இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் யோகிபாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, மைனா நந்தினி, நிழல்கள் ரவி நடிப்பில் 6 எபிசோட்-களாக வெளிவந்துள்ள Hotstar-ல் சீரிஸ் தான் இந்த சட்னி சாம்பார்.
விமர்சனம் பார்க்கலாம் வாங்க
அமுதா மெஸ் நடத்தி வரும் நிழல்கள் ரவி ஃபேமிலி யும் சென்னை யில் வாழும் யோகி பாபு வும் ….. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான்….
ஊட்டியில் அமுதா கஃபே என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார் நிழல்கள் ரவி. அன்பான மனைவி, அழகான குடும்பம் என அவர் இருக்க, அப்போது எதிர்ப்பாராத விதமாக நிழல்கள் ரவிக்கு கேன்சர் 3வது கட்டத்தை அடைய, தன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அப்போது தன் மகன் கயல் சந்திரனை அழைத்து அம்மாவை சந்திப்பதற்கு முன்பு சென்னையில் ஒரு பெண்ணிடம் வாழ்ந்து வந்ததாகவும், அப்போது ஒரு சில காரணத்தால் அந்த பெண்ணை விட்டு வரவேண்டிய கட்டாயம், அந்த பெண் இப்போது உயிரோடு இல்லை, ஆனால் என் பையன் அங்கு இருக்கிறான், என கூறி அவனை அழைத்து வர வேண்டும், நான் இறந்தால் என் சடங்குகள் அனைத்தும் அவனும் செய்ய வேண்டும், இந்த குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்க வேண்டும் என சத்தியம் வாங்குகிறார்.
அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற கயல் சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ ஆகியோர் அந்த பையனை தேடி சென்னைக்கு வருகிறார்கள்
அந்த பையன் யோகி பாபு சென்னையில் ஒரு தள்ளுவண்டி சாப்பாடு கடை நடந்த, அவர் எவ்ளோ சொல்லியும் கேட்காமல் இருக்கிறார் மதுவில் மயக்க மருந்து கொடுத்து அப்பாவிற்காக யோகிபாபுவை ஊட்டிக்கு தூக்கி வருகின்றனர்.
அவர் வந்து நிழல்கள் ரவியை பார்த்தவுடன் அவரும் இறக்கிறார்,
அவருக்கு இறுதி சடங்கு செய்யும்போது நந்தினி கண்டுபிடித்து விடுகிறார் அதை வீட்டில் சொல்ல பெரிய கலாபாரம் ஏற்படுகிறது யோகி பாபு மீண்டும் அந்த குடும்பத்துடன் சேர்ந்தாரா இல்லையா என்பது கதை
இயக்குனர்
ராதாமோகன் அமுதா கஃபே-யிலும், மனிதர்களின் வழக்கமான எமோஷ்னல் விஷயங்களை தன் பாணியில் அழகாகவும் காமெடியான வசனங்களுடன் செம ஸ்கோர் செய்துள்ளார் ராதாமோகன்.
நான்காம் எபிசோட் டில் சார்லி இறக்கும் தருவாயில் உள்ள அந்த காட்சி மனதை தொடுகிறது.
யோகி பாபு மிகவும் எதார்த்தமாக பேசி நடிப்பில் சபாஷ் வாங்குகிறார் அவர் தன் அப்பாவை வெறுப்பதற்கு சரியான காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது நந்தினி இடம் பேசும் போது ரசிக்க வைக்கிறது.
தன் அப்பா நிழல்கள் ரவி தன்னையும் தன் அம்மாவையும் விட்டுவிட்டு ஓடியதால் கடைசி வரை அப்பாவை திட்டிக்கொண்டே இருக்க, தன் அப்பாவால் பல குடும்பங்கள் இங்கு நன்றாக வாழ்கிறது என்று தெரிந்ததும் மனம் மாறுவது என கெரியர் பெஸ்ட் நடிப்பை கொடுத்துள்ளார்.
வெல்டன் யோகி பாபு

கயல் சந்திரன்
நன்றாக நடித்திருக்கிறார் அமைதியான அப்பாவுக்காக யோகிபாபு வின்இம்சைகளை தாங்கிக் கொண்டு கச்சிதமாக காய் நகர்த்துகிறார்
, வானி போஜன்,
கணவனைப் பிரிந்து குடிகார அப்பாவால் தினம் தினம் நொந்து கொண்டு வாழும் கதாபாத்திரம் சின்ன நயன்தாராவை ரசிக்க வைக்கிறது.
மைனா நந்தினி, நிதின் சத்யா, சார்லி, இளங்கோ என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அதிலும் எப்போதும் குடித்து தன் வாழ்க்கை மட்டுமின்றி வானி போஜன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கும் அப்பாவாக சார்லி நம் வெறுப்பை எல்லாம் சம்பாதித்து நடிப்பிலும் அசத்தியுள்ளார்.
கயல் சந்திரனை தவிற அவருடைய அக்கா, அம்மா யாரும் யோகி பாபுவை ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் யோகி பாபு தன் குணத்தால் எப்படி அந்த குடும்பத்தில் நுழைந்தார், என்பதன் காட்சிகள் அத்தனை அழகு.
ஆனால், இத்தனை அழகான காட்சிகள் நகர்ந்தாலும் கடைசியில் நிழல்கள் ரவி இந்த காரணத்திற்காக தான் யோகிபாபு அம்மாவை விட்டு வந்தார் என்று தெரியும் போது கொஞ்சம் அதிர்ச்சி தான்..
, யோகிபாபு அம்மாவாக தீபா நன்றாகவே நடித்திருக்கிறார்
வானி போஜனுக்கும் யோகிபாபுவிற்கும் இருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி அட இது என்னப்பா இவுங்க லவ் பண்றாங்களா இல்லை நண்பர்களா என ஒரு கேள்வி வந்துக்கொண்டே இருக்க, கடைசியாக யோகிபாபு வானி போஜனிடம் ப்ரோபோஸ் செய்யும் இடம் ரசிக்க வைக்கின்றது.
இருவரும் ஜோடியா அட டா என்ற ஆச்சரியக்குறி!!!
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு,
அசத்தலாக இருக்கிறது ஊட்டியில் உள்ள அழகான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த பட்டுள்ளது
இசை நன்றாக இருக்கிறது
மொத்ததில் சட்னி, சாம்பார் தனித்தனியாக இருப்பதை விட சேர்ந்து இருந்தால் இன்னும் சுவை அதிகம் என்பதை ராதாமோகன் மீண்டும் தன் ஸ்டைலில் அருமையான விருந்து வைத்துள்ளார்.
பேமிலி என்டர்டெயின்மென்ட் மற்றும் அப்பா மகன் பாசம் அம்மா மகன் பாசம் அண்ணன் தம்பிகள் என்று குடும்பத்தோடு ரசிக்க வைக்கும் இந்த வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது நிச்சயம் காண வேண்டிய அருமையான படைப்பு மிஸ் பண்ணிடாதீங்க
