Casting : Rajkumar Rao, Janhvi Kapoor, Kumud Mishra, Sarina Wahab, Rajesh Sharma, Arjit Taneja, Purnendu Bhattacharya, Yamini Das
Directed By : Sharan Sharma
Music By : Aadesh Shrivastava, Vishal Mishra, Tanishk Bagchi, Jaani, Achint & Yuva, Hunny & Bunny, Dhrruv Dhalla
Produced By : karan Johar, Umesh KR Bansal, Hiroo Yash Johar, Apoorva Mehta,
ஒரு நல்ல படம் அதற்கான தகுதியை உள்வாங்கிக் கொள்ளும் அப்படி இந்த படம் எல்லோர் கண்களிலும் கிளைமாக்ஸ் காட்சியும் கண்ணீரை வரவழைத்து விட்டது காரணம் அன்பு நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த தொடங்கி விட்டால் இந்த உலகத்தையே வெல்லலாம் என்று சொல்லி இருக்கும் கதை வாங்க பார்க்கலாம்
நாயகன் சாதிக்காமல் இருப்பதால் தன்னை யாரும் மதிப்பதில்லை, வெற்றி மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும், என்று எண்ணி தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் ராஜ்குமார் ராவுக்கும், மருத்துவரான நாயகி ஜான்வி கபூருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது பேரார்வம் இருப்பது தெரிய வருவதோடு, அதன் மூலம் ஒருவருக்கொருவர் தங்களை தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள் தங்கள் குடும்பம் என்ன சொன்னாலும் இருவரின் பார்வையும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற நேர்கோட்டில் பயணிக்கிறார்கள்.
அந்த பயணத்தில் அவர்கள் மேற்கொண்ட தடை என்ன வெற்றி என்ன
ஆரம்பக் காட்சியில் நாயகன் தாழ்வு மனப்பான்மையில் இருக்க நாயகி வந்த பிறகு அது தன்னம்பிக்கையாக மாறுகிறது
எப்படியாவது, எதிலாவது சாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட விட வேண்டும் என்று துடிக்கும் நாயகன் ராஜ்குமார் ராவ், தன்னால் கிரிக்கெட் விளையாட்டு வீரராக சாதிக்க முடியவில்லை என்றாலும், கிரிக்கெட்டில் ஆர்வமும், நன்றாக விளையாடவும் செய்யும் தனது மனைவிக்கு முறையான பயிற்சியளித்து அவரை சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக்கி, அதன் மூலம் சிறந்த பயிற்சியாளர் என்று தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’
ஹிந்தி சினிமா தற்போது நல்ல கதைக்கலங்களை கொண்டு இப்படிப்பட்ட படங்களை தந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி
நாயகன் ராஜ்குமார் ராவ்
மகேந்திர அகர்வால் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் உண்மையான மகிழ்ச்சி மற்றும் வெற்றி எதுவென்று தெரியாமல், தாழ்வு மனப்பான்மையுடன், விரக்தியாக வாழ்ந்து வரும் மனிதர்களை பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பவர் சோகம், மகிழ்ச்சி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் அளவாக வெளிக்காட்டி அசத்தலாக நடித்திருக்கிறார்.
அப்பாவிடம் இருந்து ஒரு முறையாவது பாராட்டு கிடைக்காதா என்று அவரது கண்ணில் இயக்கம் கிரிக்கெட்டில் வெற்றி பெற மாட்டோமா என்று இதயத்தில் தாக்கம் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
மஹிமா குப்தா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர், கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, நடிக்க கூடிய கதாபாத்திரங்களையும் தன்னால் நேர்த்தியாக செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார். நாயகனின் நேர்மைக்காக அவரை திருமணம் செய்துக்கொள்பவர், கணவர் செய்யும் அனைத்தும் தனக்காக அல்ல அவருக்காக என்று தெரிய வரும் போது, ரசிகர்களை கலங்கடிக்கும் வகையில் நடித்து கைதட்டல் பெறுகிறார். அழகான புன்னகை அன்பான பார்வை இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் தொல்லலுடன் கணவனை கட்டிப்பிடிப்பது மாமனார் மாமியார் இடம் பணிவு அப்பாவிடம் பயம் என எல்லாம் ஒன்று சேர ஜான்வி கபூர் அசத்தியிருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் மகளிர் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கி இந்தியாவுக்காக செலக்ட் ஆகும் போது நமக்கும் அவ்வளவு உற்சாகம் நாமே வெற்றி பெற்றது போல…
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஷரினா வாஹப் குறைவான காட்சிகளில் வந்தாலும், உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? என்பதை நாயகனுக்கு விளக்கும் அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
இப்படி ஒரு அம்மா இருந்து விட்டால் எல்லா மகன்களுக்கும் வாழ்க்கையே ஒரு வரம் தான்
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் குமுத் மிஷ்ரா, கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருக்கும் ராஜேஷ் சர்மா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பூர்ணேந்து பட்டாச்சார்யா, அம்மாவாக நடித்திருக்கும் யாமினி தாஸ், நாயகனின் தம்பியாக நடித்திருக்கும் அர்ஜித் தனேஜா என அனைத்து நடிகர்களும் கதைக்களம் சொல்லும் கருத்துக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல படத்துக்கு நல்ல நடிகர்கள் தானாகவே அமைவார்கள் என்பது உண்மை அந்த வகையில் இந்த படத்திற்கு எல்லோருமே சிறப்பு செய்திருக்கிறார்கள்
நாயகன் அப்பாவாக நடித்திருப்பவர் கண்களால் மிரட்டுகிறார் அருமையான தேர்வு
ஒளிப்பதிவாளர் அனய் ஓ கோஸ்வாமியின் கேமரா கிரிக்கெட் விளையாட்டின் விறுவிறுப்பைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், நாயகன், நாயகி இடையிலான காதல் மற்றும் மோதல் ஆகியவற்றின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்திவதில் அதிகம் மெனக்கெட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
குடும்பங்களில் அன்பு பாசம் இவைகளையும் கேமரா விட்டு வைக்கவில்லை அழகாக படம் பிடித்திருக்கிறது
ஆதேஷ் ஸ்ரீவத்ஸவா, விஷால் மிஷ்ரா, தனிஷ்க் பக்ஜி, ஜானி, அஜிண்ட் & யுவா, ஹன்னி & ஃபண்ணி, துருவ் தல்லா, என ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். யார் யார்க்கு என்ன பங்கு என்று தெரியவில்லை என்றாலும், படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மென்மையாக பயணித்திருக்கிறது.
ஆர்ப்பாட்டம் இல்லாத இசை அதிர வைக்காத இசை ஆனால் காதுக்கு குளுமையான இசை பின்னணியும் மிக அருமை… , காட்சிக்கு காட்சி ரசிக்கும்படி படத்தொகுப்பு செய்திருக்கிறார் நிதின் பெய்ட்.
திரைக்கதையில் வேகம் இல்லை என்றாலும் நாம் ஒன்றி போய் வருகிறோம் அந்த குடும்பத்தோடு
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன?, அது எதில் கிடைக்கும்? என்ற மிக எளிமையான ஒன்லைனை வைத்துக்கொண்டு, ஒரு அழகான கதையை எழுதியிருக்கிறார்கள் நிகில் மெஹ்ரோத்ரா மற்றும் சரண் சர்மா. எந்த துறையில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும், மேலும்…மேலும்…என்று தான் செல்வார்களே தவிர, அவர்கள் முழுமையான மகிழ்ச்சியுடன் வாழ்வதில்லை, என்பதோடு மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை அது நம் மனதில் இருக்க கூடியது, என்பதை மிக எளிமையான வசனம் மற்றும் காட்சி மூலம் புரிய வைத்து படத்துடன் ரசிகர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறார்கள் மனைவிக்கு கணவனே கோச்சாக இருந்து வெற்றியை பரிசளிப்பது இந்திய சினிமாவில் புதுசு.
படம் நம்மை இரண்டரை மணி நேரம் நம் கவனம் முழுவதும் திரையில் மட்டுமே இருக்கும்படி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சரண் சர்மா, மொழிகள் கடந்து ரசிக்க கூடிய படமாக கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் மிகவும் தேர்ச்சி பெற்றவராக அனுபவம் சரியாக உணர்ந்து இயக்கி இருக்கிறார் ஒவ்வொரு காட்சியும் ஆகா என்று சொல்ல வைக்கிறது அற்புதம் என்று சொல்ல வைக்கிறது. குடும்ப பின்னணியில் கிரிக்கெட் சார்ந்த கதை நிச்சயம் ஜெயிக்கும் என்று புரிந்து கொண்டு சிக்சர் அடித்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், இந்த ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ ரசிகர்களை மகிழ்விக்கும்.
கணவன் மனைவி அன்பு தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் நாயகன் தன்னம்பிக்கை கொடுக்கும் நாயகி மகனை ஊக்கப்படுத்த தந்தை மகனின் மீது அன்பு மொழியை பிழியும் தாய் விநாயகனே அவமானப்படுத்தும் கோச்சர் நாயகியை மருத்துவத்தை விட்டு கிரிக்கெட்டில் கால் பதிக்காதே என்று சொல்லும் நாயகியின் தந்தை இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் கட்சியில் ஜான்வி கபூர் சிக்சராக அடித்து செல்ல படத்திற்கும். சிக்ஸர் 4 என்று ரசிகர்கள் பாராட்டத் துவங்கி விட்டனர் மொத்தத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிளைமாக்ஸ்சில் நாயகன் நாயகி மூலம் வெற்றி பெற்றது நாம் வெற்றி பெற்றது போல உணர்கின்றோம் அதுவே படத்தின் வெற்றி!
ரேட்டிங் 4/5
