இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் சிக்லெட்ஸ். இந்த படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மரனாபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, பாலமுரளி இசையமைத்துள்ளார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். முழுக்க முழுக்க 2K கிட்ஸ்சை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம். : நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு கனவு. அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன்படி, மூன்று பேரும் தங்களது மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு செல்கிறார்கள். பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, தங்களது பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில், பிள்ளைகளின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதை இரு தரப்பினருக்குமான அறிவுரையாக சொல்வதே ‘சிக்லெட்ஸ்’.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வயது கோளாறில் தாறுமாறாக வாழ நினைக்கும் மூன்று பேர் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என படம் முழுவதும் காம நெடியை தூவியிருக்கிறார்கள்.
முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ்.
நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.கதைக்களம் மற்றும் பாத்திரங்களுக்கேற்ப தேடித் தேடிப் பிடித்திருப்பார்கள் போலும்.
அவர்களும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்கள்.நாயகிகள் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்.
ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது பிள்ளைகள் தடம்மாறி தடுமாறிப் போய்விடுவார்களோ என்கிற பதட்டத்திலேயே இருக்கும் இக்காலப் பெற்றோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இயங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் இருக்கிறது.
பாலமுரளிபாலுவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களிலும் கதைக்களத்தின் எதிரொலி. பின்னணி இசை இயல்பாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் முத்து.வன்முறை வேண்டாம் எனும் கருத்தைச் சொல்ல படம் முழுக்க இரத்தத்தில் நனைப்பது மாதிரி இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்வதற்காகவே செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்துகாட்டுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கத்தி மேல் நடப்பது போன்ற கதையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர் அதை கச்சிதமாக புரிந்து இயக்கி உள்ளார
காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் முத்து, வயதுக்கு ஏற்ற தடுமாற்றத்தில் சிக்கும் இளைஞர்கள் தங்களது அனுபவம் மூலமாகவே அதில் இருந்து விடுபடுவார்கள், எனவே பெற்றோர்கள் தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் போக்கில் வாழ விட வேண்டும், என்று பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறார தவறான பாதையை காட்டும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் இருக்கின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது உண்மை ஆனால் இன்று இது போன்ற சமூக நோக்கத்தோடு எடுக்கப்படும் படம் இப்படி தான் சொல்ல வேண்டும்
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலான விசயங்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். இறுதியில் இதெல்லாம் தப்பு, என்று சொல்லும் வழக்கமான பாணியில் பயணிப்பதோடு, படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை கவரும் வகையில் இயக்குனர் எழுதி இயக்கி உள்ளார்
கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதற்கான தனி ரசிகர் வட்டம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி சொல்லாமல் முகம் சுழிக்கும் வகையில் சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலம் அதிலும், பெண் பிள்ளைகள் என்றாலே இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டும், என்ற படிப்பினை தருகிறார்
மொத்தத்தில், இந்த படம் இந்த சமூகத்தில் பெண்கள் அதுவும் படிக்கும் பெண்கள் எட்டரை மணிக்கு வீடு வந்து சேராவிட்டால் பெண்ணை பெற்றோர்கள் பதறிப் போய் விடுவார்கள் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் அவர்கள் மீது கவனம் இருக்க வேண்டும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும் எங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போவதில் உண்மை இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும் பெண்ணை பெற்று படிக்க வைத்து விட்டால் மட்டும் போதாது அந்த வயதுக்கு அவளுக்கு எல்லாம் புரிய வைக்க வேண்டும் என்ற தத்துவத்தையும் சொல்கிறது கொஞ்சம் கவர்ச்சி மிகையாக இருந்தாலும் இந்த படத்திற்கு இது தேவைப்படுகிறது இளைஞர்களை தியேட்டருக்கு அழைத்து வர இன்று இது போன்ற காட்சிகள் அவசியமாகிறது எனவே காலத்துக்கு ஏற்ற நல்ல படம் தந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் இதை பார்த்து ஒரு பெண் குழந்தை திருந்தினால் கூட இந்த படம் எடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வெற்றிதானே
