ஆலகாலம் திரை விமர்சனம்

 (லவ் & சென்டிமென்ட் & விழிப்புணர்வு) ரேட்டிங் 4/5

அறிமுக இயக்குநர் ஜெயகிருஷ்ணா, நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘ஆலகாலம்’. நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் நடித்துள்ளனர்.

ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ் அம்மாவாக நடித்துள்ளார்.

ஜெயகிருஷ்ணா யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு. வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கிற விஷம், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பலர் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் லட்சியத்தோடு வளரும் மகன், வெற்றிக்குப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கைக்குள் வரும் வஞ்சகம், சூழ்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா என்பது கதை. காதலும் பாசமும் நிறைந்த குடும்பப் படமாக உருவாகியுள்ளது.

. என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கா.சத்தியராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதைகளம் என்ன?

கள்ள சாராயத்தினால் நாயகனின் அப்பா மரணம் அடைகிறார் நாயகனின் அம்மா யசோதை என்கிற ஈஸ்வரி ராவ் தன் கணவனை பறிகொடுத்ததால் மகனை சாராயத்தின் பக்கம் போக விடாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து படிக்க வைக்கிறார் பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரியில் சென்னையில் சேர்கிறார் நாயகன் அங்கு சேர்ந்த பின் சாந்தினிக்கும் நாயகன் ஜெய் இவருக்கும் காதல் உண்டாக சாந்தனியை காதலிக்கும் வில்லன் குரூப் நாயகனை வித்தியாசமாக பழி வாங்குகிறார்கள் அடிதடி இல்லாமல் குடிக்க வைத்து நாயகனின் ஒழுக்கத்தை சிதைத்தால் நாயகி நம் பக்கம் திரும்பி வருவார் என்று குடிக்க வைத்து நாயகனை குடிகாரன் ஆக்குகிறார்கள்

அதே சமயம் கல்லூரியில் தமிழ் என்கிற சாந்தினி உன்னை விரும்புகிறாரா ?என்று கேள் அப்படி என்றால் உனக்கு ஒரு முத்தம் கொடுக்க சொல் என்று தூண்டி விடுகிறார்கள் நாயகனும் சூழ்ச்சி அறியாமல் நாயகி சாந்தினி யிடம் முத்தம் கேட்க அதற்க்கு பிறகு கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் அம்மாவுக்கு தெரியாமல் சாந்தினியை திருமணம் செய்கிறார் நாயகன் அதன் பின் என்ன ஆனது? அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தார்களா? சாந்தினி பெற்றோர்களால் வெருக்க பட்டு நாயகனுடன் சேர்ந்து இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார் களா? பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் செய்த இருவரும் வாழ்ந்தார் களா? மதுவின் தீமையில் நாயகன் சிக்கிய மீண்டு வந்தாரா ? என்பதை சொல்லும் படம் தான் இந்த ஆலகாலம் என்கின்ற மதுவின் விஷம்

: இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமான கதையை எழுதி தயாரித்து இயக்கி நாயனாக நடித்திருக்கிறார் ஜெய் கிருஷ்ணமூர்த்தி இவர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிராமத்தில் நடக்கும் மதுவின் அட்டூழியங்களை பார்த்து நல்ல ஆசிரியர்கள் துணை கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இன்று இளைஞர்கள் மதுவின் பிடியில் சிக்கி எப்படி வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் இயக்குனரே

: சாந்தினி தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பது பின் பெற்றோருக்கு சவால் விட்டு காதலனை கரம் பிடிப்பது அதன் பிறகு காதலன் குடிகாரனாக மாறிவிட்டான் கணவனாக தொந்தரவு செய்கிறான் என்று அவஸ்தை படுவது கர்ப்பிணி பெண்ணாக இருந்து கொண்டு கணவனை காப்பாற்ற வேலைக்கு செல்வது கணவனை திருத்த முடியாமல் கண்ணீர் வடிப்பது என சாந்தினி அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்

: தீபா, சாந்தினிக்கு துனையாக வருகிறார் ஆஸ்பத்திரியில் சாந்தினி ரத்தம் கொடுத்ததற்காக நன்றி கடனாக வீட்டை கொடுத்து படம் முழுக்க ஆதரவாக வருகிறார் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது

: நாயகனின் அம்மா யசோதையாக ஈஸ்வரி ராவ், கிராமத்து தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு துன்பப்பட்டு, ஒரு மகனை படிக்க வைப்பாள் என்பதை கண்முன் அற்புதமாக நடித்திருக்கிறார் மகன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான் என்பதை ஊரார் முன் பெருமையாக பேசுவதாகட்டும் மகன் சீரழிந்து போய் விட்டான் என்று துடிப்பதாகட்டும் சூப்பராக இருக்கிறது ஈஸ்வரியின் நடிப்பு

கோதண்டம் குடிகாரனாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது
அய்யனாருக்கு படைப்பதற்காக பூஜை செய்ய ஊர் மக்களிடம் சாராயம் கேட்பது கிராமத்து ரசனை

சிசர் மனோகர் மனிதநேயம் உள்ளவராக நடித்திருக்கிறார்
நாயகனுக்கு பக்கபலமாக வந்து உதவி செய்கிறார்

அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பாக இருக்கிறது பழைய ஜோக் தங்கதுரை எடுபுடி வேலுவாக கதாநாயகனை குடிக்கு அடிமையாக்கும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்

படத்தில் குடி குடி என்ற பாடலுக்கு பாபா பாஸ்கர் நடனமாடி இருக்கிறார் அந்த பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது

இசை ரகு நந்தன் பாடல் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சத்யராஜ் ஒளிப்பதிவு காட்சி ரசிக்க வைக்கிறது

: இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்லும் நீதி என்ன? நாம் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் குடிக்கு பயந்து தனித்து வாழ்ந்தாலும் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு நம்மை கெடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் வீட்டில் மனைவி தாய் சகோதரி இவர்கள் எல்லோரும் குடியினால் அந்த குடும்பம் எவ்வளவு பாதிக்கும் என்பதை தத்துவமாக சொல்லி இருக்கிறார கர்பபினியாக இருக்கும் சாந்தினி யிடம் மது இல்லை என்பதற்காக நாயகன் ஜெய் எட்டி உதைக்கும் காட்சி பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும்

கணவன் குடிக்கு அடிமைப்பட்டு போதையில் நடுங்கி கத்தி கதறும் போது சாந்தினி மதுக்கடைக்கு சென்று பிராந்தி வாங்கிக் கொண்டு வருவது இன்றைய பெண்கள் படும் அவஸ்தை

கிளைமாக்ஸ் காட்சியில் மகன் தெருவில் அனாதையாக படுத்து கிடக்கிறான் மது வேண்டும் என்று கேட்டவுடன் ஈஸ்வரராவ் கடைக்கு சென்று பிராந்தி வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது
மதுவினால் ஏற்படும் தீமைகளையும் குடியினால் ஏற்படும் குழப்பத்தையும் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை ஆணித்தரமாக அற்புதமாக ஓங்கி அடித்தார் போல் இயக்குனர் தயாரித்து நடித்து சொல்லி இருக்கிறார் அவர் மது குடிக்க தவிக்கும் காட்சிகள் உருக்க மாக இருக்கிறது அற்புதமாக நடித்திருக்கிறார் ஒரு காலை இழந்து வேலைக்கு செல்ல முடியாமல் தன் மனைவியிடம் மது வாங்கிக் கொடு என்று கெஞ்சுவதும் குழந்தையின் காலில் இருக்கும் வெள்ளி கொலுசை கழட்டுவதும் இன்றைய குடிகாரர்கள் செய்யும் வேலைதான் ஒரு நிஜமான குடியினால் அழிந்து கொண்டு குடும்பத்தை பார்த்து போல் நமக்கு இருக்கிறது

நிச்சயம் இந்த படத்தை பார்த்து ஒரு குடிகாரன் திருந்தினால் சமுதாயத்துக்கு நல்லது

ஹை லைட் காட்சி கள்

1)ஆரம்பக் காட்சியில் மகன் மேடை யில் சுதந்திரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நாயகனின் அப்பா கள்ளச்சாராயத்தால் இறந்து கிடக்கும் காட்சி

2 )நாயகனும் சாந்தினியும் காதலிக்கிறார்கள்
என்று தெரிந்தவுடன் வில்லன் கும்பல் அவர் கை கால்களை உடைப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நாயகனை குடிக்க வைத்து அவன் ஒழுக்கத்தை கெடுக்கிறார்கள் இது எதிர்பாராத திருப்பம்

3 )குடிக்கு அடிமையான நாயகனை சாந்தினி எப்படியாவது மறுவாழ்வு மையத்துக்கு கூட்டிப் போய் காப்பாற்றி விட மாட்டாரா என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்த திரைக்கதை

4 )படிக்க வந்த இடத்தில் காதலில் விழாமல் இருந்திருந்தால் படித்து முன்னேறியிருக்கலாம் இன்று இளைஞர்கள் காதல் என்ற மாய வலைக்குள் எப்படி தன்னுடைய வாழ்க்கை இழக்கிறார்கள் என்பதற்கு இந்த படம் உதாரணம்

5) வேலை கிடைக்காமல் நாயகன் பில்டிங் கட்டும் ஒரு கட்டிடத்தில் எலக்ட்ரீஷியன் ஆக வேலை செய்து சம்பாதிக்கிறார் அப்படியே சாந்தினியை காப்பாற்றி விடுவார் என்று எதிர்பார்த்தால் அங்கும் வில்லன் கும்பல் வந்து பிரச்சனை ஏற்படுத்துவது திருப்பம்

6 )குடிப்பதற்கு என்று இளைஞர்கள் ஏதாவது ஒரு காரணத்தை தேடுகிறார்கள் பிறந்த நாள் ,சாவு வீடு ,காதலியின் பர்த்டே, நண்பர்களின் பர்த்டே, என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தவது என்பதை இந்த படம் சொல்கிறது

7 )காலை இழந்த நாயகன் அற்புதமான அந்த கால் இல்லாதது போல் சிறப்பாக நடித்திருக்கிறார் ஒரு கால் இல்லாமல் வலியால் கதறும் இடம் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது

8 )கிளைமாக்ஸ் காட்சியில் ஈஸ்வரி ராவ் மதுக்கடைகளை அடித்து நொறுக்கும்பொழுது படம் பார்ப்பவர்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்

9 )எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டாலும் மதுவுக்கு அடிமையாகி விட்டால் வாழ்க்கை இழக்க வேண்டியது தான் என்பதை இயக்குனர் உணர்த்தி இருக்கிறார்

10 )கிராமத்திலும் சரி நகரத்திலும் சரி மது இன்று தன் அராஜக கரங்களை அகலமாக விரித்து மனித உயிர்களை வேட்டையாடத் தொடங்கி விட்டது இது நிறுத்தாவிட்டால் இந்த சமுதாயமே பாழாகும் என்பதை அக்கறையோடு சொல்லி இருக்கிறது இந்த ஆலகாலம்