தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.
. இப்படத்தில்,, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி,
அனு மோல் நடித்திருக்கிறார்கள்
படத்தில் கதை என்ன வாங்க பார்க்கலாம்
: மோகன் ,அனுமோல், தம்பதிக்கு அன்பு செல்லம் நிமிஷா என்று மகள் அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது தற்கொலை செய்து கொல்லப் போகிறார் என்ற செய்தி கேட்டு பதறி அடித்துக் கொண்டு ஊட்டியில் இருந்து வருகிறார் மோகன்
கோவை வந்து பார்த்தபோது மகளின் செல்போனையும் அவர் அணிந்திருந்த ஆடையும் காட்டுகிறது போலீஸ் அதன் பிறகு மோகனும் அனுமோலும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள் தன் மகளே போன பிறகு தங்களுக்கு எதற்கு இந்த வாழ்வு என்று அப்போது அங்கு வரும் சிங்கம் புலி அவர்கள் இருவரையும் தடுத்து உன் மகள் போனால் நீங்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா உங்கள் மகளின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று மோகனிடம் சொல்ல மோகன் அதை சரி என்று கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்
அவர் களத்தில் இறங்கி துப்பு துலக்கும் போது ஒவ்வொரு முடிச்சும் சுவாரசியமாகவே இருக்கிறது முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், போலி மாத்திரை விற்கும் நீரவ் ,ஐ ஜீ ஆபிஸர் தன் மகளின் காதலன் மகளின் தோழி இப்படி ஒவ்வொருவராக மோகன் விசாரிக்கிறார்
மொட்டை ராஜேந்திரன் இடம் கள்ளத் துப்பாக்கி வாங்கி பஸ்ஸில் வரும் பொழுது பஸ்ஸில் பெண்களை கண்ட இடத்தில் தொடும் கயவன் ஒருவனை துப்பாக்கியால் சுடுகிறார் அதனால் பரபரப்பாக பேசப்படுகிறார் அதன் பிறகு மோகன் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்து விட்டார் என்று நம்பும் போலீஸ் அதிகாரியான ஜெயக்குமார் மோகனால் பாதிக்கப்பட்டு வேலையிலிருந்து கஷ்டத்தில் இருக்கும் அவர் மோகனை மீண்டும் சந்திக்கிறார் அவர் யார்? எங்கே போகிறார்? என்று தன் கும்பலுடன் மோகனை பின் தொடர்கிறார் பரபரப்பாக போகும் இந்த காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ரெக்க கட்டி பறக்கிறது திரைக்கதை
i: மோகன் தன் மகளுக்காக மட்டும் நியாயம் கேட்டு போராடாமல் பெண்கள் பாதிக்கப்பட்டால் துணிச்சலாக தட்டிக் கேட்க வேண்டும் என்ற நியாத்தை வழங்குகிறார் இன்று போலி மாத்திரைகளால் பல உயிர்கள் பலியாகிறது அவர்கள் முகத்திரையை கிழித்து எரிகிறார் சரளா என்ற பெண்களை கடத்தி விற்கும் பெண்மணியை புரட்டிப் போடுகிறார் நீரவ் என்ற போலி மாத்திரைகள் விற்கும் ஏஜெண்டை துவம்சம் செய்கிறார் இப்படி தனது பண்பட்ட நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் மோகன் கைதட்டல் வாங்குகிறார் தீர்க்கமான பார்வை அமைதியான பேச்சு ஒவ்வொருவரையும் தண்டிக்கும் விதம் என மோகன் மீண்டும் கம்பேக் மோகன் என அவதாரம் எடுக்கிறார்
: மோகன் பல வருடங்கள் நடிக்காமல் இருந்து நல்ல ஒரு சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையை தேர்வு செய்து எடுத்ததற்காக பாராட்டலாம் தன் மகள் மீது பாசம் காட்டுவதாகட்டும், எதிரிகள் மீது வஞ்சம் காட்டுவதாகட்டும், தன் பெண்ணை காதலித்த தர்ஷன் மீது அன்பை காட்டுவதாகட்டும், எல்லா இடங்களிலும் மோகன் உயர்ந்து நிற்கிறார் அவருடைய கதாபாத்திரம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக அமைந்திருக்கிறது
மோகனுக்கு மனைவியாக நடித்திருக்கும் அனுமோல் நடிப்பு நன்றாக இருக்கிறது அவரது மகள் நடிப்பு நன்றாக இருக்கிறது தர்ஷன் ஆக நடித்தி ருக்கும் மோகனின் மகளின் காதலன் நடிப்பு நன்றாக இருக்கிறது
மற்றும் இசையமைப்பாளர் இனிமையான 2 படங்களை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் சண்டை பயிற்சி அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் படத்தில் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறையாத அளவுக்கு படத்தை உருவாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் எதிரிகளை வித்தியாசமான கோணத்தில் பழி வாங்குகிறார்
சுகர் நோயாளிக்கு ஸ்வீட் அதிகமாக தந்து
பிபி நோயாளிக்கு கருவாடும் அப்பளமும் தந்து இப்படி வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறார் இயக்குனர்
i: டான் ஆக வரும் சாருஹாசன் நடிப்பு நன்றாக இருக்கிறது போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயக்குமார் மிரட்டலாக நடித்திருக்கிறார் தமிழ் சினிமா பலமுறை பார்த்து சலித்து போன கதை என்றாலும் திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்
ஆரம்பக் காட்சிகளில் மோகன் இப்ராஹிம் என்ற வேடத்தில் வந்து கள்ளத் துப்பாக்கி வாங்கும்போது எதற்காக அப்படி செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது அதன் பிறகு பிளாஸ்பேக்கில் அவர் ராம் என்ற கதாபாத்திரத்தில் வருவது சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை இனி வேறு எந்த மாணவிக்கும் நடக்க கூடாது என்று முழுமூச்சாக ஒரு யுத்த களத்தில் போராடி வெற்றி பெறுகிறார்
கல்லூரிக்குள் மாணவிகளை புகுந்து இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி கடத்துகிறார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை அதை கொஞ்சம் இன்னும் கொஞ்சம் சிந்தித்து இருக்கலாம்
மற்றபடி படத்தில் எந்த மைனஸ் காட்சியும் இல்லை நிறைவான படமாகவே இருக்கிறது இந்த ஹரா சிவபெருமானின் அழித்தலை குறிக்கும் ஆக்கத்தை குறிக்கும் எனவே இந்த படம் வெற்றி ஆக்கத்துக்கு உதவுகிறது மீண்டும் மோகன் மைக் மோகன் அல்ல துப்பாக்கி மோகன் என்று நிரூபித்திருக்கிறார் அவருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் இப்படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
குறிப்பாக இப்படத்தில் பத்திரிகையாளர் மகனும் இளம் நடிகருமான சந்தோஷ் பிரதாப் தர்ஷன் என்ற வேடத்தில் படம் முழுக்க மோகன் அவர்களுடன் பயணித்திருக்கிறார் காதலிக்காக தண்ணையே கொடுக்கும் வித்தியாசமான கதா பாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார்
அவருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது இந்த ஹாரா படத்தின் வெற்றி அவருக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறது
