ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’.
நாசர், நட்டி, அனஹா, அழகன் பெருமாள், முனிஷ் காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். போர், ஆக்ஷன், காதல், கருத்து என உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கதைக்களம் என்ன
2028-ல் கதை தொடங்குகிறது, நட்டி தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி, இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல் ஒரு கிங் மேக்கர் ஆக இருக்கிறார். வனத்துறையில் தமிழும், அகானாவும் சந்திக்கிறார்கள் இந்த சந்திப்பு காதலாய் மாறுகிறது வனத்துறையிலிருந்து சென்னை வரும் தமிழ் ,நாயகியை சந்திக்கிறார் அது மேலும் காதலாக வளர்கிறது .
ஐ நா சபையில் இருந்து பிரிந்து உலக நாடுகள் ரிபப்ளிக் நாடுகள், என 73 நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பு உருவாக்குகிறார்கள் அதில் சைனாவும் ரஷ்யாவும் முக்கிய அங்கமாக இருக்கிறது உலகமே இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது,
தான் தான் கிங்மேக்கர் என்று வரிந்து கட்டிக்கொண்டு முதலமைச்சர் நாசர், அவரது மகள் அனகா, இவர்களை ஆட்டிப் படைக்கிறார் நட்டி, தன் கையில் இரண்டு சேனல், நான்கு யுடியுப் சேனல் ,மற்றும் முன்னணி பத்திரிகைகள் இப்படி கையில் வைத்துக் கொண்டு சர்வாதிகாரம் பிடித்த நல்லவனாக வரவேண்டும் என்று துடிக்கிறார்.
இந்த நிலையில் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க நட்ராஜ் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. அப்போது ஆதியை பார்க்க அனகா அங்கு வருகிறார் இருவரும் பேராபத்தில் சிக்கிக் கொள்கிறார் கள்
ஒரு மாலுக்குள் ஆதியும் அனகா சிக்கிக் கொள்ள அங்கு வரும் வன்முறையாளர்கள் இருவரையும் துவம்சம் செய்கிறார்கள் ஆதி அந்த கும்பலை போட்டு தள்ளுகிறார் அப்போது அங்கு வரும் போலீஸ் முதல்வர் மகள்அனகாவை, ஆதி தான் கடத்தி வன்முறை செய்தார் என்றுஆதியை தீவிரவாதி லிஸ்டில் சேர்கின்றனர்.
இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், தமிழ்நாட்டைதவிர, வேறு நாடுகள் எல்லாம் அழிந்து போக, தமிழ்நாட்டில் தொலைதொடர்புகள் துண்டிக்கப்படுகிறது ஆதி ஒரு பக்கம் அனகா, ஒரு பக்கம் மாட்டிக் கொள்கின்றனர் அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
ஹிப் ஹாப் தமிழா நடிப்பு, இசை, இயக்கம் எப்படி?
ஹிப்ஹாப் ஆதி இன்றைய இளம் சமூதாயத்திற்கு பிடித்தமான நடிகர் இவருக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள் இவரது படத்தை இளைஞர்கள் விரும்பி வந்து பார்க்கின்றனர் இசையமைப்பாளராகவும வெற்றி பெற்றவர்
அவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இசையமைப்பது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. இப் பொழுது `கடைசி உலகப் போர்’ படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுக்கள், பிரமாண்டமான நடிகர்கள், என பெரும் பட்டாளத்தையே இறக்கி இருக்கிறார் இவர் ஜாலியாக வந்து விட்டுப் போனாலே படம் செம ஹிட் கிடைக்கும் இப்பொழுது வித்தியாசமான முறையில் சிந்தித்து வருங்காலத்தில் இப்படியும் நடக்கலாம் ,என்ற கோணத்தில் யோசித்து, படம் எடுத்திருக்கிறார் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்நாளில் சைனாக்காரர்களிடம் மாட்டிக் கொள்வார்கள் அவர்கள்தான் ஆண்ட பரம்பரை என்று சூசகமாக சொல்லி இருப்பது சிறப்பு. அதேபோல இலங்கை தீவிரவாத கும்பல், தமிழ்நாட்டுக்குள் வந்து ,இலங்கையில் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றது போல் இங்கேயும் சைனாக்காரனுடன் கைகோர்த்து கொள்ளலாம்
என்று எச்சரித்து இருக்கிறார்
இது கேட்பதற்கு விளையாட்டாக இருக்கலாம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது என்பதை ஒரு கதை ஆசிரியராக இயக்குனராக சிந்தித்து எழுதி இருக்கிறார் வாழ்த்துக்கள்
அவருக்கு அதிக பாடல் ,ரொமான்ஸ் இல்லை என்றாலும், சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் அவரது சொந்தத் தயாரிப்பில் பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார்
நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

மற்ற கலைஞர்கள்
இப்படத்தில் நாசர், முதல்வராக நடித்தி ருக்கிறார் அவருக்கு போர்சன் கம்மி என்றாலும் நிறைவான நடிப்பு
நட்டி நட்ராஜ், இந்தப் படத்தில் ஹீரோ ல எவ்வளவு இறங்கி எடுத்திருக்கிறார் படம் முழுக்க இவர் வாய்ஸாவரில் என்னென்ன நடக்கும் என்ன நடந்தது என்பது கதையை விவரிக்கிறார் அது படம் பார்ப்பவர்களுக்கு எளிதாக புரிகிறது நட்டி நடராஜ் படத்தில் இவர் பெயர் நட்டி நடராஜன் தான் அரசியலில் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் தன் கட்டுப்பாடு க்குள் முதல்வரும் முதல்வர் மகளும் இருக்க வேண்டும் என்று காய் நகர்த்துகிறார் தனக்காக குரல் கொடுப்பதற்காக சாரா என்ற ஒரு நடிகனை உருவாக்குகிறார் போலீஸ் கமிஷனர் கல்யாணுடன் கைகோர்த்து அவர் ஆடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது
மற்றும் முனிஷ்காந்த், ஷா ரா, , அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், ஹரீஸ் உத்தமன், சிங்கம் புலி,இளங்கோ குமரவேல்,மஹாநதி சங்கர்,தலைவாசல் விஜய் ஆகியோர் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
நாயகி அனகா நடிப்பு எப்படி?
முதல்வரின் மகளாக வருகிறார் கல்வித்துறை அமைச்சர் ஆக பொறுப்பேற்ககவுள்ள அவருக்கு ஆதி கல்வி அனைவருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று திட்டத்தை அறிவிக்கிறார் இதற்காக மேலை நாடுகள் இவருக்கு பாராட்டு தெரிவித்து பேச அழைக்கிறார்கள் இதை பொறுக்காத நட்டி ,அவரை கண்ட்ரோல் செய்கிறார் இவருக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்? என்று கண்டுபிடிக்க சொல்கிறார் அனகா அழகாக இருக்கிறார் அருமையாக நடித்திருக்கிறார் இடைவேளைக்குப் பிறகு சில நேரம் காணாமல் போய்விடுகிறார் கடைசியில் ஆதியை கரம் பிடித்து, எதிரிகளின் பிடியிலிருந்து விலகுகிறார்
நட்டி நடராஜ் நடிப்பு எப்படி?
படத்தில் நான் ஹீரோ இல்லை என்று இவர் சொன்னாலும் படம் முழுக்க இவரின் அழிச்சாட்டியம் அதிகமா இருக்கிறது முதல் பாதியில் அரசியல்வாதியாக சாணக்கியத்தனம் செய்யும் இவர் இரண்டாம் பாதியில் ஆதிக்கு உதவி செய்து அனுதாபத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்
எந்த வகையில் பார்த்தாலும் நட்டியின் நடிப்பு சதுரங்க வேட்டை படத்துக்கு பிறகு இந்த படத்தில் நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கிறது பாராட்டுக்கள்
படத்தின் ஒளிப்பதிவு எப்படி?
ஒளிப்பதிவாளர் அருண் ராஜா
சென்னையே அழிந்து ஒரு ஊரையே காட்ட வேண்டும், அதை நன்றாக செய்திருந்தாலும், பல இடங்களில் மிகவும் சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எப்போதும் போல் பாஸ் மார்க் தான்.
கிராபிக்ஸ் காட்சிகள்.
நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது அதை கேமரா உள்வாங்கி அழகாக நமக்கு காட்டி இருக்கிறது மக்கள் படும் துன்பம், இலங்கை ராணுவ வீரர்கள், ஊடுருவும் காட்சிகள் இடைவேளைக்கு பிறகு ஆதி தங்கி இருக்கும் இந்த பசுமையான மசினகுடி “இப்படி எல்லா இடங்களையும் அருமையாக ஒளி பதிவு செய்திருக்கிறார்
படத்தொகுப்பு
படத்தொகுப்பு பிரதீப் ராகவ் இவர்
: சில இடங்களில் கத்தரி வைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு பத்து நிமிடத்தை வைத்திருக்கிறார் இடைவேளைக்கு பிறகு திரும்பத் திரும்ப காட்சிகள் வருவது போல் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் ஆனால் இரண்டு மணி நேரமும் படம் போவதே தெரியாமல் விறுவிறுப்பாக அமைந்ததற்கு படத்தொகுப்பாளரினபங்கு தான் காரணம் என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும்
ஆடை வடிவமைப்பாளர்
காஸ்டியூம் டிசைனராக கீர்த்தி வாசன்
இந்தப் படத்தில் காஸ்டியூம் டிசைனர் மிகவும் சிரமப்பட்டு பணி புரிந்திருக்கிறார் சைனாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள்
இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் ,ஏழை மக்கள், அகதிகள் நட்டியின் சாம்ராஜ்யத்தில் பெரிய செல்வந்தர்கள், போலீஸ் அதிகாரிகள், என காஸ்ட்யூம் டிசைனர் சிரமப்பட்டு உழைத்ததற்கு பலன் நன்றாக தெரிகிறது அனகா, ஆதி, இருவரையும் அழகாக காட்டி இருக்கிறார்
சண்டை பயிற்சியாளருக்கு பாராட்டுக்கள்
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் ஆக்ஷன் காட்சியை அமைத்த சண்டை பயிற்சியாளருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம் பாம் வெடிப்பது, துப்பாக்கியால் சுடுவது , பதுங்குவது என திட்டமிட்டு எல்லோருக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார் எல்லோரிடமும் கடுமையாக வேலை வாங்கி அருமையாக படமாக்கி இருக்கிறார் சண்டை பயிற்சியாளர் மகேஷ் மாதவ்
ஆர்ட் டைரக்டர்
ஆர்ட் டைரக்டர் ஆர் கே நாகு அருமையாக அரங்கங்களை அமைத்திருக்கிறார் எல்லா காட்சிகளும் தத்துவமாக இருக்கிறது
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு
ஒரு நல்ல கதையை தேர்வு செய்து ஹிப்ஹாப் ஆதி நல்ல இசையோடு, எப்போதும ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான ஒரு கதையை எடுத்து அதில் ஹிட்டும் அடிப்பார், இந்த முறை கொஞ்சம் இல்லை ரொம்ப சீரியஸாக எடுத்துள்ள களம் தான், கடைசி உலகப்போர்,
யாருமே எதிர்பார்த்து இருக்க முடியாது அவர் இப்படி ஒரு படம் கொடுப்பார் என்று காதல், மோதல் காமெடி ,நண்பர்கள் என்று ஜாலியாக படம் எடுப்பவர் இப்படி ஒரு சீரியஸான படத்தை கொடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம்
அவரின் சமூக அக்கறை ஓங்கி இருப்பதையும் காணமுடிகிறது
ஒரு கிங் மேக்கர்எப்படி அரசியலை ஆட்டி படைக்கிறார்.
உலகம் இரண்டாக பிரிந்தால் என்ன நடக்கும்
மக்கள் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்
இது ஒரு உலக சினிமா என்றால் மிகையாகாது.
இந்திய எப்போதும் நடுநிலை நாடு அது எப்போதும் அமைதியை விரும்பும் வன்முறையை விரும்பாது. என்பது அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், முதலமைச்சர் ஆக தேர்வு செய்யப்படுபவர்கள் நாட்டு மக்கள் மீது அக்கறையோடு சேவை செய்ய வேண்டும் சேர சோழ பாண்டியன் ,ஆண்ட அதிகாரம் எங்கே போனது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்
கலவரம் கண்ட்ரோல் , ராணுவம் என களம் தமிழகத்தை நோக்கி திரும்பும் போது எதிர்பாராமல் அதிர்ச்சியை தருகிறது.
ஆதி யைதீவிரவாதி லிஸ்டில் சேர் த்தவர்கள்.
இரண்டாம் பாகத்தில் ஆதியோடு கை கோர்த்து எதிரி நாடுகளின் ராணுவ வீரர்களை
துவம்ஷம் செய்வது.சிறப்பு
ஹிப்ஹாப் ஆதி உலகப்போர் அளவுக்கு சிந்தித்து இந்த கதையை உருவாக்கி தான் மட்டுமே இதை சுமக்க வேண்டும் என்று இல்லாமல், படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான்.

இவர் தான் கதையே சொல்லி படத்தை தொடங்குகிறார், ஆரம்பத்தில் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது.
தமிழ்நாடு ரிபப்ளிக் கண்ட்ரோல் வந்து தனி நாடாகி, அதுவரை ஊர், மொழி, சாதி, இனபெருமை பேசிய மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவர்கள் படும் கஷ்டத்தை காட்டிய விதம், கண்டிப்பாக இந்த தலைமுறை அடுத்த தலைமுறைகளுக்கு இதை எடுத்து செல்ல கூடாது என்பதை உணர்த்துகின்றது
கதைக்களம் இதுவரை தமிழில் பெரிதும் காட்டப்படாத புதுமையான ஒன்று.
கிராபிக்ஸ் காட்சிகள்.
பாராட்ட தக்கது.
படத்தில் நல்ல கதை, அதற்கான நல்ல எமோஷ்னல், காட்சிகள் சிறப்பாக இருக்கிறது..
மொத்தத்தில் கடைசி உலகப்போர் கலங்க வைத்த திரை களம்
இப்படத்தின் நடிகர் நடிகைகள்
Hiphop Tamizha
Nassar
Natty (Nataraj)
Anagha
N. Alagan Perumal
Harish Uthaman
Munishkanth
Singampuli
Kalyan Master
Elango Kumaravel
Thalaivasal Vijay
Mahanadi Shankar
Elango Kumanan
Shiva Shara RA
FJ
Vinoth GD
Guhan Prakash
Alex
Rocket Rajesh
Chu Khoy Sheng
இப்படத்தின் டெக்னிக்கல் குழு
: Directed by Hiphop Tamizha
Trailer Edit : Arun
Music : Hiphop Tamizha
Cinematographer : Arjunraja D.F.Tech
Editor : Pradeep E Ragav
Stunt Director : Mahesh Mathew
Art Director : R.K.Nagu
DI : Infinity Media
Publicity Designer : Sivakumar S (SivaDigitalArt)
Colorist : Shanmuga Pandian M
Executive Producer : Vasudevan R
Production Manager : T.N. Gokulnath , S.Parthiban
Production Controller : C. Hari Venkat
Costume Designer : Keerthivasan
Lyrics : Hiphop Tamizha, Vignesh Srikanth, Fotty Seven, Sivavaakkiyar
Sound Design : Raghav Ramesh, Hari Prasad M.A
Mixing Engineer : Tapas Nayak
Visual Effects : 85Fx
PRO : Sathish S2 Media
அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக இளைய தலைமுறை நல்லதையே சிந்திக்க வேண்டும் நாட்டுக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்ற கருத்தை ஓங்கி ஒலித்த ,ஆதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
