தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், சிட்டிங் முதல்வர் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது?
“மாநில கட்சிகளை நசுக்க தான் ஊழல் குற்றச்சாட்டு”, “தமிழ்நாட்ல தமிழ், தமிழ்னு சொல்லி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க.
இந்தி கத்துக்கிட்டா தான் என்ன?” உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெறுகின்றன.
‘தலைமை செயலகம்’. ஜெயமோகனின் கதைக்கு வசந்தபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், நந்தா குப்தா, சாரா பிளாக் சித்தார்த் விபின், சந்தான பாரதி, கவிதா பாரதி,தர்ஷா குப்தா உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள்.
‘ஜீ ஃபைவ் இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கியது மற்றும் பலவிதமான கதைகள் கொண்டது ஒரு பெரும் பார்வையாளர்களை கொண்டது இந்த ஜீ 5
. 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மொழிகளில் 12 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது
அதனால் தான் இயக்குனர் வசந்த் பாலன் இந்த கதை கள த்தை
தேர்வு செய்து இருப்பாரோ ?
கதை டெல்லி , ஜார்க்கண்ட், வெஸ்ட் பெங்கால் ,ஆந்திர மாநிலம், தமிழகம், என படமாக்கி இருக்கிறார்கள் எல்லா காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது
முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் ஐந்து பேர் முதல்வர் நாற்காலிக்கு, ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக, காய் நகர்த்தி விளையாட்டு ஆரம்பிக்கிறார்கள்.
முதல்வரின் மகளாக அமுதவல்லி (ரம்யா நம்பீசன்) ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அப்பாவை காப்பாற்ற நினைக்கிறார் அதே சமயம் அடுத்த முதல்வராக தான் வர வேண்டும் என்று குள்ளநரித்தனமாக காய் நகர்த்தும் இவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
அடுத்து பத்திரிகையாளராக இருக்கும் கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி )முதல்வரின் ஆலோசராக இருந்து கொண்டு முதல்வர் பதவியை கைப்பற்ற நினைக்கும் இவர் யார் ?என்பது படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் கொற்றவையாக ஸ்ரேயா ரெட்டி திமிர் படத்தில் வில்லியாக கலக்கியவர் இந்த படத்தில் அமைதியாக நடித்து ராஜாவுக்கு செக் வைக்கிறார்.
அடுத்து நீர்வளத் துறை அமைச்சராக வரும் நாகராஜனாக (கவிதா பாரதி )அமுதவள்ளிக்கு ஆதரவாக வந்து முதல்வர் பதவியை தக்கவைக்க நினைக்கும் மூன்றாவது குள்ளநரி
முதல்வரின் உற்ற தோழனாக வரும் சந்தான பாரதி, அருணா அருணா என்று கிஷோர் குமாரை கட்டித் தழுவும் காட்சி படத்தில் இவருக்கு முக்கியமான பங்கு இவர் நடிப்பு சிறப்பு
அடுத்து முதல்வரின் மருமகனாக வரும் ஹரி என்கிற ( நீருப் )
ஊழல் பேர் வழியாக 300 கோடி ரூபாய் முதல் வர் பெயரை
சொல்லிக்கொண்டு ஏமாற்றி எப்படியாவது முதல்வர் பதவியை அடைய நினைக்கும் இவரும் ஒரு குள்ளநரி இவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
அடுத்து முதல்வரை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று டெல்லியின் தூதுவர்களாக வழக்கறிஞராக ஒய். ஜி. மகேந்திரன், அரசியல் ப்ரோகிராக சாஜ் /இவர்கள் இருவரின் இருவரின் எடுபிடியாக காட்டிக் கொடுக்கும் எட்டப்பனாக நமோ நாராயணா, இவர்கள் மூவரும் முதல்வரை வீழ்த்தி விட துடிக்கிறார்கள்
இன்னொரு புறம் மணிகண்டன் ஆக காவல் துறை அதிகாரி பரத், அவருக்கு உதவி செய்யும் தர்ஷா குப்தா , இவர்கள் இருவரும் கொற்றவை யார் ?
துர்கா யார்? என்ன நடக்கிறது? மாயா யாருடைய மகள் என்பதை கண்டுபிடிக்கும் இன்வேஸ்டிகேஷனில் கையில் எடுக்கிறார்கள்
இவர்கள் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
கண்டெய்னர் லாரியில்
துறைமுகத்தில இருந்து பொருளை
எப்படியாவது மீட்க வேண்டும் என்று போராடும் துர்கா என்ற கதாபாத்திரம்
இவர்களுக்கு எல்லாம் முதன்மையாக விளங்கும் முதல்வராக கிஷோர் நடிப்பிலும் அமைதியான முறையில் மிரட்டி இருக்கிறார் கிஷோர்
மற்றும் சிபிஐ சிறப்பு ஆபிஸராக ஆதித்யா மேனன், அவரது உதவியாளர் தாஸ்,
. இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு துப்புகளும் துர்கா சக்தி யார்? என்பதை விளக்குகிறது நாலாவது எபிசோட்டில் துர்கா யார்? என்று தெரியப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்த்தால் கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது சிறப்புஇன்னொரு புறம் ….. பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். அங்கு கொற்றவை, துர்கா, இருவரும் இணைந்து நடத்திய ரகசிய சந்திப்பு கண்டு பிடிக்கிறார். இந்த கதை இரண்டாம் எபிசோட் டில் சூடு பிடிக்கிறது வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.
தமிழக அரசியலின் தீவிரமான பக்கத்தைப் பேசுவதுடன், தேசிய அளவிலான அடித்தட்டு தொழிலாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பக்கங்களை நுணுக்கமாகப் பேசுகிறது. அரசியல் மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணின் எழுச்சியை எதிரொலிக்கிறது அரசியல் சித்தாந்தங்களை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கைச் சித்தரிக்கிறது. கொற்றவை, துர்கா சக்தி ,
.அரசியல் அரங்கில் உலக விதிகள் எதுவும் பொருந்தாது. ஊழல், ஊழலின் ஆபத்துகள், ஜனநாயகப் போராட்டத்தின் சமரசங்கள் போன்றவற்றால் கறை படிந்த அரசாக, தன் மாநில மக்களின் நலனைக் காக்கும் அரசைப் பார்க்கும் முயற்சிதான் தலைமைச் செயலகம். ஒரு மாநில முதலமைச்சரின் பார்வையில் ஆயுதப் போராட்டங்களின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசுகிறது இந்தக்கதை.”
கொற்றவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி . ‘நாம் எதிரிக்கு எதிராகக் கத்தியுடன் நின்றால், அவர்கள் பல கத்திகளால் திருப்பி அடிப்பார்கள்’ என்ற கொற்றவையின் மேற்கோள் வசனம் அமைதியான குணம், தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வுகள் மூலம் ஸ்திரமற்ற அரசியலைக் கணிக்கும் அவள், ஆபத்தான நட்புகளைத் தாண்டி, தமிழக அரசியலில் பயணிக்கிறாள்.
ஸ்ரேயா எதிர் கொள்ளும் போராட்டம் தான் மையகதை…
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். இப்போது தலைமை செயலகம், வெப் சீரியல் மூலம் ஓ.டி.டி தளத்தில் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறார்
இரண்டு ஆண்டு காலம் உழைப்பு வீண் போகவில்லை
ஜிப்ரான் இசையில் பாடல்கள் , பின்னணி இசை ,படத்திற்கு மிகப்பெரிய பலம்
ஒளிப்பதிவாளர் ரவி சங்கரின், கேமிரா கோணம் பளிச்சிடுகிறது ஒவ்வொரு காட்சியிலும் சிரமப்பட்டு காட்டுக்குள் கஷ்டப்பட்டு படமாக்கி இருக்கிறார் வெல்டன்.
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
கலர் கரெக்ஷன் அருமையாக உள்ளது
மற்றும் DI காஸ்டியூம்
மற்றும் அரங்க அமைப்புகள் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது
மொத்தத்தில் இந்த தலைமை செயலகம் வெப் சீரியல் வெற்றி பெற்று உள்ளது ராடன் தயாரித்து ஜீஃபைவ் வழங்கி உள்ள இந்த சீரியஸ் பேசப்படும்
காடுகள் என்றால் என்ன ?
நீதி என்பது என்ன ?
பதவி ஆசை க்கு தந்தை மகள் எல்லாம் கிடையாது!
பார்லிமென்ட் டில் ஒரு சட்டம் போடும் போது அதில் ஏழைகளுக்கு பாதிப்பு வராத வண்ணம் சட்டம் போட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது!
இயக்குனர் வசந்த பாலனுக்கு இனி எல்லாம் வசந்தமே
ராடனுக்கு வெற்றி மேல் வெற்றி
ஜீ ஃபைவ் க்கு விலங்கு, செங்களம்,
மற்றும் குயின், தொடர் களை போல் வெற்றி பாதையில் இந்த தலைமை செயலகம் செயல் படும்
