சட்டம் என் கையில் (2024) திரை விமர்சனம்

(சஸ்பென்ஸ், த்ரில்லர் மூலி) ரேட்டிங் 3 / 5.

மெரினா’, ‘வாகை சூடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் நாயனாக நடித்திருக்கிறார் இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

கதை களம் என்ன?

ஆரம்பக் காட்சிகளில் ஒருவித பதட்டத்தோடு காரை ஓட்டி வருகிறார் நாயகன் சதீஷ், அப்போது எதிர்பாராத விதமாக ஒருவன் பைக்கில் கார் மீது மோத செம ஆக்சிடென்ட் உடனே சதீஷ் இறங்கி பைக்கில் அடிபட்டவணை தன்னுடைய கார் டிக்கியில் போட்டுக் கொண்டு காரை ஓட்டி வருகிறார் வழியில் போலீஸ் மடக்குகிறது
மிகவும் கெட்ட போலீஸ் ஆன பாவல், அவருடைய அறிமுகக் காட்சியை மிக கொடூரமாக இருக்கிறது அதன் பின் சதிசை வழிமறைத்து விசாரிக்க சதீஷ் திக்கு வாயால் திக்கு முக்காட திக்குவாய் என்று, கிண்டல் செய்கிறார் உடனே பாவல்.

காவல் அதிகாரி என்று கூட பார்க்காமல் சதீஷ் பாவலை அடித்துவிட சதீஷ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படுகிறார் அதன் பின் நடக்கும் டிவிஸ்ட்கள் தான் கதை

அதே போலீஸ் ஸ்டேஷனில் அஜய் ராஜ் (நாகராஜ்) என்ற பெயரில் காவல் அதிகாரியாக வருகிறார் பாவல் செய்யும் கெட்ட செயல் எல்லாம் நாகராஜ் தட்டி கேட்டு நல்லது செய்கிறார் இதனால் பாவலுக்கும், அஜய் ராஜுக்கும், மோதல் ஏற்படுகிறது இந்த ஈகோவால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனிடையில் நிவேதிதா என்ற ஒரு பெண்ணை கொலை செய்து ரோட்டில் போட்டு விட்டு போகிறார்கள்.கொலைசெய்தது யார்? நிவேதா ஏன் கொலை செய்யப்பட்டார்? பைக்கில் மோதிய அந்த நபர் யார்? சதீஷ் யார் ?எதற்காக போலீஸ் அவரை உட்கார வைத்து விசாரிக்கிறது? இப்படி படம் முழுக்க டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து விறுவிறுப்பான திரை கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாட்சி

நாயகன் சதீஷ்

நாயகனாக நடிக்க முடிவு செய்துவிட்டதால் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் திக்குவாய் போல பேச முடியாமல் திக்கி திக்கி பேசுவதும், போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சதீஷ் தவிப்பதும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனதை உருக வைப்பதும், என சதீஷ் ஸ்கோர் செய்துள்ளார் அவருக்கு முக பாவங்கள் நவரசங்களையும் கொடுத்து நடிப்புக்கு வழி வகுத்திருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் அவர் ரத்தக்கரை தெரியாமல் இருக்க வலிப்பு வந்தது போல் நடிப்பதும், காரின் முன்னாடி ஹெட் லைட்டை உடைப்பதும், போலீஸ் ஆய்வாளர்களுக்கு பேரம் பேசுவதும் தங்கையின் மீது பாசம் கொண்டு உருகுவதும் மீடியாக்கள் முன்னால் உண்மையை உரக்கச் சொல்வதும் என தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்புவது இப்படி எல்லா வகையிலும் சதீஷ் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்

அஜய் ராஜ்

இந்த படத்தில் மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நாகராஜ் என்ற காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் அஜய்ராஜ் ஆரம்பக் காட்சிகளில் அடடே! இவ்வளவு நல்ல காவல் துறை அதிகாரி யா?

என்று மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் அதன் பிறகு அவர் நானும் வழக்கமான காவல்துறை அதிகாரி தான் என்று நம்ப வைத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவர் வரும் காட்சிகளில் செம விறுவிறுப்பான திரைக்கதை அவரை சுற்றி பிண்ணபட்டுள்ளது

பாவல் நவநீதன்

பாட்ஷா என்ற காவல்துறை அதிகாரியாக பணத்துக்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் பாவல் நவநீதன் நடித்திருக்கிறார் அந்த தெனாவெட்டான நடிப்பு, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு குற்றவாளிகளை விசாரிக்கும் பாவனை, பணத்துக்காக எதையும் செய்யும் காவல்துறை அதிகாரியாக நன்றாக நடித்தி ருக்கிறார்

படத்தின் திருப்பு முனையாக இந்த பாவல் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது கடைசி காட்சியில் அஜய் ராஜிடமிருந்து தொப்பியை கழட்டி தன் தலையில் வைத்துக் கொள்ளும் அந்த தெனாவெட்டு மிகவும் ரசிக்க வைக்கிறது

மற்ற நடிகை நடிகர்கள்

அந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்யும் பவா செல்லதுரை, மற்றும் மறைந்த நடிகர் இ. ராமதாஸ் , இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களாக விளங்குகிறார்கள் நடிப்பிலும் தங்கள் அனுபவத்தை சிறப்பாக காட்டி இருக்கிறார்கள்

மற்றும் மைம் கோபி, சபரிமலைக்கு மாலை போட்ட இன்ஸ்பெக்டராக படத்தின் இறுதியில் வந்து நியாயத்தை நிலை நாட்டுகிறார் வித்யா பிரதீப், இரண்டு மூன்று காட்சிகள் வந்தாலும் அனுதாபத்தை தேடிக் கொள்கிறார்

புதுமுக நடிகை சம்பதா, கல்வியை இலவசமாக கற்றுத் தருகிறேன் என்று வீடு வீடாக சென்று நல்ல செய்ய நினைக்கும் கேரக்டருக்கு இப்படித்தான் முடிவா? என்று யோசிக்க வைக்கிறது
மற்றும் ரித்விகா, தமிழ்ச்செல்வி, வெண்பா, ஜீவா ரவி, உட்பட பலரும் தங்கள் அனுபவமிக்க நடிப்பில் படத்துக்கு மெருகேற்றி இருக்கிறார்கள்

இயக்குனர் சாச்சி

சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கி இருக்கிறார் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை கதை கருவாகக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படத்தை தந்திருக்கிறார்
படம் முழுக்க அடுத்து என்ன அடுத்து என்ன? என்று கேட்கும் அளவிற்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார். ஏற்காடு மலையில் இரவு நேர படப்பிடிப்பில் திகில் ஊட்டும் வண்ணம் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது

இயக்குனரின் சாமர்த்தியம் படத்தின் முடிவில் திருப்பமான ஒரு கிளைமாக்ஸ் காட்சி தந்து நிறைவான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நிவேதிதாவை கொன்றவர்கள் யார்? பைக்கில் மோதிய அந்த நபர் யார்? சதீஷுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் போலீசின் சதீஷ் சிக்க வைக்க பார்க்கிறது.

தன் அப்பா அம்மாவை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தது சதீஷ் ஏன் மறைந்து தப்பித்து ஓடுகிறார்

பாவல் கையில் கிடைத்த கொலைகாரனின் துப்பு என்ன?

சட்டம் யார் கையில் நல்லவர்கள் கையில தீயவர்கள் கையில என்பதை தெளிவாக எழுதி இருக்கிறார் இயக்குனர்

ஒளிப்பதிவு PG முத்தையா

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு மிக முக்கியம் அதுவும் இரவு நேர படப்பிடிப்பு ஏற்காடு திகில் ஊட்டும் வண்ணம் காட்சிகள் இருக்கிறது

ஏற்காடு மலைப்பகுதியில் வளைவான இரவு நேர படப்பிடிப்பு, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் இந்த கதை களத்துக்கு ஒளிப்பதிவாளர் மிகவும் மெனக்கெட்டு லைட்டிங் செய்து படமாக்கி இருக்கிறார்

ஆரம்பக் காட்சி சதீஷ் ஏற்காடு மலைப்பகுதியில் காரை ஓட்டி வரும்போது திகில் ஊட்டும் வண்ணம் இருக்கிறது கிளைமாக்ஸ் கட்சியிலும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் நன்றாக தெரிகிறது

படத்தொகுப்பு மார்ட்டின்

படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது மார்ட்டின் படத்தொகுப்பு காட்சிகள் விறுவிறுப்பாகவும் இருக்கிறது எங்கும் லேக் ஆகவில்லை
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படத்துகுப்பாளர் புகுந்து விளையாடி இருக்கிறார்

இசை ஜோன்ஸ் ரூபர்ட்

அறிமுக இசையமைப்பாளர்
படத்திற்கு பாடல்கள் அதிகம் இல்லை என்றாலும் அந்த கிளைமாக்ஸ் அண்ணன் தங்கை பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் இசை உயிரோட்டமாக இருக்கிறது. ஜோன்ஸ்வின் இசை படத்திற்கு பலம்

வசனம் ஜே. எம் ராஜா

டி டி கேசி ல் சிக்கியவர் மர்டர் கேசில் போட்டு உள்ளே தள்ளி விடலாம் என்று பவா செல்லதுரை கேட்பதும் கோல்ட் செயினை பார்த்ததும் புதுசா என்று பாக்கெட்டுக்குள் போடுவதும், பாவல் பேசும் நக்கலான வார்த்தைகளும், படத்திற்கு வசனங்களாக உயிர் பெற்று படத்தை தூக்கி நிறுத்துகிறது

மற்றும் ஆர்ட் டைரக்டர் ரகுல் கச்சிதமாக இருக்கிறது

சண்டை பயிற்சியாளர்கள் ராம் குமார் & சுரேஷ் இருவரும் விருவருப்பான ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்

காரும் பைக்கும் போதும் போதும் போலீஸ் ஸ்டேஷனில் பாவல் எல்லோரையும் அடித்து நொறுக்கும் பொழுதும் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது பாடல்களை ராகுகிருஷ்ணன், நவீன் சாய், விநாயகன், மூன்று பேர் எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் ரசிக்க வைக்கிறத

மக்கள் தொடர்பாளர் சதீஷ் அவர்கள் டீமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் படத்தை சிறப்பான முறையில் மக்களிடம் சேர்த்த மைக்கு

படத்தின் தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன் ஆனந்த கிருஷ்ணன் சண்முகம் மற்றும் ஸ்ரீராம் சத்யநாராயணன் மூவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் சிறிய பட்ஜெட்டில் தரமான படைப்பாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள் படம் ஆரம்பித்ததில் இருந்து

இறுதி வரை சஸ்பென்ஸ் குறையாமல் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக இந்த படக் குழுவை பாராட்டலாம்