்பு படத்திற்கு தடையாக இருப்பது பாடல்கள் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் போது இடையிடையே பாடல்கள் வந்து கதையின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது

கவிஞர் பிரியன் அறிமுகமாகியுள்ள,முதல் படம் நன்றாக நடித்து இருக்கிறார் ஆதரவற்ற குழந்தைகளுடன் அன்பாக பேசி பயந்து நடுங்கும் மனைவியை தட்டிக்கொடுத்து சாகப்போகும் இளைஞனை படிக்க வைத்து எதிரிகளை துவம்சம் செய்து ஆடிப்பாடி ரொமான்ஸ் செய்து அசத்தி இருக்கிறார் முதல் படம் போல் இல்லாமல் அனுபவமாய் நடிகராக பல இடங்களில் தெரிகிறார் எதற்கும் மாற்றிக் கொள்ளாமல் மனைவிக்கு ஆறுதல் கூறி கம்பீரமான கணவராக வந்து போகிறார் தன் தாத்தா யார் அவரும் அவர் தம்பியும் எப்படி அவரிடம் வந்து சேர்ந்தார்கள் என்ற பிளாஸ் பேக் கதையை சொல்லும் பொழுது உருக்கமாக இருக்கிறது.
இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது இனி நிறைய படங்களில் நாயகனாக தொடர வாய்ப்புள்ளது.

லகுபரன் சில படங்கள் கதாநாயகனாக நடித்தவர் இந்த படத்தில் கவிஞருக்கு தம்பியாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ஏனோதானோ என்று இல்லாமல் உபயோகமாக இருக்கிறது அவருக்கும் பங்கு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் கிளைமாக்ஸில் எல்லாம் என் தம்பி தான் என்று பவ்யமாக சொல்வது ரசிக்க வைக்கிறது.

நாயகி வர்ஷா தில்லைநாயகி என்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் மங்களகரமான பெண்ணாக
கணவனிடம் , பேயை கண்டு பயந்து அலறி ஓடும் பல காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் சிறைக்குச் சென்று விட்டு வரும் கணவனிடம் நான் பழைய வாழ்க்கைக்கு வரமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழும் காட்சி அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

மற்றும் இதில் ஊர் பெரியவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் வேலை ஆட்கள் ,அரிசி மில் பணியாற்றும் வேலையாட்கள் என்று எல்லோரும் தங்கள் பங்குக்கான நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் கள். கதிரின் மாமனாராக வரும் அவர் 2 காட்சிகளில் வந்தாலும் காமெடியில் கலக்குகிறார்.

இந்த படத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

ஆரம்பகட்ட காட்சி மாயவன் இறந்த பிறகு அவர்தான் அந்த அமானுஷ்யம் என்று நம்ப வைக்கிறார் இயக்குனர்.

கதிரின் சித்தப்பா அந்த பண்ணை வீட்டை வாங்க அந்த வீட்டுக்கு பில்லி சூனியம் வைக்க வருகிறார் அந்த சீன் மிரட்டலாக இருக்கிறது.

கதிர் வருவதற்கு இரவு தாமதமாக மாடியில் இருந்து மிரட்டும் அந்த சக்தி மிரட்டலாக இருக்கிறது.

ஆட்டுக்குட்டி கத்துவதை பார்த்து இரவில் தனியாக சென்று அதைத் தேடும் அந்த காட்சியில் தில்லைநாயகி பயமுறுத்து செய்யும் அந்த காட்சி நன்றாக இருக்கிறது.

நாயகி மிரண்டு போக கிணற்றுக்குள் இருந்து வாலியின் சத்தம் தொடர்ந்து கேட்க கிணற்றை எட்டிப் பார்க்கும்போது அங்கிருந்து ஒரு உருவம் வெளிப்படுவது அந்த இடம் மிரட்டலாக இருக்கிறது.

வீட்டுக்குள் புகை மூட்டம் தெரிய நாயகி பயந்து கொண்டு வெளியே ஓடி வருவது அந்த காட்சி மிரட்டல் ஆக இருக்கிறது.

இடைவேளைக்கு முன் நடக்கும் அந்த கொலை யார்? என்ன என்று தெரியாமல் சஸ்பென்சாக கொண்டு சென்று இருக்கிறார். இயக்குனர் அது அவரின் சாமர்த்தியம் என்று தெரிகிறது

இரவு நேரத்தில் அந்த பண்ணை வீட்டை காட்டும் போது விகாரமாகவும் பயம் கலந்தும் காட்டி இருப்பது ஒளிப்பதிவாளரின் திறமை.

இசையமைப்பாளர் படத்திற்கு தேவையான மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

இரண்டு மணி நேரம் படம் தான் கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாக செல்கிறது படத்தொகுப்பாளர் நன்றாக செதுக்கி உள்ளார்.

படத்திற்கு பாடல்கள் தடையாக இருக்கிறது கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென பாடல்கள் வருவது நெளிய வைக்கிறது.

நாயகன் நாயகி ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

அவ்வளவு பெரிய பண்ணை வீட்டில் இரவில் நாயகி மட்டும் தனியாக இருக்கிறார் அங்கு ஒரு வேலைக்காரர், வேலைக்காரியோ இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது . நாயகியை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படி காட்சி வைத்தது போல் தெரிகிறது.

ஒரு சின்ன பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரியன் . மொத்தத்தில் இந்த அரணம் ‘ரசிகர்களை மிரட்டுகிறது எதிர்பாராத டிவிஸ்ட் களால் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்களுடன் அந்த பண்ணை வீடும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.
விருவிருப்பான திரைக்கதை எதிர்பாராத டுவிஸ்ட்
என அரணம் ரசிக்க வைக்கிறது
இப்படத்தின் நாயகனின் சிறப்பு அம்சங்கள்…

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா வர மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள்….
பாடலாசிரியர் பிரியன் – கதிர்வேல் வர்ஷா – தில்லைநாயகி
லகுபரன் – சக்திவேல்
கீர்த்தனா – கயல்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் –  பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை –  பழனிவேல்
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம்  –  ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு  – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.

படத்தை உத்ரா புரொடக்ஷன் மூலம் ஹரி உத்ரா தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகாவில் வெளியிடுகிறார். மொத்தத்தில் இந்த “அரணம்” மிரட்டல்