தங்கலான் “(2024) திரை விமர்சனம்

(தங்கத்தை தேடி ஒரு பயணம்) 🐣ரேட்டிங் 4/5

🐣: விவசாய நிலத்தில் உழுதுண்டு வாழும் அந்த சேரி மக்கள் விக்ரம் குடும்பம் அவர்கள் உழைப்பை உறிஞ்சி வாழும் மிராசுதார் பயிர்கள் அறுவடை செய்து குவித்து வைத்திருக்கும் அந்த பயிர்களில் தீ வைக்கிறது ஒரு கூட்டம் இதனால் விக்ரமும் அந்த குடும்பமும் மிராசுதாரருக்கு
அடிமையாக வேலை செய்ய தொடங்குகிறார்கள் இதற்கு முன்பே விக்ரமிடம் குழந்தைகள் அப்பா ஒரு கதை சொல்லுங்க என்று கேட்கும் பொழுது விக்ரம் தன் பாட்டன் தங்கம் எடுக்க போன கதையும் ஆரத்தி என்ற சூனியக்காரியின் கதையை சொல்லுகிறார் இடைவேளை வரை இது பரபரப்பாக போகிறது சூனியக்காரி ஆர்த்தி எப்படி விக்ரம் எதிர்கொள்கிறார் தங்கம் எடுப்பதற்கு மகாராஜாவும் அவரது ஆட்களும் எப்படி சதி செய்கிறார்கள் என்று கதை செல்கிறது அதன்பிறகு விவசாய குழு நிலத்தில் அடிமையாக இருக்கும் நிலையை மாற்றி தனது மக்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என நினைக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில் வெள்ளைக்காரன மூலம் தங்கம் தேடும் வேலை இவர்களுக்கு வருகிறது.

அதனை செய்வதன் மூலம் தங்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும், அதன்மூலம் மிராசிடம் இருக்கும் தங்களின் நிலங்களை மீண்டும் வாங்கிவிடலாம் என எண்ணி தனது மக்களை தங்கம் தொடும் இடத்திற்கு விக்ரம் அழைத்து செல்கிறார்.

அங்கு சென்ற பிறகு தான் அது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம் சூனியக்காரியின் மிரட்டல் ,பாம்புகளின் துரத்தல், வெள்ளைக்காரர்களின் சதி, துரோகம், இவை எல்லாம் மீறி விக்ரம் தங்கலானாக, எப்படி மாறுகிறார் என்பதுதான் கதை

🐣ஆரம்பக் காற்றில் இருந்து கடைசி வரை படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையவில்லை விக்ரம் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் கூட நடித்துவர்களும் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத
கதை, கோலார் தங்க வயல் ஆரம்பத்தில் எப்படி தங்கவேட்டையை ஆரம்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படத்தின் கதை

🐣: கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைத்து துறைகளிலும் படம் பலம் காட்டுகிறது. விக்ரமின் கதாபாத்திரம் பார்வையாளர்களை கட்டிப்போட்டுள்ளது. படத்தின் இசையும் பின்னணி இசையும் படத்தின் களத்தை மேலும் பிரம்மாண்டமாக்கியுள்ளது.
தங்கலான் திரை படம் தமிழர்கள் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் படமாக வந்துள்ளது வாழ்த்துக்கள்.

🐣நடிப்பு பேரரசு விக்ரமின் நடிப்பிற்கு ஆஸகர் விருது கொடுத்தால் கூட குறைவு தான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்க்கு உயிரை கொடுத்து இப்படத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் அவரது மெனக்கடல் அற்புதமாக தெரிகிறது கடினமான ஒப்பனை காட்டுக்குள் நடக்கும் பொழுதும், நீருக்குள் நீந்தும் பொழுதும், மனைவியிடம் கொஞ்சி பேசும் போதும் முதல் குழந்தையே நான் தானே என்று கொஞ்சிப் பேசும் போதும், ஆர்த்தியிடம் கற்ஜிக்கும் போதும் விக்ரம் சூப்பர் நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகரை இனி பார்க்கவே முடியாது அந்த அளவுக்கு கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து அற்புதமாக நடித்திருக்கிறார் ஆக்சன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்

முகபாவம் சரி டயலாக் டெலிவரியும் சரி எல்லாமே அருமையாக இருக்கிறது விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் என்றென்றும் மக்கள் மனதில் நிலையாய் நிறுத்தச் செய்யும் இந்த படத்தின் மூலம் உயர்ந்து நிற்கிறார் பிறவி நடிகர் என்றால் அது சியான் விக்ரம் அவர்கள் தான் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்

🐣அடுத்து மாளவிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது வேற லெவல் இரண்டாம் பாதியில் விக்ரமின் உடல் மொழி மற்றும் சண்டை காட்சிகள் அவருடைய திரை தோற்றம் அனைத்தும் மிரட்டலாக இருக்கிறது அதற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் மாளவிகா
கங்கம்மா என்ற கதை பாத்திரத்தில் அற்புதம் அற்புதம்

🐣அடுத்து பசுபதி சேரி மக்களுக்கு பூணூல் போட்டு சேர்த்துக் கொள்வதாகட்டும் வெள்ளைக்கார துறையுடன் பயணம் போகும் போது விக்ரமை பொறாமையோடு பார்ப்பதாகட்டும் பசுபதி நடிப்பு வேற லெவல்

🐣வெள்ளக்கார துறையாக வரும் டேனியல் மௌனமாக இருந்தாலும் நடிப்பில் விலாசி தள்ளி இருக்கிறார் அற்புதமான நடிப்பு.

🐣சூனியக்காரி ஆரத்தி ஆக வரும் மாளவிகா மோகன் மிரட்டி இருக்கிறார் அவருடைய கர்ஜனை தியேட்டரில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புள்ளரிப்பை ஏற்படுத்துகிறது வித்தியாசமான கதாபாத்திரம் அதை உணர்ந்து நடித்திருக்கிறார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்

🐣படத்தின் இன்னொரு நாயகன் என்றால் அது ஜீ வி பிரகாஷ்
இசையில் அவ்வளவு அற்புதமாக பின்னணி இசை யும் பாடலையும் கொடுத்திருக்கிறார் படம் கொஞ்சம் தொய்வாகபோகும் இடமெல்லாம் இசை தூக்கி நிறுத்தி இருக்கிறது நிச்சயம் இந்த வருடத்தின் தேசிய விருது ஜிவி பிரகாசுக்கு ,விக்ரம் இருவருக்கும் கண்டிப்பாக காத்திருக்கிறது

🐣 தங்கலான் திரைப்படம் ஒரு சிறப்பான திரைப்படம். விக்ரமின் நடிப்பு அபாரமானது. இயக்குனர் பா. ரஞ்சித் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

🐣இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்த இயக்குனர் ஏராளமான பொருட்செலவில் ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி சென்று காட்டுப் பகுதியில் கடினமான படப்பிடிப்பை நடத்தி தமிழ் சினிமாவை ஆங்கில பட சினிமா அளவுக்கு உயர்த்தி கொடுத்திருக்கிறார் பா ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

🐣படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு,
அருமையான ஒளி பதிவு தரமான ஒளிப்பதிவு தமிழ் சினிமாவில் உயர்த்தி பிடிக்கும் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்

🐣படத்தொகுப்பை இடைவேளைக்குப் பிறகு ஒரு பத்து நிமிடம் கத்தரி போட்டு இருக்கலாம் இருந்தாலும் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

🐣படத்தின் ஒப்பணையாளர் கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் கடினமான தங்கள் கைத்திறமையை காட்டி இருக்கிறார்கள் படம் முழுக்க பேச வைக்கிறது ஒப்பனை

🐣மற்றும் காஸ்ட்யூமர், கலர் கரெக்ஷன், டி ஐ, ஒர்க் எல்லாமே கச்சிதமாக பொருந்தி இருக்கிறது தங்கலான் தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பான்

🐣i: Written & Directed By : Pa. Ranjith
Produced By : K.E. Gnanavelraja
Co-Produced By : Neha Gnanavelraja
Studio Green CEO : G. Dhananjeyan
Executive Producer : A.G.Raja
Production House : Studio Green & Neelam Productions
Music : G V Prakash Kumar
Co-Writer : Tamil Praba
Dialogues : Azhagiya Periyavan
Director of Photography : A. Kishor Kumar
Editor : Selva R K
Art Director : S S Murthi
Action : Stunner Sam
Sound Designer : Anthony BJ Ruban
Sound Recordist : Ajayan Adat
Costume Designer : Aegan Ekambaram, Anitha Sundaresan
VFX : Hybrid
i360
Prosthetics Designer : Baldev (TOM)
Stills : R S Raja
Publicity Designer : Kabilan
Lyricist : KU.Umadevi, Arivu, Mounan Yathrigan
Production Controller : S.Sivakumar
Production Executive : S.Barath
Production Managers : G.Kamaraj, T.Hari hara Sudhan, Maria Josh, Nithish, Vignesh Raghava
Production Co-Ordinator : E.V. Dinesh Kumar
Executive Producers : Sanjay, Rupesh
Digital Promotions : Digitally
PRO : Yuvraaj, Guna
Creative Promotions : BeatRoute
என பங்கு பெற்ற அனைத்து கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள்

காலத்தால் மறக்க முடியாத கலை படைப்புகளில் தங்கலான் சேரும் இது தமிழ் சினிமாவில் தலை நிமிர வைக்கும் மாற்றத்தை உருவாக்கும் மகத்தான படைப்பு அனைவரும் கண்டு களிக்கலாம்