படத்தின் ஆரம்பத்தில் கூட்டாளிகளாகக் கடத்தல் தொழிலில் இறங்கிய மூவர் தான் வேலை செய்யும் முதலாளி யை போட்டு தள்ள , மூவரும் கூட்டாக சேர்ந்து தொழில் செய்ய, அதன் பிறகு
கருத்துவேறுபாட்டால் பிரிந்து வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு முறையான கடத்தல்களில், கொடிகட்டிப் பறக்கிறார்கள். அவர்களுக்கும் சதீஷ் க்கு என்ன சம்பந்தம் .
இந்த மூன்று பேரை தேடி ஏன் வருகிறார் நாயகன் ?
ஓப்பனிங் சாங், மாஸ் பி.ஜி.எம், லவ் சாங் என முழுநேர நாயகனாக சதீஷ். அனைத்திலுமே சபாஷ் வாங்குகிறார்.
ஆனந்தராஜ், மதுசூதனன், ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா எனப் பரிச்சயமான முகங்கள் பலரும் படத்தில் நடித்து இருக்கிறார்கள்
சாம்ஸ், காமெடி அருமையாக இருக்கிறது.
வெங்கி இயக்கத்தில் நடிப்பில், பாஸ் மார்க் வாங்குகிறார்
சதீஷ், தனக்கு சாதகமான நடிப்பில், கச்சிதமாக பொருந்தி யிருக்கிறார்
சிம்ரன் குப்தா,
அவர் முதல் காட்சியில் இருந்து அவர் கதாபாத்திரம் புத்திசாலித்தனமான கதாபாத்திரம்
ஜப்பான், காமெடி சூப்பர் ரகம்
ஆனந்தராஜ் ,வரும் இரண்டாம்பாதி முழுக்க, நகைச்சுவையால் நிரப்ப முயற்சித்திருக்கின்றனர். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி சொல்லிக்கொள்ளும் படியாக உள்ளது. ஆரம்பத்தில், அதிரடியாக வில்லன்கள்என அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர்களையும் காமெடியன்களாக்கியிருக்கிறார் இயக்குநர்.
அதுவும்ரசிக்கும் வண்ணம் உள்ளது
படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காட்சிகள் ரிச் ஆக எடுத்திருக்கிறார்
அருள் ஈ சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
கச்சிதமாக இருக்கிறது
படத்தின் பெயருக்கு ஏற்ப படத்தின் நாயகனாகிய சதீஷ் ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தும் மாயாஜாலக்காரராக வருகிறார்.அது கிளைமாக்ஸ் காட்சியில் பொருந்தி போகிறது.
அவர் ஏன் தங்கத்தை கொள்ளை அடிக்கிறார் வைரத்தைக் கடத்த நினைக்கிறார் ஏடிஎம்மில் இருந்து வரும் பணத்தை திருட நினைக்கிறார் எல்லாமே டிவிஸ்ட்டாக இருக்கிறது
காதல் என்று வந்துவிட்டால் காதலிக்காக எதையும் செய்யும் கதாபாத்திரம், அதுவும் ஒருதலையாக காதலித்து ,அந்த பெண் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உயர்ந்த கதாபாத்திரம், என் காதலுக்கு ஓகே சொல்லி இருந்து அதன் பின்னே இப்படி நடந்திருந்தால் உதவி தானே செய்திருப்பேன், என்று அவர் கூறும் இடம் கைதட்டல் பெருகிறது.
: சதீஷூக்கும், தங்கம், வைரம் கடத்தும் மாரி கோல்ட், டாலர் அழகு மற்றும் கல்கண்டு கும்பலுக்கும் நடக்கும் சம்பவங்களே நகைச்சுவையாகவும் விறுவிறுப்பான திரைக்கதை ,
தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை ஏன் தொடர்பு கொள்கிறார்? அந்தக் கும்பலுக்கும் சதீஷ்க்கும் இடையே என்ன தொடர்பு? என திரைக்கதை நகர்கிறது.அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பு
ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்தப் படத்திலும் அவரை டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக களமிறக்கியுள்ளார் இயக்குனர். ஆனால், டாலர் அழகு கதாபாத்திரம்
அவருக்கு இணையாக இரண்டு அல்லக்கை
அவர்களுடன்
பல இடங்களில், ஆனந்தராஜ் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
தமிழ் சினிமாவின் பல பாடல்களில் தனது வித்தியாசமான ,உடல் மொழியில் ரசிகர்களுக்கு ,நன்கு அறிமுகமான டான்சர் ஜப்பான் குமார் இந்தப் படத்தில் ஒரு நடிகராகக் களமிறங்கியுள்ளார். ஆனந்தராஜூடன் அவர் படம் முழுக்க வந்தாலும், அவரது கவுன்டர்கள் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது என்றே கூற வேண்டும். முதல் பாதியை காமெடியாக
இரண்டாம் பாதி காதலின் ஆழத்தை உணர வைக்கும் பாணியில் விதவிதமாக ரசிக்க, வைக்கிறார் இயக்குனர்
இரண்டாம் பாதியில், பெரும்பாலான கதைக்களம் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த கும்பலும் விமான நிலையத்திற்குள் சுற்றி வருகிறது.
அதிலும் அந்த சிங் கேரக்டர் மனதில் நிற்கிறது.
இரண்டாம் பாதியில் படத்தின் மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் சதீஷ், அதே விமான நிலையத்தில் மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்யும் நபராக பணியாற்றுகிறவர் என்பதை நாயகி சிம்ரன் குப்தா கண்டுபிடிக்கிறார்.
அவர் கண்டு பிடிக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது
படம் விறுவிறுப்பாக, போவதற்கு துணை நின்றிருக்கிறது .
சதீஷ் மருத்துவமனைக்கு சென்று தான் சம்பாதிக்கும் பணத்தை இளம்பெண் சிகிச்சைக்காகவும் வழங்குவதை சதீஷ் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார் நாயகி. உண்மையில் சதீஷ் மாயாஜாலம் நிகழ்ச்சி நடத்தும் மாயக்காரரா? விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நபரா? அந்தக் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? விமான நிலையத்தில் சிக்கிய 25 கோடி வைரம் யார் கையில் சிக்கியது? சதீஷ் பண உதவி செய்யும் அந்த இளம்பெண் யார்? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைக்கிறது.
ரசிக்க வைக்கும் காதல் திருப்பத்து டன்
அதேபோல முதல் பாதியில் மாயமான தங்கம் எங்கே சென்றது என்ற கேள்விக்கும் பதில் இல்லை சுனாமிகா பாடல் இதமாக இருந்தது. படத்திற்கு தேவையில்லாமல் பாடல்களை வைக்காததற்கு இயக்குநரை பாராட்டலாம். ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள வித்தைக்காரன்
படத்தின் கதை என்ன
ஏமாறுவது தான் தப்பு ஏமாற்றுவதில் தப்பில்லை என்று சொல்லும் ஆரம்பகாட்சியில் இருந்து சதீஷை
புத்திசாலித்தனமான நாயகனாக காட்டுகிறார் அதன்பின், ஏடிஎம் பணத்தை கொள்ளை அடிக்கிறார். தங்கத்தை திருடுகிறார், வைரத்தை ஏர்போர்ட்டில் கஸ்டமர் அதிகாரியிடமிருந்து,
லாபகமாக திருடுகிறார் இது எல்லாமே ஒரு மனிதநேயத்துக்காக தான் என்று இயக்குனர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் அது கதையின் ஓட்டத்திற்கு மிக பலமாக இருக்கிறது .
ஆனந்தராஜ் ,ஜப்பான், காமெடி கலகலப்பு
மதுசூதனன், சாம்ஸ், வரும் இடங்களில் கலகலப்பு
படத்தின் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறையாமல் கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ,அவர் நடிகராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகி சிம்ரன் குப்தா ஜர்னலிஸ்ட்டாக
கச்சிதமாக பொருந்திருக்கிறார்
கேமரா ,இசை, படத்திற்கு படம்
கிளைமாக்ஸ் கட்சியில் , வைரத்தை திருடுவதற்காக, மூன்று விலல்ன்களுடன் ஒன்று சேர்ந்து அடிக்கும்லூட்டி டூட்டியில் கடமை தவறாத சிங், வரும் காட்சியும் சிறப்பு
கிளைமாக்ஸ் கட்சியில் விமான நிலையத்தில் சதீஷ் கிளீன் செய்து கொண்டிருக்கும் போது அவர் காப்பாற்ற நினைக்கும் காதலி, கடந்து போகும் போது, சதீஷ், பார்க்கும் அந்த பார்வை மனதை தொடும்.
அடி,தடி ,ஆக்சன், இல்லாமல் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை
மொத்தத்தில் இந்த வித்தைக்காரன்,
மாயாஜாலம் தெரிந்தவன் ,மனதில் இடம் பிடிப்பவன், வெற்றிக்கு சொந்தக்காரன், புத்திசாலித்தனமான வித்தைக்காரன். பாராட்டுக்குரியவன்.
