பேச்சி படத்தின் வெற்றி விழா

வெரூஸ். கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான். பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும். படம் முடிந்த பிறகு வியாபார சம்மந்தமானவங்க ஈடுபடுபவார்கள். அந்த வகையில், வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழகத்தை கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தி உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் நல்லபடியாக நடந்திருக்கிறது. முஜிப் சார் சொன்னது போல் சிறிய படம், பெரிய படம் என்பது தாண்டி ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், ரசிகர்கள் மனதில் பெரிய படமாக பதிந்ததற்கு பத்திரிகை நண்பர்கள் தான் காரணம், அவர்களுக்கு நன்றி. அதேபோல் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் சார், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் அஸ்வின் அனைவருக்கும் நன்றி.

பாலசரவணன், காயத்ரி, தேவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சியின் இந்த வெற்றி இன்னும் தொடரும் என்று நம்புகிறேன். பேச்சி முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்களும் இந்த குழுவினருடன் இணைந்து பேச்சி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம், என்று தெரிவித்துக்கொள்கிறேன்படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும், நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன். படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்த படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிக சரியாக இருந்தது.

தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள், அவர்களுக்கு நன்றி. படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.