மற்றவர்களின் வலியை சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர் கடந்து வந்த பாதை கடினமானதுதான். ஒவ்வொருவரின் இழப்பும் எதையும் ஈடாகக் கொடுத்துவிட முடியாத இழப்புதான். என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட துக்கம் சிலரின் துயரங்களை விடவும் குறைவுதான் என்று உணர்ந்திருக்கிறேன். சொல்லப்போனால், சிலருக்கு நடந்த வலிமிகுந்த கதைகளைக் கேட்டே என் துயரத்திலிருந்து நான் மீண்டு, உங்களுக்கு என் கதையைச் சொல்ல முடிகிறது. இல்லையென்றால், என் துயரத்தின் பளு தாளாமல் நான் தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நம் துயரங்களிலிருந்து வெளிவரும் ஒரே வழி, நம்மைவிடவும் மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான்.
(ஆடு ஜீவிதம் நாவலில்)
மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், மலையாள எழுத்தாளர் பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா? தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களைக் கொண்டாடி வரும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தையும் வெற்றிப் படமாக மாற்றுவார்களா?
வாங்க பார்க்கலாம்
ஆடு ஜீவிதம் படத்தின் கதை என்ன?
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் முகம்மது. வெளிநாடு சென்று வேலை பார்த்தால், தனது குடும்பத்தின் கஷ்டங்கள் தீரும் என நம்பி சௌதி அரேபியாவிற்கு செல்லும் இவருக்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் கட்டாய படுத்த படுகிறார்
உணவு, நீர், ஓய்வு இல்லாமல் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே பாலைவனத்தில் துன்புறும் இவர் பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக மாற்றப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடுகிறது. சொந்த மண்ணைவிட்டு எங்கோ குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறோமே என வேதனைப்படும் நஜீப், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கிறார்.
ஆனால், சுற்றிலும் பரந்து கிடந்த பாலைவனத்தை உடல் நலிவுற்ற ஒருவரால் எப்படி கடக்க முடியும்? நஜீப் தப்பித்தாரா இல்லையா? என்கிற உண்மைக் கதையே ஆடு ஜீவிதம். மலையாள எழுத்தாளர் பென்யாமின் இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட நஜீப் முகமது என்பவரின் கதையைக் கேட்டு எழுதிய நாவலே ஆடு ஜீவிதம். தமிழ் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.
ஆடு ஜீவிதம் நாவலை வாசித்த இயக்குநர் பிளஸ்சி, ‘இதில் மிகப்பெரிய சினிமா இருக்கிறது’ என இந்நாவலை சினிமாக்கும் முயற்சிகளில் இறங்கி, கடந்த 16 ஆண்டுகளாக திரைப்படமாக இயக்குனர் பிளஸ்ஸி அருமையான படைப்பை கொடுத்துள்ளார். அடிமையாக நஜீப் பட்ட கஷ்டங்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் திரையில் காட்டியுள்ளார் பிரித்விராஜ்.
பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகளும், சாலை {Road} எங்கே, சாலை கண்ணில் தெரியவில்லையே என பித்து பிடித்தது போல் திரியும் காட்சிகளும் நம் மனதை உறைய வைக்கிறது.
. நினைச்சு கூட பார்க்கலை: !
இப்படி ஒரு நடிப்பை பிரித்திவிராஜ் இடமிருந்து கிடைக்கும் என்று அவ்வளவு தத்துவமாக இயல்பாக சிரமப்பட்டு தன்னை உருக்கிக் கொண்டு செதுக்கி நடித்திருக்கிறார் அவருடைய சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்
மலையாள திரையுலகம் பிரமயுகம், பிரேமலு, மஞ்ஞும்மல் பாய்ஸ் என பேக் டூ பேக் ஹாட்ரிக் ஹிட்டை கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த லிஸ்டில் அடுத்ததாக ‘ஆடு ஜீவிதம்’ படம் இணைந்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். சலாரை தொடர்ந்து ஆடு ஜீவிதமும் பிருத்வி நடிப்பில் பான் இந்திய ரிலீசாக வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக முழுவதும் 15 கோடி இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளது
ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒலிக்கலவைப் பணியை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார்.
மிகப்பெரிய பலம் பிரித்விராஜ்
” படத்தின் முக்கியத் தூண்களில் பிரித்விராஜ் ஒருவர் என்றால், படத்தைத் தாங்கி நிற்கும் மற்றொரு தூண் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது பின்னணி இசையும் பாடல்களும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
அமலாபால் வரும் காட்சிகள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது கேரளாவில் அந்த பசுமையான படப்பிடிப்பு அதில் காதல் காட்சிகள் குடும்ப பின்னணி என பாலைவனத்தில் ஒரு சோலையாக அந்த காட்சிகள் வந்து போகிறது
ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவை படத்திற்கு மிக அருமையாக அமைந்திருக்கிறது
ஒளிப்பதிவு அருமை பாலைவனத்தில் பாம்புகள் பனிப்புயல் பாலைவனத்தில் சிறு ஓடை ஆடுகள் ஒட்டகங்கள் என அற்புதமாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் 3 மணி நேரம் என்பதை கொஞ்சம் குறைத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்
இயக்குனர் ஒரு அருமையான படைப்பை வழங்கி இருக்கிறார் பலகாலம் மனதில் நிற்கும் இந்த படம் நிச்சயம் மலையாள சினிமாவில் ஒரு திருப்புமுனையான படமாக இருக்கும் படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நடப்பது என்ன? அடுத்து என்ன? நடக்கும் பிரித்விராஜ் தப்பிப்பாரா? என்று அந்த ஒற்றை மனிதரை மையமாக வைத்து படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் கடைசியில் அந்த விஷாவுக்காக காத்திருக்கும் போது கூட பிரகாஷ்ராஜ் அஞ்சி நடுங்குவது அவர் எப்படியாவதுபிடிபட்டு விடுவாரோ என்று பயத்தை ஏற்படுத்தி பரவசப்படுத்துகிறார் இயக்குனர். உண்மை கதை என்பதால் இதில் கற்பனை எதுவுமில்லாமல் மிகைத்தன்மை இல்லாமல் ஹீரோ எதிர்த்து சண்டையிட்டு போராடி வெற்றி பெறுகிறார் என்று சொல்லாமல் நிஜமான சம்பவங்களை வைத்து நிஜமான முறையில் படம் பார்ப்பது போல் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரித்விராஜ்க்கும். ஏ ஆர் ரகுமான் அமலாபால் மற்றும் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
