புஜ்ஜி @அனுப்பட்டி திரை விமர்சனம் (2024)

மனிதம் காப்போம் ரேட்டிங் 3-5/ 5

மழலையர் உலகம் அன்பானது. அந்த உலகத்திற்கு நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகாக மாறிவிடும் என்ற அடிப்படையில் நம்மை குழந்தைகள் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் புஜ்ஜி அட் அனுப்பட்டி
இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

ஹாலிவுட்டில் குழந்தைகளின் கதைக்களத்தை வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும். ஆனால் தமிழ் திரையுலகில் உள்ள குறை என்றால் குழந்தைகள் இடம்பெறும் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பது தான் புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்படம். இப்படம் மனிதத்தை பேசுகிறது எல்லோரும் நல்லவராக இருந்து விட்டால் இந்த பூமியில் யாருக்கும் பிரச்சனை இல்லை தவறு செய்யாத மனிதர்கள் இருக்க முடியாது ஆனால் அவர்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த படம் சொல்கிறது குழந்தைகள் மூலமாக பெரியவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. ஆட்டுக்குட்டியை பலி கொடுக்க நினைக்கும் ஒரு இஸ்லாமியர் ஒருவர் தன் மனைவி பிரசவத்திற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பொழுது கொடுத்து உதவும் அந்த குழந்தைகளை கண்டு உருகுகிறார் நாய்க்குட்டியை காப்பாற்ற காரில் உள்ளே விழும் அந்த சிறுவனை சபித்த பெரியவர் தன்மகன் விபத்தில் மாட்டி விட்டான் என்று அழுது புலம்பி அந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார் இப்படி படம் முழுக்க பாசிட்டிவான எண்ணங்களை வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆட்டுக்குட்டி சாமி என்று இயேசுவையும் காட்டுகிறார்

இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தனது கவிலயா கிரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார். அருண்மொழிச் சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் கோவை மாவட்டத்தில் உள்ள அனுப்பட்டி கிராமத்தையும் சூலூரையும் அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பின்னணி இசை ரசிக்கும் வண்ணம் உள்ளது. .இதில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அனைவரும் நடிப்பும் எதார்த்தமாக இயல்பாக இருந்தது
எல்லோருமே அண்ணன் தங்கையான அந்த குழந்தைகளுக்கு உதவும் கதாபாத்திரமாக வந்து மனதில் இடம் பெறுகிறார்கள்
இஸ்லாமிய கதாபாத்திரம் மற்றும் குழந்தைகளை திருடும் அந்த பேன் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ய நினைக்கும் போலீஸ் அதிகாரி குடிகார தந்தை இவர்களை தவிர படத்தில் எல்லோரும் நல்லவரே

இப்படி ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும் ஆனால் இன்று உலகம் அப்படியா இருக்கிறது

குழந்தைகளின் உலகத்தை நம் கண் முன்னே பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புஜ்ஜி அட் அனுப்பட்டு திரைப்படத்தை 9 வி ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. படம் பார்த்த பிறகு அனைவரும் கூறியது இதுதான் ‘இது குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்குமான படம்’ இன்று அந்த அளவுக்கு படம் கமர்சியல் பேசி இருக்கிறது ஒரு குடும்பத்தில் குடிகார தந்தை இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் நிலை என்ன ஆகும் காவல் காக்கும் போலீஸ் அதிகாரி கயவனாக இருந்தால் மக்கள் நிலை என்ன ஆகும் இரக்கமில்லாத கசாப்பு கடைக்காரிடம் ஆட்டுக்குட்டி சிக்கினால் அந்த ஆட்டின் நிலை என்ன ஆகும் என்பதை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்

படத்தின் கதை:

அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து,அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். ஆனால் சரவணனோ அதை உணவாகப் பார்க்கிறான். தந்தையோ இந்த ஆட்டை வித்து குடிக்கிறார். தங்கை துர்காவை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஆட்டுக்குட்டி வேண்டும் என கூறும் தங்கைக்காக ஆட்டுக்குட்டியை தேடி புறப்படுகிறார் சரவணன். புஜ்ஜியை தேடி தங்கை அண்ணனின் பயணம் மேற்கொள்ளும் வழியில் தர்ஷினி என்ற ஆதரவற்ற பெண்ணை பார்க்கிறார்கள் அனுப்பட்டியில் தர்ஷினி அவர்களுக்கு உதவுகிறார் புஜி என்கிற ஆட்டுக்குட்டி கசாப்பு கடையில் மாட்டி இருக்கிறது அதை மீட்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் இந்த குழந்தைகள் மூன்று பேரும் அந்த ரூ 5000 ரூபாய் பெற பிட் நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுத்து வசூல் செய்கிறார்கள் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒரு இளைஞன் அவர்களுக்கு உதவுகிறான் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர் ஜெராக்ஸ் எடுத்து உதவுகிறார் காரில் வரும் ஒருவர் உதவுகிறார் இப்படி எல்லாரும் உதவினாலும் 5000 ரூபாய் திரட்ட முடியவில்லை வரதராசன் பழனிச்சாமி இஸ்லாமியராக நடித்திருக்கிறார் அவர்தான் அந்த ஆட்டுக்குட்டியை கடைசியாக வைத்திருக்கிறார் அவர் நாளை காலைக்குள் ஐயாயிரம் ரூபாய்க்கு கொண்டு வந்து கொடு இல்லையென்றால்
உன் ஆட்டு குட்டியை வெட்டி விடுவேன் என்கிறார்

தர்ஷினி, சரவணன், துர்கா மூன்று பேரும் பணத்திற்காக அலையும் போது குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று வருகிறது அப்போது காவல்துறை அதிகாரி வந்து இவர்களை காப்பாற்றுகிறார் காவல்துறை அதிகாரியும் ஒரு காமுகன் என்று பின்னால் தெரிய வருகிறது அவனிடம் இருந்து பிரபா குழந்தைகளை காப்பாற்றுகிறார் அதன் பின் என்ன நடந்தது குழந்தைகள் மீட்டப்பட்டார்களா? புஜ்ஜி என்ற அந்த ஆட்டுக்குட்டி கசாப்பு கடைக்காரரிடம் இருந்து தப்பித்ததா? பரபரப்புடன் கிளைமாக்ஸ் முடிகிறது தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை அன்பு எல்லா உயிரிடத்திலும் வேண்டும் என்பதை சொல்லும் படம்

தர்ஷினி, நாய்க்குட்டியை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைக்கும் பொழுது நாய்க்குட்டியை காப்பாற்றும் அந்த காப்பகத்தின் உரிமையாளர் கேட்கிறார் உன் கதை என்னம்மா என்று எனக்கு யாரும் இல்லை தாய் தந்தையற்ற நான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி இருக்கிறேன் என்கிறார் அவர் சொல்கிறார் நாய்க்குட்டி கதையை விட உன் கதை கொடுமையா இருக்கு என்று. மனதில் நிற்கும் இந்த காட்சி இப்படி வாழும் குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள் எனவே எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவது அவசியம்

i: இயக்குனர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார் அதனால் படத்தின் மேக்கிங் திரைக்கதை சொல்லப்பட்ட கதை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் கதை இயக்கம் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது

இசை கார்த்திக் ராஜா அவரது இசையில் பாடல்களும் பின்னணிசை அற்புதமாக வந்திருக்கிறது

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு ,மற்றும் கலர்கரைக்சன், டி ஐ, பாடலை எழுதிய கவிஞர்கள் எல்லோருடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது நடித்த நடிகர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எனவே கொங்கு பாஸையில் பேசி என்னுங்க என்றும் டிபன் பாக்ஸை போசி என்றும் இயல்பான கொங்கு தமிழை பேசி நடித்திருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது

நக்லைட்ஸ் youtube இல் இருந்து சில நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள் பிரபா வாகநடித்திருக்கும் பெண் போலீசும் சிவாவாக நடித்திருக்கும் கமலும் குழந்தைகளின் அம்மாவாக நடித்திருக்கும் மீனாவும் வைத்தீஸ்வரியும் லாவண்யாவும் எல்லோருமே தங்கள் நடிப்பை நன்றாக செய்து இருக்கின்றார்கள்

படத்தில் மைனஸ்

எல்லாம் நன்றாக இருந்தாலும் படத்தில் சில குறைகளும் இருக்கிறது குழந்தைகள் அனுப்பட்டியில் ஆட்டுக்குட்டியை தேடும் பொழுது பிட் நோட்டீஸ் அடித்து எல்லோரிடமும் வசூல் செய்கிறார்கள் இது யாராவது ஒருவர் வலைதளத்தில் சோசியல் மீடியாவில் போட்டு உதவி செய்வது போல் காட்டி இருந்தால் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தி இருக்கும் இன்று தும்பமினால் கூட யூடியூபில் வந்து விடுகிறது அதுவும் நக்கலைட்ஸ் போன்ற youtube சேனல்கள் இருந்து கொண்டு இந்த இடத்தை கோட்டை விட்டு இருக்கிறார்கள்

: அடுத்து நாய்க்குட்டியை காப்பாற்ற சிறுவன் சரவணன் காருக்குள் முன்னால் வர கார் உரிமையாளர் சிறுவன் சரவணன் கண்டபடி திட்டி விட்டு கார் எடுத்துக்கொண்டு போகிறார்
இதனால் அவர் மகனுக்கு விபத்து ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான் என்று அவர் அந்த குழந்தைகளை அழைத்து கையில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் இந்த காட்சி எல்லாம் அமைச்சூர் தனமாக இருக்கிறது நாடக பாணியில் இருக்கிறது
இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது அதுவும் இந்த கலியுக காலத்தில்

அந்த குழந்தைகளிடம் யாராவது ஒரு லட்ச ரூபாய் கொடுப்பார்களா? அது கூட சரி
அந்த குழந்தைகளின் பிரச்சனை என்ன என்று கேட்டு ஆட்டுக்குட்டியை மீட்டுக் கொடுக்கும் அந்த வேலை தான் செய்வார்கள் காரிலேயே கொண்டு போய் எங்கேயோ ஒரு பக்கம் விட்டு விடு என்று இஸ்லாமிய கறிக்கடைக்காரர் கடையின் முன் இறக்கி விட்டு விட்டு போவது எந்த விதமான நியாயமும் இல்லை
ஒரு லட்ச ரூபாய் கொடுத்து காலில் விழும் அந்த பணக்காரர் இந்த குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்க்காதது ஏனோ

அடுத்து கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டுக்குட்டி வெட்டப்படும் போது மூன்று குழந்தைகளும் வந்து குறுக்கே விழுகிறார்கள் அந்த குழந்தைகளை கீழே தள்ளிவிட்டு விட்டு ஆட்டுக்குட்டியை வெட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் அந்த குழந்தைகள் எதற்கு வந்தார்கள் என்ன நடந்தது ஏன் இந்த ஆட்டுக்குட்டியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று அந்த புது வீட்டுக்காரர் கேட்கவே இல்லை அப்படியா நடந்து கொள்வார்கள் குழந்தைகளிடம் விளக்கம் கேட்டுவிட்டு எனக்கு இப்பொழுது அவசரமாக நான் குட்டியை வெட்டியாக வேண்டும்
இந்த இரவில் நான் எங்கே போய் தேடுவேன் என்று ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு வெட்டுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும் இவர்கள் குழந்தையை தள்ளிவிட அவர்கள் குறுக்கே வந்துவிழ இந்த காட்சி அவசரமாக படமாக்கப்பட்டது போல் இருக்கிறது

இப்படிப்பட்ட சில காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால் படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாக்கி இருக்கும் இந்த புஜ்ஜி தேசிய விருதுக்கு தகுதியான படம்
ஒரு தரமான படம் குழந்தைகளிடம் அன்பை காட்டச் சொல்லும் படம் தன்னிடம் வேலை பார்க்கும் தோட்டத்து ஆட்கள் என்றாலும் கமல் அவர்கள் மீது அன்பு காட்டுவது ஒரு முதலாளியின் அன்பை சொல்லும் படம்
மொத்தத்தில் இந்த புஜ்ஜி ரசிக்க வைக்க கூடிய 2024 ஆம் ஆண்டின் சிறந்த தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நடித்திருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் இந்த படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கும் மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் அவர்களுக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் புஜ்ஜி உங்கள் மனதை தொடுவாள் அன்பு உலகில் வாழ வைக்கும் அமைதியே சாலச் சிறந்தது மனிதர்கள் உயர்வானவர்கள் எண்ணங்கள் வலிமையானது நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்