ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான்,
பொங்கல் படங்களில் பிளாக்பஸ்டர் படமாக வந்திருக்கு “அயலான்” படத்தின் திரைவிமர்சனம்
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ள ஏலியன்ஸை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள அயலான், சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது
ஏனென்றால் இப்படம் பெரிய பட்ஜெட்டில் செலவு செய்து எடுத்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 இல் இந்த கதையை எழுதி இருந்தாலும் 2024 க்கும் இது பொருந்தி போகிறது அதுதான் விசேஷம். ஏனென்றால் ஒரு கதையை முடிவு செய்துவிட்டால் அதை மாற்ற முடியாது காட்சி அமைப்புகளும் சிஜி ஒர்க்க்கும் மாறலாம்.
: முழுக்கவும் கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி படக்குழு இறங்கியிருப்பதை கான முடிகிறது. அதற்கேற்ப தகுந்த உழைப்பைச் சரியாகக் கொடுத்திருக்கிறது கிராபிக்ஸ் குழு. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு. ஏலியன்ஸ் முகபாவனைகள் உடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருக்கின்றனர்.
ஏலியன் எதற்காக பூமிக்கு வருகிறது ? எதற்காக நாயகன் சிவகார்த்திகேயனுடன் அது பயணப்படுகிறது? வில்லனை ஏன் அது வெறுக்கிறது? பூமியில் வாழும் மக்களுக்காக அந்த ஏலியன் என்ன ?சேவை செய்ய வந்திருக்கிறது? என்பதையெல்லாம் லாஜிக் மீறாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்காக அவரை பாராட்டலாம்
ரஹ்மானின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். . டாட்டூ எனும் பெயரில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். பழக்கப்பட்ட ஒன்று என்றாலும் குழந்தைகளைக் கவரும் வகையில் இருக்கிறது . பொதுவாக சினிமாவில் உலகத்தை அழிப்பதற்காகத் தான் ஏலியன்கள் வரும். ஆனால் இந்தப் படத்தில் வித்தியாசமாக பூமியை அழிக்க நினைக்கும் மனிதனைத் தடுக்க ஏலியன் வருவது சிறப்பான யோசனை. மனிதர்களின் சுயநலம் ஆங்காங்கே கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. யதார்த்தத்தை காட்டுகிறது. சிறந்த தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவால் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்
பின்னணி இசையில் ஏ ஆர் ரகுமான் மிரட்டி இருக்கிறார் அதுவும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அந்த இசை படம் பார்ப்பவர்களை மிரட்டி இருக்கிறது அதேபோல ஒளிப்பதிவாளர் காட்சிகளை நமது கண்ணுக்குள் கடத்தி இருக்கிறார்.
திரைக்கதை, முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி புரிய வைத்திருக்கிறது வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையேயான உள்ளே – வெளியே ஆட்டம் படு ஜோர்
கதை, திரைக்கதை, என்ன வாங்க பார்க்கலாம்.
வேறு ஒரு கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழ, அது வில்லன் கைக்கு கிடைக்க, அவன் மைனிங் செய்து பூமியை ஓட்டை போட்டு சில ஆதாயங்களை தேட முயற்சிக்க, அப்போது அங்கிருந்து வெளிவந்த நச்சு வாயுவால் நிறைய மக்கள் இறக்கின்றனர். இதை தடுக்கும் சக்தியாக ஏலியன் வருகிறது. ஏலியனுக்கு துணையாக சிவகார்த்திகேயன் நிற்கிறார். சிவகார்த்திகேயன் துணையாக கருணா, கோதண்டம், யோகி பாபு ,ரகுல் பிரீ சிங் நிக்கிறார்கள் இந்த ஆட்டத்தில் தீமை வென்றதா நன்மை வென்றதா என்பதே திரைக்கதை
இதில் எப்படி ஏலியனை உள்ளே புகுத்தி இருக்கிறார் இயக்குனர். என்பதே விறுவிறுப்பான ஆட்டம்
அயல் கிரகங்கள் தனில் வாழும் உயிரினம்(ஏலியன்) பூமி முக்கியம், என்று அதை காப்பாற்ற ஒரு ஏலியனை அனுப்ப, அந்த ஏலியன் புளு, பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் கொள்கிறது.
அது சென்னைக்கு வருவது தனிக்கதையாக இருக்கிறது நேரடியாக சிவகார்த்திகேயன் இடம் வராமல் அங்கும் இங்கும் தடுமாறி சிவகார்த்திகேயனிடம் வருவது திரைக்கதையின் மாயாஜாலம்
பிறகு அந்த ப்ராஜெக்ட் சென்னைக்கு வர, சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா வில்லனின் சதித்தட்டத்தை முறியடித்தார்களா மக்களுக்கு நேரம் இன்னல்களை நச்சு விஷத்தன்மை வாய்ந்த விசவாய்வு இடமிருந்து காப்பாற்றினார்களா என்பது தணிக்கதை
நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்திருப்போம், ஏலியனால் ஆபத்து என்று ஆனால் ஏலியனால் நம் உலகம் காக்கப்பட போகிறது என்பதே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
இதுவரை சொல்லப்படாத ஏலியன் கதைகளில் வித்தியாசமான கதை இது
சிவகார்த்திகேயன் இன்று குழந்தைகளின் பேவரட் நாயகன், அவரிடமிருந்து குழந்தைகள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை கட்சிதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நான்கு நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தண்ணீ அடிக்கும் காட்சி இருக்கும் அது இந்த படத்தில் கிடையாது கதாநாயகி இருந்தால் டூயட் பாடலில் ஆபாசம் இருக்கும் அதுவும்இந்த படத்தில் கிடையாது குடும்பம் காண வேண்டிய படமாக வந்திருக்கிறது அயலான்
ஏலியனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கும் பாசப்பினைப்பு ஏலியனில் இருக்கும் அபூர்வ சக்தி சிவகார்த்திகேயன் உடம்புக்குள் புகுவது இப்படி எல்லாமே ரசிக்க வைக்கிறது.
கடைசியில் ஒரு எறும்பு சிவகார்த்திகேயன், ஏலியனை கனேக்ட் செய்வது வரைக்கும் இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது என்பதை ரவிகுமார் பதிவு செய்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மட்டும் இருந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, இதில் யோகிபாபு, கருணாகரன் என அவர்கள் டீம் அடிக்கும் ஒன் லைன் கவுண்டர் நல்ல ரீச். இவர்களுடன் ஏலியன் சேர்ந்து அடிக்கும் லூட்டி இவர்களோடு ரகுல் பிரீத் சிங் என காமெடி களத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் .
இந்த படத்தின் சிஜி ஒர்க்உலக தரமாக செய்துள்ளனர், வயலை அழிக்கும் வெட்டிக்கிளி, ரோபர்ட் சண்டைக்காட்சி என அனைத்து காட்சிகளிலும் அசத்தல். இதற்கு நாம் இந்த ஜானரை இத்தனை வருடம் தொடாமல் இருப்பதும் ஒரு காரணம்.
படத்தின் இரண்டாம் பாதி முக்கியமாக கிளைமேக்ஸ் இன்னும் விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறது.
ஏலியன் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஸ்பீல்பெர்க் இயக்கிய E.T படம் தான், அந்த படத்தின் ட்ரெட் மார்க் ஷாட் ஆன, நிலா ஷாட்-யை ரவிகுமார் அயலானில் ரெபரன்ஸாக வைத்தது ரசிக்க வைத்துள்ளது.
படத்தின் பிளஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் கதைக்களம்
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை றெக்கை கட்டி பறக்கிறது
ஏலியன் சம்மந்தமான காட்சிகள்.
அதன் நம்பகத்தன்மை
படத்தின் கிராபிக்ஸ் ஒர்க், கண்டிப்பாக இது சம்மந்தமான படங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.
உலகத் தரமான வகையில் படத்தின் சிஜி ஒர்க் இருக்கிறது
குழந்தைகளுக்கான படமாக எடுத்து சென்றது.
காமெடி மற்றும் ஆக்சன் இரண்டும் கலந்து கட்டி கொடுத்திருப்பது
கிளைமேக்ஸ் காட்சி .
இடைவேளைக்குப் பிறகு காதல் டூயட் பாடல்கள் இருந்திருக்கிறது அதை ஒட்ட நறுக்கி விட்டு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது
வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் பெரிய ஜாம்பவான் போல காட்டிவிட்டு அதை ஒன்றுமே செய்ய முடியாது என்றெல்லாம் பில்டப் கொடுக்காமல் அதனுடைய சக்தியும் உறிஞ்சி கட்டிப்போட்டு அதையும் சித்திரவதை செய்து மனிதர்களைப் போல அதையும் துன்புறுத்தலாம் என்று காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது
சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் செய்யும் நல்ல நல்ல விஷயங்கள் ஒரு நாயகனுக்காக இயக்குனர் பில்டப் கொடுக்கிறாரோ என்று எண்ண வைத்தாலும் ஏலியன் அவரிடம் வந்து சேர்வதற்கு அதுதான் காரணம் என்று படத்தின் நம்பகத் தன்மைக்கு உயிரூட்டி இருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் இந்த அயலான் வேற்றுகிரக வாசியாக இருந்தாலும் அவர் நம் பூமியை காக்க வந்த நண்பன் நாம் செய்யத் தவறான விஷயங்களை சுட்டிக்காட்டும் கிரகவாசி , ஒரு பிளாஸ்டிக் பேப்பர் மக்குவதற்கு 300 வருடங்கள் ஆகிறது அதே பேப்பரில் செய்யப்பட்ட காகிதப்பை இரண்டு வாரங்களில் மக்கிப் போகும் என்று நமக்கு சொல்லித் தர வந்த ஆசான் இந்த அயலான் குழந்தைகள் உடன் சென்று கொண்டாடலாம். ரசிக்கலாம் .அதன் தொழில்நுட்பத்தை கண்டு வியக்கலாம் எனவே அயலான் வெற்றிப் பயணம். தொடரட்டும் இந்த வருடம் தேசிய விருது பட்டியில் இப்படத்தில் சி ஜி ஒர்க்கிர்க்கும் டெக்னீசியன்களுக்கும் காத்திருக்கிறது என்பது நிச்சயம்
