தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘குரங்கு பெடல்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். கமல் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
அவர் தயாரிப்பில் கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்ற நல்ல கதைக்கு முக்கியத்துவம் பெறும் படங்கள் வெற்றி வாகை சூடி வருகிறது கொட்டுக்காளி படம் வெளிநாடுகளில் விருதுகளை குவித்து வருகிறது.குரங்கு பெடல் படமும் 53 வது சர்வதேச பட விழாவில் விருதுகள் குவித்தது
சிறுவன் மாரியப்பன் பள்ளி விடுமுறை என்பதால் தன் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசைப்படுகிறான்
.அவனது ஆசை நிறைவேற அவனுக்கு என்ன தடைகள்! அதை தாண்டி வந்தான் என்பது கதை. அதை சொன்ன விதம் அருமை அதற்காக அவன் செய்யும் செயல்கள், சவால்கள் ஆகியவற்றை மையமாக வைத்து கிராமப் பின்புலத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த காட்சிகள் நம்மை மீண்டும் பழைய நினைவுகள் நினைத்து பார்க்க வைத்து விடுகிறது நாம் சிறுவர் களாக இருக்கும் போது சைக்கிள் பழக கீழே விழுந்தது, தட்டு தடுமாறி பழகியது, எல்லாம் நம் நினைவுக்கு வந்து போகும் அதுவே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி!
இப்படத்தில் காளி வெங்கட் அந்த சிறுவனின் அப்பாவாக நடித்திருக்கிறார்.மனுஷன் அவ்வளவு எதார்த்தமான நடிப்பு
நடராஜாசர்வீஸ்என்றவுடன் வரும்கோபம் மகன் தன்னை எதிர்த்துப் பேச முகத்தில் கடுகடுப்பு, என பண்பட்ட நடிப்பு நன்றாக இருக்கிறது
யூடியூப் பிரபலங்கள் பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் இருவரும் வரும் காட்சிகள் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் செம கலகலப்பு
இப்படத்தில் வரும் வசனங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்”விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது” அறுக்க மாட்டாதவன் இடுப்புல 58 அருவாள் போன்ற கிராமத்து இயல்பான வசனங்கள் பிரபாகர் எழுதியிருக்கிறார் படம் முழுக்க சிறுவர்கள் பேசும் அந்த நையாண்டித்தனமான பேச்சு, அவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வது கொங்கு பாஷையில் மிலிட்டரி பிரசன்னாவும் குடிகாரன் ஜென்சனும் கலாய்த்து கொள்வது படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இது போன்ற படத்துக்கு ஒரு இளம் காதல் ஜோடி வைத்து படத்தை இயக்கி இருப்பார்கள் ஆனால் கமலக்கண்ணன் அதில் எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்துக் கொண்ட மைய கதையை எந்த இடத்திலும் பிசகாமல் நேர்கோட்டில் கொண்டு சென்றிருக்கிறார் மாரியப்பனை சுற்றியே கதையை நகர்வதால் படம் பார்ப்பவர்களுக்கு கதையை விட்டு வேறு எங்கும் நகர முடியவில்லை
மாரியப்பன் அம்மாபேட்டை அக்கா வீட்டுக்கு ஐந்து ரூபாய் கேட்பதற்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகும் போது அங்கு ஒரு வர் காளி வெங்கட்டின் நண்பர் அவர் சைக்கிளில் வேகமாக செல்ல இருவருக்கும் ஈகோ ஏற்பட்டு ஒருவரையோ முந்தி செல்லும் காட்சி அவ்வளவு அருமையாக ரசிக்க வைக்கிறது
: காளி வெங்கட் ஏன் சைக்கிள் கண்டால் பயப்படுகிறார் என்ன நடந்தது என்பதை காளி வெங்கட் நண்பர் சித்திரக் கதையாக சொல்லும் பொழுது சூப்பர்
மாரியப்பனின் அக்காவாக நடித்திருக்கும் அவர் கிராமத்து இயல்பான பெண்மணியாக தன் தம்பி கீழே விழுந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்து அவன் கால்களுக்கு ஒத்தடம் கொடுத்து இட்லி சாப்பிட வைத்து இரவு முழுக்க தூங்க வைத்து மருத்துவம் செய்யும் அந்த காட்சி அவ்வளவு இயற்கையாக இருக்கிறது என்பதுகளில் செல்போன் இல்லை என்பதால் காளி வெங்கட்டுக்கு சொல்ல முடியாத நிலை என்பதை இயக்குனர் உணர்த்தி இருக்கிறார் இந்த படத்தில் நீதிமானிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நம் மனதுக்கு நெருக்கமாகிறார் அந்த சிறுவன!
மற்றும் இந்த படத்தில்
குச்சி ஐஸ், கோலி விளையாட்டு, நூல் கோர்த்த இருமுனை செல்ஃபோன், வாடகை சைக்கிள், குரங்கு பெடல் என கிராமத்து வெயிலில் சிறுவர்களின் ஆட்டம் 80,களின் நினைவுகளை கண் முன் கொண்டு வந்து விட்டது. குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவரது நண்பர்களின் பந்தயமும் என்ற எளிமையான கதைக்களம் ராசி அழகப்பன் கை வண்ணம் மாறாமல் திரைக்கதை ஆக்க பட்டுள்ளது வெல்டன்
சமீபத்திய படங்களில் வரும் துப்பாக்கி, ரத்தம், கொலை போன்ற வன்முறைகள் இல்லாமல் வாழ்வியலை மையப்படுத்தி எடுத்துள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று சிறப்பான இடத்தை பிடிக்கும்
[
இயக்குநர் கமலக்கண்ணன் ‘குரங்கு பெடல்’படம்மூலம்நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்
ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதை படத்தில் எந்த இடத்திலும் மிகை இல்லாமல் காட்சி படுத்த பட்டுள்ளது
இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பாணிக்காக பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இந்த படமும் பேசப்படும்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ஆத்மார்த்தமான மெல்லிசை மற்றும் மயக்கும் பின்னணி இசைக்காக பாராட்டப்படுபவர். இந்தப் படத்தில் அவரது இசை குழந்தைகளின் உலகத்தை பிரதிபலித்து எண்பதுகளின் இசையை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளார்
மற்றும் குழந்தை நட்சத்திரமாக, நடித்திருக்கும்
சந்தோஷ், வேலுமுருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்
சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
தொழில் நுட்ப குழு
இணைத் தயாரிப்பாளர் – சஞ்சய் ஜெயக்குமார், கலை அரசு,
இசை – ஜிப்ரான் வைபோதா,
எடிட்டர் – சிவானந்தீஸ்வரன்,
ஒலி – ஆண்டனி பி ஜே ரூபன்,
ஒளிப்பதிவு – சுமீ பாஸ்கரன்,
கலரிஸ்ட் – ஜி பாலாஜி
மக்கள் தொடர்பு
சுரேஷ் சந்த்ரா& நாசர்
மொத்தத்தில் இந்த குரங்கு பெடல் நம் குழந்தைகளின் கனவுகளை புரிந்து கொள்ள இது ஒரு பாடமாக இருக்கும் கிளைமாக்ஸ் கட்சியில் காளி வெங்கட் மகனுக்காக புதிய சைக்கிள் வாங்கி கொண்டு வர
குழந்தை மாரியப்பன்
பொம்மை சைக்கிள் கட்டி பிடித்து கொண்டு உறங்க அவன் கனவை நிறைவேற்றும் தந்தையாக காட்சி தருகிறார் அற்புதமான டச் சிங் காட்சி கைதட்டல் ஓங்கி ஒலிக்கிறது
