கார்டியன் (2024) சினிமா விமர்சனம்(ஹாரார் ரிவெஞ்ச்)

வெற்றி கரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் “கார்டியன்”
: ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ஹாரர், படம், ‘விறுவிறுப்பு, ஆக்சன், சஸ்பென்ஸ், என எல்லாம் கலந்த கலவையாக தரமான படைப்பாக வந்திருக்கிறது

. இப்படத்தை‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய சபரி – குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். சிம்பு நடித்த ‘வாலு’, விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர், தனது ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர்.

அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. இதில் பேய் கேரக்டரிலும் நடித்துள்ளார்.

அந்த கேரக்டருக்காக, கண்களில் விதவிதமான லென்ஸ் பயன்படுத்தி நடித்துள்ளார். அப்படி நடித்துவிட்டுப் பார்த்தால் அரைமணி நேரம் கண்ணே தெரிய வில்லை என்பது சிறப்பு அம்சங்கள்

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கல்லறை தோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இரவு 12 மணிக்கு மேல் அந்தக் காட்சியை எடுத்துள்ளார் இயக்குனர் அந்தரத்தில் தொங்கி பேயாகக் கத்தியபடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து ஹன்சிகா மிரட்டி இருக்கிறார்

, “இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல் முதல் பாதி யில் ஹன்சிகாவின் நடிப்பு, நன்றாக பயன் படுத்த பட்டுள்ளது

அன் லக்கி பெண் வேடம் ஹன்சிகா வுக்கு,
பேய் கெட்டப் எத்தனை நடிகைகளுக்கு பொருந்துமோ, நடிகை ஹன்சிகாவுக்கு கச்சிதமாகவே பொருந்துகிறது ஏற்கனவே இவர் சுந்தர் சி யின் அரண்மனை படத்தில் பேயாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பேய் என்றால் அது ஹன்சிகா தான் என்று சொல்ல வைத்து விட்டார்

படத்தின் ஒன் லைன் என்ன?

அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய முதல் பாதியும்இரண்டாம். பாதியில்பழி வாங்குதல் போன்ற விஷயங்களை படம் பேசுகிறது.
இது ஒன் லைன்

தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளன. ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.

S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.மக்கள் தொடர்பு ரியாஸ் அஹமது அவர்கள்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்.

சின்ன வயது முதல் ஹன்சிகா ,ராசி இல்லாத பெண்ணாக வளர்கிறார் அவர் எதை செய்தாலும் அது கைகூடாமல் போகிறது கல்லூரி படிப்பாகட்டும் ,வேலை தேடும் போதும்,எல்லா இடத்திலும் இவருக்கு எதிராகவே நடக்கிறது தோழியின் அறிவுறுத்தல் படி ஒரு இன்டர்வியூக்கு செல்கிறார்
அங்கு இவருக்கு வேலை கிடைக்கிறது கண்ஸ்ட்ரக்சன் நடக்கும் இடத்திற்கு செல்லும் போது காலில் ஆணி பட்டு ரத்தம் சிந்த இவர் கைக்கு அந்த அபூர்வ கல் கிடைக்கிறது அதை கொண்டு வந்து வீட்டில் வைத்த பிறகு இவர் எதை சொன்னாலும் அப்படியே நடக்கிறது ஆச்சரியப்பட்டு போய் மருத்துவர் ருத்ரன் அவரை போய் பார்க்கிறார்
அவரிடம் இந்த முழு கதையும் சொல்கிறார் ஹன்சிகா சொல்வது போல் எல்லாமே நடக்கிறது அலுவலகத்தில் இருக்கும் பெண்மணி ஒருவரை இவர் போய்விடுவார் என்று சொன்னதும் அவர் தலையை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து இறந்து விடுகிறார் அதேபோல எம் டி க்கு இவர் சாபம் விட அதேபோல் நடக்கிறது புட்பால் மேட்ச்சில் எதிரணி டீம் தான் ஜெயிக்கும் என்று சொன்னவுடன் அது அப்படியே நடக்கிறது இதெல்லாம் ஹன்சிகாவுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது
இதற்கு என்ன காரணம் என்று அவர் கண்டுபிடிக்கும் பொழுது இதற்கெல்லாம் அந்த கல் தான் காரணம் என்று தெரிய வருகிறது அந்த கல்லை எடுத்து உடைத்து விடுகிறார் அதன் பிறகு என்ன நடந்தது ?அந்த கல்லில் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆவி வெளியே வந்து இவரை பயமுறுத்தியதா? பாடாய்படுத்தியதா? என்பதை விறுவிறுப்பாக முதல் பாதியும், இரண்டாம் பாதியில் விகார முகத்துடன் மிரட்டி இருக்கிறார்

ஹன்சிகாவின் நடிப்புக்கு தீனி யாக அமைந்துள்ளது இப்படம்
அவர் ஒவ்வொரு காட்சியிலும் உதட்டை பிதுக்கி முகபாவனை செய்யும் போது ரசிக்க வைக்கிறார் காதலனை பார்த்தவுடன் மிரட்டுவது, பிறகு அவருடன் பணிந்து போவது ,என எல்லா காட்சிகளும் ஹன்சிகா அருமையாக நடித்திருக்கிறார்

பேய் ஏன் வருகிறது? ஹன்சிகாவை ஏன் துரத்துகிறது? ஹன்சிகாவிடம் என்ன கேட்கிறது? என்பது படத்தின் டிவிஸ்ட்

வில்லனாக ,ஸ்ரீமன், சுரேஷ் மேனன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக், மிரட்டி இருக்கிறார்கள்

இந்த நால்வரும் ஹன்சிகா வாழ்க்கையில் எப்படி தொடர்பு படுத்தி விளையாடுகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ! தங்கதுரையும், மொட்டை ராஜேந்திரன் ,வரும் காட்சிகள் செம கலகலப்பு காமெடிக்கு இவர்கள் கேரண்டி
சாம்சி எஸ், அருமையாக இசையமைத்து இருக்கிறார் செம மிரட்டல் ஆக இருக்கிறது பின்னணி இசை

1 ஆரம்ப கால காட்சி பேயை வரவைத்து அந்த கல்லுக்குள் அடைக்கும் காட்சி அட்டகாசம் சிஜி ஒர்க் அபாரம்

2 கிளைமாக்ஸ் டுவிஸ்ட் குட்

3 மீராவான ஆடிட்டர் தர்மம் நாயம் பேசுவது ஒரு ஆடிட்டருக்கு அழகல்ல ஆடிட்டர் என்பது ஜோடிக்க பட்ட கணக்குகளை செய்வதுதான் என்பது எல்லோருக்கும் தெரியுமே

4 மீராவின் குழந்தையை யார் காப்பகத்தில் சேர்த்தார்கள் என்பதற்கு பதில் இல்லை

5 இரண்டாம் பகுதி வில்லன்களை பழிவாங்கும் பகுதி மிரட்டி இருக்கிறார் கள் இயக்குனர்கள்

6 ஒளிப்பதிவு படத்திற்கு மிக பலம் காட்சிகள் கண்ணுக்குள் நிற்க்கிறது பேய் வரும் காட்சிகள் மிரட்டல்

7 வசனங்கள் ரசிக்க வைக்கிறது கோயிலுக்குள் புகுந்தாலே விடமாட்டேன் சுடுகாடு என்னுடைய இடம் என்று ஹன்சிகா பேசும் வசனம் குட்

8 முதல் பாதியில் செம புத்திசாலித்தனமான கதை, திரைக்கதை, இரண்டாம் பாதியில் செம ரிவெஞ்ச் , இரண்டுமே ரசிக்க வைக்கிறது

8 இயக்குனர்கள் சரியான கதையை தேர்வு செய்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா, என்று எல்லா மொழிகளுக்கும் ஏற்றவாறு திரைக்கதை, அமைத்து படத்தை எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் இயக்கி சரியான, கதையை தேர்வு செய்திருக்கிறார்கள் இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தி போகும்

9 இயக்குனர் விஜய சந்தர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மற்றும் ஒரு அவதாரம் எடுத்து உள்ளார் மேலும் பல படங்கள் அவர் தயாரிக்கலாம் நல்ல கதை தேர்வு செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்!

10 மொத்தத்தில் இந்த கார்டியன் அனைவரையும் கவரும் விறுவிறுப்பான ஹாரர் த்ரில்லர் இந்த படத்தில் ஹாரார் இருக்கிறது, மனிதநேயம் இருக்கிறது, நல்ல காதல் கதை இருக்கிறது, வித்தியாசமான புதுமையான காட்சிகள் இருக்கிறது நிச்சயம் ரசிக்கலாம் இந்த “கார்டியன்’ உங்களை சந்தோஷப்படுத்தும்