வீராயி மக்கள் திரை விமர்சனம்.

ஃபேமிலி & சென்டிமென்ட் ரேட்டிங் 3/5

Movie Team:
Director – Nagaraj Karuppaiah
Music Director – Deepan Chakravarthy
Editor – Mugan Vel
DOP – M.Seenivasan
Producer – Suresh Nandha
Lyricist – Nagaraj Karuppaiah & KGF Madurakavi

Casting:
Vela Ramamoorthy
Marimuthu
Deepa Shankar
Suresh nandha
Nandhana
Rama
Senthil kumari
Jerald Milton
Pandi akka

🐣குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் திரைப்படம் ‘வீராய் மக்கள்’
இப்படம் புதுக்கோட்டை பின்னணியில் உருவாகியுள்ளது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

🐣இப்படத்தில் வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ராமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி, மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வீராய் மக்கள்படத்தை நாகராஜ் கருப்பையா. எழுதி இயக்கி உள்ளார். சுரேஷ் நந்தா தனது ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் பேனரின் கீழ் படத்தை தயாரித்து உள்ளார்

🐣இது குடும்ப உறவுகளை மையமாக வைத்து, பிணைப்புகள் மற்றும் உறவினர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு வேரூன்றிய படம். பொருள் மகிழ்ச்சியை விட மனிதநேயம் மற்றும் உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் படத்தின் செய்தி,

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்.

🐣பாண்டி அக்கா இவர்தான்( வீராயி) இவர் வளர்த்த மூன்று ஆண் குழந்தைகள் வேலா ராமமூர்த்தி மாரிமுத்து மற்றும் ஜெரால்ட், இவர்களுக்கு தங்கையாக தீபா சங்கர் , இவர்கள் நால்வரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்

ஊரிலே வானம் பொய்த்து விவசாயம் இல்லாமல் சிரமப்படும் போது பொருளாதார தட்டுப்பாட்டினால் இந்த குடும்பம் பிரிந்து போகிறது இந்த பிரிவுக்கு காரணம் மாரிமுத்துவின் மனைவி அங்கமா(செந்தில் மீனா)என்ற கதாபாத்திரம் இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் வந்திருக்கிறது சிவாஜி கணேசன் நடித்த பழனி என்ற படத்தில் இப்படி குடும்பத்தை பிரிக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கும்.

அதே போல ரங்காராவ் நடித்த அன்பு சகோதரர்கள் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரம் இப்படி பிரிக்கும் இப்படி குடும்பத்தை பிரிக்க நினைக்கும் கதாபாத்திரம் பெண்ணாகத்தான் இருக்கும் என்று காலம் காலமாக சொல்லப்பட்டிருக்கிறது அது இந்த படத்தில் அப்படியே வந்திருக்கிறது
அந்த அங்கம்மாவுக்கு அந்த வீட்டில் வேல ராம மூர்த்தியின் மனைவியாக இருக்கும் ரமா மீது பொறாமை.

தன் மாமியார் ரமாவை பெருமையாக பேசுவதை கேட்டு அந்த குடும்பத்தை நிர்மூலமாக்குகிறார் செந்தில் மீனா இவர் தான் அங்கம்மா அதன் பிறகு இன்னொரு தம்பி படிக்கப் போன இடத்தில் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகிவிடுகிறார்.

வானம் பொய்த்து தன் பூமியில் வாழ்வதற்கு வழி இல்லாமல் தம்பி செய்த செயல் வேல ராம மூர்த்திக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது இதனால் தம்பியை தள்ளி வைக்கிறார்.

விவசாயம் இல்லாததால் திருப்பூர் பக்கம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று தன் மனைவியை மகனோடு புறப்படுகிறார்.

வேலா ராமமூர்த்தி தன் அம்மாவை மாரிமுத்து விடம் அதே கிராமத்தில் விட்டு விட்டு ஆனால் மாரிமுத்துவும் அவர் மனைவி செந்தில் மீனாவும் கொடுமைப்படுத்தி(அம்மா )அவர் சாவதற்கு காரணமாகிறார்கள் பாகப்பிரிவினை கேட்கிறார்கள் இதனால் மனம் நொந்து வேல ராமமூர்த்தி அவர்களையும் தள்ளி வைக்கிறார்.

அதற்கு அடுத்து தீபா சங்கரின் கணவர் ஐந்து பவுன் நகை வரதட்சனை கொடுக்கவில்லை என்று வார்த்தைகளால் கடித்து குதறுகிறார் இதனால் மனம் நொந்த வேலராமமூர்த்தி தங்கையும் அவர் கணவரையும் தள்ளி வைக்கிறார்.

இப்படி உறவுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அந்த ஊருக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறார்

அவரது கடைச மகன் சுரேஷ் நந்தா தன் அம்மாவிடம் இப்படி உறவுகளை தள்ளிவிட்டு இவர் என்ன செய்யப் போகிறார் என்று கேட்கிறார் அப்போது ரமா இந்த பிளாஸ்பேக் காட்சிகளை சொல்லுகிறார். அதன் பிறகு இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது வீராயி மக்களின் படத்தின் கதை

🐤 வேலா ராமமூர்த்தி மருது என்ற கதாபாத்திரத்தில் மூத்த அண்ணனாக நடித்திருக்கிறார் அவ்வளவு வீராப்பு, வீம்பு, உறவுகள் இவரை தூக்கி கனம் பார்க்க எல்லாரையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அம்மாவுக்கு சாவுக்கு காரணமான மாரிமுத்துவை விலக்கி வைத்துவிட்டு, தன் மகன் கள் கதி என்று வாழ்கிறார். இவர் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைப்பு பட்டிருக்கிறது

🐤 அடுத்து மாரிமுத்து நடு தம்பியாக நடித்திருக்கிறார் தன் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன் அம்மாவுக்கு துரோகம் செய்யும் கதாபாத்திரம் அவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது

🐤 தீபா சங்கர் வேலராமமூர்த்தி தங்கையாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் எல்லாம் அழுது புலம்பி உருக்கி எடுத்து விடுகிறார் அவர் நடிப்பு மிகையாக இருக்கிறது என்றாலும் சிறப்பாக இருக்கிறது

🐣 மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்தில் மீனா அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அச்ச அசல் கிராமத்தில் நடக்கும் பெண்களின் கதாபாத்திரத்தில் ஜோராக நடித்திருக்கிறார்

🐣 அடுத்தது வீராயி யாக நான்கு குழந்தைகள் அம்மாவாக பாண்டிய அக்கா நடித்திருக்கிறார் அவ்வளவு கம்பீரமான நடிப்பு கண் கலங்கும் போதும் மாரிமுத்து தன்னை விட்டு பிரிந்து போகிறானே என்று போது கதறும் போதும் மருமகளிடம் கராராக பேசும் போதும், பாண்டியக்கா
நடிப்பு சூப்பராக இருக்கிறது
அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்

: 🐥இசை அமைத்துள்ளார் தீபன் சக்கரவர்த்தி பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் பிளாஷ்பேக் கட்சியான தென்கிழக்கு என்ற பாடலில் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறார் பின்னணி இசை யில் ஏ ஆர் ரகுமானை ஞாபகப்படுத்துகிறார்
சிறப்பாக இருக்கிறது

🐣ஒளிப்பதிவாளர் சீனிவாசன் கொடுத்த பட்ஜெட்டில் தரமாக எடுத்து கொடுத்திருக்கிறார் காடு மலை மேடுகளை கச்சிதமாக படமாக்கி இருக்கிறார்

🐣படத்தொகுப்பாளர் இரண்டு மணி நேரம் படத்தை சரியாக செதுக்கி எந்த இடத்திலும் படத்தை போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கிறார்

🐣நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா இவர் தான் பட தயாரிப்பாளரும்
படம் முழுக்க குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி பேசியிருக்கிறார் எதார்த்தமாக நடித்தி ருக்கிறார்
இவர் காஸ்டியூம் மற்றும் டயலாக் டெலிவரி நடிப்பு எல்லாமே எதார்த்தமாக இருக்கிறது பெரிய அளவில் வருவார்

🐣கிராமத்தில் இருக்கும் பாட்டிகள் இந்த படத்தில் குடும்ப ஒற்றுமையை வந்து சொல்லி படத்திற்கு
பாராட்ட படுகிறார்கள்

🐣நந்தனா
சுரேஷ் நந்தாவின் மாமன் மகளாக வந்து அழகாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது அழகான தேர்வு

🐣 ரமா வேல ராம மூர்த்தி மனைவியாக வந்து கிராமத்து குடும்பத்து மூத்த பெண்மணியாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துகிறார் சிறப்பாக இருக்கிறது

🐣: ஜெரால்டு வேலராமூர்த்தியின் மூன்றாவது தம்பியாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ஒன்று இரண்டு என்றாலும் அந்த காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

: 🐣இயக்குனர் நாகராஜ் கருப்பையா அவருக்கு இரண்டாவது படம் கிராமத்து உறவுகள் பிரிந்து போகாமல் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் கிராமத்தில் இப்படி எல்லாம் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வது அபூர்வம் அப்படி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை பதிய வைத்திருக்கிறார் இதை பார்த்து ஒன்று இரண்டு குடும்பங்கள் திருந்தி ஒற்றுமையாக இருந்தால் நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது கதாபாத்திரங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டுக்கள் வீராயி மக்கள் ஜெயிப்பார்கள்