கோழி பண்ணை செல்ல துரை விமர்சனம்

 ரேட்டிங் 4/ 5

சாதாரண மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை எந்த ஆடம்பரமும் இல்லாமல் திரையில் காட்டக் கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன்,போன்ற தரமான படங்களின் வரிசையில் சீனு ராமசாமி அடுத்து இயக்கி இருக்கும் படம் தான் கோழி பண்ணை செல்லத்துரை.

இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கோழிப்பண்ணை செல்லதுரை. கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட சாதாரண மனிதன் பற்றிய வாழ்வியல், காதல், படம் உணர்ச்சிகள் அடங்கிய திரைப்படமாக உருவாகி உள்ளது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு (பெரிய சாமி) வேடத்தில்நடித்துள்ளார். படம் முழுக்க வருகின்ற கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது

ஏகன் நாயகனாக நடித்துள்ளார். மேலும், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஸ்ரீராம், சத்யா, மானஸ்வி, பவா செல்லதுரை, மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதை களம் என்ன?

ஐஸ்வர்யா தத்தா செல்லத்துரையின் அம்மாவாக வருகிறார் எல்ஐசி முகவராக இருக்கும் இவரது கணவர் ராணுவத்தில் வேலை செய்கிறார் அங்கு ஒரு இளம் பாடகர் இவர் மனதை கவர் அவர் ஐஸ்வர்யா வீட்டுக்கு தேடி வருகிறார் அந்த சமயம் பார்த்து ராணுவத்திலிருந்து வீட்டுக்கு வரும் ஐஸ்வர்யாவின் கணவர் இருவரையும் சந்தேகப்பட்டு கட்டி போடுகிறார் தப்பித்து இருவரும் ஓடிப் போய் விடுகிறார்கள் அதன் பிறகு குழந்தைகள் இருவரும் அனாதையாக்கப்படுகிறார்கள் அடைக்கலம் தேடி பாட்டி வீட்டுக்கு போகிறார்கள்

சின்ன சின்ன வேலைகளை செய்து தன் தங்கையை வளர்க்கும் ஏகனின் பெரியப்பாவாக யோகி பாபு வருகிறார். யோகி பாபு தன்னுடைய கோழிப்பண்ணையில் ஏகனுக்கு வேலை போட்டு தருகிறார் அந்த வேலை மட்டும் இல்லாமல் கிடைக்கும் வேலையெல்லாம் செய்து ஏகன் காசு பணம் சேர்க்கிறான்.

யோகி பாபு இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இப்படி காசு சேர்க்கிறாய் என கேட்கும் பொழுது என் தங்கையை சொந்த வீட்டில் குடி வைப்பதற்காகத்தான் என ஹீரோ சொல்கிறார் அண்ணன் தங்கையின் அற்புதமான உறவு, என கதை செல்கிறது

இதில் ஹீரோ ஏகனுக்கு ஜோடியாக சகாய பிரிகிடா நடித்திருக்கிறார். படம் முழுக்க நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கிறார் அழகுப் பதுமையாய் அழகான ஆடை அலங்கரித்து வந்து அவர் முன் நிற்கிறார் அவருக்கு தேவையான உணவுகளை கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் நாயகன் மனம் அவரை ஏற்க மறுக்கிறது காரணம் தங்கையின் பாசம்

அவ்வளவு உயிராக நினைத்து இருக்கும் தங்கை ஒருநாள் வீட்டில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருப்பது பார்த்து செல்லதுரை காதலனை துரத்தி துரத்தி அடிக்கிறார் இதனால் மனம் உடைந்த தங்கை சுதா இனி கல்லூரிக்கு செல்ல மாட்டேன் உன்னுடன் பேச மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் தன் தங்கைக்காக மாப்பிள்ளை தேடுகிறார் செல்லதுரை நல்ல மாப்பிள்ளை அமைந்தால் குடும்பம் சரியில்லை இதனால் என்ன செய்வது என்று யோகி பாபு விடம் ஐடியா கேட்கிறார் அவர் நீ துரத்தி துரத்தி அடித்தாயே சுந்தர் அவரைபோய் பார்க்கலாம் என்று தேடிப் போகிறார்கள் அங்கு பவா செல்லதுரை நடந்ததை சொல்கிறார் நல்ல குடும்பம் என திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார் இதனிடையே ஒரு டிவிஸ்ட், காணாமல் போன அம்மா எதிர்பாராத விதமாக கிடைக்கிறார் தங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போன அப்பா ஒருபுறம் கிடைக்கிறார் ஆனால் அவர்கள் இருவருக்கும் இருக்கும் நிலை கதையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து விடுகிறது

செல்லத்துரை தன் தங்கை விரும்பிய மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தானா?

தன் அம்மாவுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு என்ன பரிகாரம் செய்தான்?

தங்களை அம்போ என தவிக்க விட்ட தந்தையை எந்த கோலத்தில் பார்த்தான் தந்தையை ஏற்றுக் கொண்டானா?

தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் தாமரை செல்வியை ஏற்றுக் கொண்டானா என்ன முடிவெடுத்தான்?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறது கோழிப்பண்ணை செல்லத்துரை கிளைமாக்ஸ் காட்சி மனதை உருகி விடுகிறது அற்புதமான கிளைமாக்ஸ்
அறிமுக நாயகன் ஏகன் அசத்தினாரா?

11 வயதில் இருந்து தன் தங்கையை கண்ணின் இமை போல காத்து வரும் செல்லத்துரை கதாபாத்திரத்தில் ஏகன் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் எந்த இடத்திலும் சந்தோஷமான வெளிப்பாடு இல்லை உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

உழைத்தால் எந்த நிலையில் இருந்தாலும் முன்னுக்கு வரலாம் என்பது உதாரணமாக இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது தன் தங்கையை படிக்க வைக்க வேண்டும் தன் தங்கைக்காக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று உழைக்கிறானே தவிர தன் சுகத்துக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளாத அந்த கதாபாத்திரம் மனதில் பதிகிறது தங்கை திருமணம் ஆகி பிறந்து வீட்டுக்கு செல்லும் பொழுது பிரிய முடியாமல் கண்ணீர் விட்டு அழுது தன் தோளில் சாய்த்து கொண்டு போய் விட்டு வரும் அந்தக் காட்சியாகட்டும் யோகி பாபு விடம் கடமையே கண்ணாக உழைக்கும் அந்த காட்சியாக இருக்கட்டும் பிரி கடா விருந்து விலகி ஓடும் காட்சிகள் ஆகட்டும் அந்த கதாபாத்திரம் எந்த சூழ்நிலையிலும் மாசுபடாத கதாபாத்திரமாக உயர்ந்து நிற்கிறது அவரது நடிப்பும் உயர்ந்து நிற்கிறது எதார்த்தமான நடிப்பால் நம்மை கவர்ந்திருக்கிறார் வாழ்த்துக்கள் ஏகன் உங்களுக்கு இன்னும் நிறைய வெற்றிப்படிக் கட்டுகள் காத்திருக்கிறது

கோழிப்பண்ணை செல்லத்துரை யாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் முள்ளும் மலரும் சூப்பர் ஸ்டாருக்கு அண்ணன் தங்கை படம் என்றால் ஏகனுக்கு கோழிப்பண்ணை செல்லத்துரை பேர் சொல்லும் படமாக இருக்கும்

தங்கையாக நடித்த சத்யாதேவி பாசமலரா? அல்லது முள்ளும் மலரும் தங்கையா?

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது ஆனால் இந்த படம் ஒரு பாசமலர் படத்தையும் முள்ளும் மலரும் படத்தையும் கலந்த கலவையாக வந்திருக்கிறது தங்கையாக நடிப்பவர் நடிப்பு நன்றாக இருந்தால்தான் இப்படிப்பட்ட படங்களில் ஒரு அழுத்தமான உணர்வு ஏற்படும் பாசமலரில் நடித்த சாவித்திரி காலத்துக்கும் மறக்க முடியாத நடிகை யானார் அதேபோல முள்ளும் மலரும் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்த சோபா என்றும் நம் நினைவில் நிற்கிறார் அப்படி இந்த படத்தில் தங்கையாக நடித்திருக்கும் சுதா என்ற கதாபாத்திரத்தில் சத்யதேவி ஒரு கருப்பு மலராக குறிஞ்சி மலராக நடிப்பில் பரிணாமம் காட்டி இருக்கிறார் எதார்த்தமான நடிப்பு இயல்பான வசனம் அதிகம் மேக்கப் இல்லாமல் முகம் அண்ணன் கால்களை மசாஜ் செய்து இது இன்னொரு கடவுள் என்று சொல்லும் காட்சி ஆகட்டும் அண்ணனுடன் கல்லூரிக்கு செல்லும் அந்த குதூகலமான காட்சி ஆகட்டும் அண்ணன் தன் காதலனை அடித்து விரட்ட கண்கலங்கி அழும் காட்சிகள் ஆகட்டும் தன் அண்ணனுக்கு ஒரு துணை வேண்டும் என்று செல்லதுரையின் வாழ்வுக்காக தாமரை செல்வியிடம் மன்றாடும் காட்சியாகட்டும் தன் தாயைப் பார்த்தவுடன் காலில் விழுந்து வணங்கும் காட்சியாகட்டும் தனக்கு இன்னொரு தங்கை மாணஸ்வி கிடைத்துவிட்டது என்னிஅழும் போதும் அண்ணன் செய்த தியாகம் கண்டு உருகும் போதும் சத்யதேவி சாவித்திரியின் நடிகை சோபாவின் இருவரையும் சேர்ந்த கலவியாக ஜொலிக்கிறார் வாழ்த்துக்கள் சத்யதேவி

தாமரை செல்வி பிரகிடா நடிப்பு எப்படி?

மண்பானை விற்பனை செய்யும் கடை நடத்தும் தாமரை செல்வி தனக்கு எதிரே கறிக்கடை வைத்திருக்கும் செல்லத்துரையை விரும்புகிறார் அதற்கு அவர் சொல்லும் ஒரே உதாரணம் தன் தங்கையை கண்ணுக்குள் வைத்து காத்திருக்கும் செல்லத்துரை என்னை எப்படி பார்த்துக் கொள்வான் என்று சொல்கிறார் அது அவர் காதலிக்கும் காதல் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது அதேபோல ஏகனின் தங்கை சுதா சொல்லும் அந்த வார்த்தை சேற்றில் விழுந்து மூழ்கிப்போன தாமரை செல்வியை என் அண்ணனும் நானும்தான் காப்பாற்றினோம் என்று கூறும் அந்த காட்சியில் ஏன் அவர் துரத்தி துரத்தி காதலிக்கிறார் என்பது புதிர் அவிழ்கிறது. அவரின் காதல் தூய்மையானது நடிப்பும் நன்றாக இருக்கிறது தாமரை செல்வி படம் முழுக்க வந்து அழகாகவும் அற்புதமாகவும் நடிப்பை வழங்கியிருக்கிறார்
யோகி பாபு நடிப்பு எப்படி மிரட்டுகிறாரா உருக வைக்கிறாரா?

பெரியசாமி கதாபாத்திரத்தில்

ஒரு மனிதநேயம் உள்ள தேனியில் வாழும் கோழி பண்ணை நடத்தி வரும் யோகி பாபு கருணையில் மட்டுமல்ல நடிப்பிலும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் செல்லத்துரைக்கு மிக நெருக்கமாக அவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் யோகி பாபு முன் வந்து உதவி காப்பாற்றி கரை சேர்த்தும் அந்த உன்னதமான நடிப்பு யோகி பாபு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது குனச்சித்திர வேடங்களில் யோகி பாபு சிக்ஸர் அடித்திருக்கிறார்
பவா செல்லதுரையும் கோழிப்பண்ணை செல்லத்துரையும்

ஒரு படத்தில் நாயகன் நாயகி வில்லன்கள் தவிர துணை கதாபாத்திரங்கள் மனதில் நிற்க வேண்டும் அப்போதுதான் இந்த படத்திற்கு சரியான திரைக்கதை வலு சேர்க்க முடியும் அப்படி இந்த படத்தில் துணை கதாபாத்திரங்களாக லியோ சிவகுமாரும் அவரது தந்தையாக வரும் பவா செல்லதுரையும் அற்புதமாக பொருந்தி கொள்கிறார்கள்
தந்தை மகன் என்று இல்லாமல் ஒரு நண்பனை போல அவன் காதலியிடம் தைரியமாக பேச சொல்லும் பவா ஒரு நவீன காலத்து தந்தையாக தெரிகிறார் அதே சமயம் தன்னை முன்னேற்றிய அந்த ஊரு மக்களுக்காக இலவசமாக பள்ளிக்கூடம் நடத்தும் அந்த பொறுப்பும் அவர் நிஜத்தில் செய்து வரும் செயலை நினைவுபடுத்துகிறது எனவே பவா செல்லதுரை நிச்சயம் இந்த படத்தில் பேசப்படுவார் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இரண்டு மூன்று காட்சிகள் வந்தாலும் அழுத்தமாக நடிப்பை பதிய வைத்திருக்கிறார் செல்லதுரையின் கூடவே வரும் அறிவு என்ற கதாபாத்திரத்தில் வரும் அந்த சின்ன மனிதர் அறிவில் உயர்ந்து நிற்கிறார் பிரகடாவின் தந்தை மற்றும் ஏகனின் தந்தை என எல்லோரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் வில்லனாக வரும் ஆட்டோ டிரைவரும் ஓரிரு காட்சிகளில் ஏகனிடம் அடி வாங்கி திருந்தி போகிறார்

டெக்னிக்கல் குழு

இசை என் ஆர் ரகுநந்தன்
பாடல்கள் மனதை கலங்கடிக்கிறது பின்னணி இசை மிகவும் ரசிக்க வைக்கிறது ஒரு உணர்வுபூர்வமான கதைக்கு இசையமைப்பாளர் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை ரகுநாதன் நிரூபித்திருக்கிறார் மனதை வருடும் இசை

ஒளிப்பதிவு அசோக்
தேனி மற்றும் பெரியகுளம் பகுதிகளை படமாக்கி இருக்கும். அந்த பசுமையான காட்சிகளும் நாயகனின் வீடு அருகே இருக்கும் அந்த ஏரியின் ஓரத்தில் இருக்கும் அந்த சூழலும் அவா செல்லதுரை வீடும் மற்றும் படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் கைவணத்தில் மிளிர்கிறது

வசனம் பிரபாகர்&சீனு ராமசாமி

இருவரும் சேர்ந்து அண்ணன் தங்கையின் பாசமழலயை எழுத்துக்களாக்கி அங்கங்கே மனதை தொட்டு இருக்கிறார்கள் எழுத்துக்களின் ஜாலம் வசனம் ஆகி ரசிக்க வைக்கிறது

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

பல படங்களுக்கு வெற்றி படமாக்கிய படத்தொகுப்பாளர் பிரசாத் இந்த படத்தையும் தன் அனுபவ முறையில் படத்தை தொகுத்து விறுவிறுப்பாக ரசனை மிகுந்த படமாக மாற்றி தந்திருக்கிறார் வாழ்த்துக்கள்

ஆர்ட் டைரக்டர் சரவண அபிராமன்

இவரது கைவண்ணத்தில் ஏசனின் வீடு யோகி பாபு நடத்தும் கோழிப்பண்ணை மற்றும் கறிக்கடை பிரகிடாவின் மண்பானை கடை இப்படி கைவண்ணம் அற்புதமாக வந்திருக்கிறது Production Supervisor: Selva Shanmugam
Choreographer : Nobel
Stunts: Stunner Shyam
Lyrics: ‘Kavipperarasu’ Vairamuthu, Gangai Amaran, Pa. Vijay, Ekadesi
Costume Designs: V. Murthy
Sound Design: T. Udaya Kumar (Knack Studios)
Make-Up: A. Pichumani
Stills: Manju Athithya
Co-Producers: K. Srivasan Niranjan (Pannai Brothers)
Executive Producer: Veera Shankar
Producers: Dr. D. Arulanandhu, Mathewo Arulanandhu
PRO: Nikil Murukan

சாதாரண மனிதர்களின் உணர்வை மீண்டும் தன் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறாரா இயக்குனர் சீனு ராமசாமி!

ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது நம் மனது கனத்த இதயத்தோடு கலங்கிய கண்களோடு வெளியே வந்தால் நிச்சயம் இரண்டு நாட்களுக்கு நம்மை தூங்க விடாது ஏதோ படம் பார்த்தோம் வந்தோம் என்று இல்லாமல் ஒரு கருணை மனிதர்கள் மீது அன்பு இளைய மனிதர்களின் வாழ்க்கை இவைகளை பதிவு செய்வதில் இயக்குனர் சீனு ராமசாமி என்றுமே நம்பர் ஒன் இயக்குனர் அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் நல்ல மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த வலி ,வேதனை, இவர்களை சொல்லி இருப்பார்

எத்தனை காலங்கள் ஆனாலும் இவர் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மறக்க முடியாததாக இருக்கும் தர்ம துரையாக இருக்கட்டும் மாமனிதனாக இருக்கட்டும் அந்த வரிசையில் கோழிப்பண்ணை செல்லத்துரையும் சேர்கிறார்

படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் முத்திரை ஆழமாக தெரிகிறது

அம்மா தன்னை விட்டு போய்விட்டாலும் அவள் விட்டு விட்டுச் சென்ற ஒற்றை செருப்பை பத்திரமாக பெட்டியில் பூட்டி பாதுகாத்து வைத்திருக்கும் செல்லத்துரையின் அந்த அன்பு நம்மை யோசிக்க வைக்கிறது

சின்ன வயதில் தன் தந்தை கையை முறுக்கி அடிக்க வந்தபோது அப்பா வலிக்கிறது என்று சொல்லியும் அந்த மிருகம் கையை முறுக்கியதால் வளர்ந்த பிறகும் தன் முதுகுக்கு பின்னால் கையை மறைத்து வைத்து அந்த வலியின் உணர்வை செல்லதுரை கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பது போல் காட்டி இருப்பது சிறப்பு

அடுத்த தன் தங்கை அம்மாவைப் போல் அவுசாரி என்று பெயர் எடுத்து விடுவாளோ என்று தங்கையின் காதலனை துரத்தி துரத்தி அடிக்கும் இடத்தில் இயக்குனரின் முத்திரை தெரிகிறது

தன் தங்கைக்கு மாப்பிள்ளை தேடி செல்லும்போது மாப்பிள்ளை வீட்டில் சாப்பாட்டுக்கு டைம் டேபிள் போட்டு இருப்பதைக் கண்டு தன் தங்கைக்கு எங்கே கஞ்சி ஊத்த மாட்டார்களோ என்று கலங்கி எழுந்து வரும்பொழுது இயக்குனரின் முத்திரை தெரிகிறது

அதேபோல பவா செல்லதுரை வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து அங்கே தட்டு மாற்றிக் கொண்டு வந்து தன் தங்கையிடம் சுந்தர் பேசுவான் நீ போனில் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை இடும்பொழுது இயக்குனரின் அந்த பாச மழை நம் கண்ணில் நீர் வரவழைக்கிறது

இப்படி நிறைய காட்சிகளை படம் முழுவதும் வைத்திருக்கிறார் இயக்குனர் எந்த காட்சியை சொல்வது எந்த காட்சியை விடுவது என்று தெரியாத அளவுக்கு ஒரு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் தரமான படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்

இந்த படம் அம்மா அப்பா உறவை இழந்து தனிமையில் வாடும் குழந்தைகளுக்கான படம்

11 வயதிலிருந்து தன் தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு சகோதரனின் படம்

ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து யோகி பாபு போல் ஊருக்கு ஒரு நல்லவர் இருப்பார் என்பதை சொல்லும் படம்

தவறு செய்த பெற்றோர்களே இருந்தாலும் தன்னை தேடி வந்து மன்னிப்பு கேட்கும் போது மனது இறங்கி அவர்களை மன்னித்து உதவி செய்ய வேண்டும் என்ற உருக்கமான பதிவை சொல்லும் படம்

கோழிப்பண்ணை செல்லத்துரை வெற்றி பாதையில்