முகநூலில் ஏற்படும் பழக்கம் சில விபரீதங்களை ஏற்படுகிறது அது என்ன?
——————————————–
இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை சொல்லும் கதை. ஐந்து இளைஞர்கள், சிவா ,வீரா, கதிர் , மாலிக், சைமன், இவர்கள் உடன் இரண்டு பெண்கள் ரோஷினி, சந்தியா முகநூல் மூலமாக பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் சந்தியா கொலை செய்யப்படுகிறாள். அவளை ? கொலை செய்தது, யார்? கொலை செய்ய காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் கதையே “எங்க வீட்ல பார்ட்டி. படம் முழுக்க ஒரு வீட்டில் நடக்கிறது அந்த வீட்டின் உரிமையாளர் கதிர் அவரது பெற்றோர்கள் ஊருக்கு சென்றதால் நண்பர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார் 5 நண்பர்களும் ரோஷினி என்ற பெயரில் முகநூலில் பழக்கம் ஏற்பட்டவர்கள் இதில் சந்தியா இடையில் வந்தவர் பேஸ்புக்கில் 40 பேர் நண்பர்களாக இருந்து ஓராண்டு ஆனதால் பார்ட்டி கொண்டாடுகிறார்கள் அந்த இரவில் சந்தியா கொலை செய்யப்படுகிறார் அவரது காதலர் சிவா சந்தித்து விட்டு போகிறார். கொலைக்கு காரணம் அவரா ?அல்லது வீட்டுக்குள் இருக்கும் கதிர் ,வீரா ,சைமன், மாலிக் ,மது என்கிற ஐந்து பேரா ? என்பதை அந்த வீட்டுக்கு மேலே வந்து போகும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் அவர் இந்த கொலையை துப்புதலக்குகிறார். அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது. அந்த வீட்டுக்கு வந்து போன மாடி வீட்டு ராகவன் மாடி வீட்டு ராணி வேலைக்காரி வாட்ச்மேன் சந்தானம் மெக்கானிக் டோமினி பிளம்பர் நாகர்கோவில் நாகராஜ் இவர்கள் எல்லாம் போலீஸ் அதிகாரி விசாரிக்கிறார் . . அதில் நடந்தது என்ன? அந்த கொலையை செய்தது யார் ? என்று கண்டுபிடிக்க முடிவில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது இந்த கொலை வழக்கு ! அந்த காலத்தில் மிகவும் பிரபலமான ஆளவந்தார் கொலை வழக்கு போன்ற படங்களில் ஏற்படுத்திய திரைக்கதை மாயாஜாலத்தை இந்த படத்தில் இயக்குனர் ஏற்படுத்துகிறார். இடைவேளை வரை வீட்டுக்குள் நடக்கும் கதை சந்தியாவின் காதலர் சிவா வந்த பிறகு அவுட்டோருக்கு போகிறது அதுவும் பாடல் காட்சிகள் தான் 95 சதவீதம் ஒரே வீட்டுக்குள் படம் ஆக்கி இருக்கிறார்கள் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கிறது. ஒரே வீட்டுக்குள் படம் ஆக்குவது கவனமாக படமாக்கப்பட வேண்டும் அது இயக்குனருக்கு கைவந்த கலையாக இருக்கிறது திரைக்கதையும் நன்றாக இருக்கிறது இவர் தான் கொலையாளி என்று நாம் யூகிக்கும் பொழுது இவர் இல்லை என்று ட்விஸ்ட் வைத்து கதையை கொண்டு செல்கிறார். மாலிக்கும் சைமன் ஓரினச் சேர்க்கையாளராக காட்டப்பட்டு அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார் இயக்குனர. பெண் போலீஸ் ஆக வரும் சகீலா கேரக்ட்டரில் வரும் திருநங்கை திருநங்கைகளின் நியாயத்தை எடுத்துரைக்கிறார் கான்ஸ்டபிள் சக்திவேல் கலகலப்பு கூட்டுகிறார். சந்தியா அழகாக வந்து போகிறார் ரோஷினி வேடத்தில் நடித்த வர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
அகிலா முதலாம் வகுப்பு, கணீனியும் கழனியும், ஆகிய படங்களை இயக்கிய
கே.சுரேஷ் கண்ணா இப்படத்தை இயக்கியுள்ளார்.
துப்பறியும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் நடித்துள்ளார் அவர் நடிப்பு நன்றாக மற்றும்,யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு -ஆர்.பாலா அருமையான ஒளிப்பதிவு இசை-வி.கோபி ஸ்ரீ
பின்னணி இசை – பின்னணி இசை பாடல்கள் ரசிக்க வைக்கிறது
சுரேஷ் சர்மா
பாடல்கள்-
சுரேஷ் நாராயணன்
தளபதி ராம்குமார்
நடனம் –
ஆர்.கே சரவணன்
மக்கள் தொடர்பு – வெங்கட்
இணை தயாரிப்பு- சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார்
தயாரிப்பு-சிவபிரகாஷ்
கதை திரைக்கதை
வசனம் இயக்கம் –
கே.சுரேஷ் கண்ணா இவர் இயக்கத்தில் படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுக்க இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு சண்டைக் காட்சியும், இரண்டு பாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதுவும் ரசிக்கும் படி இருக்கிறது பாடல்கள் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் “எங்க வீட்டுல பார்ட்டி” கலகலப்பான திரில்லரான படம் நிச்சயம் திரில்லர் ஜானர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்.
