*ஜிவி பிரகாஷ். நடிப்பில் “கள்வன் ” திரை விமர்சனம்
(காமெடி எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட்) ரேட்டிங் 3.5/5
ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். அவர் கேமராவை கையாண்ட விதம் யானைகளை காட்டி பிரமாண்டமாக எடுத்த விதம் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது ஒளிப்பதிவாளராக பல காட்சிகளை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.
அதே சமயம் இயக்குனராக இயக்குனர் இமயம் பாரதிராஜா மூலம் நல்ல ஒரு செண்டிமெண்ட் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். அவர் எப்பொழுதுமே சிறந்த படத்தை கொடுத்துக் கொண்டு வருகிறார் அந்த வகையில் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்
‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மீண்டும் ஒரு ராசியான வெற்றி கூட்டணி அமைந்து இருக்கிறது இருவரின் நடிப்பும் இருவரின் இளமை வசீகரமும் படத்திற்கும் மேலும் பலம் சேர்க்கும் வகையில் உள்ளது சரியான ஜோடி சரியான தேர்வு கெம்பனாக ஜிவி பிரகாசும் பாலா மணியாக இவானா நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள் மேலும் இப்படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரும் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா இவர்கள் காமெடிக்கும் கலகலப்புக்கும் வலு சேர்க்கிறார்கள் ஞானசம்பந்தம் பாசமுள்ள தந்தையாக மகளுக்காக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஏங்கும் தந்தையாக நன்றாக நடித்தி ருக்கிறார்
தீனாவும் ,ஜி வி பிரகாசும், நண்பர்களாக வந்து படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்கள் பாரதிராஜாவுக்கும், தீனாவுக்கு ,ஏற்படும் முரண்பாடு அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
வினோத் முன்னா, பஞ்சாயத்து தலைவராக வந்து அலப்பறை செய்கிறார் மனைவியிடம் திட்டு வாங்குவது பரிகாரம் செய்ய ரங்கம்மா பாட்டியை திருமணம் செய்வது ஜிவி பிரகாசிடமும், தீனாவிடமும் ,மாட்டிக் கொண்டு விழிப்பது என்று படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது .
இப்படத்தின்தொழில்நுட்ப குழு
தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு
தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பிவி ஷங்கர்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – என்.கே. ராகுல்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
கதை – ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்
திரைக்கதை – பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்
வசனங்கள் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்
கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்
நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் – சுபியர்
ஒப்பனை – வினோத் சுகுமாரன்
PRO – சுரேஷ் சந்திரா
விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்
பின்னணி இசை ரேயா
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…….
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் ஜிவி பிரகாசும், தீணாவும் ஒரு வீட்டில் நகை திருடி விட்டு இவர்களே பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் அதன் பிறகு தான் தெரிந்தது அது கவரிங் நகை என்று பஞ்சாயத்து தலைவர் இவருக்கு தண்டனை தர அதற்கு இவர்கள் பஞ்சாயத்து தலைவரை பிளாக்மெயில் செய்கிறார்கள். பிளாக் மெயில் செய்ய ஒரு ஃப்ளாஷ் பேக் அது செம மொக்கையான ஃபிளாஷ் பேக்
பஞ்சாயத்து தலைவர் உங்கள் இருவருக்கும் வேறொரு ஊரில் மயான கொள்ளை நடக்கிறது அங்கே போய் திருடுங்கள் என்று வழிகாட்டுகிறார் அங்கே போகும் போது தான் இவானாவை, சந்திக்கிறார்கள்.
இவானா ,வீட்டில் புகுந்து திருடும் அந்த திருட்டு க்குபின் பிடி படுவது எனசம்பவம் செமையா இன்ட்ரஸ்ட் ஆக இருக்கிறது. அதன் பிறகு ஜி வி பிரகாசுக்கு, இவானாவின் மீது காதல் அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்று அவரை தொடர்ந்து டாவடிக்கிறார. இவானாவுக்கு அவரது செயின் காணமல் போக ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது ஜிவி பிரகாஷிடம் உதவி கேட்கிறார். ஜி வி உதவ அதன்பின் காதல் மலர்கிறது .
இவானா ,தன் குழுக்களுடன் மருத்துவ உதவி செய்ய ஆதரவு அற்ற இல்லத்தில் தங்கி சேவை செய்கிறார். அங்கு போன பின்பு தான் கதையில் திருப்புமுனை ஏற்படுகிறது! பாரதிராஜா அறிமுகமாகிறார்.
அங்கு இவானா வுக்காக வரும் ஜு வீ, அண்ட் தீனா, பாரதி ராஜாவை சந்திக்கிறார்கள்.
பாரதி ராஜா யார் இவானாவுக்கும், ஜிவி பிரகாசுக்கும், என்ன கனெக்ட் பாரதிராஜா வை, ஜிவி பிரகாஷ் ஏன் தத்து எடுக்கிறார்? ஜி வி பிரகாசுக்கு பாரதிராஜா செய்த உதவி என்ன? அல்லது பாரதிராஜாவை வைத்து நாலு லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று ஜீவியின் கனவு நிறைவேறியதா? இப்படி பல டிவிஸ்டுகளை வைத்து படத்தைக் கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் பாரதிராஜா வரும் காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாக இருக்கிறது .அவர் புலியுடன் மோதும் காட்சி, ஜிவி பிரகாஷ் தீனாவையும் மிரட்டி மிரட்டி ,வேலை வாங்குவது ஜிவி பிரகாஷ் காக, ஃபாரஸ்ட் ஆபிஸரிடம் சென்று கெஞ்சுவது ஜிவி பிரகாசத்திற்காக இவானாவின், அப்பாவிடம் சென்று பெண் கேட்பது இப்படி ஒவ்வொரு காட்சியிலும் பாரதிராஜா சபாஷ் வாங்குகிறார்.
பாரதிராஜா வந்த பிறகுதான் படத்தில் அவ்வளவு சுவாரசியம் அவ்வளவு விறுவிறுப்பு ரசிக்க வைக்கிறது பாரதிராஜாவை தவிர, இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இமயமாக உயர்ந்து நிற்கிறது அவரது நடிப்பு..
: ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் கெம்பன் என்ற யாரும் இல்லாத ஆதரவு அற்ற ஹீரோ கலந்த வில்லனாக வருகிறார்.

தீனாவுடன் நட்புடன் பழகுவது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பிளாக்மெயில் செய்வது , இவானா வை காதலித்து பின் தொடர்ந்து செல்வது, என வழக்க மான ஜீ வீ இடைவேளைக்கு பிறகுதான் பாரதிராஜா வை கொல்ல ஜி வி போடும் சதித்திட்டம்
என கதை வேறு ரூட்டில் பயணிக்கிறது
இவானா கல்லூரியில் படிக்கும் பாலாமணி
யாக வருகிறார்.
தன் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டார்கள் என்று பயப்படாமல் அவர்களை குறி வைத்து பிடிப்பது, ஜி வி பிரகாஷ் தன் மீது காதல் என்று சொன்னவுடன் யோசித்துப் பார் நீ திருட்டு வேலையில் ஈடுபடுபவன் நான் கல்லூரியில் படிப்பவள் இந்த காதல் எப்படி பொருந்தி போகும் என்று அட்வைஸ் செய்வது ,பாரதி ராஜாவுக்கு ஜிவி பிரகாஷ் சதி செய்து கொலை செய்ய முயற்சி செய்கிறார் என்றவுடன் துடித்துப் போவது ,இப்படி ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்தி ருக்கிறார் இவானா
தீனா படம் முழுக்க ஜீவி பிரகாஷ் தோழனாக வந்து டைமிங் காமெடி அடித்து பாரதிராஜாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு காமெடி செய்ய முயற்சி செய்கிறார்
இந்த படத்தின் பிரம்மாண்டம் கேமரா கிளைமாக்ஸில் வரும் யாணை கூட்டம் இந்த படத்தில் வரும் காடுகள் பசுமையான மேற்கு தொடர்ச்சி மலையில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறதா என்று கண்களுக்கு குளிர்ச்சியாக ஒளிப்பதிவு செய் திருக்கிறார்
அந்த பஸ் வரும்போது அந்த வளைவை காட்டுகிறார் அவ்வளவு அழகாக அற்புதமாக இருக்கிறது.
யானை மிதித்து செத்தால் அரசாங்கம் 4 லட்சம் கொடுக்கிறது இதுதான் மையக்கதை ஒரு வரியை எடுத்துக் கொண்டு அதற்கு மேலும் பூச்சூடி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் வரும் துணை நடிகர்கள் அவர்கள் பேசும் வசனம் கொங்கு பாஷை ரசிக்க வைக்கிறது அந்த ஊரில் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
பின்னணி இசை மிரட்டுகிறது
புது முக பின்னணி இசை ரேயா பாராட்டுக்கள். அதுவும் கிளைமாக்ஸ் பின்னணி இசை சூப்பர் .
இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வரிசையில் இவரும் இடம் பிடிப்பார் ஒரு நல்ல கதையை இயல்பாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் ஆபாசம் இல்லாமல் டபுள் மீனிங் வசனம் இல்லாமல் படமாக்கி இருப்பது சிறப்பு
குழந்தைகளுக்கும் பிடிக்கும் இந்த படம் இந்த கோடை சம்மரில் வந்திருப்பது இன்னும் சிறப்பு
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஒரு படத்தை வாங்கி வெளியிட்டால் அந்த படம் வெற்றிக்கு உத்தரவாதம் அந்த வகையில் இந்த படம் வெற்றிக்கு உத்தரவாதமாக அமைந்திருக்கிறது
முழுக்க முழுக்க காட்டில் படமாக்கப்பட்ட இந்த படம் நிச்சயம் ஜிவி பிரகாஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா தான் இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார்.
