முடக்கருத்தான் திரை விமர்சனம்

தமிழ்நாட்டில் கோவிட்-19 முதல் அலையின்போது அதிகம் பிரபலமானவர் சித்த மருத்துவர் வீரபாபு. கோவிட் தொற்றுக்கு அலோபதி மருத்துவம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நேரத்தில் சித்த மருந்துகளின் மூலமும் அதற்குத் தீர்வு காண முடியும் என்ற கருத்தை முன்வைத்தார் தமிழகத்திலேயே முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் சித்த மருத்துவம் மூலம் பல உயிர்களை காத்தவர்

இவர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர் தற்போது முடக்கருத்தான் படத்தை சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் இயக்கி, தயாரித்து நடித்துள்ளார்.

நகைச்சுவை, ஆக்ஷனோடு சேர்ந்து ஒரு நல்ல மெசேஜ் சொல்ற மாதிரி கதை

வயசானவங்க மட்டுமல்ல பலருக்கு ஏற்படுற மூட்டுவலியைப் போக்குற மூலிகைதான் முடக்கத்தான். அதே போல சில வில்லன்களால் நல்ல மனிதர்கள் வளர முடியாம முடங்கிப் போய் விடுகிறார்கள். நல்லவங்களை முடக்குறவங்களை வேரறுக்கிறார் கதாநாயகன். ரொம்ப யோசிச்சு படத்தோட டைட்டில `முடக்கருத்தான்’னு வெச்சிருக்கிறார் போல
வெகு பொருத்தமா இருக்கிறது.

செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள், ஏரி, குளம்னு பல இடங்கள்ல ஷூட் பண்ணிசுமார் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி யுள்ளார் சின்ன பட்ஜெட் படம்தான். பழநிபாரதி பாடல்கள் எழுதி சிற்பி இசையமைச்சிருக்காரு. மொத்தம் 4 பாடல்கள். பாடல்கள் எல்லாமே நல்லா ரசிக்க வைக்கிறது.

இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது .

நாயகன் வீரபாபு, தனதுஇப் படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கு வைத்துள்ளார் அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கிறது படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை
அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது
,”தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது.

வீரபாபு அவர்கள் ‘ஒன் மேன் ஆர்மி’ போல நடிப்பு,தயாரிப்பு,இயக்கம் என படத்தின் அனைத்து துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் படத்தை எடுத்துள்ளார் பாராட்டுக்கள்

இப்படத்தில் நாயகனாக
Dr.K.வீரபாபு
நாயகியாக
மஹானா
வில்லனாக
சூப்பர் சுப்பராயன்
காவல் துறை அதிகாரியாக
சமுத்திரக்கனி. வில்லனாக விஜய் சத்யா

காமெடி க்காக
மயில்சாமி
சாம்ஸ்
பாவா லட்சுமணன்
‘காதல்’ சுகுமார்
மற்றும்
வைஷ்ணவி
பேபி ஷாலினி ரமேஷ்
தயாளன்
ரமேஷ்
இந்திரஜித்
ஆகியோர் நடித்துள்ளனர் அனைவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

எழுத்து மற்றும் இயக்கம் : Dr.K.வீரபாபு
இவரின் முதல் படம் நடிப்பு நன்றாக இருக்கிறது எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமூகத்திற்கு தேவையாக இருக்கிறது குழந்தைகள் கடத்தல் என்பது இன்று அதிகமாகி விட்டது சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்த்தால் பாவமாக தோன்றுகிறது
அதன் பின்னணியில் நடக்கும் அநியாயங்களை தனி ஒரு மனிதனாக தட்டிக் கேட்கும் நியாயமான துரைப்பாண்டியாக அருமையாக நடித்திருக்கிறார் ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக வருகிறது நிச்சயம் பாராட்டலாம்

இசை: சிற்பி
பின்னணி இசை படத்துக்கு பலமாக இருக்கிறது
அந்த சோகப்பாடலில் சிற்பி மீண்டும் நான் வந்து விட்டேன் என்று நிரூபித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு: அருள் செல்வன்
ஆக்சன் காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடி உள்ளது ஆந்திரா செல்லும் நாயகனும் அவரது கும்பலும் அந்த காட்டுப் பகுதியில்.வரும் காட்சிகளைநன்றாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்

படத்தொகுப்பு: ஆகாஷ்
படம் 2 மணி நேரம்தான் படம் விறுவிறுப்பாக போவதற்கு தொகுப்பாளர்
தான் ஏற்ற பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஒலிப்பதிவு: ஆண்டனி மைதீன்
சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன்
அவர் ஒரு காட்சியில் வருகிறார் சண்டை பயிற்சி நன்றாக வடிவமைத்திருக்கிறார்
ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது. கிளைமாக்சில் வரும் சண்டைக் காட்சியும் பரபரப்பாக இருக்கிறது
வீட்டில் நடக்கும் அந்த சண்டை காட்சி செம விறுவிறுப்பு.

நடனம்: நோபல் பால்
கலை இயக்கம்: பிரபஞ்சன்
கலை இயக்கம் நன்றாக இருக்கிறது

PRO : ரியாஸ்.K.அஹ்மத்
மக்கள் தொடர்பு படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

இணை இயக்கம் : மகேஷ் பெரியசாமி சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை சொல்லும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் இது போன்ற சமூக நோக்கத்தோடு எடுக்கப்படும் படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு கொடுக்க வேண்டும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு வரும் படங்களை நாம் ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நிச்சயம் சமுதாயம் மேம்படும் .

சரி படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

சின்ன வயதிலேயே அம்மா அப்பாவை பிரிந்து வாழும் துரைப்பாண்டி பிற்காலத்தில் ஒரு பெரிய அந்தஸ்தோடு வாழ்கிறார். ஆரம்பக் காட்சியில் ஒரு பெண்ணை கடத்தி வந்து நரபலி கொடுக்கும் கும்பலிடம் இருந்து அந்த பெண் குழந்தையை காப்பாற்றுகிறார் அதன் பிறகு எதிரிகளால் அவர் தாக்கப்படுகிறார் அதன் பின்னணியை ஆராயும் பொழுது குழந்தைகள் கடத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கடத்தப்பட்ட குழந்தைகளை தன் வீட்டிலேயே வைத்து உபசரிக்கிறார்.

இந்த குழந்தைகள் கடத்தல் தலைவனாக ஆந்திராவைச் சேர்ந்த கௌரி என்கிற விஜய் சத்யா இருப்பதை கண்டுபிடிக்கிறார் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க நாயகனும் காமெடி நடிகர் சாம்ஸ், அம்பானி சங்கர், காதல் சுகுமார், வெங்கல் ராவ் எல்லோரும் போகிறார்கள் போகும் வழியிலேயே குழந்தைகளை கடத்தும் கௌரியை கண்டுபிடித்து குழந்தைகளை விற்கும் அந்த சந்தையிலே கலந்து கொள்கிறார்கள். அங்கேயே எல்லோரையும் போட்டு தள்ளிவிட்டு குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு வருகிறார். நாயகன் இது தான் கதையின் முக்கிய நாடி

ஒரு மாஸ் ஹீரோவுக்கான சப்ஜெக்ட்டை துணிச்சலாக எழுதி, தயாரித்து, நடித்துள்ளார் பாராட்டுக்கள்.

இந்த படத்தின் பிளஸ் என்ன வாங்க பார்க்கலாம்.

குழந்தைகள் கடத்தப்படும் கும்பலை பற்றி ஆராய்ந்து அதன் ஆணிவேரை பிடுங்கும் அந்த திரைக்கதை நன்றாக இருக்கிறது.

படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது .

கௌரி என்கிற ஆந்திராவைச் சேர்ந்த திருநங்கையாக விஜய் சத்யா நடித்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.

வெங்கல் ராவ் ,சாம்ஸ் வரும் காட்சிகளில் காமெடி கலகலப்பாக இருக்கிறது.

நாயகி மஹானா நாயகனுக்கு ஆதரவாக வந்து போகிறார் இடைவேளையோடு அவர் கதை முடிகிறது அதன்பின் கதை ஆக்சன் பிளாக்கில் போவதால் கதாநாயகிக்கு அதிக வேலை இல்லை

பாடல்கள் நன்றாக இருக்கிறது சிற்பியின் இசை ரசிக்க வைக்கிறது பின்னணி இசை பலம்.

பழனி பாரதியின் பாடல்கள் பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது

படத்தில் திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், பின்னணி இசை ,என புகுந்து விளையாடி இருக்கிறார் மருத்துவர் வீரபாபு இவர் பல படங்களில் பணிபுரிந்த அனுபவத்தை போல இந்த படத்தில் காட்டி இருக்கிறார் மிகச் சிறப்பு

மொத்தத்தில் இந்த முடக்கருத்தான் தப்பான வழியில் முடக்க நினைக்கும் அநியாயப் பேர் வழிகளை அறுக்க நினைப்பவன் தான் இந்த முடக்கறுத்தான்

இது போன்ற சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துள்ள படமாக இனி மருத்துவர் வீரபாபு தயாரித்து நடிக்கலாம் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி விட்டார் குழந்தைகள் விரும்பும் நாயகனாக ஆகிவிட்டார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.