படிக்காத பக்கங்கள் திரை விமர்சனம்

(ரிவெஞ்ச்& சோஷியல் மெஸேஜ்). ரேட்டிங் 3-/5

இயக்குனர்: செல்வம் மாதப்பன்
தயாரிப்பாளர்: முத்துக்குமார்
இசையமைப்பாளர்: ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடல் வரிகள் எழுதியவர்: கபிலன் வைரமுத்து
ஒளிப்பதிவாளர்: டோலி
எடிட்டர்: ஷரன் சண்முகம்
வசனம் எழுதியவர்: செல்வம் மாதப்பன்
அசல் கதை எழுதியவர்: செல்வம் மாதப்பன்
அதிரடி நடன இயக்குனர்: மிரட்டல் எஸ். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை ஓகே . ..

இப்படத்திற்கு டாலி ஒளிப்பதிவு செய்துள்ளார் அருமையான ஒளிப்பதிவு. மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

..
[பொதுவாகவே நாம் சில செய்திகளை நாளிதழ்களில் படிக்கும்போது ஒரு விபத்து, ஒரு கற்பழிப்பு, ஒரு கொலை என்ற சம்பவங்களை படிப்போம். இவை அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக வந்திருக்கும். ஆனால் அதை அடுத்து ஒரு சில தினங்களில் இது தொடர்பான கைது விசாரணை அல்லது முன்ஜாமீன் வழக்கு வாபஸ் என்ற செய்திகள் சிறிய செய்தியாக போடப்பட்டிருக்கும்.

ஆனால் இவைதான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதை படிக்காத பக்கங்கள் என்ற பெயரில் வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வம் மாதப்பன். நாம் படித்த பக்கங்களை விட படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது, அதை படிக்க வேண்டும்!
இப்படம் வெறும் அதிரடி படமாக இல்லாமல் பெண்களை சுரண்டுபவர்களை விமர்சிக்கும் படமாக உள்ளது. அடக்குமுறை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடும் பெண்களின் வலிமை மற்றும் பின்னடைவை இது எடுத்துக்காட்டுகிறது. ஜாஸ்ஸி கிஃப்ட்டின் இசை, அற்புதமானதாக , படத்தின் தொனியை முழுமையாக்குகிறது மற்றும் அதன் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிக்கிறது.

சுருக்கமாக, இந்த படம் சமகால சிக்கல்கள், காதல் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய கலவையை வழங்குகிறது. இது பெண்களின் துணிச்சலையும் உறுதியையும் கொண்டாடும் அதே வேளையில் அவர்கள் மீதான சுரண்டலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. யாஷிகா ஆனந்த் மற்றும் பிரஜின் ஆகியோரின் ஆற்றல்மிக்க நடிப்பு, அழுத்தமான கதைக்களத்துடன், இந்த வகைக்கு குறிப்பிடத்தக்க
வெற்றி யை பதித்து உள்ளது. காதலனை நம்பி ஒரு பெண் (தர்ஷினி) நெருக்கமாக இருக்க, அது இன்னொருவனின் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அந்த பெண்ணுக்கே வருகிறது. அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் சொல்ல, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண், காதலனாக நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க, அவரை அடித்துக் கொல்கின்றனர்.

நடிகை ஸ்ரீஜா (யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க, அவரை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் (முத்துக்குமார்) அவரோடு உறவு கொண்டு அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில் ஹோட்டல் பேரரை அவன் கொல்லும்போது தான் அவனது கொடூரம் புரிகிறது .

அவனிடம் இணங்குவது போல நடிக்கும் நடிகை ஸ்ரீஜா ஒரு நிலையில் அவனையே அடித்து வீழ்த்துகிறார். “நீ என்ன குறி வச்சு வரலடா… நான்தான் உன்னை குறி வச்சு வர வச்சேன்” என்கிறார். ஏன், எதற்கு, எப்படி, அப்புறம் என்ன நடந்தது என்பதே ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படம் .

பெண்களை நம்ப வைத்து உறவு கொள்ளும்போது ஆபாசப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பிடுங்குவதோடு பலரிடமும் காமத்துக்கு அனுப்பி அதை வைத்து பல வகையிலும் பணம் அதிகாரம் என்று வாழும் கும்பல் பற்றிய படம் .

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் இன்ஸ்பிரேஷனில் எழுதி இருக்கிறார்கள்.

யாஷிகா ஆனந்த் நடிகை ஸ்ரீஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகையாகவே வந்து சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி இந்த படிக்காத பக்கங்களை படிக்கத்தக்க வகையில் அழகாக கொடுத்திருக்கிறார். கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் மொத்த த்தில் படிக்காத பக்கங்கள் படிக்க படிக்க சுவை