சிவாஜி கணேசன் வைத்து தொடர்ந்து படம் எடுத்து நஷ்டம் அடைந்து வாழ்க்கையில் விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் இதை கேள்விப்பட்ட எம் ஜி ஆர் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் அந்த தயாரிப்பாளர் யார் எம் ஜி ஆர் நடித்த அந்த படம் எது அந்த படத்தில் பட்ஜெட் எவ்வளவு அந்த தயாரிப்பாளர் க்கு எம் ஜி ஆரால் கிடைத்த இலாபம் எவ்வளவு இத இத தான் இந்த வீடியோவில் பார்க்க போறோம் கடைசி வரை பாருங்கள் கடைசியில் டிவிஸ்ட் இருக்கும் மார்ச் மாதம் 5 ம் தேதி வெளிவந்து வெற்றியை பெற்ற படம். சென்னையில் சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வியத்தகு வெற்றியை பெற்ற படம்.
சென்னையில் மொத்தம் 198 நாட்களிலே மொத்த வசூலாக ரூ 9,07,260.20. பெற்ற வெற்றிப் படம்.
சென்னை வெலிங்டன், மகாராணி, அபிராமி, ராம் தியேட்டர்களில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்களும், மொத்தம் 198 நாட்களும், தமிழகத்தில் மதுரை தங்கத்தில் 62 நாட்களும் ஓடி குறுகிய காலத்தில் ஒருஅதிக வசூலை பெற்ற படமாக திகழ்ந்தது. சென்னையில் பெரிய ஏசி திரையரங்கில் வெளியாகி இருந்தால் சென்னை வசூல் மட்டுமே 12 லட்சத்தை தொட்டிருக்கும்.
ஆனாலும் அந்த தயாரிப்பாளர் தயாரித்த படங்களிலே அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
சங்கம் வளர்த்த மதுரையில் தங்கம் திரையரங்கில் தலைவரின் வெற்றி சங்கொலி . அதிலும் முதல் வார வசூல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தலைவரின் படங்களின் சாதன படைத்தது
உதாரணமாக, “நவரத்தினம்” மதுரை தங்கத்தில் 62 நாட்களில் பெற்ற வசூலை சிவாஜியின் எந்த படமுமே நெருங்கவில்லை.
ஆக A P நாகராஜன் தயாரித்த அத்தனை படங்களிலும் குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படம் ஜொலிக்கும் “நவரத்தினம்” தான் என்பது உறுதியாகிறது. “பட்டிக்காடா பட்டணமா” 42 நாளில் சென்ட்ரலில்
பெற்றதோ ரூ 2,14,000 தான்.
சிவாஜியின் அத்தனை வெள்ளி விழா, வெற்றி விழா படங்களின் 62 நாட்கள் வசூல் அத்தனையும் “நவரத்தினம்” படத்தின் 62 நாள் வசூலுக்குள் அடக்கமாகி விட்டது.
அது மட்டுமா? தமிழகத்தையே கலக்கிய “ஆட்டுக்கார அலமேலு” படத்தின் 70 நாள் வசூலும் நவரத்தினத்தை விட குறைவுதான்.
“அண்ணன் ஒரு கோயில்” கேட்கவே வேண்டாம். வசந்த மாளிகை 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ2,40,.229.10. நெருங்க முடியுமா நவரத்தினத்தை. வாய்கூசாமல் தோல்வி படம் என்கிறீர்கள் வசூல் விபரம் பின் வரும் பாருங்கள்
: நவரத்தினம் ஏ.பி. நாகராஜனின் இறுதிப் படம் , அதே போல் எம்.ஜி. ஆருடன் அவர் நடித்த ஒரே படம் . நாகராஜனின் மோசமான பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார் எம் ஜி ஆர் இதை கேள்விப்பட்ட உடன் எந்த ஊதியமும் வாங்காமல் படத்தில் நடித்தார் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து கொடுக்க முடிவு செய்தார் அனைத்து காட்சிகளையும் தனது சத்யா ஸ்டுடியோவில் , வெளிப்புற படப்பிடிப்புகள் இல்லாமல் படமாக்கினார். ஜரீனா வஹாப் ஆரம்பத்தில் தனது தோழி விஜயாவை ஒரு பெண் முக்கிய வேடத்தில் நடிக்க பரிந்துரைத்தார், ஆனால் எம் ஜி ஆர் மறுத்துவிட்டார்; வஹாப் தேர்வு செய்யப்பட்டார்.
நவரத்தினம் ,
ஏ. பி. நாகராஜன் எழுதி இயக்கி
எம். ஜி. ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், லதா, ஜெயச்சித்ரா, ஜரீனா வஹாப் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர் , மார்ச் 5, 1977 அன்று வெளியிடப்பட்டது.
நவரத்தினம் மார்ச் 5, 1977 அன்று வெளியிடப்பட்டு படம் வணிக ரீதியாக வசூல் வாகை சசூடியது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு திரு.நாகராஜன் இறந்தார். அப்பொழுது இறப்பதற்கு முன் நாகராஜன் கூறியது சிவாஜி கணேசனை வைத்து நல்ல படம் எடுத்தேன் ஆனால் எம்ஜிஆர் படம் நான் பணம் சம்பாதிப்பதற்கு உத்தரவாதமாக இருந்தது நல்ல படத்தை விட என்னை காப்பாற்றியது நல்ல பணம் தான் என்று கூறியிருந்தார்
வசூல் விபரம் : பார்க்கலாம்
சென்னை
வெலிங்டன் – 50 நாட்கள் –
மகாராணி – 63 நாட்கள் ஓடி யது
அபிராமி – 50 நாட்கள் – ஒடியது
ராம் – 35 நாட்கள் ஓடியது எல்லா தியேட்டரில் சேர்ந்த நாட்ஙங
மொத்தம் – 198 நாட்கள் – 9,07,260.20.
வசூல் செய்தது
——————————————————–
மதுரையில்
தங்கம் -தியேட்டரில் 62 நாட்கள் ஓடி – வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது
திண்டுக்கல்
சோலை ஹால் – 56 நாட்கள் –
பழனி
ஓம் சண்முகா –
48 நாட்கள் -ஓடி யது
ராமநாதபுரம்
சண்முகா –
38 நாட்கள் ஓடி -யது
சிவகாசி
ஸ்ரீ பழநிஆண்டவர் தியேட்டரில்-
38 நாட்கள் ஓடியது
ராஜபாளையம்
மீனாட்சி – தியேட்டரில்
42 நாட்கள் -ஓடியது
நாகர்கோவில்
சென்ட்ரல் -தியேட்டரில் 35 நாட்கள்ஓடியது
–
——————————————————–
தமிழ்நாடு & தென்னிந்தியா & இலங்கை ஆறு மாத உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார்
1.88கோடி.ரூபாய்
——————————————————–
படத்தின்
பட்ஜெட் – 75 லட்சம்
ஆறு மாதங்கள் உலகளாவிய முதல் வெளியான பாக்ஸ் ஆபிஸ் 1.88 கோடி
அரசு திரைப்பட வரி –
95 லட்சம்
விநியோக பங்கு சுமார்
18 லட்சம் (A.P.Nagarajan – Film Producer & Director ) பதினெட்டு லட்சம் லாபம் கிடைக்க ஏ பி நாகராஜன் தனது கடனை திருப்பி அடைத்து நிம்மதி பெரு மூச்சு விட்டார்
” ஆனால் வெளி உலகத்துக்கு நவரத்தினம் ஒரு தோல்வி படம் என்ற மாயை எழுந்தது எம்ஜிஆர் படம் எப்போதுமே தோல்வி பட்டியலில் இணைந்ததில்லை தலைவன் படத்தில் கூட படம் தோல்வி என்றார்கள் ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ பி தோமஸ் கேரளாவில் ஒரு வீடு வாங்கி அந்த வீட்டுக்கு தலைவன் என்று பெயர் வைத்திருக்கிறார் அதே போல ஏபி நாகராஜன் தன்னுடைய 18 லட்சம். லாப பணத்தில் சிவாஜியை வைத்து படம் எடுத்து கடன் கார் களிடமிருந்து மாட்டிக்கொண்டு எம் ஜி ஆர் படம் எடுத்து கடனை அடைத்தார் அதன் பிறகு நிம்மதியாக ஒரு மாதம் கழித்து கண்ணை மூடினார் வாழ்நாள் முழுவதும் சிவாஜியை வைத்து படம் எடுத்து தோல்வி அடைந்த நாகராஜன் எம்ஜிஆர் மூலம் வெற்றி அடைந்தார் என்பது இதுதான் எனவே நவரத்தினம் ஒரு தயாரிப்பாளர் உயிரை காப்பாற்றிய படம் எனவே இனி அந்த படத்தை தோல்வி படம் என்று சொல்லாதீர்கள்
