🐣டிமான்டி காலனி படம் முடிந்த இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. முதல் பாகத்தில் ஹீரோ சீனிவாசன் அதாவது அருள்நிதி இறந்துவிடுவது போன்று காட்டுவார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி எப்படி என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தை குறிக்கும் பல காட்சிகள் இரண்டாம் பாகத்தில்
இருப்பது படத்தின் வெற்றிக்கு பலம்
ஆரம்பத்தில் பிரியா பவானி சங்கர் காதலுடன் படம் துவங்குகிறது புற்றுநோய் பாதிக்கப்பட்ட காதலனை குணப்படுத்தி நன்றாக வாழ்ந்து விடலாம் என்று நினைக்கும் பொழுது அவர் தூக்கு போட்டு இறந்து போகிறார் அவர் இறந்தாலும் பரவாயில்லை அவருடைய ஜீனிலிருந்து தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் பெற்றோருடன் போராடுகிறார் ஆனால் இறந்து போன அவரின் கணவர் ஷாம் நற்கதி இல்லாமல் அவரது ஆத்மா அலைமோதிக்கொண்டிருப்பதாக சாமியார்கள் சொல்ல காதலன் ஆவியை சமாதானப்படுத்த பிரியா பவானிசாகர், அருண் பாண்டியனும், எடுக்கும் முயற்சியில் அருள்நிதி எப்படி உள்ளே வந்தார் என்பது மிக சுவாரசியமான பகுதி: . ஹீரோவை விட பேய் தான் சக்திவாய்ந்தது என முதல் பாதியில் காட்டியிருப்பார்கள். மேலும் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை டிமான்டி காலனியின் வெற்றிக்கு உதவியது. அந்த இரண்டு அம்சமும் இரண்டாம் பாகத்திலும் உள்ளது. ரகு, டெபி தஞ்சம் அடைந்த சீன உணவகத்திற்கு இறந்த ராஜா வரும் வரை ஏதாவது ஒரு விஷயம் நடந்து கொண்டே இருக்கிறது. மனதை உருக்கும் காதல் கதை, இரட்டை சகோதரர்கள், விசாரணை என படத்தில் பலவித சமாச்சாரம் உள்ளது. ஆனால் இறுதியில் பேயிடம் இருந்து தப்பிக்கும் திட்டம் மற்றும் ஒரு சுவாரஸ்யத்தை தருகிறது.
வலுவான திரைக்கதையாக முதல் பாகத்துடன் இணைத்துள்ளது பாராட்ட தக்கது. அருள்நிதியின் கதை தேர்வு சிறப்பாக உள்ளது.

முதல் பாகத்தில் இருந்து கதை தொடர்ந்தாலும், அருள்நிதி எப்படி உயிர்பிழைக்கிறார் என்பது போன்ற காட்சிகள் தரமாக உள்ளது. பிரியா பவானி ஷங்கர் ராக்கிங் ரோலில் நடித்துள்ளர். இதில் காட்டப்பட்ட சடங்குகள் போன்றவை எதிர்பார்ப்பை கூடுகிறது
🐣விண்ணிங் ஸ்டார் அருள் நிதி
. சீனிவாசன் (அருள்நிதி) மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (இன்னொரு அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.
அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி (பிரியா), அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார்.
இரண்டு கதாபாத்திரத்தில் ரகுநந்தன் கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் முதலில் சீனிவாசன் சாக வேண்டும் என்று நினைப்பது விவரம் தெரிந்த பிறகு அவரை காப்பாற்ற துடிப்பது என கதைக்கு தேவையான வகையில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் ப்ரியா பவானி சங்கர் உடன் மேலே ஒவ்வொரு டேபிள் ஆக வைத்து ஏறத் துடிக்கும் பொழுது பிரியா பவானிசங்கரின் காதலன் அவரை அழைக்க பிரியா பவானி சங்கரை காப்பாற்ற துடிக்கும் அருள்நிதி அந்த மனிதநேயமான நடிப்பு நன்றாக இருக்கிறது
நீயும் இப்பொழுது தாய்மையாக இரண்டு உயிராக இருக்கிறாய் என்று சொல்லும் வசனம் டச்சாக இருந்தது
மொத்தத்தில் அருள்நிதியின் கதை தேர்வு சிறப்பாக இருக்கிறது அவர் ஒவ்வொரு படத்திலும் கவனம் செலுத்தி முன்னேறி வருகிறார் 2024 நிச்சயமான ஒரு திருப்புமுனையாக இருக்கும் அவருக்கு நமது வாழ்த்துக்கள்
. 🐣பிரியா பவானி சங்கர் டெபி என்ற கதாபாத்திரத்தில் ஒரு மனிதநேயம் உள்ள மனைவியாக காதலியாக தாய்மையுள்ள கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் படம் முழுவதும் அவருக்கு பயந்த நடுங்கிக் கொண்டே இருக்கும் அந்த நடிப்பு கச்சிதமாக வந்திருக்கிறது படத்தின் மொத்த கதையும் தன் தோளில் சுமந்து இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரியா பவானிசங்கருக்கு மிரட்டலான படம் நடிப்பை வழங்கக்கூடிய நல்ல கதாபாத்திரம்
அவர் படம் முழுக்க தன்னுடைய காதலன், கணவன், எதனால் தூக்கு போட்டுக் கொண்டு இருந்தார் என்று அரிய முற்படுகிறார்
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.
அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் துப்பறியும் படம் பார்ப்பது போல் இருக்கிறது
🐣இயக்குநர் அஜய் ஞானமுத்து.
தன் திறமையான இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தொழில்நுட்பத்தில் அவர் காட்டிய புதுமையும் கதையை சீராக கொண்டு செல்வதில் தெளிவாக இருந்தது வெற்றி பெற்றிருக்கிறார்
இயக்குனர்
அந்த அளவிற்கு இயக்குநர் கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது
🐣இசை சாம் சி .எஸ் பின்னனி இசையில் மிரட்டி இருக்கிறார் பாடல்கள் ஓகே ரகம்.

. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம்.
லைட்டிங், எபெக்ட், பயமுறுத்துவதற்காக வைக்கப்பட்ட ஷார்ட்ஸ், என ஒளிப்பதிவு பாராட்ட தக்கது
விறுவிறுப்பான திரைக்கதை மிரட்டலான பின்னணி இசை நடிகர்களின் நடிப்பு
என படம் விறுவிறுப்பாக பயணத்திருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை
திகிலான ஹாரர் படம் பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் இந்த டிமாண்டி காலனி 2.
இதில் பங்குபெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
: Writer & Director – Ajay R Gnanamuthu
Producers – Bobby Balachandran, Vijayasubramanian, RC Rajkumar
Creative Producer – Ajay R Gnanamuthu
BTG – Dr. Manoj Beno
Starring – Arulnithi, Priya Bhavanishankar, Antti Jaaskelainen, Tsering Dorjee, Arunpandian, Muthukumar, Meenakshi Govindarajan, Sarjano Khalid, Archana Ravichandran
Music – Sam CS
DOP – Harish Kannan
Editor – Kumaresh D
Production Design – Ravi Pandian
Stunt – Ganesh
Costume Designer – Navadevi Rajkumar, Malini Karthikeyan
Co-Writers – Venkatesh, Rajavel
Lyrics – Mohanrajan
Set Master – G Ramalingam
VFX Supervisor – Fazil
Chief Co-Director – Venkatesh
Co-Directors – Baharudeen, Naveen Varadharajan
2nd Unit Directors – Sharath Sha, VG Balasubramanian
Executive Producers – Mugesh Sharma, J.P, VG Balasubramanian
Stills – Anburaj A
PRO – Yuvaraaj
Sound Design – Sync Cinema
VFX – Pixel Light Studio
DI – B2H Studios
Colourist – Raghunath Varma, Arun Sangameshwar
–
🐣மொத்தத்தில் இந்த டிமாண்டி காலனி 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக வந்திருக்கிறது
இதன் மூன்றாம் பாகத்தை 2026 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர்
அஜய் ஞானமுத்து திட்டமிட்டு உழைத்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்பதற்கு இந்த படத்தின் இயக்குனர் ஒரு உதாரணம் ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கதையை தேர்வு செய்துள்ளார்
இதில் நடித்த நடிகர் அருள்நிதிக்கு நமது வாழ்த்துக்கள் . படத்திற்கு வெற்றி தேடிதந்த ப்ரியா பவானி சங்கருக்கு வாழ்த்துக்கள்.
படத்தின் வெற்றிக்கு மிகவும் காரணமாக அமைந்த இசையமைப்பாளர் சாம சி .ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ஒப்பனையாளர், கலர் கரெக்ஷன் ,செய்த டெக்னீஷயன்ங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஒரு வெற்றிப் படமாக கொடுத்ததற்காக வாழ்த்தலாம்.
