அக்கரன்”. என்றால் நிலையான வன் என்று அர்த்தம் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அதுபோல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை தான் அக்கரன்
, எம்எஸ் பாஸ்கர் அழுத்தமாக அருமையாக நடித்துள்ளார்,: வாழ்த்துக்கள்
படம் ஆரம்பித்தவுடன்ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறது விறுவிறுப்பான திரைக்கதை வசனம் இயக்கம் பாராட்டுக்குரியது கவுன்சிலரை அர்ஜூனன் இருவரையும் எம் .எஸ் பாஸ்கர் ஏன் கடத்துகிறார் என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கும் படம் அடுத்தடுத்து ஜெட் வேகத்தில் பறக்கிறது பிரியதர்ஷினி, வெண்பா ,இவரின் அப்பாவான எம்எஸ் பாஸ்கர் ,தன் மகள் இருவர் மீதும் அன்பை கொட்டி வளர்க்கிறார் தாய் இல்லாமல் வளரும் அந்த பெண் குழந்தைகளுக்கு தாயுமானவராக இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் அதன் பிறகு அர்ஜுனனையும் ,கவுன்சிலரையும், ஒரு சோபாவில் உட்கார வைத்து கெமிக்கல் கம் போட்டு இருவரும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோபாவில் ஒட்ட வைத்து விடுகிறார்
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் இல்லாவிட்டால் உன் விரல் போய்விடும் என்று அர்ஜுன் என்பவரின் விரலை காய்கறி நறுக்குவது போல் எம் எஸ் பாஸ்கர் நறுக்குகிறார் அலறி துடிக்கிறார் அர்ஜுன் அதன்பிறகு கவுன்சிலரிடம் சென்று உண்மையை சொன்னால் உயிரோடு போகலாம் இல்லையென்றால் உன் கைவிரல்கள் ஒவ்வொன்றாக நறுக்கப்படும் என்கிறார். இருவரும் எம் எஸ் பாஸ்கரின் மகள் காணாமல் போனதற்கு ஆளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள் இதில் எது உண்மை யார் சொல்வது உண்மை என்று எம் எஸ் பாஸ்கர் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கிறார் உச்சகட்ட கொடூரமான தண்டனையை அந்த விலங்குகளுக்கு எப்படி கொடுத்தார்? இதன் இடையே என்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் படம் மூலமாக அற்புதமான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள்- எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் – அருண் K பிரசாத்
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்
இப்படத்தை தயாரித்து உள்ளனர்
: அரசியல்வாதிகள் தங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு அப்பாவி குடும்பத்தை எப்படி அழிக்கிறார்கள் என்பதை படத்தில் முழுக்க ரத்தத்தை தெறிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர்
எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சன் காட்சிகள் என அசத்தியிருக்கிறார் மகளிடம் பேசும் போதும் வில்லன்களிடம் கர்ஜிக்கும் போதும் காவல்துறையிடம் சென்று கண்ணீர் விட்டு கெஞ்சும் போதும் வெண்பாவிடம் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வதும் வீடு தேடி வரும் மருமகனிடம் எடுத்து எறிந்து இருந்து பேசும்போதும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு சூப்பராக இருக்கிறது
கபாலி விஸ்வந்த் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் வெண்பாவை விரும்பும் நல்ல நண்பனாக எம் எஸ் பாஸ்கர் குடும்பத்திற்கு உதவும் நல்ல தோழனாக படம் முழுக்க வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்
வெண்பா எம் .எஸ் பாஸ்கரின் மூத்த மகளாக வருகிறார் அழகாக இருக்கிறார் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் தங்கை மீது பாசம் கொண்டு தங்கைக்காக உருகும் அழும போதும் வெண்பா வெளுத்து வாங்குகிறார்
பிரேம்குமார் அழகான தேர்வு நல்ல நடிப்பு நமோ நாராயணனின் மருமகனாக வந்து நீட் தேர்வை பற்றி மாணவர்களிடம் பேசும் போதும் சரி நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
பதவிக்கு ஆசைப்படும் கார்த்திக் இவர் நடிப்பு நயவஞ்சகமான நரி தந்திரமான வில்லங்கமான நடிப்பு வெளுத்து வாங்கி இருக்கிறார்
: எம் எஸ் பாஸ்கரின் இளைய மகளாக பிரியதர்ஷினி இவர் டாக்டர்ஆக ஆசைப்பட்டு விபரீதமான முடிவைத் தேடிக் கொள்ளும் வித்தியாசமான வேடம் சிறப்பு
: அரசியல்வாதியாக நமோ நாராயணன் 20 கவுன்சிலர் வென்று காட்டுவேன் என்று அரசியல் தலைவரிடம் சவால் விட்டு தன் மனைவியிடம் மருமகன் அர்ஜுனனை கவுன்சிலர் ஆக முடியாமல் அவதிப்படும் நடிப்பு எக்ஸ் எம் பியாக நன்றாக நடித்திருக்கிறார்
இயக்குனர் அருண் பிரசாத் ஒரு நல்ல படத்தை சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் ஆக எப்படி கொடுக்க முடியுமோ அவ்வளவு ரசிக்க வைத்து கொடுத்திருக்கிறார் இவர் மதுரை சேர்ந்தவர் யாரிடம் உதவி இயக்குனராக இல்லாமல் ஷார்ட் பிலிம் மூலம் திரைத்துறையில் காலடி வைத்திருக்கிறார் ஒரு ஜீவன் உள்ள ரிவேஞ்ச், படத்தை திறமையாக இயக்கி முதல் படத்திலேயே முத்திரை பதித்துஇருக்கிறார்.
எம் ஏ ஆனந்த், ஒலிப்பதிவு சூப்பராக இருக்கிறது மதுரை தான் கதைக்களம் என்றாலும் அதையும் ரிச்சா காட்டி இருக்கிறார் ரத்தம் தெளிக்கும் அந்த காட்சிகள் பயமுறுத்துகிறது
சரவெடி சரவணன், ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது
: இசை பாடல்கள் பின்னணி இசை மிரட்டல் ரகம்
கலை அரங்க வடிவமைப்பாளர், நன்றாக செய்திருக்கிறார் டி ஐ கலர் கரெக்ஷன் படத்திற்கு சிறப்பை தருகிறது
மொத்தத்தில் இந்த அக்கரன் திரை படம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் எந்த வில்லங்கத்திலும் சிக்க கூடாது எந்த வம்புக்கு போக கூடாது என்று சொல்லும் ஒரு விழிப்புணர்வு படமாக வந்துள்ளது ரசிகர்களை கவரும் வண்ணம் அசத்தலான திரை க்கதை என்று பார்க்கலாம் தேவையான படம் இந்த கால கட்டத்திற்கு இயக்குனருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👏
