‘ககனாச்சாரி’ – விமர்சனம் ரேட்டிங் 3-5/ 5

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில் அஜு வர்கிஸ், அனார்கலி மரிகர், கோகுல் சுரேஷ்,கணேஷ் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ககனாச்சாரி.

2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்க, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், மக்களை கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை கண்காணிக்க காவல்துறை என்று கதை போகிறது…
எல்லாம் வித்யாசம் புதுமை*”””””
ஏலியனை வேட்டையாடி வீட்டிற்கு கொண்டு வந்த முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார், போலீஸின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாது காப்பாக வாழ்ந்து வருகிறார்… அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பு சரியாக செய்து சபாஷ் வாங்குகிறார்கள்
250 வயதாகும் அந்த ஏலியன் மீது, 25 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் வர, அந்த காதல் காமெடியாக பயணித்தாலும், ஏலியன் பெண்ணுடனான காதலினால் என்னென்ன இடையூறு நேர்கிறது ?? பூமியில் ஏலியன் தாக்குதலுக்கு ஆளாக, ஏலியனை காப்பாற்றி வின்னுலகுக்கு, அனுப்பும் ஆவணப்படத்தை திரை பாணியில் விளக்கி சொல்வது தான் ‘ககனாச்சாரி’.

சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை வித்தியாசமாக கதையோடு ஒன்றி போனாலும், இக்கதையை
இயக்குநர் அருண் சந்து வசனங்கள் மூலம் நகர்த்தி செல்வதால், மலையாள ரசிகர்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டாட முடியும்
அனார்கலி மரிக்கார், ஏலியன்ஸ் ஆக நடித்திருக்கிறார்அருமை. மற்றும் … கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் மற்றும் கேபி கணேஷ் குமார்.அனைவரும்கலகலப்புக்கு கியாரண்டி.. இப்படத்திற்கு
தொழில்நுட்ப வல்லுனர்களாக…
இயக்கம் : அருண் சந்து நன்றாக இயக்கி இருக்கிறார் வெல் டன்
தயாரிப்பு : அஜித் விநாயகா பிலிம்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர் : கிரிஷாந்த்
கதை : அருண் சந்து – சிவா சாய்
ஒளிப்பதிவு : சுர்ஜித் எஸ் பை
இசை : சங்கர் சர்மா
எடிட்டிங் : சீஜய் அச்சு
VFX : மெராகி
அரவிந்த் மன்மதன் இணைந்து தொகுத்துள்ளார்
ஒலி வடிவமைப்பு: சங்கரன் ஏஎஸ், கேசி சித்தார்த்தன்
ஒலி கலவை: விஷ்ணு சுஜாதன்
வசனங்கள் : விவேக் ரஞ்சித் (பிரேக் பார்டர்ஸ்)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சஜீவ் சந்திரூர்
பாடல் வரிகள்: மனு மஞ்சித், ராகுல் மேனன் (ஆங்கில ராப்)
கலை இயக்குனர்: எம் பாவா
ஆடைகள்: Bucy Baby John
ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர்
மக்கள் தொடர்பு : AIM

நாயகன்கணேஷ் குமார் நகைச்சுவை செயல்களுடன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்லலாம்

ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிக்கார் படத்தின் முக்கிய அம்சமான வேற்றுக்கிரக கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்தி ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்கீஸ் இருவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கதையின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு வகிக்கசூப்பர்

சுர்ஜித் எஸ் பாய், தனது ஒளிப்பதிவு மூலம், எதிர்காலத்தின் கொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த வேலையை செய்துள்ளார், ஷங்கர் சர்மாவின் இசையும், சி.ஜே.அச்சு வின் எடிட்டிங்கும் ஒரு நல்ல தாக்கத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு, VFX மிகவும் நம்ப கூடியதாகவும், மிகச் சிறப்பாகவும் இருந்தது.

மொத்தத்தில் இந்த படத்தில் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்லும் படம் இது இதன் 2 வது பாகம் எடுக்க ஆரம்பித்து விட்டனர் அப்போ இந்த படம் வெற்றி படம் தானே