சாலா (2024) திரை விமர்சனம்

(மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு) ரேட்டிங் 4/ 5

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ படத்தை தயாரித்துள்ளது
. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது ‘.’சாலா’ படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன், ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘

“வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளபார்வதி ஒயின்ஸ் மதுபானக் கூடத்தை கைப்பற்ற சக்தி வாய்ந்த குணா , தங்கபாண்டியன் , என இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த கேங்ஸ்டர்க்குள் நடக்கும் போட்டி தான் கதை களம்

இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர். ரேஷ்மா கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயககுனர்

இந்த படத்திற்கு ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது சண்டை காட்சிகளிலும், ராயபுரத்தை காட்டியதிலும், அம்பத்தூரில் நடக்கும் கள்ள சாராய தொழிற்சாலை காட்டியதும், மீனவர்கள் வாழும் அந்த குடோனை காட்டியதும், எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

தீசன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் நன்றாக இருக்கிறது பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
கலை இயக்கத்தை வைரபாலன் கவனித்து ள்ளார் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் பளிச்சிடுகிறது பார்வதி ஒயின்ஸ் அதை வடிவமைப்பது ள்ளது, அம்பத்தூர் கள்ள மது தொழிற்சாலையை வடிவமைப்பதுள்ளது, மற்றும் பள்ளி என பல இடங்களில் ஆர்ட் டைரக்டர் கை வண்ணம்
பேச வைக்கிறது.

படத்தொகுப்பை புவன், செய்துள்ளார் கச்சிதமான படத்தொகுப்பு கடைசி ஒரு அரைமணி நேரம் விறுவிறுப்பாகவும் மனதை தொடும் வகையில் பட தொகுப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ, மற்றும் ரக்கர் ராம், இருவரும் சேர்ந்து சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்கள்
நாயகன் எதிரிகளை துவம்சம் செய்யும் சண்டைகளில் அணல் தெரிக்கிறது.

நடன இயக்குநராக நோபுள் பணியாற்றியுள்ளார். பார்வதி ஒயின்ஸ் இவர்களுக்கு கிடைத்தவுடன் நாயகன் ஆடும் அந்த நடனம் ரசிக்க வைக்கிறது நன்றாக பயிற்சி கொடுத்திருக்கிறார் நடன இயக்குனர் நோபுள்.

: CAST

DHEERAN as SAALA
RESHMA VENKATESH as PUNITHA
CHARLES VINOTH as THANGADURAI
SRINATH as DOSS
ARULDOSS as GUNA
SAMPATH RAM as NAGU INSPECTOR

: படத்தின் நாயகன் தீரன், வாட்டசாட்டமான உடம்பு அடிதடிக்கேற்ற
ஆஜானுபாவமான உருவம் சின்ன வயதில் இருந்து தன்னை காப்பாற்றிய அருள்தாஸ் என்னும் குணாவுக்காக,
தன் உயிரையே கொடுக்கக் கூடிய கதாபாத்திரம் அதேபோல நாயகி ரேஷ்மா தன் பாருக்கு எதிரே கோசம் போட்டு மதுக்கடையை ஒழிப்போம் என்றாலும் அவர் மீது இரக்கம் காட்டி அந்த இரண்டு குழந்தைகள் மீது அன்பு காட்டும் மனிதநேயம் உள்ள கதாபாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தைகள் இரண்டும் ஆக்சிடெண்டில் இறந்து போக அவர்களை மடியில் வைத்துக் கொண்டு நாயகன் கதறும் இடம் நன்றாக இருக்கிறது அதேபோல அருள்தாஸ் மீது அவர் காட்டும் பாசமாகட்டும் அவரை காப்பாற்ற எந்த எல்லைக்கும் சென்று போராடுவதும் ரசிக்க வைக்கிறது
நாயகன் தீரன் இனி அதிகமாக ஆக்ஷன் காட்சிகளில் ஆக்சன் படங்களில் இவரை காணலாம்.

நாயகி ரேஷ்மா ஒரு பள்ளி ஆசிரியராக வந்து தன் சம்பளத்தை எல்லாம் அனாதை குழந்தைகள் படிப்புக்கு தந்து காப்பாற்றும் மனிதநேயம் உள்ள கதாபாத்திரம் அதே சமயம் மதுவால் நாட்டுக்குள் நடக்கும் தீமைகளை எடுத்துரைக்கும் நல்ல ஒரு விழிப்புணர்வு மிக்க ஆசிரியராக வருகிறார்
மதுவால் பாருக்குள் என்னென்ன விலை ஏறி இருக்கிறது மது எந்த அளவுக்கு மனிதனை சீரழிக்கும் என்று இன்ஸ்பெக்டர் சம்பத்ராமிடம் ஸ்டேஷனில் அவர் பேசும் போது படம் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அதேபோல படம் முழுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் ஏந்தி கொண்டு மதுக்கடையை திறக்காதே என்று அவர் கோஷம் போடுவது அவர் கதாபாத்திரத்துக்கு சிறப்பை தேடி தந்திருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சி பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்

சம்பத் ராம் காவல் துறை அதிகாரியாக வருகிறார் வில்லன்கள் இடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கடமையை செய்ய தவறு கிற அந்த கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது
நாயகனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு காட்டும் குணாவாக அருள்தாஸ் நடித்திருக்கிறார் நாயகன் படத்தில் கமல் கதாபாத்திரம் போல இவர் கதாபாத்திரம் என்று சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்துக்கு அவர் நடிப்பு மெருகேறி இருக்கிறது
அருள்தாஸ்க்கு எதிராக வில்லனாக மெட்ராஸ் புகழ் சார்லஸ் வினோத் நடித்திருக்கிறார் குள்ளநரித்தனத்தின் மற்றொரு உருவமாக சிறப்பாக நடித்திருக்கிறார்
படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எப்படியாவது நாயகன் சாலாவையும் , குணாவையும், ஒழித்துக் கட்டுவதே குறியாகயிருக்கிறார் அந்த ஏலம் எடுக்கும் காட்சியில் சேட்டுவின் மகளை இவர் கடத்தி செக் வைப்பது சார்லஸ் வினோத் மனைவியை குழந்தைகளை நாயகன் கடத்திச் செக் வைக்கும் அந்த இடம் சிறப்பாக இருக்கிறது.

அம்பத்தூரில் கள்ள மது தொழிற்சாலை நடத்தி வரும் பொழுது மூன்று சிறுவர்கள் உள்ளே வந்துவிட அவர்களை கொடூரமாக கொள்ளும் அந்த காட்சிகளை சார்லஸ் வினோத் முகம் கொடூரமாக தெரிகிறது
: CREW

PRODUCTION – PEOPLE MEDIA FACTORY
PRODUCER – T G VISHWA PRASAD
CO PRODUCED BY – VIVEK KUCHIBOTLA
CREATIVE PRODUCER – V. SHREE NATRAJ
EXECUTIVE PRODUCER – VIJAYA RAJESH
DIRECTOR – SD MANIPAUL
CINEMOTOGRAPHY – RAVINDRANATH GURU
MUSIC DIRECTOR – THEESON
EDITOR – BUVAN
ART DIRECTOR – VAIRABALAN
STUNT – MAGESH MATHEW & RUGGERRAM
PRO – NIKIL MURUKAN

தமிழ்நாட்டில் இன்றைக்கு பெரும் பங்கு வகிப்பது மதுதான். 20 வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெர்டிலிட்டி சென்டர் என்பதே கிடையவே கிடையாது. ஆனால், இன்று வீதி தோறும் உள்ளது
இதற்கு காரணம் மதுதான் மதுவால் நிறைய பேர் இன்று ஆண்மை இழக்கிறார்கள்
படத்தின் கதை மதுவுக்கு எதிரான கதை என்பதால் பலரும் தயாரிக்க முன்வரவில்லை யாம் ‘விட்னஸ்’ படத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.விஸ்வ பிரசாத் மூலம் கனவு பூர்த்தியாகி உள்ளது இயக்குனருக்கு

இயக்குனர் பிரபு சாலமன் உதவியாளராக இருந்து இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் மணிபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சமுதாயத்துக்கு தேவையான ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் கமர்சியல் படமாக இருந்தாலும் விழிப்புணர்வு படமாக கொடுத்திருக்கிறார் ஹெல்மெட் இல்லாமல் நடக்கும் சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு லாரி ஓட்டிக் கொண்டு வந்து கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தைகள், ஆசிரியர்கள் மீது, மோதித்தள்ளும் சண்டாள குடிகாரர்கள், இவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் நாட்டுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கிறது அதே சமயம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கள்ள மது தொழிற்சாலை நடத்தி விநியோகம் செய்யும் பல கயவர்களின் முக முடியை கிழித்து எரிந்திருக்கிறார்இயக்குனர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கு அவர்கள் செய்யும் சமூக சேவைக்கு கொடிய மனிதர்களால் எத்தகைய ஆபத்து ஏற்படுகிறது என்பதையும் எடுத்து சொல்கிறார் அருள்தாஸ் மதுவால் லிவர் வெடித்து இறப்பது சரியான உதாரணம் இப்படி படம் முழுக்க இன்று நாட்டுக்கு தேவையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் அவருக்கும் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள் இந்த படம் பார்த்து ஒருவராவது இனி குடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தால் அதுவே இந்த படத்திற்கு எடுத்த மிகப்பெரிய வெற்றி இந்த படம் அனைவரும் காண வேண்டிய படம் நிச்சயம் உங்களுக்கு தேவையான படம் ஒரு நல்ல தரமான படப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர்