நண்பன் ஒருவன் வந்த பிறகு (2024) திரை விமர்சனம்

இது நட்பின் கதை" நண்பர்கள் கதை ரேட்டிங் 4/5

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து சில படங்கள் வெற்றி பெற்று நம்மை ஆச்சரியப்படுத்தும், சென்னை 28, அட்டகத்தி, போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வரிசையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு இந்த படமும் அந்த வரிசையில் சேருகிறது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தைப் பார்த்தநமக்கு மிக ஆச்சரியமான அருமையான அனுபவத்தை கொடுக்கும்

இந்த படத்தில் நடித்த இளைஞர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள் நல்ல முயற்சி, நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல பாடல்கள், நல்ல இசை, நல்ல இயக்கம் என எல்லாமே அமைந்திருக்கிறது இந்த படத்தில்….

: நடிகர்கள்

அனந்த் ராம்,
பவானி ஸ்ரீ
RJ விஜய்
இளங்கோ குமரவேல்
குளப்புள்ளி லீலா
விசாலினி
இர்ஃபான்
கேபிஒய் பாலா
மோனிகா சின்னகோட்லா
ஆர்.ஜே.ஆனந்தி
வெங்கட் பிரபு
ஐஸ்வர்யா எம்
வினோத் ஜி.டி
குகன் பிரகாஷ்
மதன் கவுரி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
அனைவர் நடிப்பு சிறப்பு

: படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

படத்தின் நாயகன் ஆனந்த் இவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகன்
ஏ. ஆர் .ரகுமானின் பாடல்களுக்கு ரசிகன் வளரும் போதே இசையோடு கலந்து வருகிறார்

இவரது குடும்பம் ஆனந்தம் காலனிக்கு குடியேறி வந்த பிறகு அங்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள் எதிர் திசையில் இவருக்கு போட்டியான நண்பர்களும் இருக்கிறார்கள்
சின்ன வயதில் அவர்கள் விளையாடும் விளையாட்டு, சின்ன வயதில் நாம் கடந்து வந்த பாதையை சொல்வது போல இருக்கிறது.
சின்ன வயதில் ஜாலியாக சுற்றித்திரிந்த நண்பர்கள் பள்ளியில், கூட அந்த நட்பு தொடர்கிறது அதன் பிறகு கல்லூரி செல்லும் பொழுது ஆளுக்கொரு திசையில் பிரிந்து போகிறார்கள். நாயகனும்
நாலு வருஷ இன்ஜினியரிங் படிப்புக்காக கல்லூரியில் சேர்கிறார் முதலில் வேண்டாம் இந்த கல்லூரி என நினைக்கிறார் ஆறுதலாக மாயா டீச்சர், மற்றும் நண்பர்கள் போனஸாக காதலி,என அமைய இதனால் அந்த கல்லூரி வாழ்க்கையும் சுகமாக போகிறது ஆனந்துக்கு
இப்படி ஜாலியாக போய் கொண்டு இருந்த கதையில் ஆனந்தின் குடும்பத்தை இணைத்து கல்லூரி முடிந்த பின் ஏதாவது ஒரு வேலைக்கு போகாமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று அம்மாவும் அப்பாவும் திட்ட படம் கதைக்குள் நுழைகிறது
ஆனால் ஆனந்துக்கு தன் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகவே இருந்து ஒரே தொழில் செய்து எல்லோரும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ஒரு ஈவன் மேனேஜ்மென்ட் நடத்தி ஒரு ஆப்பை உருவாக்கி அதன் மூலம் வெற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு ஒரு வருடம் அதற்காக காய் நகர்த்துகிறார்கள் ஆனால் அவர்களால் அந்த ஆப்பை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை
மனம் தளர்ந்த நண்பர்கள் ஆளுக்கு ஒரு திசையில் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்

ஆனந்த் தனித்துவிடப்படுகிறார் சரியான வேலை கிடைக்கவில்லை அவனது கனவில் தோன்றிய அனைத்து விஷயங்கள் எடுபடாமல் போகிறது வீட்டிலும் கடன் பிரச்சினை, அப்பா அம்மா கண்டிப்பு, காதலியின் டார்ச்சர், எல்லாவுமாக சோர்ந்து போகிறார்

அவர் ஒரு முடிவு எடுக்கிறார் அந்த முடிவு என்ன? அந்த முடிவுக்கு பிறகு அவர் வெற்றி பெற்றாரா? நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தாரா? தன்னை பணமில்லை என்று ஏளனமாக பேசிய நண்பர்கள் முன் வாழ்ந்து காட்டினாரா? அப்பா அம்மாவுக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்தாரா? இது எல்லாம் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அவர் சொல்லும் பிளாஸ் பேக் காட்சியிலிருந்து ஆனந்த் சொல்வது போல திரை க்கதை அமைத்து இயக்குனர் இயக்கி இருக்கிறார்

காதல் கட்சிகள் படத்திற்கு மிகவும் இனிமையான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதே சமயம் குடும்ப பின்னணி குடும்பத்தில் சிரமம் கடன் பிரச்சனை, இது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பணம் இல்லாவிட்டால் நண்பர்கள் மத்தியில் எந்த மாதிரியான சூழ்நிலையை நாம் அனுபவிக்க வேண்டும் என்ற அந்த கருத்தையும் இந்த படம் சொல்கிறது
அப்பா அம்மா நமக்காக எதை செய்தாலும் அது நன்மையாக தான் இருக்கும் அதை உணர்ந்து இளமை காலத்தில் இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும்
படித்தால் மட்டுமே வெற்றி என்று குமரவேல் வரும் காட்சிகள் எல்லாம் தன் மகனுக்கு அறிவுரை சொல்லும் அந்த காட்சி இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு மிகவும் தேவையான காட்சியாக அமைந்துள்ளது படிப்பு ஒன்று தான் நம்மை நிலை நிறுத்தும் படிப்பு ஒன்று தான் நம்மை உயர்த்தும் என்று இளைஞர்களுக்கு அந்த காட்சியை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

ஏ . ஆர்.ரகுமான் இசையமைத்த முஸ்தபா பாடலை
அலை ஓசை ரெக்காட்ஸ் என்கிறவர்களிடம் இருநது ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியுள்ளனர்
ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தில் 2 பாடல்களை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளனர்.
பின்னணி இசை நன்றாக இருக்கிறது

அனந்த் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனந்த் மற்றும் ராஜேஷ்.வி திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்
: இது நண்பர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் தெளிவாகத் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்

வைட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரித்து உள்ளனர்
நட்பின் அருமை பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் பரிசு மற்றும் NOVP மகிழ்ச்சியான பொழுதுபோக்கு மூலம் வாழ்க்கை மற்றும் நட்பின் கொண்டாட்டம் என்றும் சொல்லலாம் தமிழ் செல்வன் ஒளிப்பதிவு அருமை அதுவும் சிங்கப்பூர் அழகான முறையில் காண்பித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் எடிட்டிங் ஃபெனி ஆலிவர் கச்சிதமான படத்தொகுப்பு

“குக்கு வித் கோமாளி புகழ் இர்ஃபான் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தில் அறிமுகமாகிறார்” . முதல் படத்திலேயே ஸ்கோர் செய்து உள்ளார் ஆர்.ஜே.விஜய் . ஆனந்தின் உற்ற நண்பன் ஆக வந்து மனதில் நிற்கிறார் : இளமைப் பருவ நட்பின் கதை இளமைப் பருவத்தில் மலரும்” . வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி நடித்துள்ளார்
” நட்பின் சுவாரசியமான கதை” ஃபீல்-குட் எண்டர்டெய்னர் படமாக வந்து இருக்கிறது
மொத்தத்தில் ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ, அது தானாகவே அமைந்து விடும் நண்பர்கள் நடிப்பு, பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கதை திரைக்கதை, இயக்கம் என எல்லா வகையிலும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது ஒரு நல்ல படம் பார்த்து திருப்தி நிச்சயமாக ரசிகர்களுக்கு இருக்கும்”. ஆனந்த் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர் கலங்கி நிற்கும் காட்சிகளாகட்டும
காதலியுடன் ஜொள் விடும் காட்சிகள்
நண்பர்களுடன் ஒன்றி போய் ஒட்டி கொள்ளும் காட்சிகள்
அம்மாவிடம் கோபம் கொள்ளும் காட்சிகள்
அப்பாவிடம் பணிந்து பேசும் காட்சிகள்
சிங்கப்பூர் சென்று அழகர் என்ற நண்பர் மூலம் புது வாழ்வு பெறும் போதும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்

மதுரை அழகர் ஆக வரும் சுதாகர் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் தல ரசிகராக வந்து செம்மை நடித்திருக்கிறார்

மாயா வாக வரும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா மேம் அருமையாக நடித்திருக்கிறார்

குமர வேல் நடுத்தர வர்க்கம் தன் மகனை எப்படி படிக்கச் சொல்லி முன்னுக்கு கொண்டு வர முடியுமா அதை சிறப்பாக தன் நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்

மற்றும் ஆனந்தின் பாட்டி,
அம்மா, இருவரும் மனதுக்கு நெருக்கமாக கதையில் அம்சமாக பொருந்தி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு எல்லோருக்குமே வெற்றி தான் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது வாழ்த்துக்கள்