தூக்குத் துரை விமர்சனம்

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தூக்குத் துரை
படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க

தூக்குதுரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். யோகி பாபு
இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்
டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் கலகல காமெடிப் படமாக உருவாகியிருக்கும் படமே ‘தூக்குதுரை’. ‘ட்ரிப்’ படத்திற்குப் பிறகு டென்னிஸ் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. ‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் .

“பொதுவாகவே சில கிராமங்கள்ல சிறு, குறுநில மன்னர்களுடைய வகையறாக்கள் இன்னமும் வாழ்ந்து வர்றாங்க. ஒரு காலத்திலே பந்தாவா, ஆட்சி பீடத்திலே ஆட்சி செய்தவங்க. இன்னைக்கு பொது மக்கள்ல ஒருத்தங்களா, எல்லாரையும் மாமன், மச்சான்னு கூப்பிட்டுட்டு இருக்கிறாங்க கோயில் திருவிழா, ஊர் மரியாதை இதெல்லாம் இன்னைக்கும் மரியாதை நிமித்தமா அந்த குடும்பத்து சார்பா யாருக்கோ செய்ஞ்சிட்டு இருக்காங்க.
அப்படி பட்ட மன்னர்களை துரைன்னும் சொல்றதுண்டு. தனக்கான மரியாதையை தூக்கும் துரைதான் இந்த ‘தூக்குதுரை’.”
இந்த தூக்கு துரை காமெடியில் அசத்தியிருக்கிறாரா? கலகலப்பை உண்டு பண்ணியிருக்கிறாரா? கவனத்தை ஈர்த்தாரா?
என்ன செய்தார் தூக்கு துரை!

.
இயக்குனர்
டென்னிஸ் மஞ்சுநாத்க்கு இது இரண்டாவது படம் ஒரு இயக்குநரின் கரியர்ல இரண்டாவது படம் மிகவும் முக்கியம்… பொதுவா எந்த ஜானர்ல வேணும்னாலும் சுலபமா கதை சொல்லிடலாம். ஆனா, காமெடி மட்டும் பெரிய டாஸ்க். முதல் படம் ‘டிரிப்’ முடிச்சப்ப சில இடங்கள்ல அந்தப் படம் ஒர்க்அவுட் ஆகல விமர்சன ரீதியா சந்தித்தார்
அதற்கு பதிலடியாக இந்த படத்தை கலகலப்பாக கொடுத்திருக்கிறார்

பொதுவாக
ஒரு காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் பரம்பரையில் வந்த வாரிசுகள் இப்போது சாதாரண மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஊர் பழக்க வழக்கங்கள் அவர்கள் தலைமையில்தான் நடைபெறுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு அரச குடும்பத்தின் தலைமையில் அந்த ஊரில் உள்ள கோயில் திருவிழாவில் நடைபெறும் பலவித சம்பவங்களை உள்ளடக்கியது
இந்த படத்தின் கதை. இதில் யோகி பாபு கதையைத் தாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார்.
இருவரின் காதல் காட்சி சினிமா தானம் இல்லாமல் இயல்பாக இருக்கிறது யோகி பாபு எப்போதுமே எதார்த்தமான நடிப்பில், கமென்ட் அடித்துக் கொண்டு ஸ்கோர், செய்து போய்விடுவார் இனியா அதற்கு தகுந்தார்
போல் முகபாவணியோடு யோகி பாபுவுடன் பேசும் காட்சிகள் எதார்த்த காதலை பிரதிபலிக்கிறது

அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்துவும், மரியாதைக்கு ஏங்கும் அவரது தம்பியாக நமோ நாராயணனும் நடித்திருக்கிறார்கள். அந்த ராஜ பரம்பரை பற்றிய 18 ஆம் நூற்றாண்டுக் கதையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதை முழுவதும் அனிமேஷன் முறையில் சொல்லியிருக்கிறார்கள்
இது மட்டும் இல்லாமல் 1999 – திலும், தற்போது 2023 -லுமாக இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையைச் சொல்லி இருப்பது ரசிக்க வைக்கிறது
எந்த இடத்திலும் எதார்த்தம் மீறாமல் இருப்பது படத்தின் சிறப்பு.

இதில் இனியாவுக்கு இளமையாகவும், நடுத்தர வயதுடனும் இரண்டு கெட்டப்புகள் இருக்கின்றன.
இரண்டு கெட்டப்பிலும் இனியா அழகாக தோன்றி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன், புதுமுகம் அஷ்வின், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன்
வரும் காட்சிகள் செம, கலகலப்பு கிரீடத்தை திருட அவர்கள் ஊருக்குள் வருவதும் மாரிமுத்து அவர்களை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பதும் நமோ நாராயணன் உண்மையை தெரிந்து அவர்களை மிரட்டுவது பின் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கிணற்றுக்கு இறக்கி கிரீடத்தை எடுத்துக்கொடுத்து விட்டு போக சொல்வது என கலகலப்பான போர்ஷன்
மொட்டை ராஜேந்திரன் வழிய வந்து கிணற்றில் இறங்கி மாட்டிக்கொண்டு பேய் இடம் அடி வாங்கும் காட்சி கலகலப்பு
கிளைமாக்ஸ் காட்சியில் கிணற்றுக்குள் பால சரவணன், சென்ராயன் ,நமோ நாராயணன், கும்கி அஸ்வின், எல்லோரும் யோகி பாபு விடம்
அடிவாங்கி பயந்து நடுங்குவது குழந்தைகளை சிரிக்க வைத்திருக்கிறது பெரியவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களை மையப்படுத்தி நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட படமாக வந்திருக்கிறது.

படத்தில் யோகி பாபு, இனியா ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதமாக வந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லை.யோகி பாபு – இனியா காதலால்தான் ஊருக்குள் பிரச்சனை வருகிறது
. அந்தப் பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பதுதான் முழுக் கதை..!”
இதற்கிடையில் மாரிமுத்துவுக்கும் நமோ நாராயணனுக்கும் அண்ணன் தம்பி பிரச்சனை இப்படி போகிறது கதை

ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
கிராமத்து அழகையும் பேயின் மிரட்டலையும் கண் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார்.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்து உள்ளார் கச்சிதமாக இருக்கிறது .

ஜெய்முருகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
கிணற்றுக்குள், குகை, கோயில் சிலை, வீட்டுக்குள் அழகுப் பொருட்கள் என அரங்க நிர்வாகம் அசத்தல்.

மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அறிவுமதி மற்றும் மோகன்ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை வினோத் குமார் தங்கராஜு கவனிக்கிறார்.
கிரீடக் கொள்ளை முயற்சி என்பது படத்தின் ஒரு பகுதிதான் . அதையும் மீறி கிராமியப் பின்னணியில் பல சுவையான விஷயங்கள் படத்தில் உண்டு .
யோகி பாபு பேயாக மாறிய பின் ஒவ்வொருவராக விசாரித்து அடிக்கும் அந்த காட்சி செம கலகலப்பு அந்த போர்சனை இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாம் தப்பு செய்த மாரிமுத்து வை மட்டும் பேய் விட்டு விடுவது ஏன்?.
பேய் படம் என்றாலே அது காமெடியாக தான் இருக்கும் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இந்த தூக்கு துரை
அதுவும் யோகி பாபு பேய் என்றால் இன்னும் காமெடிக்கு கேட்க வேண்டுமா? இவரோடு மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்ராயன், என காமெடி கலை கட்டுகிறது அழகுக்கு இனியா வில்லத்தனத்துக்கு நமோ நாராயணன், என எல்லோரும் பக்குவப்பட்ட நடிப்பு தந்து இருக்கிறார்கள் உத்ரா ஃபிலிம்ஸ் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது ஒரு வெற்றிப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருப்பது சிறப்பு