நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் ஒரு எமோஷனல் கலந்த கிரிக்கெட் கதை… வாங்க பார்க்கலாம்
கிராமப் புறங்களில் நடைபெறும் கிரிக்கெட் களம் என்பதால், கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். இது தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை அற்புதமாக எடுத்துள்ளனர். ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் சிறப்பாக படம் பிடித்துள்ளார்கள். இதனால், படம் பார்க்க பார்க்க பல காட்சிகளில் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது
இயக்குனர்
தமிழரசன் பச்சமுத்து திட்டக்குடியை சேர்ந்தவர் கிராமத்து கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்றவர் என்பதால் இளைஞர்கள் விரும்பும் அத்தனை அம்சங்களையும் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்
இப்படத்தின் நாயகன் (அன்பு) ஹரீஸ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் (கெத்து ) இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் வீரர்கள் இவர்கள் இருவரை மையப்படுத்தி தான் படம் முழுக்க கதை நகர்கிறது இவர்களோடு காளி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , கீதா கைலாசம் சுவாதிகா, தேவதர்ஷினி என எல்லோரும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளனர்
இசை படத்திற்கு உயர் கொடுத்து உள்ளதா
ஷான் ரோல்டன் இப்படத்தின் இசை அமைப்பில் உயிர் கொடுத்திருக்கிறார் கிரிக்கெட் விளையாடும் போது யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இசையின் மூலம் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
பாடல்கள் ரசிக்க வைக்கிறது
கிரிக்கெட்டை மையமாக வைத்து உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தாலும் அதோடு காதலும், மோதலும் காலனி இளைஞர்களுக்கு திறமை இருந்தும் மறுக்கப்படும் அந்த கொடுமையையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். திரைக்கதை அமைத்த விதம் யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் கதை சொல்லியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
இயக்குநர் பேசும் அரசியல் , இப்படத்தின் பிளஸ் கொளுத்தும் சம்மர் வெயிலில் அதுவும் கிரிக்கெட் கிரவுண்டில் நாள் முழுவதும் படப்பிடிப்பு பல சிரமங்களை சந்தித்து ஒரு பெரிய குழுவையே வைத்து படமாக்கி இருக்கிறார்கள் நிச்சயமாக இந்த படம் வித்தியாசப்பட்டு இருக்கிறது என்பது உண்மை.
வழக்கமான காமெடியில் காளி வெங்கட், , பால சரவணன் இந்த படத்திற்கு கலகலப்பையும் காமெடியாக தந்து உள்ளனர். கிரிக்கெட் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கதிர் அடிக்கும் கமெண்டும் அவர் போடும் பாடலும் செம வரவேற்பு
படங்களில் எல்லாருமே கிரிக்கெட் விளையாட்டில் கில்லி போல காட்ட நிறைய பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்கள் பல சர்வதேச விளையாட்டு வீரர்களின் பவுலிங் முறையைக் கவனித்துப் பார்த்தாலும் அதில் உள்ள நுணுக்கங்களை காட்டி இருக்கிறார்கள் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டுகளில் இருக்கும் சாதி மோதல் இதிலும் இருக்கிறது
காட்சிகள் கிராமத்து மைதானத்தில் எடுக்கப்பட்டதால் காலையிலிருந்து மாலை வரை அங்கேயே படம்க்கிஇருக்கிறார்கள் . அதுவும் கொளுத்தும் கோடை வெயிலில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்
இன்றைய இளைஞர்கள் உயிராக நினைக்கும் கிரிக்கெட் விளையாட்டுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படம் தான். படத்தில் எதுவும் மெசேஜ் சொல்கிறீர்களா என்றால் அப்படி எதுவும் இல்லை. அதற்கான கதையும் இது இல்லை.என்பது புரிகிறது. ஆனால் திரைக்கதையில் போகிற போக்கில் ஒன்றிரண்டு விஷயங்களை சொல்ல முயற்சித்திருக்கிறார் கள்.அதுவும் வன்மம் இல்லாமல் மென்மையாக….
இப்படத்தின்
தயாரிப்பு ; S லக்ஷ்மன் குமார்
இணை தயாரிப்பு ; A வெங்கடேஷ
ஒளிப்பதிவு ; தினேஷ் புருஷோத்தமன்
இவரின் ஒளிப்பதிவு
கிரிக்கெட் காட்சிகளில், கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது அட்டைக்கத்தி தினேஷ் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸரும் பனைமர உயரம் போகும் போது கேமராவும் கூடவே பயணத்திறது இயல்பான ஒளிப்பதிவில் ரசிக்க வைத்திருக்கிறார் ஒலி ப்பதிவாளர்.
படத்தொகுப்பு ; G மதன்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்று இருப்பது படத்தொகுப்பாளரின் அற்புதமான படத்தொகுப்பு
கலை ; வீரமணி கணேசன்
நிச்சயம் பாராட்ட வேண்டிய கலை இயக்குனர் ஹரிஷ் கல்யாண்வீட்டை சி எஸ் கே வீரர்கள் படம் வரைந்து இருப்பது, அட்டைக்கு தினேஷ் வீட்டில் கேப்டனின் படம், கிரிக்கெட் மைதானத்தில், பந்தல் மற்றும் தோரணைகள், இப்படி எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் மிளிர்கிறது.
பாடல்கள் ; மோகன் ராஜன் பாடல்கள் ரசிக்க வைக்கிறது
தயாரிப்பு மேற்பார்வை: A P. பால்பாண்டி
ஆடை வடிவமைப்பு ; தினேஷ் மனோகரன்
கதைக்கேற்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் உடையில் நடிக்க வைத்து உள்ளார் பாராட்ட வைக்கிறது
மேக்கப் ; நெல்லை சண்முகம்
இயல்பான கிராமத்தில் வாழும் மனிதர்கள் தோற்றம் அதற்கு ஏற்ப உடைகள் என நல்ல படத்துக்கு தேவை யான உடையலங்காரம்
அழுக்கு மனிதராக அட்டை கத்தி தினேஷ், அழகான ஹரீஸ்,சுவாதி காவின், குடும்ப பாங்கு சஞ்சனா நர்ஸிங் தோற்றம் என கச்சிதமாக இருக்கிறது
மக்கள் தொடர்பு ; A. ஜான்
படத்தை மக்களிடம் சிறப்பாக சேர்த்ததற்கு வாழ்த்துக்கள்
நாயகன் ஹரீஸ் கல்யாண் நடிப்பு எப்படி சிக்ஸரா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் வரிசையில் அதிகம் கவனிக்கப்படும் இடத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளார். தனது சினிமா வாழ்க்கையை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தை வைத்து மெருகேற்றிக் கொண்டவர், தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாண் என்றாலே, ஒரு ஃபீல் குட் மூவியைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பார்க்கிங் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இவரது நடிப்பு, நடிப்பில் கைதேர்ந்தவர் என பாராட்டப்படும், இவரது நடிப்பில் வெளிவந்துள்ள , லப்பர் பந்து. திரை படம் மிகப்பெரிய வெற்றி இந்தப் படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ஒரு புதிய தோற்றத்தில் அசத்தி இருக்கிறார்.
கல்யாண வீட்டில் சஞ்சனாவைப் பார்த்து பாடலுக்கு சைகை காட்டுவது, அட்டகத்தி தினேஷ் ஈகோ மூலம் அவரை வீழ்த்துவது, தனக்கு சவால் விடும் டி கே எஸ் க்கு சவால் விட்டு களத்தில் கிரிக்கெட் விளையாடுவது
கிளைமாக்ஸ் காட்சி வெற்றியை விட்டுக் கொடுத்து காலணி இளைஞர்களுக்கு புதிய கௌரவம் ஏற்படுத்தி அவர்கள் வாழ்வுக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பது என்று அவர் வரும் காட்சிகள் எல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஒரு வெற்றி படத்தில் கலக்கி இருக்கிறார்
கதை திரைக்கதை வசனம் எப்படி?
கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை. குறிப்பாக கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட கதை.
அட்டை கத்திதினேஷ் சுவாதிகா இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் இருந்தாலும் இந்த காதல் திருமணம்
நாடக காதல் அல்ல நல்ல காதல் என்று வாழ்ந்து காட்டுகிறார்கள்
அவர்கள் வரும் காலங்களில் புது கவிதை போல இருக்கிறது அந்த அன்பும் பாசமும்
ஜாதி விட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் வெட்டி கொல்ல வேண்டும் என்று துடிக்கும் சில சில ஜாதி ஆணவ கொலை பேய்களுக்கு நறுக் என்று மண்டையில் கொட்டு வைத்து இருக்கிறார் இயக்குனர் காதலிக்கும் சின்னஞ்சிறுசுகளை விட்டு விடுங்கடா அவர்கள் ஊடலும் கூடலும் என வாழ்ந்து காட்டுவார்கள் என்று
ஹரிஷ் கல்யாண் ஒரு பட்டியலின மக்களின் நாயகனாக வருகிறார் சின்ன வயதிலேயே ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் டீமில் விளையாடப் போகும்போது அவனை எல்லாம் சேர்த்துக் கொள்ள முடியாது என்று டி கே எஸ் என்று சொல்லப்படும் வெங்கட் அவமானப்படுத்தி அனுப்புகிறார் அதன் பிறகு பல வருடங்களுக்கு கிரிக்கெட்டில் ஹரிஷ் ஆல் ரவுண்டராக வருகிறார் அவர் விளையாடாத டீமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு இடத்திலும் அசத்தி வருகிறார் சஞ்சனாவை ஒரு திருமண மண்டபத்தில் பார்த்ததும் பிடித்துப் போக அவரை பின்தொடர்ந்து அட்டைக்கத்தி தினேஷ் இருக்கும் ஊருக்கு வருகிறார் அவர் தான் மாமனார் என்று தெரியாமல் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது அந்த மோதல் இன்டர்வல் பிளாக்கில் அவர்கள் காதலுக்கு எதிரியாக வந்து முடிகிறது அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் சஞ்சனா காதல் நிறைவேறியதா? அட்டைக்கத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் இருவரும் ராசியானர்களா? தன் கணவன் அட்டைக்கத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட கூடாது என்று கண்டிஷன் போடும் சுவாதிகாவின் விருப்பத்தை மீறி அட்டைக்கத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாடி இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பிரிவினையாகிய இருவரும் இணைந்தர்களா? ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் டீம் ஜெயித்தால் மட்டுமே கிரிக்கெட்டில் இருந்து விலகுவேன் என்று சபதம் போட்டுள்ள அந்த டீமின் கேப்டன் காளி வெங்கட் தன்னுடைய டீமை ஜெயிக்க வைத்தாரா?
காலனி பசங்களை நம்முடன் விளையாட கூடாது என்று கண்டிஷன் போடும் டி கே எஸ் அந்த இளைஞர்களை விளையாட விட்டாரா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது லப்பர் பந்து
காலனி இளைஞர்கள் திறமை இருந்தும் விளையாட்டில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை அதை நாயகன் எப்படி கையாண்டு திறமையான அந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பது மையக்கதை இதில் காதல் , குடும்பத்தில் ஏற்படும் மோதல், கிரிக்கெட்டில் சாதி, போன்ற இன்று இளைஞர்களுக்கு என்னென்ன தேவையோ அது எல்லாவற்றையும் கச்சிதமாக கலந்து கொடுத்து
லப்பர் பந்து திரைப்படத்தை தங்க பந்துவாக கொடுத்திருக்கிறார்
சஞ்சனா நாயகி எப்படி
துருதுருவென அப்பாவுக்கு ஏற்ற பெண்ணாக ஹரிஷ் கல்யான் எப்படி கைப்பிடிப்பார் என்பது கேள்விக்குறியாகி அவர் மீது கதை கொண்டு சென்றிருப்பது
ரசிக்க வைத்திருக்கிறது
கிராமத்து நாயகியாக நர்சிங் செய்யும் பெண்ணாக குடும்பப்பாங்க அழகாக புரிந்து இருக்கிறார் சஞ்சனா
கேப்டன் விஜயகாந்த் படம் முழுக்க வந்து இருக்கிறார்
படம் முழுக்க வரும் 90ஸ் பாடல்கள் விஜயகாந்த் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது அட்டை கத்தி தினேஷ் கேப்டன் ரசிகராக அவர் வரும் காட்சிகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் கேப்டன் பாட்டு ஒலிப்பது படத்திற்கு பலம்
*படத்தின் பலம் சுவாதிகா
சூப்பர் கதாபாத்திரம் அவர் நடிப்பை பாராட்டலாம்*
படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என்றால் சுவாதிகா தான் படத்தின் ஆரம்ப காட்சிகளிலே டிராக்டரில் வந்து கிரிக்கெட் பிட்சை குதறி விட்டுப் போவது தன் கணவன் கிரிக்கெட் விளையாட போக கூடாது என்று கண்டிஷன் போடுவது, அதையும் மீறி அட்டை கத்தி தினேஷ் பொய் சொல்லி கிரிக்கெட் விளையாடி சுவாதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது சுவாதிகாவின் மாமியார் கீதா கைலாசம் இருவரும் வரும் காட்சிகள் பட்டை தீட்டும் வைரம் போல ஜொலிக்கிறது
இப்படி ஒரு மாமியார் கிடைத்தால் கீதா கைலாஷ் நடிப்பு
கீதா கைலாசம் நடிப்பு சூப்பர்!
வேறு ஜாதி பெண்ணாக இருந்தாலும் மருமகளிடம் பயந்து கொண்டு பயந்த சுபாவம் கொண்ட மாமியார் ஆக நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார் தன் மருமகள் தன் மகனை பிரிந்து போய்விட இருவரையும் சேர்த்து வைக்க அவர் மருமகள் வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்டு ஏங்கும் ஏக்கத்தோடு பேசும் காட்சி அருமையான காட்சி
அசத்தலான அம்மாவாக தேவதர்ஷினி
தேவதர்ஷினி ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நடித்திருக்கிறார் அந்த ஆஸ்பத்திரி காட்சிகள் அருமை. அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது
அட்டை கத்தி கெத்து தினேஷ் ஆனது எப்படி
அட்டைக்கத்தி தினேஷ் கேப்டன் ரசிகராக வந்து கேப்டன் பாடல் போடும்போதெல்லாம் வீறு கொண்டு எழுந்து ரப்பர் பந்தை விலாசி சிக்ஸராக பறக்க விடும் அந்த நடிப்பு ஆகட்டும் மனைவி பிரிந்து போனது மனைவியின் சேலையை தினமும் ஒவ்வொன்றாக எடுத்து போர்த்திக் கொண்டு படுக்கும் பாசமாகட்டும்
தன் மகள் தன் பேச்சை மீறமாட்டாள் என்று நம்பிக் கொண்டு அவர் காதலை பிரிப்பதாகட்டும் ஹரிஷ் கல்யாண் உடன் ஈகோ வால் மோதும் காட்சிகள் ஆகட்டும் இந்த படத்தில் ஸ்கோர் செய்துள்ளார் அட்டைக்கத்தி தினேஷுக்கு விருது நிச்சயம்
நல்ல நண்பர்களாக பால சரவணன் ஹரீஸ்
பால சரவணன் ஹரிஷ் கல்யாணி நண்பனாக வந்து அவ்வப்போது காமெடி செய்து கலகலப்பாக்குகிறார் படம் முழுக்க அவருக்கு ஜாலியான நட்பு மிகுந்த வேடம் செம்மையாக நடித்திருக்கிறார்
டி கே எஸ் நடிப்பு எப்படி
வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் கிராமத்தில் உயர்வு தாழ்வு பார்க்கும் இளைஞராக நன்றாக நடித்திருக்கிறார் ஹரிஸிடம் சவால் விட்டு எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார் அவருக்கு இந்த படம் நிச்சயம் முன்னேற்றத்தை கொடுக்கும்
*காளி வெங்கட்
ஜாலியான வெங்கட் என பளிச்சிடுகிறது அவர் நடிப்பு எப்படி?
காளி வெங்கட் ஒரு டீமை ஜெயிக்கு வைத்துவிட்டு தான் அந்த டீமில் இருந்து விலகுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு 20 வருடமாக போராடிவரும் நல்ல கதாபாத்திரம் நடிப்பிலும் செம ஸ்கோர் செய்துள்ளார்
சாதி பார்க்காமல் ஹரிஷ் கல்யாண் உடன் பழகும் நல்ல மனிதராக மனதில் நிற்கிறார்.
இயக்குனர் செய்த திரைக்கதை மாயாஜாலம் எப்படி
மொத்தத்தில் இந்த படம் இளைஞர்களுக்கான படம் என்று சொல்லலாம். குடும்பத்துக்கான கணவன் மனைவி உறவைப் பற்றிய படம் என்றும் சொல்லலாம். காதலன் காதலி இருவரின் இளமை துள்ளல் படம் என்றும் சொல்லலாம். ஈகோ வால் மனிதர்கள் எப்படி சின்ன பின்னாவாகிறார்கள் என்பதை சொல்லலாம். காலணி இளைஞர்கள் திறமை இருந்தும் அவர்களை வளர விடாமல் ஆதிக்க சாதியினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லலாம்.
நல்ல மாமியார் மருமகள் உறவை சொல்லும் படம் என்பதை சொல்லலாம்.
இந்த படத்தில் சாதி மோதல் இருக்கும் அதற்காக வெட்டு குத்து என்று போகாமல் அதை மென்மையான போக்கில் ஆனால் சரியான பாடம் கொடுத்து எழுதியுள்ள இயக்குனரை பாராட்டலாம் மொத்தத்தில் இந்த லப்பர் பந்து”
தங்க பந்துவாக வந்திருக்கிறது நிச்சயம் இது ஒரு வெற்றி படம்தான்
