ஒரு தவறு செய்தால் படத்தின் விமர்சனம்

(கிரைம் & டிஜிட்டல் மாஃபியா &போஃர்ஜரி) ரேட்டிங் 3/5

CAST:
எம் எஸ் பாஸ்கர் பரமேஸ்வரன்
ராமச்சந்திரன்
உபாசனா
பாரி i
நமோ நாராயணா
சுரேந்தர்
சந்தோஷ் இவர்கள் நடிப்பில்..
:

இயக்குனர்- மணி தாமோதரன்
D. O. P – Vijay krishna and mahesh sridhar as
Editor – Vithu jeeva
Music Director – K.m rayan
Production Banner – KMP Pictures
PRO – Nikil Murukan

படத்தில் கதை களம் என்ன வாங்க பார்க்கலாம்

சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருக்கும் நான்கு இளைஞர்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் ஹவுஸ் ஓனரால் அவமானப்படுத்தப்பட்டு தெருவுக்கு வருகிறார்கள் கோயம்பேட்டில் இருக்கும் கமிஷன் வியாபாரி ராமச்சந்திரனை, சந்திக்கிறார்கள் ராமச்சந்திரன் ஏமாற்றும் தந்திரம் பற்றி அந்த இளைஞர்களிடம் விவரிக்கிறார்

அப்பொழுது முதல் எந்தெந்த வகையில் ஏமாற்றலாம் என்று திட்டமிடுகிறார்கள் அப்பொழுது நாயகனின் பழைய காதலிமகா , பாரியின் கண்களுக்கு தென் படுகிறார்.
: மஹாவின் குழந்தைக்கு கேன்சர் அதை சரி செய்து தருவதாக அண்ணா நகரில் இருந்து ஒரு விளம்பரம் வந்ததைக் கண்டு மகாவும் அவர் கணவரும் குழந்தையை கூட்டிக்கொண்டு சென்னைக்கு வந்தி ருப்பதாக கூறுகிறார்

ஆனால் அது ஒரு ஏமாற்று விளம்பரம் என்பதை நாயகனின் உதவியாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள் இன்று வாட்ஸ் அப்பில் இது போன்ற விளம்பரங்கள் வந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார்கள்டிஜிட்டல் மூலம் சோசியல் மீடியாவில் எந்தெந்த வகையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்து திட்டம் போடுகிறார்கள்

அப்பொழுது அவர்கள் துணையாக உபாசனாவும் வருகிறார் அவர் தான் இந்த படத்தின் மெயின் கதாநாயகி முனீஸ்வரி அவர் வந்த பிறகு ஆட்டம் சூடு பிடிக்கிறது
பிறரை ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் அதுவும் கோடிக்கணக்கில் இருக்க வேண்டும் என்று எல்லோரும் திட்டம் போடுகிறார்கள்

இது தேர்தல் சமயம் என்பதால் ஓட்டுக்கு ஆயிரம் முதல் 5000 ரூபாய் கொடுக்கும் அரசியல்வாதிகளை குறி வைக்கிறார்கள் ஆளுங்கட்சி வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர் ,சுயேட்சை வேட்பாளர் ,இந்த மூவரில் யார் பணம் அதிகம் செலவழிக்கிறார்கள் என்று சுயேட்சை வேட்பாளர் நமோ நாராயணனை, குறி வைக்கிறார்கள்.
ஆளுங்கட்சி வேட்பாளரை மார்பிங் செய்து, ஒரு பெண்ணுடன் இணைத்து, ஒரு வீடியோவை நமோ நாராயணனுக்கு அனுப்பி இதை நாங்கள் வெளியிட்டால் உங்களுக்கு ஓட்டு சுலபமாக கிடைக்கும் எங்களுக்கு தேவையான பணத்தை கொடுங்கள் என்று கேட்கிறார்கள் அதற்கு நமோ நாராயணன் சம்மதித்தாரா? ஆளுங்கட்சி வேட்பாளரின் நிலை என்ன ஆனது? எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னார்? இளைஞர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தார்களா? இல்லையா? என்பதை மிகவும் இன்ட்ரஸ்டிங்காக, புத்திசாலித்தனமாக, திரைக்கதையில் சொல்லி ,படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மணி தாமோதரன்.

ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று கேட்கும் அளவுக்கு திரைக்கதை அவ்வளவுவிறு விறுப்பாக இருக்கிறது நமோ நாராயணன் எம் எஸ் பாஸ்கர் மூலம் இவர்களுக்கு செக் வைக்க ஆட்டம் சூடு பிடிக்கிறது உபாசனா ஐடியாக்களை அள்ளிக் கொடுத்து ஒரு வெற்றிகரமான திட்டத்தை அரங்கேற்றுகிறார்

இந்த படம் நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும் சிறிய பட்ஜெட்டில் தரமான படமாக வந்திருக்கிறது ஒரு தவறு செய்தால் ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று போகும் கதை உபாசனா வந்த பிறகு விறுவிறுப்பான கிரவுண்டுக்குள் நுழைகிறது
: இப்படி எல்லாம் சோசியல் மீடியா மூலம் ஏமாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று நம்ப வைத்து இருக்கிறார் இயக்குனர்.

ஏமாற்றுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது குறுக்கு வழிகளில் யாரிடம் மாட்டாமல் எப்படி கோடிக்கணக்கான ரூபாய் அடிப்பது என்பதை இயக்குனர் புத்திசாலித்தனமான கதை திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்.
ஹை லைட் காட்சிக ள். கிளைமாக்ஸ் காட்சியில் பணத்தை எடுத்துக்கொண்டு வில்லன் கும்பலுக்கு தண்ணி காட்டி தப்பிப்பது.

. வீடியோக்களில் பேசும்போது, முகம் தெரியாத அளவுக்கு ஒரு ஆப் மூலம் தங்களை மாற்றிக் கொண்டு பேசும் புதிய யுக்தி.

தங்களுக்கு தொல்லை கொடுக்கும் நண்பனிடம் குப்பைகள் கட்டி இதை காசிமேடு ரயில்வே தண்டவாளத்தில் போட்டு வா என்று சொல்லும் அந்த காட்சியும் அவர்கள் இருவரும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அலையும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பாரியும் ,மகாவும், காதலிக்கும் அந்த பிளாஷ்பேக் காட்சிக்கு கவிதைத்தனமாக இயக்குனர் டி ஆர் அவர்கள் வாய்ஸ் கொடுத்திருப்பது, காட்சிகள் விரிவதும், அவ்வளவு அழகாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வரும் அரசியல்வாதிகளிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் தன் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும், ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லும் அந்த காட்சி ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டு போடும் மக்களுக்கு சரியான சவு க்கடி படத்தின் இயக்கமும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதமாக இருக்கிறது
நடித்த அனைவரும் புதுமுகம் போல் இல்லாமல் இயல்பாக
நடி த்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது மொத்தத்தில் ஒரு தவறு செய்தால் இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் மாபியா கும்பல் எப்படி செயல் படுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது