ஜமா” திரை விமர்சனம்:

தெரு கூத்து கலைஞனின் வாழ்க்கையும் வலியையும் சொல்லும் படம் - ரேட்டிங் 4 /5

எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கிறது ஏழைக்கு பணக்காரனாக வேண்டும் என்று. ஆனால் கூத்து கட்டும் கலைஞனுக்கு ராஜபாட்டையாக நடிக்க வேண்டும்
என்று ஆசை

அப்படி ராஜபாட்டையாக நடிக்க முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஒரு கூத்து கலைஞனின் கதை தான் “ஜமா

ஜமா என்பது ஒரு தெருக்கூத்து குரூப் இந்த குரூப்பில் தன் அப்பா அர்ஜுனன் வேடம் தரித்து முன்னணியில் இருந்தவர் அவரை சேத்தன் சூது செய்து அந்த ஜமா வில் இருந்து வெளியே போகும் படி செய்கிறார் .

அவரது மகனான கல்யாணம் அந்த குரூப்பில் இணைந்து தன் அப்பா இழந்த மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் தான் அந்த குரூப்பில் ராஜபாட்டையாக நடிக்க வேண்டும்
அந்த ஜமா மீண்டும் தன் கைக்குள் வர வேண்டும்
என்று பல அவமானங்களை தாங்கி சேத்தனின் அடிமையாகி கிடக்கிறார்

அதற்காக இவர் இழக்கும் இழப்புகள் இவரது அம்மாவை இழந்து ….
தனது காதலியை இழந்து …..
ஊரில் நல்ல மதிப்புகளை இழந்து….
தன் சொத்துக்களை இழந்து…. அவமானப்பட்டு… அசிங்கப்பட்டு…
அந்த குரூப்பில் பயணிக்கிறார் .

சேத்தன் கடைசி வரை தன் அடிமையாகவே வைத்திருக்கிறார்
எப்போதாவது நாயகன் சிலிர்த்து எழுந்து சேத்தனின் சட்டையை பிடித்து வெளுத்து வாங்க மாட்டாரா?
என்ற ஏக்கம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் படத்திற்கு இந்த பொறுமை வெற்றியாக அமைகிறது.

இந்த சவாலில் நாயகன் ஜெயித்தாரா? என்பதேகதை

இது வரை தமிழ் சினிமாவில் சொல்ல ப்படாத கதை

ஒரு கூத்து கலைஞனின் வாழ்க்கையும் அவன் வழியையும் அவன் ஏகத்தையும் இதைவிட வேறு யாரும் சொல்லி விட முடியாது

கிராமத்தில் பெண் வேடமிட்டு தெருக்கூத்து நடனமாடும் அந்த கலைஞர்கள் பெரும்பாலும் பெண்கள் சார்ந்து இருப்பார்கள் என்பதை இந்த படத்தின் நாயகன் நளினமாக பெண்ணை போலவே பேசி பென்னைப் போலவே நடந்து அவ்வளவு அற்புதமாக ரசிக்க வைக்கிறார்

இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக திட்டமிடல் செய்து படமாக்கி இருக்கிறார்கள்

தெருக்கூத்து வில் பபூன் தான் கெட்ட வார்த்தைகள் பேசி ஜனங்களை கனெக்ட் செய்வார்கள். இந்த படத்தில் பபூன் இல்லாமல் இருப்பது மைனஸ் பாயிண்ட் தான் அவர்களை பயன் படுத்தி இருக்கலாம்
கிராமங்களில் பபூன் வரும் காட்சிகளை அப்படி ஆரவாரமிட்டு ரசிப்பார்கள் திரைக்கதையோடு சேர்ந்து பபூன் இருந்து கொஞ்சம் வார்த்தைகளை கவனமாக கையாண்டு இருந்தால் இன்னும் கொஞ்சம் களைகட்டி இருக்கும்

கிராமத்தில் நட்பு
வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள் : சின்ன பையனுடன் நாயகன் நட்பு பாராட்டி ஊர் சுற்றி வருவது. மற்றும் பூனை என்ற கதாபாத்திரத்திடம்
நட்பு என மிக நெருக்கமாக கதாபாத்திரங்களில் மனதுக்குள் இடம் பிடிக்கிறார்கள்

கிராமத்தில் கூழ் ஊற்றும் சாமி விஷயம் உள்ளது அதையும் எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் சேத்தன்
அவரது உடல் மொழி அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
அவர் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்
கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனுக்கு, அர்ஜுன் வேஷம் தர முடியாது என்று கண்டிப்பு காட்டுவது, அவன் குந்தி வேடம் கட்டட்டும் என்று சொல்லி உதாசீனப்படுத்துவது ஆனால் நாயகன் அமைதியாக சோகமாக இருந்து குந்தியாக வந்து கர்ணனாக
சேத்தன் இறந்து போக அவர் ஒப்பாரி வைத்து ,
நாயகன் அழும்போது அந்த கூத்து பார்த்து கொண்டிருந்த மக்கள் கண்களிலே நீர்
படம் பார்த்த நமக்கும் ஈரம் கசிகிறது
அந்த காட்சியில் சேத்தன்
கண் விழிகளை திறந்து நாயகனின் அந்த நடிப்பை கண்டு இவனையா நாம் இவ்வளவு காலம் புழுவாக பார்த்தோம் என்று மனம் வருந்தி நாயகனின் காலில் விழும் பொழுது
அடடே என்று ஆச்சரியக்குறி!!!

பலத்த கைதட்டல் படத்தை தூக்கி நிறுத்தும் காட்சிகளில் இது முக்கியமான காட்சி
சேத்தன் அவர்களுக்கு இப்படத்தில் விருது நிச்சயம்

இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா தான் அற்புதமாக இசை அமைத்துள்ளார் அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் வித்தியாசமான இசை கருவிகள் மூலம் நல்ல இசை கொடுத்து இருக்கிறார்
பின்னணிஇசையில் ராஜா சார் என்றுமே ராஜா தான் என்பதை நிரூபித்திருக்கிறார்

நாயகன் பாரி தெருக்கூத்து வில் பெண் வேடம் போட்டு ஆடும் போது அந்த நளினம் சூப்பர்

அதேபோல கிளைமாக்ஸ் காட்சியில் தன் அம்மாவிடம் சத்தியம் செய்து அர்ஜுன் வேடம் ஆடும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது அதேபோல நாயகியிடம் இருந்து நாயகன் விலகி விலகி போக சரியான காரணம் சொல்ல பட்டுள்ளது
சேத்தன் நாயகனை அவமானப்படுத்தும் போது அமைதியாக இருப்பது
அம்மு அபிராமி படிக்கட்டும் நான் பண்ணை வேலைக்கு போகிறேன்
என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, பெண் கேட்டு சேத்தன் வீட்டுக்கு சென்று அவமானப்பட்டு திரும்புவது ,
அம்மா இறந்த பிறகு கதறி அழுவது
இப்படி பல காட்சிகளில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் இவருக்கு நிச்சயம் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தே தீரும் என்பது உறுதி

வெறும் பில்டப்புகளால் வலம் வரும் தமிழ் சினிமா கதாநாயகர்களால் சாதிக்க முடியாததை பாரி இந்த படத்தின் மூலம் பன்முக கலைஞராக பளிச் என்று வாழ்ந்து காட்டி உள்ளார் வாழ்த்துக்கள் பாரி..

இந்த படத்திற்காக திருவண்ணாமலை தாங்கல் சேகர் என்பவர் மற்றும்
சாரதி என்பவரும் பயிற்சி அளித்து இருக்கிறார்கள் அருமை வாழ்த்துக்கள்

தயாளன் இப்படத்தில் இளவரசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது மூன்று விதமான கெட்டப் களில் வருகிறார் எல்லாம் ரசிக்க வைக்கிறது இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
கூத்துக்கட்டி ஆடும் போதும் பின் அதிலிருந்து சேத்தனால் நாள் விலக்கப்பட்டு, குடியால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தையே நிலை தடுமாற செய்யும்
அந்த கதாபாத்திரம் மனதில் நிற்கிறது

தன்மகன் சேத்தன் குரூப்பில் இணைந்து விட்டார் என்று
நாயகன் அம்மா திட்ட

எனக்கு எதிரி எல்லாம் என் மகனுக்கும் எதிரி அல்ல அவன் விருப்பப்பட்டதை செய்யட்டும் என்று சொல்லும் அந்த காட்சி அற்புதமான கைதட்டல் வாங்கும் காட்சி.

எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறார் அம்மு அபிராமி. இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இவர் முழுத்திறனையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்
கிராமத்து துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்திருக்கிறார் எவன்டா ஆம்பள என்று ஆண்களில் யார் சிறந்தவர் என்று அவர் பட்டியல் போடும் போது கைதட்டல் .

தனக்காக தன் வாழ்வே தியாகம் செய்த நாயகனை
திருமணம் செய்து கொள்ள துடிப்பதும் தன் அப்பாவையே மிரட்டுவதும் நாயகனை கிண்டல் செய்யும் இளைஞனை மிரட்டுவது என அம்மு அபிராமி ஸ்கோர் செய்துள்ளார்

இதுவரை கண்டிராத புதிய உலகத்தை இயக்குனர் அவருக்கு உரிய அர்ப்பணிப்போடு
படைத்துள்ள படம் ஜமா

கலைஞர்கள் பொருளையும் புகழையும் பொருட்படுத்தாது அவர்களது மகிழ்ச்சி, உணர்ச்சிகள், வலிகள் என அர்ப்பணிப்போடு இருக்கும் வாழ்க்கையைக் காட்டி உள்ளார்.

பாரி நடித்திருக்கும் கதாபாத்திரம் இது போன்ற பல தெருக்கூத்து கலைஞர்களின் எதிரொலி

. இந்தப் படத்தின் உணர்ச்சிகளையும் மதிப்பையும் உயர்த்தியதற்காக இசைஞானி இளையராஜாவுககு தனி பாராட்டுக்கள்

’ஜமா’வில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் வாழ்ந்து உள்ளனர்.

இப்படத்தை பரி இளவழகன் இயக்கி இருக்கிறார் மற்றும் முன்பு ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் தயாரிக்க
பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் ஆகஸ்ட் 2, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

சமீப வருடங்களாக வெளியாகியுள்ள தெருக்கூத்து தொடர்பான குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள், அந்த கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய தவறான கருத்தை வரைந்துள்ளன. இது அழியும் கலை வடிவம் அல்ல, திரையில் பார்ப்பது போல் கலைஞர்கள் வறுமையிலும் பசியிலும் வாடுவதில்லை. உண்மையில், அவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்துகிறார்கள். என இப்படத்தின் மூலம் அந்தக் கருத்தை உடைத்து இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் மிக அருமையாக படமாக்கி உள்ளார் ஒவ்வொரு காட்சியிலும் கேமரா பேசுகிறது

படத்தொகுப்பாளர் கச்சிதமாக படத்தை இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்களில் சரியாக செதுக்கியிருக்கிறார்

படத்தின் ஒப்பணையாளர்
பங்கு பாராட்டத்தக்கது எவ்வளவு சிரமப்பட்டு உழைத்திருக்கிறார் அவருக்குநிச்சயம் விருது காத்திருக்கிறது

மற்றும் படத்தில் நாயகன் அம்மாவாக நடித்திருக்கும் அவருக்கும் மற்ற நிஜமான தெருக்கூத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா வில் இந்த ஜமா படம் போல மனதுக்கு நெருக்கமான படங்கள் வரவேண்டும். இப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்