G.O.A.T ( THIRAI VIMARSANAM)

ரேட்டிங் 4/5

*Banner : AGS Entertainment (P) Ltd
Producers : Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh
Creative Producer : Archana Kalpathi
Associate Creative Producer : Aishwarya Kalpathi
Executive Producer : S.M.Venkat Manickam*

கதை திரைக்கதை எப்படி?

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் செம்ம மாஸான காட்சிகளுடன் படம் ஆரம்பமாகிறது கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. மேனன் இறப்பதற்கு முன் விஜய் எடுக்கும் துணிச்சலான அந்த காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது

இப்படி ஆரம்பமே அதிரடியாக இருந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பாராத வகையில் இருந்தது. ரயில் சண்டை காட்சிகளில் இருந்து, படத்தின் இடைவேளை காட்சி வரை அனைத்தும் திரையில் இருந்து கண்களை எடுக்க முடியாத படி இருந்தது.
விஜய் நண்பர் களுடன்உடன் குடிப்பது, மனைவியிடம் மாட்டிக் கொள்வது, என முதல் பாதி கலகலப்பாக போனது.

முதல் பாதி ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை மற்றும் குடும்ப காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. சினேகா-விஜய்க்கு இடையே கெமிஸ்ட்ரி செம இருவரும் ஈடு கொடுத்து நடித்திருக்கின்றனர். விஜய், அதே சமயத்தில் குறும்பு தனமும் செய்கிறார். முதல் பாதி யில்
தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி எம்.எஸ். காந்தி(விஜய்). தான் என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனைவி சினேகாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார் காந்தி. அவர்களுக்கு ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகிறார். காந்தியின் சிறப்பு குழுவில் சுனில் தியாகராஜன்(பிரசாந்த்), கல்யாண் சுந்தரம்(பிரபுதேவா), அஜய்(அஜ்மல் அமீர்), அவர்களின் பாஸ் நஸீர்(ஜெயராம்) ஆகியோர் இருக்கிறார்கள்.

குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சென்றபோது நடக்கும் சம்பவத்தால் காந்தியின் வாழ்க்கை மாறிவிடுகிறது. அவரின் வேலையும் தான். 17 ஆண்டுகள் கழித்து காட்டும்போது விமான நிலையத்தில் வேலை செய்கிறார் காந்தி. அவரும், மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். மகள் சினேகாவுடன் இருக்கிறார். இந்நிலையில் வேலை விஷயமாக ரஷ்யாவுக்கு, செல்கிறார் காந்தி. பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மகன் ஜீவனை (இளம் விஜய்) ரஷ்யாவில் பார்க்கிறார் காந்தி.

அன்பு மகனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் இறைவன் தன்னிடமிருந்து எடுத்துக் கொண்டது அனைத்தையும் திரும்பவும் கொடுத்து விட்டார் என்று சந்தோசப்படுகிறார் ஆனால் அந்த சந்தோசம் நிலைத்ததா?

பிரிந்து போன தன் மகன் மகனாக கிடைத்தானா? அல்லது வில்லனாக மாறினானா? அவன் யார்?புரியாத புதிர்களுக்கு விடை சொல்வது இந்த கோட்

விஜய் நடிப்பு செம மாஸ்

விஜய் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து ரசிகர்களின் உற்சாகத்தை குறையாமல் வைத்திருக்கிறார். ரஜினி , அஜித் , தோனி , மட்ட பாடலில் குத்தாட்டம் போடும் நடிகை, க்ளைமேக்ஸில் வரும் குழந்தைகளை கவர்ந்த நடிகர் என எல்லா வகையிலும் கைதட்டளை வாங்கிக் கொள்கிறார் மகனாக வரும் ஜீவன் நடிப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது அவர் பேசும் சைக்கோ தனமும் ,கேலியும் கிண்டலும், உருட்டலும் ,மிரட்டலும் விஜய்க்கு இது புதுசு காந்தியாக வரும் விஜய் கடமைக்காக தன் மனைவியிடம் உண்மையை மறைப்பது ஜெயராம் இறந்து போக அவரை கொன்றவரை கொல்வேன் என சபதம் எடுப்பது மகன் இறந்து போய்விட்டான் என்று கத்தி கதறுவது, ரயிலுக்குள் சண்டை, பாங்க் ஹாங் மார்க்கெட் சண்டை, மெட்ரோ ரயில் சண்டை, என படம் முழுக்க ஆக்சன் காட்சியில் அசத்தியிருக்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் தோனி இங்கே சிக்ஸரை பறந்து அடித்துக் கொண்டிருக்க மேலே வில்லனுடன், காந்தி மோதும் அந்த காட்சி பரபரப்பு
தன் மகளைப் பார்த்து நீ யாருடைய ரசிகை என்று கேட்க, அவர் தல ரசிகை என்று சொல்ல யுவன் பின்னணி இசை யில் மங்காத்தா பிஜி எம் தெறிக்க விட தியேட்டர் ஃபுல்லா கைதட்டல் இப்படி படம் முழுக்க விஜய் பல பரிமாணங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
: விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் பிடித்த விஷயங்கள் . சிறிய வயது விஜயை காட்டிய டி-ஏஜிங் டெக்னாலஜியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் விஜய் தன் நடிப்பால் அதை சரி செய்துள்ளார்

இயக்குனர் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு. கதை எழுதி இயக்கி இருக்கிறார் விஜய் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக வழங்கி இருக்கிறார் புதுமையான முறையில் ஒரு ஆக்சன் படத்தை மூன்று மணி நேரத்துக்கு விறுவிறுப்பாக கொடுத்து இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம் கதை இடைவேளைக்கு பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற பாணியில் போவது சுவாரசியம் விஜயை இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் கோட் படத்தின் மிகப் பெரிய பலமே தளபதி, இளைய தளபதி தான். அது இயக்குனர் புத்திசாலித்தனம்

சினேகா

சினேகா, தளபதி யின் மனைவியாக, ஜீவனின் அம்மாவாக, அம்சமாக பொருந்தி இருக்கிறார் குடித்துவிட்டு வரும் கணவனை கண்டிப்பது, தன் மகன் பிரிவை எண்ணி தவிப்பது இப்படி எல்லா காட்சிகளும் சினேகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது

மீனாட்சி சவுத்ரி, அதிக வேலை இல்லை பாடலுக்கு ஆடிவிட்டு இறந்து போய்விடுகிறார். சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள். அதில் பிரேம்ஜியை ஓவர்டேக் செய்துவிடுகிறார் யோகிபாபு. டைமன்ட் பாபு என்ற வேடத்தில் வெழுத்து வாங்கி இருக்கிறார் யோகி பாபு.

பிரபுதேவா & பிரசாந்த்

பிரபுதேவா (கல்யாண்), என்ற வேடத்தில் வந்து நெகட்டிவ் ஷேடில் நடித்திருக்கிறார் பிரசாந்தும் பிரபுதேவாவும் அந்த சண்டை காட்சிஅனல் தெரிக்கிறது. பிரசாந்த் (சுனில்) என்ற வேடத்தில் மகளுக்கு அப்பாவாக விஜயின் தோழனாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் இனி இவரை பல படங்களில் பார்க்கலாம்

ஜெயராம்( நஸிர்) என்ற வேடத்தில் அந்த தீவிரவாத குழுவுக்கு எதிரான தலைவராக நன்றாக நடித்திருக்கிறார் இன்டர்வல் காட்சியில் உயிருக்கு பயந்து கொண்டு இவர் ஓட விஜய் காப்பாற்ற அந்த காட்சிகள் இவர் மேல் பரிதாபப்பட வைக்கிறது, அஜ்மல் விஜய் குழுவின் ஒரு அங்கமாக வருகிறார் இவர்களெல்லாம் அதிக காட்சியில் இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்கள் அனைவரும் SATS எனப்படும் ஆண்டி டெரரிஸம் ஸ்பெஷலிஸ்ட் குழுவிற்காக ரகசியமாக சேலை செய்து வருகிறார்கள்.

மோகன்

இதே துறையில் பணியாற்றிய மேனன் (மோகன்) தீவிரவாதிகளுக்கு உதவி செய்து தேசத்துரோகியாக அறிவிக்கப்படுகிறார். மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம் அவர்தான் மெயினான வில்லன் எனவே அவருக்கு இன்னும் கொஞ்சம் பில்டப் கொடுத்திருந்தால் கதையில் வலு சேர்த்து இருக்கும்

: மற்றும் லைலா, அஜ்மல் , பார்வதி நாயர், வைபவ், அமரன் யுகேந்திரன் வாசுதேவன், அகிலன், என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசை சூப்பர்

விஜய் நடித்த படங்களில் பாடல்கள் பட்டையை கிளப்பும் அது இந்த படத்தில் கொஞ்சம் குறைவு தான் பின்னணி இசை நன்றாக இருக்கிறது பிஜிஎம் நன்றாக இருக்கிறது

டெக்னீசியன்கள்

சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு ரஷ்யாவின் அழகையும், கென்யாவின் ரயில் காட்சிகளும் ,
பேங்க் ஹாக்கில் மார்க்கெட்டிலும், சென்னையின் மெட்ரோ ரயிலையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

வெங்கட்ராஜனின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு ஒரு பத்து நிமிடம் படத்தை எடிட் செய்திருக்கலாம் படத்துக்கு விறுவிறுப்பு குறையாமல் படத்தொகுப்பு இருந்தது அவரை பாராட்டலாம்.

அதே போல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் ஆக்சன் காட்சிகளில் அதிக கவனம் எடுத்து படத்துக்கு விறுவிறுப்பாக எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் 40 நிமிடம் ஆக்சன் காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது வெளிநாடுகளில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மிகவும் பலமாக இருக்கிறது

படத்தின் வசனகர்த்தாவாக விஜி அண்ட் வெங்கட் பிரபு எழுதியிருக்கிறார்கள். வசனங்கள் ரசிக்க வைக்கிறது. இவருக்கு உதவியாளர்களாக சந்துரு, அண்ட் இளவரசு, குணசேகரன், மூவரும் சேர்ந்து வசனங்களுக்கு மெருகேற்றி இருக்கிறார்கள்

ஆர்ட் டைரக்டர் சேகரன் ,சூரியா ராஜீவன், அற்புதமாக அரங்க அமைப்பு செய்து இருக்கிறார்கள் விஜய் வீடு, அலுவலகம் வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் என , எல்லாமே அரங்க அமைப்பாளருக்கு சூப்பராக கை கொடுத்தது சூப்பர்

காஸ்ட்யூம் டிசைனராக வாசுகி பாஸ்கர் ,மற்றும் பல்லவி சிங், இருவரும் கவனம் பெறுகிறார்கள் காந்தி என்ற வேடத்தில் வரும் விஜய் உடைய உடை அமைப்பு நன்றாக இருக்கிறது. மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் காஸ்ட்யூம் நன்றாக இருக்கிறது

சவுண்ட் அண்ட் சவுண்ட் டிசைன் உதயகுமார் பனி புரிந்து இருக்கிறார் சிறப்பாக வந்திருக்கிறது.

இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன், கவியரசு வைரமுத்து, விவேக், போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது அதிலும் சொர்க்கமே என்றாலும் பாடல் இன்றைய காலத்துக்கு ஏற்றபடி நவீனமாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

திரிஷாவுடன் விஜய் ஆடும் அந்த மட்டைப்பாடல் சூப்பர்

நடன அமைப்பு ராஜூ சுந்தரம், சேகர், சதீஷ், மூவரும் சேர்ந்து நடன பயிற்சி அமைத்திருக்கிறார்கள் விசில் போடு பாடலும், மட்டை பாடலுக்கும் ,நடனம் சூப்பராக வந்திருக்கிறது. மூவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த கோட் வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது
மூன்று மணி நேர படத்தில் எங்குமே லேக் இல்லை படம் இருவருப்பாக போகிறது. கலகலப்பாக இருக்கிறது ஃபேமிலி செண்டிமெண்ட் இருக்கிறது, பாடல்கள் இருக்கிறது நடனம் இருக்கிறது, சண்டைக்காட்சி ரசிக்க வைக்கிறது, எல்லோருடைய பங்களிப்பும் அருமையாக வந்திருக்கிறது. கோட் வெற்றி பாதையில்