தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவான ‘லோக்கல் சரக்கு’!- படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் ‘லோக்கல் சரக்கு’ பாடல் ரசிக்க வைக்கிறது
’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்த குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாக சொல்வதே இப்படத்தின் கதை. மேலும், இப்படத்தின் க்ளைமாக்ஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில், குடும்ப கதையை காமெடியாக சொல்லியிருந்தாலும், பெண்கள் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் படம் சொல்கிறது.
நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.
’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர்.
’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ஒரு குத்து பாடல்கள் மற்றும் ஒரு மெலோடி பாடல் தந்துள்ளார் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருக்கிறது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
நடன இயக்குனர் தினேஷ் 24 மணி நேரமும் குடிகாரனாக இருக்கிறார்.
அவருடன் யோகி பாபு மது அருந்துபவராக வருகிறார்
தினேஷுக்கு ஒரு தங்கை அவருடைய சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது வேலை வெட்டிக்கு போகாமல் தினேஷ் மதுவுக்கு அடிமையாகி இருப்பது அவர் தங்கைக்கு மனவருத்தம் அளிக்கிறது ஒருநாள் சென்ராயனுடன் வீட்டை விட்டு ஓடிப் போக திட்டமிடுகிறார் இதை அறிந்த தினேஷ் என்னிடம் சொல்லி இருந்தால் நானே போய் பேசி இருப்பேனே என்கிறார் நீ பேசி இருந்தால் மட்டும் உன்னால் என்ன செய்ய முடியும் சம்பாதித்து பணம் எல்லாம் மது கடையில் இருக்கிறது மதுக்கடையில் லோன் கொடுப்பார்கள் என்று திருப்பி கேட்டுவிட்டு சென்றாயன் உடன் போகிறார் அப்போது அந்த பகுதிக்கு நாயகி வந்து குடியிருக்கிறார் நாயகி நாயகனைபார்த்த
ஒருவர் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற குண்டை தூக்கி போடுகிறார் இடைவேளை போர்சனில் அது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது
அதன்பின் என்ன ஆனது நாயகனுக்கு தெரியாமல் நடந்த திருமணமா நாயகி என்ன சொன்னார் இப்படி போகும் திரைக்கதையில் தினேஷின் தங்கை இருவரையும் சேர்த்து தனி குடித்தனம் வைக்கிறார்.
மனைவிக்கு எதுவும் செய்யாத தினேஷ் நண்பர் என்று ஒருவரை அழைத்து வருகிறார் அந்த நண்பரால் என்ன பிரச்சனை ஏற்பட்டது குடி எங்கே கொண்டு போய் நிறுத்தியது குடிகாரர்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை எல்லாம் அற்புதமாக சொல்லி இருக்கிறது இந்த திரைப்படம்
தினேஷ் குடிகாரனாக வேலை வீட்டுக்கு போகாமல் நன்றாக நடத்தி இருக்கிறார் அவரது மனைவியாக வரும் உபன்யா நன்றாக நடித்திருக்கிறார் யோகி பாபு கலகலப்பு ஊட்டுகிறார்
படத்தில் சாம்ஸ் வரும் காட்சிகள் செம கலகலப்பு
ஒரு நடிகராக வந்து அவர் செய்யும் பந்தா உண்மையில் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது
சாம்ஸ் இதே போல
நடித்தால் நிச்சயம் காமெடியில் முதலிடத்தை பிடித்து விடலாம் அவர் உடல் மொழியும் டயலாக் டெலிவரையும் நன்றாக இருக்கிறது
படத்தின் ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு இயக்கம் நன்றாக இருக்கிறது
மதுபழக்கமும் சமூக சீர்கேடும்
இளந்தலைமுறையினரும் மது கலாச்சாரமும்
உடல் நலகேடுகள்
குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுப்பழக்கம்
“குடி குடியை கெடுக்கும்” என்று கூறுவார்கள் அதாவது மது பழக்கம் உயிரை குடிப்பதோடு அவர்களை சார்ந்தவர்களது வாழ்வையும் நாசமாக்கிவிடும் என்பது லோக்கல் சரக்கு படத்தின் கதை ஆகும்
பார்க்கின்ற இடமெல்லாம் “மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என்று எச்சரிப்பையும் உச்சரிப்பையும் காணலாம் ஆனால் மது பழக்கம் நமது சமூகத்தில் குறைவதாய் இல்லை அதிகரித்தவாறே செல்கின்றது.
அரசுகளோ அவற்றை தடை செய்வதாய் இல்லை மது பழக்கம் வாழ்வையே அழிக்கும் சொல்லும் படம் லோக்கல் சரக்கு
ஒரு சமூகத்தில் மது அருந்துபவர் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்படுவார். ஒழுக்கம் தவறியவராக பார்க்கப்படுவார் ஆனால் இன்று நிலமை தலை கீழாக மாறிவிட்டது. மேற்கத்தைய கலாச்சார தாக்கம் இன்று சிறுவர்கள் பெண்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கி விட்டது.
காலத்தின் கோலமாகிவிட்டது இதனால் மதுவின் தீமையை ஒரு குடிகாரன் வாழ்க்கையை எப்படி சீரழிக்கும் என்று சொல்லும் இந்த லோக்கல் சரக்கு படத்தை அனைவரும் விரும்பி பார்க்க வேண்டும் நிச்சயம் பெண்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் ஒவ்வொரு வீட்டிலும் இன்று குடி மகன்கள் செய்யும் அட்டகாசம் இந்த படத்தை பார்த்தால் திருந்துவார்கள்
