இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு ‘மாம்போ’ (mambo) என தலைப்பிடப்பட்டுள்ளது.

‘மைனா’, ‘கும்கி’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ‘மாம்போ’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிங்கத்துக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பையும், பிணைப்பையும் பேசும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் சிறுவன் ஒருவர் சிங்க குட்டியை தூக்கி முத்தமிடும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபு சாலமன் கடைசியாக கோவை சரளாவை வைத்து ‘செம்பி’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‹இயக்குனர் பிரபு சாலமன், கடந்த 1999 ம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கும்கி, கயல், செம்பி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டார். அமலா பால் , கயல் ஆனந்தி , கீர்த்தி சுரேஷ் என பல்வேறு பிரபல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன்.


தற்போது டி இமானுடன் இணைந்து மாம்போ என்ற படத்தை இயக்கவுள்ளார். நிஜமான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறத. ‘மாம்போ’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (first look) மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் காஜா மைதீன், “எங்களது அழைப்பை ஏற்று வந்திருக்கும் நண்பர்கள், திரையுலகினர், மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார். தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, “தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் எனும் திரைப்படத்தை தந்தது மட்டுமல்லாமல், அவர் படம் தயாரித்துக் கொண்டிருந்த காலம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக இருந்தது.100% சினிமாவை நேசிக்கக் கூடிய, வேட்கை கொண்ட, போராட்ட குணமுடைய தயாரிப்பாளர்களால் மட்டுமே இங்கு நீடித்திருக்க முடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் நண்பர்கள் சந்தித்துக்கொண்ட தருணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அவரது தயாரிப்பு நிறுவனம் ஒரு குடும்பம் போன்றது.

அதில் நாங்கள் எல்லாம் ஒரு குடும்ப உறுப்பினர்களாக என்றுமே இருப்போம். நல்ல சிறந்த கதையம்சம் கொண்ட வித்தியாசமான திரைப்படத்தை தரக்கூடிய தலைசிறந்த இயக்குநர் பிரபுசாலமனுடன் இணைந்து தனது தயாரிப்பை மீண்டும் துவங்கி உள்ளார். தயாரிப்பாளர்களின் இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் போன்றவர்களால் தான் தயாரிப்பாளர்கள் இன்னும் தங்கள் பயணத்தை தெடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.’லயன் கிங்’ உலக அளவில் வெற்றி அடைந்தது போல இந்த ‘மாம்போ’ திரைப்படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார். தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது, “இயக்குநர் பிரபு சாலமன் மிருகங்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதே போல இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.படத்தின் தயாரிப்பாளருக்கும் எனக்கும் 24 ஆண்டு கால பழக்கம் உள்ளது. பிரபு சாலமன் படைப்புகள் அனைத்தும் இயற்கையோடு இணைந்தவையாக இருக்கும். டி.இமானும் புதுமையான விதத்தில் முதல் தோற்றக் காணொளியுடன் தனது இசைக்குழுவையும் வாசிக்க வைத்தது, சிறப்பாக இருந்தது. இந்த ‘மாம்போ’ திரைப்படம் வணிக ரீதியில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார். சிங்கத்துடன் நடிக்கும் விஜய் குமார் பேரன் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன் நடிகர் விஜய் குமார் ஆகியோர் பேசினார்கள் படகுழுவை வாழ்த்தினார்கள் ஆரம்பமே அசத்தலாக இருந்தது நிச்சயம் இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் விஜயகுமார் பேரனும் பிரபு சாலமனின் மகளும் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள் காடு சார்ந்த மலைகள் இயக்குனர் பிரபு சாலமனுக்கு வெற்றி படங்களாக அமைந்துள்ளது கும்கி மைனா போன்ற படங்கள் சாட்சி அந்த வகையில் இந்த படம் சர்வதேச அளவில் பாராட்டக்கூடிய படமாக அமையும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்