கன்னி” திரை விமர்சனம் (2024)

திரில்லர் & மெஸேஜ் & வாழ்வியல் மூவி ரேட்டிங் 3/ 5

லைப் கிரியேஷன்ஸ் தயாரித்து எம் செல்வராஜ் தயாரிப்பில்: மாயன் சிவா தொரைப்பாடி எழுதி இயக்கி உள்ள படம் கன்னி இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர்,மணிமாறன்,தாரா கிரிஷ் ,ராம் பரதன், பேபி தன்விகா,ஜானகி,சரிகா செல்வராஜ்,மாதம்மா(பாட்டி), ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

நாயகி தவிர
மற்ற எல்லோரும் புது முகங்கள் தான் அஸ்வினி சந்திரசேகர் நீலி என்ற கதாபாத்திரத்தில்,
அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இவரதுஅண்ணியாக சாரா, நடித்திருக்கிறார் அண்ணனாக மணிகண்டன், நடித்திருக்கிறார் வில்லனாக ராம் பரதன் நடித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும்
நடித்துள்ளார்

ராஜ் குமார் பெரிய சாமி
ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் காடு மலைகளை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்
ஜவ்வாது மலை பகுதியில் படப்பிடிப்புகள் பசுமையாக இருக்கிறது கண்களுக்கு குழுமையாக இருக்கிறது

படத்தின் இசை பிரமாதமாக இருக்கிறது ஒரே பாடல் தான் அந்த பாடலை மீனாட்சி இளையராஜா பாடியிருக்கிறார் உமாதேவி பாடலை எழுதியிருக்கிறார்
செபாஸ்டியன் சதீஷ் இசை அமைத்துள்ளார்

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது
ரமேஷ் பாபு ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டி இருக்கிறார் சிங்கத்தின் குகையில் மாட்டிக் கொண்ட மான் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தனது வலிமையான எண்ணங்கள் துணை கொண்டு போராடும் அந்த காட்சி சூப்பர்

தமிழ் சினிமா இதுவரை பணமாக்கப்படாத லொகேஷன்களில் சென்று வித்தியாசமாக படமாக்கி வந்திருக்கிறார்கள் படக்குழு ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கிராமத்தில் ஒரு நான்கு ஐந்து வீடுகளில் மட்டும் வசிக்கும் அந்த ஊருக்குள் சென்று தைரியமாக படம் ஆக்கி இருக்கிறார்கள் பாராட்டுக்குரிய விஷயம்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

அஸ்வினி சந்திரசேகர், அவரது அண்ணன் வேடன், அவரது அண்ணி நீலி, அண்ணன் மகள் மற்றும் குழந்தை, அஸ்வினி சந்திரசேகர் அம்மாமாதம்மா ,இவர்கள் எல்லோரும் ஜவ்வாது மலை பகுதி ஃபாரஸ்ட் ஏரியாவில் அழகான குடும்பமாக வசித்து வருகிறார்கள் அன்புக்கு வஞ்சம் இல்லாத குடும்பம் எல்லோரும் அன்பு மழை பொழிய அஸ்வினி சந்திரசேகர் அம்மா சித்த மருத்துவத்தில் கைதேர்ந்தவராக இருக்கிறார் அவர் ஒரு கூடை வைத்திருக்கிறார் அதில் அதிசய மூலிகைகள் வருகிறது அதை வைத்து குணப்படுத்துகிறார் அப்படி அந்த பகுதிக்கு வந்த ஒரு கோடீஸ்வரர் மயங்கி விழ அஸ்வினி சந்திரசேகர் குடும்பமே அந்த கோடீஸ்வரனை மூலிகை சாறு கொடுத்து எண்ணெய் குளியல் இட்டு நீராட வைத்து தீராத ஒரு நோயை தீர்த்து வைக்கிறார்கள் அதற்கு நன்றி கடனாக அவர் பணம் கொடுத்தும் அந்த குடும்பம் வாங்க மறுக்கிறது இது கடவுள் கொடுத்த கொடை எங்களுக்கு எதற்கு பணம் என்று அந்த அளவுக்கு அந்த நல்ல குடும்பத்திற்கு சோதனை வருகிறது

அந்த கோடீஸ்வரரை பார்த்து வெளிநாட்டு டாக்டர்கள் இவர் வியாதி தீர்ந்ததை பார்த்து எங்களுக்கு அந்த கூடை வேண்டும் அதிசய கூடை வேண்டும் என்று டாக்டர் குழு ராம் பரதனான வில்லனிடம் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசுகிறார்கள் ராம் பரதன் அவர் அடியாட்கள் ஐந்து ஆறு பேருடன் அந்த கூடைக்காக அஸ்வினி சந்திரசேகர் வீட்டுக்கு சென்று அண்ணன், அண்ணி ,இவர்களை கொன்று விட்டு அம்மாவையும், துரத்துகிறார்கள் இவர்கள் அம்மா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்

அஸ்வினி சந்திரசேகர் அந்த ஊரை விட்டு அம்மாவின் அண்ணன் வீட்டுக்கு வந்து விடுகிறார் அந்த வில்லன் கள் அங்கும் அஸ்வினி சந்திரசேகரை துரத்திக் கொண்டு வருகிறது அதற்கு அவர் என்ன முடிவு எடுத்தார்? அந்த வில்லன்களை தீர்த்து கட்டினாரா? என்ன ஆனார்? முடிவில் அந்த மூலிகை அதிசய கூடை இவர் கைக்கு வந்ததா? என்பதை எதார்த்தமாக ஒப்பனை இல்லாத மனிதர்களை கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையில் அருமையாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்

: தரமான படைப்பாக இப்படம் வந்திருக்கிறது ஆரம்பக் காட்சியில் சற்று குழப்பமாக இருந்தாலும் படம் இடைவேளைக்கு பிறகு ராக்கெட் வேகத்தில் பறக்கிறது கதை சொன்ன விதம் படமாக்கியவிதம் நடித்த நடிகர்கள் எல்லோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்

அந்த ஜவ்வாது மலை பகுதியை காட்டிய பிறகு கேமராவில் அற்புதமான கைவண்ணம் தெரிகிறது. இசையும் உயிரோட்டமாக இருக்கிறது
அஸ்வினி சந்திரசேகர் ஒற்றையளாக இந்த படத்தை தூக்கி சுமந்து இருக்கிறார் அவர் நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது சேம்பி என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் மக்களாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார். சிறிய பட்ஜெட்டில் தரமான படம் பார்த்த நிம்மதி நமக்கு ஏற்படுகிறது பல விருதுகளை வெல்லப் போகும் இந்த படம் நிச்சயம் உங்களை கவரும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடித்த நடிகர்களுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்”கன்னி”நிச்சயம் உங்கள் இதயத்தை கொள்ளை கொள்வாள் ஆளே இல்லாத கிராமம் சில வீடுகள் மட்டும் இருக்கும் அந்த பாழடைந்த கிராமத்தை கண்டுபிடித்து சிரமப்பட்டு படமாக்கி அந்த மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை மூன்று மொழிகளோடு கலந்து சொன்ன வித்தியாசமான படத்தை இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவியும்
பணத்தை செலவு செய்து மொக்கையாக காமெடி வைத்து நடிகைகளின் அரைகுறை ஆடையோடு காட்டி கத்தி வெட்டு ரத்தம் என ரசிகர்களை பயமுறுத்தாமல் நல்ல ஒரு வாழ்வியலை சித்த மருத்துவத்தில் பெருமையை உலகுக்கு சொன்ன கன்னி பாராட்டுக்குரியவர்