வாழை ” திரை விமர்சனம்

(ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை பதிவு) ரேட்டிங் 4-5 /5

கனாக பொன் வேல்அவரது நண்பன் ராகுல் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள்

1997, 1998 காலக்கட்டத்தில் நடந்த கதை படத்தின் தொடக்க காட்சியிலே தென் மாவட்டத்தை கண்முன்னே காட்டிவிடுகின்றனர். ஆறு, வயல் என்று நெல் விளையும் பூமி என்று காட்டாமல் கண்மாய், கண்மாயில் வளர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி, அந்த மண்பாதைகள் என படம் நம்மை கிராமத்திற்கு கொண்டு செல்கிறது.
கிராமத்து மனிதர்களை எளிய வாழ்க்கை கூலிக்காக போராடும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அம்மா, மகன், அக்கா, தம்பி, டீச்சர் ,இப்படி பலவிதமான கதாபாத்திரங்களை நம் கண் முன் கொண்டு வந்து இறுதியில் கலங்க வைத்து விடுகிறார் இயக்குனர்.

படத்தை பெரும்பாலும் தாங்கிப்பிடிப்பதே பொன் வேலும் நண்பராக வரும் ராகுல் என்றசிறுவனுமே ஆகும். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளும் நம்மை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, அந்த கமல்ஹாசன் காமெடி கைதட்டல்களை தியேட்டரில் அள்ளுகிறது. முதல் பாதி பெரும்பாலும் பள்ளி காட்சிகளிலே நகர்கிறது. அந்த காட்சிகள் சற்று பிசிறினாலும் தவறான புரிதலை, சொல்ல வந்ததை சொல்ல முடியாத காட்சிகளாக மாற்றிவிடும்
அந்த காட்சிகளுக்கு முத்தாய்ப்பாக இடைவேளைக்கு பிறகு நிகிலாவை பார்த்து பொன் வேல்சொல்வார் அழகா இருக்கீங்க முதலில் அம்மா மாதிரி இப்போ அக்கா மாதிரி என்று சொல்லும் பொழுது எல்லோரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்

படத்தின் ஆசிரியையாக வரும் நிகிலா ஆசிரியையாக அசத்தலாக நடித்துள்ளார். கனிவான ஆசிரியையாக பள்ளியில் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியை நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறார். குறிப்பாக, பஞ்சுமிட்டாய் சீலை கட்டி பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் படத்தின் ஆரம்பத்தில் ஒரு குடுகுடுப்பைக்காரன் பல மோசமான செய்திகளை சொல்லிவிட்டு போகிறான்
பயந்து கொண்டு பதுங்கிக் கொண்டு படுத்து கொண்டு இருக்கும் பொன்வேல் அதாவது சிவ நந்தம் கால் சட்டையில் மூத்திரம் போகிறான் அடுத்த காட்சியில் அம்மாவும் அக்காவும் அவனை எழுப்புகிறார்கள் இப்படித்தான் ஆரம்பம் ஆகிறது வாழைப்படத்தின் கதை அதன்பிறகு சிவனந்தனின் பள்ளி வாழ்க்கை அங்கு பூங்கொடி என்ற டீச்சரின் மீது அன்பு காட்டுவது அவரது கர்சீப் எடுத்து வைத்துக்கொண்டு முகர்ந்து பார்ப்பது இப்படி கலகலப்பாக போகிறது அடுத்த காட்சி சிவராமனின் அம்மா புரோக்கரிடம் காய் சுமக்க வருகிறேன் என் மகனும் வருவான் என்று அந்த 13 வயது சிறுவனுக்கும் சேர்ந்து அட்வான்ஸ் வாங்குகிறார் காய் சுமக்க போவதில் சிவ நந்தனுக்கு ஒரு துளியாவது விருப்பமில்லை ஆனால் அம்மாவின் அதிரடியான கண்டிப்பால் அவனும் சேர்த்துக் கொள்ளும் வயல் காட்டிலும் அந்த காய் சுமக்கும் பணியை செய்கிறான் எப்படியாவது இந்த காய் சுமக்கும் பணியில் இருந்து தப்பிவிட வேண்டும் என்று அவன் தவிக்கிறான் இதற்காக பொய் சொல்லி காலில் முள் குத்திவிட்டது என்று காலை நொண்டி நொண்டி நடக்கிறான் அதுவும் அவனது நண்பன் சேகர் அம்மாவால் கண்டுபிடிக்கப்படுகிறது சிவன் நந்தம் அம்மா சரி நாளை நீ இருந்து கொள் மாட்டை பத்திரமாக பார்த்துக்கொள் என்று அவன் மீது பாசம் கொண்டு அவனிடம் மாட்டை ஒப்படைத்து விட்டு போகிறார் ஆனால் அவன் டீச்சர் மீது இருக்கும் அன்பால் டீச்சருடன் ஸ்கூட்டியில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையால் மாட்டை பற்றி கவலைப்படாமல் அரிசி மில் வரை போகிறான் வந்து பார்க்கும்போது மாட்டை காணவில்லை அது புரோக்கரின் வயலில் இறங்கிவிட்டது இதற்காக புரோக்கர் குய்யோ முறையோ என்று கத்துகிறான் இப்பொழுது கலையரசன் பொன்வேலுக்காக பரிந்து பேச பொன்வேலின் அம்மா கம்மலை கழட்டி கொடுத்து அந்த பிரச்சினை முடிக்கிறார். இப்படி கிராமத்தில் ஒவ்வொரு நிகழ்விலும் பொன் வேல் அதாவது சிவனந்தன் பட்ட வேதனையும் வலியோடு இந்த படம் பயணிக்கிறது

இதில் நடித்த நடிகை நடிகர்கள்

Vaazhai Cast & Crew Details

Cast

Ponvel as Sivanaindhaan

Raghul as Sekar

Janaki as Sivanaindhaan’s Mother

Dhivya Duraisamy as Vembu

Kalaiyarasan as Kani

Nikhila Vimal as Poongodi

Padhman as Broker

J. Sathish Kumar as Trader
தன்னுடைய சிறு வயது வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு வந்த வண்டியில் 19 பேர் மரணம் அடைந்த உண்மையான சம்பவத்தை உருக்கமாக தன் வாழ்வின் பயோபிக் காட்சிகளோடு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்

படத்தில் நாயகனாக வரும்
கலையரசன் 100 கிலோ, வாழைத்தார் சுமந்து கொண்டு திவ்யா துரைசாமியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு கழுத்து வலியோடு காதல் புன்னகையை, அங்கங்கே தெளித்து படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் கனி என்கிற கதாபாத்திரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூலி உயர்வு கேட்டு போராடும் காட்சி ஆகட்டும்
திவ்யா மருதாணி கொடுக்கும் பொழுது ஆச்சரியப்படுகிறார் அந்த மருதாணியை லாரியில் போகும்போது கையை விரித்து காட்டும் போதும் கலையரசன் ஸ்கோர் செய்கிறார் அருமையான தேர்வு டைட்டானிக் படம் போல காதலிக்காக கிளைமாக்ஸ் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் சின்ன வயது மாரி செல்வராஜ் அக்காவாக இயல்பாக நடித்திருக்கிறார் தம்பி மீது பாசம் காட்டும் அந்த கரிசனம் கரிசல்காட்டு பூவாக கலையரசனை காதலிக்கும் அந்த லாவகம் அம்மாவிடம் பணிவு, வாழைத்தார் சுமந்து கொண்டு கால் வலிகளோடு, நடந்து வருவது எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருமையாக
நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

பூங்கொடி
டீச்சராக வரும் நிகிலா அழகோ அழகு அருமையான நடிப்பு கிராமத்து மண்வாசனை மிகுந்த டீச்சராக அற்புதமாக நம் மனதில் பதிகிறார் பொன் வேல் மீது அன்பு காட்டுவதும், அவன் தலையை தடவுவதும், அவன் கர்சீப் அக்காவினுடைய என்பதும் இல்லை என்னுடைய நண்பர் சொல்லும் போதும் விட்டுக்கொடுத்து போகிறார்
பொன் வேலைஅழைத்துக் கொண்டு அரிசி மில்லுக்கு போகிறார் அப்போது மாடு காணாமல் போகிறது இடைவேளை வரை படத்தை அழகாகவும் அற்புதமாகவும் கொண்டு செல்வதற்கு நிகிலா உதவி இருக்கிறார் நிகிலாவுக்கு அருமையான வேடம்

புரோக்கராக வரும் பத்மன் இயல்பாக நடித்திருக்கிறார் முதலாளிக்கு ஜால்ரா போடும் இந்த புரோக்கர் வேஷம் கச்சிதமாக இருக்கிறது

பொன்வேலின் அம்மாவாக வரும் ஜானகி அம்மா நிஜமான கிராமத்து மனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அருமையான நடிப்பு

ஜே. எஸ் .கே .சதீஷ் புரோக்கராக வருகிறார் இரண்டு மூன்று காட்சிகள் தான் என்றாலும் கம்பீரமாக முதலாளிக்கு உரிய தெனாவட்டுடன் நடித்திருக்கிறார் கடைசியில் 19 உயிர்கள் பலியாக காரணம் நாம் தான் என்று அவர் கண்ணீர் வடிக்கும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது பணத்தாசை பிடித்த சில முதலாளிகள் இப்படி பல கூலி தொழிலாளர்கள் உயிரை வாங்குகிறார்கள் என்பது நிஜம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு மிகப்பெரிய பலம் பாடல்கள் ரசிக்க வைக்கிறது எல்லா பாடலும் அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகள் வரும் அந்த சோகப்பாடலும் மனதை விட்டு நீங்க மறுக்கிறது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரர் அருமையான வாழை தோப்புகளை குளுமையாக படம் பிடித்திருக்கிறார் தூத்துக்குடியில் உள்ள பூங்குளம் என்ற பகுதி அந்த சேரி மக்களை தனித்துவமாக படமாக்கி இருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் கேமராவின் உழைப்பு அற்புதமாக இருக்கிறது அருமையான படப்பிடிப்பு

படத்தொகுப்பு சூரிய பரந்தாமன்
சரியான கச்சிதமான படத்தொகுப்பு படத்தில் எந்த இடத்திலுமே லேக் ஆகவில்லை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு பட தொகுப்பாளர் கச்சிதமாக பணி புரிந்திருக்கிறார

கணபதியின் மேக்கப் திவ்ய துரைசாமிக்கு அருமையாக பொருந்தி இருக்கிறது கலையரசனுக்கு நன்றாக இருக்கிறது நிகிலா ராமனுக்கு அருமையாக பொருந்தி இருக்கிறது அந்த ஊர் மக்களின் இயல்பான தோற்றத்தை ஒப்பனையாளர் அருமையாக செய்திருக்கிறார்
காஸ்ட்யூமர் ரவி கச்சிதமாக பொருந்தி இருக்கிறது

நிகிலராமனுக்கு பாவாடை தாவணி காஸ்ட்யூம் அழகாக இருக்கிறது கலையரசன் மற்றும் திவ்யா துரைசாமி
காஸ்ட்யூம் சிறப்பு

ஹரி ஹர சுதனின் VFX காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம் கிளைமாக்ஸ் காட்சியில் லாரி கவிழும் பொழுது ஆகாயத்தில் பறவைகள் பறப்பது மாடு அவிழ்த்துக் கொண்டு போகும்போது பல இடங்களில் வி எப் எஸ் காட்சி மிரட்டலாக இருக்கிறது: DI கலரிஸ்ட் பிரசாத் சோமசேகர்
கிராமத்து மனிதர்களை இயல்பாக பதிவு செய்திருக்கிறார்
மற்றும் இப்படத்தில் பணி புரிந்த டெக்னிஷுயன்கள்

: Crew

Director: Mari Selvaraj

Banner : Disney+ Hotstar, Navvi Studios, Farmer’s Master Plan Production

Release by Red Giant Movies

Music Director: Santhosh Narayanan

Lyricist: Yugabharathi, Vivek, Mari Selvaraj

Produced by Divya Mari Selvaraj, Mari Selvaraj

DOP : Theni Eswar

Art Director: Kumar Gangappan

Editor : Suriya Pradhaman

Action Choreography : Dhilip Subbarayan

Dance Choreography : Sandy

Audiography: Suren

Sound Designer : Suren.G, Alagiyakoothan.S

Costume Designer : Shri Swarna

Costumer : T.Ravi

Makeup : R.Ganapathy

Stills : JayakumarVairavan

Publicity Designer: Kabilan

VFX : Harihara Sudhan

DI Colourist : Prasad Somasekar

DI Line Producer: ML Vijayakumar

PRO : Sathish (AIM)

Executive Producer : Venkat Arumugam

அனைவருக்கும் வாழ்த்துக்கள் எல்லோருடைய பங்களிப்பும் நன்றாக உள்ளது
இயக்குனர் மாரி செல்வராஜ் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் . பரியேறும் பெருமாள் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார் , இது மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. பின்னர், அவர் கர்ணன் படத்திற்காக தனுஷுடன் ஜோடி சேர்ந்தார் , இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மாமன்னன் திரைப்படம் மூலம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் இவருடைய பயோபிக் என்பதும் எப்படி இருக்கும் என்று ஆர்வம் எல்லோருக்கும் இருந்தது சின்ன வயதில் பட்ட துன்பம் வலி ,சோகம், அன்பு, ஏக்கம் இவை எல்லாம் திரை வடிவமாக எழுதி எல்லோருடைய பாராட்டியும் பெற்றிருக்கிறார் இந்த படத்தை தயாரித்ததும் அவரும்அவர் மனைவி யும் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை திரைக்கதை ஆக்கி அற்புதமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக இந்த வாழை இருக்கும்
மக்களிடம் நல்ல முறையாக கொண்டு சேர்த்த மக்கள் தொடர்பாளர் சதீஷ் (AIM) அவர்களுக்கும் வாழ்த்துக்கள் : ரெட் ஜெயன்ட் ஒரு படத்தை தேர்வு செய்து வெளியிடுகிறது என்றால் அது நல்ல தரமான படமாக இருக்கும் என்பது வாழைப்படம்மூலம் உறுதி செய்ய பட்டு இருக்கிறது பல விருதுகளுக்கு இந்த வாழைப்படம் அமையும் என்பது உறுதி. பொன் வேல், ராகுல் இருவரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் விருது நிச்சயம் இருவருக்கும்