அதோ முகம் என்பது சிவனின் ஆறாவது முகம் என்று அர்த்தம் மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளியே வரும் போது எப்படிப்பட்ட வினோதங்கள், அசம்பாவிதங்கள், நிகழ்கிறது, என்பதை அதோ முகம் சொல்கிறது.
நாயகன் ஒரு தேயிலைத் தோட்டத்தில் மானேஜர் ஆக இருக்கிறார். இரவு பகலாக உழைத்து அந்த தேயிலை தோட்டத்தை நம்பர் ஒன் பொஸிஷனில் வைத்திருக்கிறார். அதன் போட்டியாளருக்கு நாயகன் மீது ஒரு கண் எப்படியாவது அவரை தன் பக்கம் இழுத்து பணியில் அமர்த்தி கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார் நாயகன் அதற்கு உடன்படாததால், நாயகன் மீது வஞ்சம் கொள்கிறார் . அதே சமயம் மனைவியுடன் திருமண நாளை நாயகன் கொண்டாடும் பொழுது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நாயகன் நினைக்கிறார். ஆனால் மனைவியோ அந்த சஸ்பென்சை உடைப்பதால், அவர் டிப்ரஷன் ஆகிறார் . மனைவியிடம் அவருக்கு தெரியாமல் ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் அப்பொழுது அவர் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவர், ஹிட்டன் ஆப் என்று ஸ்பை ஆஃப் இருக்கிறது உங்கள் மனைவியின் போனில் அதை வைத்து விட்டால் நீங்கள் மனைவிக்கு தெரியாமல் அவர் போட்டோக்களை சூட் செய்து அவரை அசத்தலாம் என்று சொல்ல, நாயகன் அந்த ஸ்பை ஆஃப் ஓப்பன் செய்கிறார் அவருக்கு தெரியாமல் ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து மனைவியை கண்காணிக்கிறார். அது நாயகனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் என்று அப்போது தெரியாது. அதற்கு பிறகு நடக்கும் கதைக்களம் பல திருப்பங்களுடன், சுவராஸ்யமாக, நடக்கிறது என்பதை திரைக்கதை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஆரம்ப காட்சி கணவன் ,மனைவி, அன்பு, பாசம், என்று அம்சமாக போகிறது அதன் பின் வில்லன் மிரட்ட கதையில்,சூடு பிடிக்கிறது. ஹிடன் கேமராவில் ஹீரோ கண்காணிக்க அப்போது ஆரம்பிக்கிறது, படத்தின் பதட்டமான சூழ்நிலைகள்
மனைவியிடம் நாயகன் எரிந்து எரிந்து விழுகிறார். காரணமே இல்லாமல் கோபப்படுகிறார். அது ஏன் என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும் ஒரு கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதை இயக்குனர் இப்படத்தின் மூலம் உணர்த்தியுள்ளார்
நாயகனின் இந்த நடவடிக்கைகள் நாயகிக்கு ,பயத்தை ஏற்படுத்துகிறது . காரணம் கேட்டால் நமது ஹீரோ அதை சொல்ல மறுக்கிறார் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் விழிக்கிறார் மனைவியிடமும் சொல்ல முடியாத சிக்கல் அவருக்கு. அந்த திருப்பம் தான் படத்தின் உச்சகட்டமாக ,ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது அடுத்து என்ன நடக்குமோ , என்று படம் பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கிறது.
இரண்டு கதாபாத்திரங்கள் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு திரைமொழியில் காட்டப்படுகிறது கணவன் ஒரு பயம் கலந்த சந்தேகத்திலும், மனைவி கூலாக, எதுவுமே தெரியாத பெண்ணாகவும், பவனி வருகிறார்கள் ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது அது என்ன? என்ற பீதியை கிளப்ப வைத்து திரை கதையை வெற்றி பெற செய்துள்ளார் இயக்குனர்.
திரைக்கதையில் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக சித்தார்த் நடித்திருக்கிறார். இவர் நல்லவரா? கெட்டவரா? என்று ஆரம்பத்தில் குழப்பமாக. காட்டினாலும் போகப்போக இவரது கேரக்டர் டிசைன் தெரிந்து விடுகிறது
நாயகி லீனாவாக ,நாயகனின் மனைவி ஆக சைதன்யா கச்சிதமாக நடித்திருக்கிறார்.படம் முழுக்க இவர் ஆதிக்கம் தான் கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் சைதன்யா
அனந் நாக் கலக்கி இருக்கிறார். தோழமையுடன் பேசுவதாகட்டும், பயந்து போன விழிகளால் நோக்குவதாகட்டும். பிறகு க்ளைமாக்சில் சீனில் வில்லத்தனம் காட்டுவதாகட்டும் அபாரம் .
நாயகனின் கள்ளக்காதலி ஆக செட்டப் செய்யும் டெக்னாலஜி யில் வர்கீஸ் கச்சிதமான நடிப்பு , ஆனால் அவருக்கு போர்சன் குறைவு
சத்ரியன், நக்கலைட்ஸ் கவி, பிபின்,என நடித்திருக்கிறார்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .
முதல் பாதி திரைக்கதையில் குழப்பமாகஇருந்தாலும் பின் பாதியில் ரெக்கை கட்டி பறக்கிறது படம் க்ளைமாக்ஸ் , ட்விஸ்ட் ,மற்றும் கடைசி 15 நிமிடங்கள் குட்
, பிஜிஎம் பெரிதாகபேச வைக்கிறது சரண் ராகவனுக்கு சல்யூட். அருண் விஜய் குமார் தான் ஒளிப்பதிவு . கவனிக்க வைக்கிறார். ஊட்டி மலை என்று கண்களுக்கு விஷ்வல் டீரீட் எடிட்டிங் விஷ்ணு விஜயன் இரண்டு மணி நேரம் தான் படம்,பரபர என போகிறது
சுனில் தேவ் இயக்குனர்
சபாஷ் டைரக்டர். படத்தில் ஒவ்வொரு திருப்பமும் பலே, சொல்ல வைக்கிறது அடடா, என ஆச்சரியப்பட வைக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இப்படியும் கொடுக்கலாம் என இயக்குனர் அருமையான படத்தை கொடுத்திருக்கிறார்
1 நாயகன் , நாயகி , முதலாளி , நண்பர் , வில்லன், கள்ளக்காதலி என ஆறு கேரக்டர்களை மட்டுமே வைத்து பட்ஜெட்டில் படம் பண்ணிய விதம் அருமை
2 ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்காமல் படத்தை முடித்தது அந்த கிளைமாக்ஸ் சூப்பர்
ரசித்த காட்சிகள்
1 ஆரம்பத்தில் இருந்தே கதைக்குள் பயணிக்கும் அந்த ட்ரீட் நன்றாக இருக்கிறது.
2 அவங்க முதலாளி மட்டுமல்ல அனாதையா இருந்த என்னை எடுத்து வளர்த்தவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று நாயகன் சொல்வது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன்
3 படம் இப்படித்தான் போகும் என்னை நினைத்துக் கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு இல்லை இது வேறு மாதிரியான படம் என்று திசை திருப்ப முயற்சி செய்கிறார் இயக்குனர்.
4 அருண் பாண்டியன் பேசும் வசனம் நான் உனக்கு உதவி செய்ய நீ எனக்கு என்ன செய்வ என்று அவர் பேசும் டீல் வெகு சிறப்பாக இருக்கிறது
5 நீயும் அனாதை நானும் அப்பா அம்மா இல்லாதவன் நம் இருவரும் சேர்ந்து ஏன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நாயகன் நாயகியிடம் கேட்கும் அந்த காட்சி ஜீவன் உள்ள காட்சிகள்
6 ஒழுங்கா நீயே வந்து சேர்ந்திடு. இல்லை நீயே வந்து கெஞ்சுவ என்று வில்லன் நாயகனை மிரட்டும் அந்த காட்சி ஏதோ ஒன்று நடக்கப் போகின்ற பயம் செம மிரட்டல் ரகம்.
7 நாயகி தன் கணவனுடன் பெட்ரூமில் வந்து படுக்கிறார். அப்போது நாயகன் மொபைல் ஆப்பிள் டவுன்லோட் செய்து வைக்கிறார் அப்போது நாயகிக்குத்தன் கணவன் மேல் ஏன் டவுட் வரவில்லை .
என்று கேள்வி எழுகிறது.
8 படம் முடிய போகும் போல இருக்கிறது தர்மம் தோற்றுப் போகுமா !என்று எண்ணும் நேரத்தில் அருண் பாண்டியனை காட்டி அந்த கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கும் உயிரூட்டி இருப்பது சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குனர்
9 ஊட்டி அழகு மலையரசி அழகான பிரதேசம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது அந்த கொலை நடக்கும் இடம் திகில் ஊட்டும் வண்ணம் இருக்கிறது அருமையான லொகேஷன் அருமையான ஒளிப்பதிவு
10 நாயகனுக்கு வில்லன் வைத்திருக்கும் செக் என்னவென்று கண்டுபிடிப்பதற்கு படம் பாதி ஓடிவிடுகிறது அதுவரை குழப்பமாக இந்த திரைக்கதை அதற்கு பின் படு வேகம் எடுக்கிறது
11 படம் முடியும்போது பின்னணி இசையில் ராஜாங்கமே நடத்தி விட்டார் சரண் ராகவன். அருண் பாண்டியன் தன் சகாக்களுடன் சோர்ந்து கிடந்த நாயகனை உற்சாகமடைய வைத்து தட்டி எழுப்பி, அந்த இசை துள்ளலான இசை, படத்துக்கு உயிரோட்டமான இசை
12 பள்ளியில் நடக்கும் அந்த இளமை காதல் வசந்த பூக்களை அள்ளி தெளித்து இருக்கிறது
ஃபைனல் கமெண்ட் – மாறுபட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் , பார்க்கலாம், திரைக்கதையில் விறுவிறுப்பு ,அடுத்து என்ன நடக்கும் என்று பதம் . ரேட்டிங் 4/5
—
கிளாசிக் சினிமா விஜய் கோபால்
